recent posts...

Tuesday, November 04, 2008

அமெரிக்கா ரொம்ப நல்ல ஊருண்ணே...

ஒரு வழியா எலெக்ஷன் முடிஞ்சுது. நம்ம வாசகர்கள் கணிப்பின்படியே, ஒபாமா, பெருவாரியாக வெற்றி பெற்றுவிட்டார்.
(ஸ்ஸ்ஸ், இனி வரும் தேர்தலுக்கெல்லாம், நம்ம வாக்கெடுப்பும், பயங்கரமாக கன்னா பின்னா என்று கவனிக்கப்படும் அபாயம் இருக்கிறது)



இது சாதாரண விஷயமில்லை. நாப்பத்தி ஏழு வயசுல, இந்த மிகப் பெரிய சாதனை. அதுவும், சிலப் பல வருஷங்களுக்கு முன்னாடி, ஓட்டுரிமை கூட இல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
அசத்தலான வெற்றி! பலருக்கும், தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் தந்த வெற்றி.

எட்டு வருஷமா, சிரிச்சிக்கினே எல்லாருக்கும் குல்லா போட்ட கோமாளித் திருட்டு கும்பலிடமிருந்து விடுதலை.

இனி வரும் மாதங்களில், கொஞ்சமாவது, சருக்கலிருந்து, அனைவரையும் மேலே கூட்டிக் கொண்டுச் செல்லுவார் இந்த ஒபாமா, என்ற நம்பிக்கை வருகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்த ஜான் மெக்கெயினும், லேசு பட்டவரில்லை. எழுபத்திரெண்டு வயசுல, கில்லி மாதிரி ஊர் ஊரா சுத்தி, அமக்களப் படுத்தினாரு.
சொத்தையான, vice president தேர்வினால்தான், இவருக்கு பெரிய சேதாரம் ஏற்பட்டது என்பது என் கணிப்பு. இனி வரும் நாட்களில், எல்லாரும், ஏன் ஏன் ஏன்னு அலசி ஆராஞ்சு, தொயச்சி காயப் போடுவாங்க. அப்ப, மற்ற காரணங்களும் தெரிய வரும்.

ஆனால், இன்று, ஜான் மெக்கெயின், தனது தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு பேச்சு பேசினாரு. ரொம்ப அருமையா இருந்தது.
கூடியிருந்தவர்கள், ஒபாமா பேரைக் கேட்டதும், கேலி செய்ததை, தவறு என்று சுட்டிக் காட்டி, ஆனது ஆயிடுச்சு, இனி வரும் நாட்களில் எல்லாரும், ஒபாமா பின்னால் இருந்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லணும்னு எல்லாருகிட்டையும் கேட்டுக்கிட்டாரு.
புல்லரிச்சிடுச்சு. இவரே ஜெயிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு உள்ளுக்குள்ள தோணிச்சு. Salutes McCain! உங்க தேசப்பற்று அபாரம். நீங்க சேந்திருக்கும் கும்பல்தான் சரியில்லை.

தொரை தொரைதாங்க!

எவ்வளோ, டீசண்ட்டான ஒரு தேர்தல் முறை.
அதற்கு முத்தாய்ப்பு வைத்த மாதிரி, ஜான் மெக்கியின் மற்றும் பராக் ஒபாமாவின் பேச்சு.

கலக்கல்!

அமெரிக்கா நல்ல ஊருண்ணே! நடுவுல அப்பப்ப சருக்கினாலும், மக்கள் சுதாரிச்சிடறாங்க. அதனாலதான், இவ்ளோ வருஷமா, ஸ்ட்ராங்கா நிக்கறாங்க!

நாம கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!

வாழ்க ஜனநாயகம்!

பி.கு: இங்க கலிஃபோர்னியாவுல, இந்த மாதிரி தேர்தலின் போது, மாநிலத்தில் செயல் படுத்தவேண்டிய, மிகப் பெரிய திட்டப் பணிகளுக்கு, மக்கள் கிட்ட வாக்கு சேகரிக்கறாங்க.
இதில் சிலவற்றின் முடிவுகள், personally, எனக்கு ஏற்புடையதாய் இல்லை ;)

Proposition 1A - High-Speed Train - வடக்கு~தெற்கு கலிஃபோர்னியாவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் - 51% voted NO! :(
Proposition 2 - Treatment of Farm Animals - ஆடு, மாடு, கோழி, பன்றி, மாமிசம்/முட்டைக்காக வளக்கும்போது, அதை சின்ன கூண்டில் போட்டு சித்தரவதை பண்ணாம, சந்தோஷமா வளத்துட்டு, அப்பரம் கசாப் பண்ணனும். - 62% voted YES! :)
Proposition 3 - Children's Hospital Bonds - குழந்தைகள் ஆஸ்பத்திரி மேம்பாடு - 51% voted NO :(
Proposition 4 - Minor Abortion - 18 வயது நிரம்பாத பெண்கள், அபார்ஷன் செய்து கொள்ளுமுன், பெற்றோறிடம் அறிவிக்கச் சட்டம். - 51% voted No! :)
Proposition 7 - Renewable Energy Generation - எனர்ஜி கொம்பேனியர், பெட்ரோல் அல்லாது, சூரிய ஒளி, காற்று போன்ற, alternate எனர்ஜியை பெருவாரியாக உற்பத்தி செய்யவேண்டும் - 66% voted NO! :(((((((
Proposition 8 - Same-Sex Marriage Ban - 54% voted Yes! :(((((
Proposition 10 - Alternative Fuel Vehicles - எலெக்ட்ரிக் கார்கள், ஹைப்ரிட் கார்கள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை - 63% voted No :((

மேலதிக விவரங்கள் இங்கே:

47 comments:

SurveySan said...

John McCain said, "failure is mine, not yours".

இந்த மாதிரி சொல்லவே ஒரு திட மனசு வேணும்.

SurveySan said...

Yes-We-Can! தாரக மந்திரமாயிடுச்சு.

SurveySan said...

பதிவில் சொல்லியுள்ள propositionsக்கான கணக்கெடுப்பு இன்னும் முடியலை.

சில ஐட்டத்தின், முடிவுகள் லேசா மாறியிருக்கு. முடிந்ததும், அப்டேட்டறேன்.

SurveySan said...

80% voters voted in california.
அடேங்கப்பா!

வீட்டிலுருந்தே, கடுதாசி வழியாக ஓட்டுப் போடும் வசதி இருப்பதும் ஒரு காரணமா இருக்கலாம்.

வடுவூர் குமார் said...

நாம கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!
இதைச் சொல்லுங்க.

Truth said...

ஒபாமா வெற்றி பெற்றதை காட்டிலும் மெக்கேய்ன் தோற்றது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது.

/*John McCain said, "failure is mine, not yours".

இந்த மாதிரி சொல்லவே ஒரு திட மனசு வேணும்.*/

இது நல்ல விஷயமாக இருந்தாலும், குமுதத்தில் மெக்கேய்ன் பற்றி நான் படித்தது சரியென்று படவில்லை
குமுதம் அரசு பதில்களிலிருந்து-
------------------------
அவரை[ஒபாமாவை] எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். "ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?
------------------------

ஒரு நல்ல தலைவர் இதைச் சொல்வது [இது உண்மையெனில்] சரியில்லை.

ஒபாமா வெற்றி பெற்றதில் நல்லாத்தான் படுது. ஆன நீங்க USல இருக்கிறதுனால அப்பொப்போ ஒபாமா நாட்டுக்கு [USக்கும், இந்தியாவுக்கும்] பண்றத போஸ்டுன்ங்க :)

Boston Bala said...

"I don’t think his campaign was noble. But his farewell was." (lifted from The Balance Sheet: Online Only: The New Yorker - "Mysterious, But Well-Done"

Truth said...

http://thatstamil.oneindia.in/news/2008/11/05/world-obama-have-support-60-per-cent-indian-americans.html

interesting :)

Radha Sriram said...

ரெவெரெண்ட் ஜெச்சி ஜாக்சன்..., ஒப்ரா கண்களிலும் கண்ணீர் பாத்தீங்களா.......??மனச நெகிழ வச்ச்டுச்சு.......

rapp said...

//எவ்வளோ, டீசண்ட்டான ஒரு தேர்தல் முறை. //

ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................இந்தமுறை தேமாக்றேத்ஸ் கொஞ்சம் சுருசுருப்பா இருந்ததால ஓகே. இல்லைன்னா போன ரெண்டு முறை மாதிரி இல்லாத பிராடு வேலை செஞ்சிருப்பாங்க

rapp said...

//ஜான் மெக்கெயினும், லேசு பட்டவரில்லை.//

அதான, எவ்ளோ நாளா இதுக்காக காத்திருந்தார். அதுக்காகவே பிளான் போட்டு கண்ணாலம் எல்லாம் கடந்தா இங்க ஒரு நியூஸ் சானல்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இவரோட நெஜ இம்சை புஷ்தான், இல்லாட்டி முன்னயே இவரோட காமடி ஷோ அரங்கேறி, டிராஜடி முடிஞ்சிருக்கும்.

rapp said...

//உங்க தேசப்பற்று அபாரம்//
:):):) எழுபது மற்றும் எண்பதுகளின் ஹீரோ அல்லது முக்கிய கேரெக்டர். தொண்ணூறுகளின் கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அல்லது சிறப்புத் தோற்றம் இப்படின்னு ஹாலிவுட் படங்கள்ல, தொடர்களில், நாவல்களில் வியட்நாம் வார் வீரர்களை காமிப்பாங்கல்ல:):):)

திவாண்ணா said...

போன தேர்தல் தவிர சாதாரணமாவே தோத்து போனவங்க அங்கே டீசென்டாதான் இருந்ததா நினைவு. இங்கேதான்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஐயிட்டம் 2 தவிர மத்ததெல்லாமே நல்லா இல்லையே! ம்ம்ம்ம் அவங்க வாழ்க்கை அவங்க தேர்வு. நாம என்ன சொல்லறது?

SurveySan said...

radha,

//ரெவெரெண்ட் ஜெச்சி ஜாக்சன்..., ///

neelik kanneeer ;)

Fox paakkaliyaa?

Boston Bala said...

ஜெஸ்ஸி ஜாக்சன் நீலிக் கண்ணீர்!? என்ன சங்கதி? உரல்/விழியம் கொடுங்களேன்...

Radha Sriram said...

பாலா இந்தாங்க்......என்னால முடிஞ்சது..சர்வே பெட்டெரா ஏதாவது குடுப்பாரு.....

http://latimesblogs.latimes.com/washington/2008/11/for-many-americ.html

Radha Sriram said...

பாலா இந்தாங்க்......என்னால முடிஞ்சது..சர்வே பெட்டெரா ஏதாவது குடுப்பாரு.....

http://latimesblogs.latimes.com/washington/2008/11/for-many-americ.html

பெத்தராயுடு said...

//Proposition 1A - High-Speed Train - வடக்கு~தெற்கு கலிஃபோர்னியாவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் - 51% voted NO! :(//

I5 and I101 rocks!!!
I enjoyed and cherish the long drives in these freeways.

However, I do feel there should be a rail connection between Socal and Nocal.

Boston Bala said...

அந்த செய்தி ஏற்கனவே கேள்விப் பட்டேன்.

ஆனானப்பட்ட ஹில்லரியே வாழ்த்திப் பாடி மகிழும்போது, 'நம்மாளு ஜெயிச்சுட்டான்யா' என்று ஜெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டிருப்பார். (அல்லது நடுவில் ஃபாக்ஸில் ஒரு தோற்றமும், உடனே வேறொரு தோற்றமும் நேற்று வெளிப்பட்டதா?)

ஜெரைமயாவை ஒபாமா ஒதுக்கினாலும், அதில் ஜெரைமையாவுக்கு வருத்தம் இருந்தாலும், ஒபாமா வென்றவுடன் ஜெரமையாவுக்கும் தழு தழுத்திருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

மெக்கெயின் சொன்னது உண்மை. ஆனால் முதல்நாள் தான் ஒபாமாவை அவ்வளவு திட்டினார்:)
உடனே இப்படி ப்ளேட் மாற்றிப் பேசறதுக்கும் அரசியல்வாதியாக இருந்தால் தான் முடியும் சர்வே!!
இருந்தாலும் ஒரு வயசான மனுஷன் தோவியில் டிக்னிடி காண்பித்தது உயர்வாக இருந்தது.
இங்க இருக்கிற இந்தியர்கள் அனைவருக்காகவும் நான் இந்த ஆட்சி நல்லபடி நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

SurveySan said...

அழர ஆம்பளையையும், சிரிக்கர பொம்பளையையும் நம்பக்கூடாதுன்னு தலைவர் சொன்னது சரியாதான் இருக்கு.

லிங்க் இங்கே:
http://www.huffingtonpost.com/2008/07/09/jesse-jackson-caught-on-m_n_111732.html

SurveySan said...

வடுவூர் நன்றி!

லேசுல கத்துக்க மாட்டமே, நம்ம லகுடபாண்டிகள், இங்கணயும், குறை கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே ;)

SurveySan said...

truth,

///இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''//

இந்த மேட்டர் நான் கேள்விப்படலை. யாராவது, கயிறு திரிச்சதா இருக்கலாம்.
அரேபியரை நையாண்டி பண்ற மாதிரி, மெக்க்கெயின் சொல்லியிரூக்கமாட்டாருன்னே படுது.
மனசுல அப்படி நெனச்சிருந்தாலும், வாயில வந்திருக்காது.:)

SurveySan said...

rapp,

///ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................இந்தமுறை தேமாக்றேத்ஸ் கொஞ்சம் சுருசுருப்பா இருந்ததால ஓகே. இல்லைன்னா போன ரெண்டு முறை மாதிரி இல்லாத பிராடு வேலை செஞ்சிருப்பாங்க////

புஷ்ஷுக்கு ஃப்ளாரிடா சகோதரர் ஒதவின மாதிரி, மெக்கெயீனுக்கு யாரும் வரிஞ்சு கட்டிக்கினு வந்திருக்க மாட்டாங்க. :)

SurveySan said...

rapp,

////அதான, எவ்ளோ நாளா இதுக்காக காத்திருந்தார். அதுக்காகவே பிளான் போட்டு கண்ணாலம் எல்லாம் கடந்தா இங்க ஒரு நியூஸ் சானல்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இவரோட நெஜ இம்சை புஷ்தான், இல்லாட்டி முன்னயே இவரோட காமடி ஷோ அரங்கேறி, டிராஜடி முடிஞ்சிருக்கும்.
////

கண்ணாலம் பத்தி நானும் கேள்விப் பட்டேன். பத்தாண்டூ திட்டம் போட்டிருக்காரு. கைகூடல. பாவம்.
ஆனாலும், நல்ல மனுஷன்.

SurveySan said...

பாலா,

////(அல்லது நடுவில் ஃபாக்ஸில் ஒரு தோற்றமும், உடனே வேறொரு தோற்றமும் நேற்று வெளிப்பட்டதா?)
////

10000% இதுதான் நடந்தது.
ஃபாக்ஸில் அப்படி சொல்லி மாட்டிக்கட்டமே, இப்படி கண்ணீர் விட்டாவது, டாமேஜை சரிபண்ணலாம்னு நெனச்சிருப்பாரு.

உண்மையாவே கண்ணீர் விட்டு அழரவங்க, அப்பப்ப கண்ண தொடச்சுப்பாங்க. அழர மாதிரி நடிக்கரவங்க, தொடச்சிக்க மாட்டாங்க.

இது, நான் ரொம்ப ஆராயாம கண்டு பிடிச்ச உண்மை. ;)

SurveySan said...

//ஐயிட்டம் 2 தவிர மத்ததெல்லாமே நல்லா இல்லையே! ம்ம்ம்ம் அவங்க வாழ்க்கை அவங்க தேர்வு. நாம என்ன சொல்லறது?///

அதே அதே! ஐயிட்டம் 8க்கும் அதே கொடுமைதான்.
சிறுபான்மை வாழரதுக்கு, பெறும்பான்மை ஆளுங்க, அதுவும், சிறுபான்மையின் உண்மையான வலிகள் புரியாதவங்க, தீர்மானம் பண்றது மடத்தனமா இருக்கு.

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

////இருந்தாலும் ஒரு வயசான மனுஷன் தோவியில் டிக்னிடி காண்பித்தது உயர்வாக இருந்தது.///

யெஸ். அவரு மனசுக்குள்ள கடுப்பானாலும், வெளீல நல்ல படியா பேசி, எல்லாரையும் ஒன்றுபட சொன்னது நல்ல விஷயம்.

SurveySan said...

பெத்தராயுடு,

///I5 and I101 rocks!!!
I enjoyed and cherish the long drives in these freeways.////

oh yeah!

////However, I do feel there should be a rail connection between Socal and Nocal.
///

ரயில் வசதி இப்ப இருக்கு. ஆனா, கார்ல போரதை விட, இரண்டு மடங்கு நேரமாகும்.
அதி வேக, புல்லட், ரயில், அமெரிக்காவுக்குத் தேவை.

சதங்கா (Sathanga) said...

ஒபாமாஆஆஆஆ .... அரேபியராஆஆஆஆ ....

:)))

தோல்வியிலும் டிக்னிடி காட்டியது பற்றி சொன்ன வல்லிம்மாவின் பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்

VSK said...

நடந்து முடிந்த தேர்தல் அமெரிக்காவுக்கு நல்லதல்ல!

அடப்போய்யா! நான் இந்தியாவுக்குப் பிச்சுப்பேன் எனச் சொல்லுபவரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை!

க்ளிண்டன் ஆட்சியில் பயிற்சி பெற்ற ஆட்களால், ஒரு 'இமாலய' தாக்குதல் நிகழ்ந்ததும், தான் கொண்டுவந்த அஜெண்டாவை அப்படியே ஓரம் கட்டி, இந்த நாட்டு நலனே எனக்கு முக்கியம் என அடுத்த எட்டு ஆண்டுகள் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கவிடாமல் தடுத்த ஜார்ஜ் புஷ் என் மதிப்பில் இன்னமும் உயர்ந்தே நிற்கிறார்.

இது இங்கிருப்பவருக்கு நன்கு புரியுமென நினைக்கிறேன்!

இதை உணராமல், கொஞ்சம் கூட அறிமுகமில்லாத, அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாத மக்கள், ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை!

ஆனாலும், அமெரிக்கா இந்தியா இல்லை என்னும் ஒரே காரணத்தால், அவர் தேர்வை நான் வரவேற்கிறேன்!

அவரை வைத்து எதுவும் இங்கு நிகழ முடியாது!

மூவகை [அதிபர், அரசு, நீதி] நிர்வாக முறையில்,......

நல்லதே நடக்கும்!

VSK said...

கன்ஸெர்வேடிவ் கட்சிக்கு பேலின் போன்றவரே தகுதியானவர்!
அவர் தேர்வினால் தான், மெக்கெய்ன் போன்ற மிதவாதியால், இவ்வளவு ஓட்டாவது வாங்க முடிந்தது!
காலம் இதை நிரூபிக்கும்!

2012 அதிபர் தேர்தலில் இதை உணரலாம்!

VSK said...

தலைப்புடன் 100% ஒத்துப் போகிறேன்!

http://aaththigam.blogspot.com/2008/11/blog-post.html

SurveySan said...

VSK,

//க்ளிண்டன் ஆட்சியில் பயிற்சி பெற்ற ஆட்களால், ஒரு 'இமாலய' தாக்குதல் நிகழ்ந்ததும், தான் கொண்டுவந்த அஜெண்டாவை அப்படியே ஓரம் கட்டி, இந்த நாட்டு நலனே எனக்கு முக்கியம் என அடுத்த எட்டு ஆண்டுகள் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கவிடாமல் தடுத்த ஜார்ஜ் புஷ் என் மதிப்பில் இன்னமும் உயர்ந்தே நிற்கிறார்.///

இங்க அசம்பாவிதங்கள் நடக்காதது வரவேற்கத்தக்கது.
ஆனா, இராக்கில் 1 லட்சம் பொதுமக்கள் பலிவாங்கப்பட்டது, ஹிட்லர்தனம்.
வெறும், ஆப்கானிஸ்தானை மட்டும் கவனித்துவிட்டு, ஒசாமாவை பிடித்திருந்தா, புஷ், வரலாற்றில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்திருப்பார்.
இப்ப, ஒரு கோமாளியாக, சரித்திரத்தில் அரங்கேற்றப்படுவார்.

SurveySan said...

VSK,

////ஜார்ஜ் புஷ் என் மதிப்பில் இன்னமும் உயர்ந்தே நிற்கிறார்.////

அமெரிக்காவில் இருக்கும், 0.01% கும்பலில் நீங்களும் ஒருவர் ;)

SurveySan said...

VSK,

/////கன்ஸெர்வேடிவ் கட்சிக்கு பேலின் போன்றவரே தகுதியானவர்!
அவர் தேர்வினால் தான், மெக்கெய்ன் போன்ற மிதவாதியால், இவ்வளவு ஓட்டாவது வாங்க முடிந்தது!
காலம் இதை நிரூபிக்கும்!

2012 அதிபர் தேர்தலில் இதை உணரலாம்!////

மெய்யாலுமா சொல்றீங்க?
எப்படிங்க சார்? சாரா பெயிலின் பாத்தா, நம்ம பழைய லல்லுவை ஞாபகம் வந்துது.

SurveySan said...

சதங்கா,

__/\__

SurveySan said...

VSK,

புஷ், சாரா பெயிலின் பத்தி, உங்க கருத்ஸை ஒர தனி பதிவா போடுங்களேன்.

எவ்ளோ உடன்படறங்க, எவ்ளோ பேரு கும்மராங்கன்னு பாக்கணும் போல இருக்கு :)

மெய்யாலுமே, உங்க தரப்பு நியாய/வாதங்களை கேட்க அவா. நேரமிருக்கும்போது பதிவேத்துங்க.
புஷ்ஷைப் பத்தி, இப்படியாவது, வரலாற்றில் சில நல்ல விஷயங்கள் பதியப் பெற்றால் எனக்கு ஆட்சேபணை லேது ;)

VSK said...

நீங்கல் சொன்னதுபோல், ஒரு பதிவு, அவசியம் பதிகிறேன், சர்வேசன்!

1 லட்சம் மக்களை பலி வாங்கியது புஷ் இல்லை..
அவர்களே ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டார்[ன்றார்]கள்!
த்ஹிவிரவாதிகலை இந்தப்ப்பக்கம் வராமல் தடுத்த பெருமை புஷ்ஷையே சாரும்!

இன்னிக்கு நீங்களும், நானும் இப்படி எல்லாம் பேச முடிவதற்கும் அதுவே காரணம்!
இல்லைன்னா, என்னிக்கோ ஊரைப் பார்க்கப் போயிருப்போம்!
புஷ் ஈஸ் எ ஹீரோ!
கொஞ்சம் விட்டா, உலகுக்காக சிலுவை ஏந்திய ஏசு அளவுக்கும் அவரைச் சொல்ல நான் தயார்!

அது நீங்க சொன்ன 0.001% ஆனாலும்!

இன்னும் ஆறு மாசம் கழிச்சு இதைப் பேசுவோமே! சரியா?:))

VSK said...

ஆனாக்காண்டி, உங்க தலைப்போட நான் 100000000000000% ஒத்துப் போறேன்! :))

இது நிஜமாவே நல்ல ஊருதான்!
வேறெங்கும் காணாத சிறப்பெல்லாம் இங்கேதான் நடக்குது!

SurveySan said...

///கொஞ்சம் விட்டா, உலகுக்காக சிலுவை ஏந்திய ஏசு அளவுக்கும் அவரைச் சொல்ல நான் தயார்!//

ஐயகோ!!! ஸ்ஸ்ஸ்ஸ்.
ஆண்டவா, இதப் படிக்கவா எனக்கு கண்ணு கொடுத்தே? :)

சீக்கிரம் வலையேத்துங்க!

யாரங்கே! VSKயின், "Bush is a Hero" பதிவு வருதுன்னு, புஷ்ஷுக்கு ஓலை அனுப்புங்க.

பதவி வுட்டு போரதுக்குள்ள, ஒரு சில நல்ல வாக்காவது அவரு படிச்சுட்டுப் போவட்டும்.

அப்படியே, பா.பாலாவுக்கும் ஒரு ஓலை அனுப்புங்க. VSK எழுதரத, ஆங்கில ஆக்கம் செய்து, snapஅட்டும் ;)

ஐயகோ. ஒன்னியும் பிரீலியே.

இந்த வலையுலகம் இன்னும் என்னென்னவெல்லாம் காண இருக்கிறதோ ;)

விசித்திர உலகமைய்யா இது.

Santhosh said...

1 லட்சம் மக்களை பலி வாங்கியது புஷ் இல்லை..
அவர்களே ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டார்[ன்றார்]கள்!

விஎஸ்கே,
இந்த மேட்டர் புஷ்ஷுக்கு தெரியுமா? அதெப்படிங்க இம்முட்டு நாளா நல்ல புள்ளைங்களா இருந்தவங்க ஓவர் நைட்டுல அடிச்சிட்டு சாவுற அளவுக்கு ஆனாங்க? ஈராக்கில் சரி ஆப்கானிஸ்தானில் கூடவா அவங்களுக்குள்ளாரவே அடிச்சிகிட்டாங்க..

விஎஸ்கே இதை காண்டி தேர்தலுக்கு முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னு வையுங்க உங்க ஏரியாவுல உங்களுக்கு தான் அடுத்த தேர்தலில் செனட்டர் சீட்டு குடுத்து இருப்பாங்க..புஷ் மட்டும் தான் அப்படின்னு நினைச்சேன் மொத்த கட்சியும் அப்படித்தான் போல

//த்ஹிவிரவாதிகலை இந்தப்ப்பக்கம் வராமல் தடுத்த பெருமை புஷ்ஷையே சாரும்!//

தீவிரவாதிகள் அந்த பக்கம் வராம இருக்க காரணம் அமெரிக்காவின் பூகோள அமைப்பு அன்றி வேற எதுவும் இல்ல.. அமெரிக்கா காண்டி இந்தியா மாதிரி நாலா பக்கமும் நல்லவங்க சூழ இருந்து இருந்தா தெரிந்து இருக்கும் சேதி.. ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷ்யா மற்றும் இன்ன பிற நாடுகளில் அமெரிக்கர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே அமெரிக்கர்கள் மேல் இருக்கும் வெறுப்புக்கு உதாரணம்..இப்ப கூட அமெரிக்காவுல ஏதாவது ஒரு பிரச்சனைன்னா உச் கொட்ட ஆள் இல்ல.. எவனை கேட்டாலும் என்னா ஆட்டம் ஆடனிங்க. நல்லா வேணுமுன்னு 9/11 பிரச்சனையில இருந்து இன்றைய பொருளாதார நெருக்கடி வரைக்கு சொல்லிட்டு இருக்காங்க... என்ன செய்றது அம்முட்டு நல்லது செய்து இருக்கீங்க உலகத்துக்கு...


//இன்னிக்கு நீங்களும், நானும் இப்படி எல்லாம் பேச முடிவதற்கும் அதுவே காரணம்!
இல்லைன்னா, என்னிக்கோ ஊரைப் பார்க்கப் போயிருப்போம்!//
எவன் எப்படி செத்தா நமக்கென்ன? எந்த நாடு எப்படி அழிஞ்சா நமக்கென்னா நம்ம புள்ள குட்டிங்களோட சந்தோசமா இருக்கோமா... நல்ல மனப்பான்மை.. நல்லாஇருங்கடே! அதென்னா ஊர் பக்கம் வர அம்முட்டு பயம்?

Santhosh said...

//1 லட்சம் மக்களை பலி வாங்கியது புஷ் இல்லை..
அவர்களே ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டார்[ன்றார்]கள்!
த்ஹிவிரவாதிகலை இந்தப்ப்பக்கம் வராமல் தடுத்த பெருமை புஷ்ஷையே சாரும்!//
மனசாட்சி வேணும் வி.எஸ்.கே.. எப்படி தான் உங்களால இப்படி சொல்ல முடியுதோ.. சதாம் ஆட்சியே 100% மேல் அப்படின்னு ஈராக் மக்கள் உணர்வதாக வந்த செய்திகளை எல்லாம் நீங்க படிக்கறது இல்லையோ?

SRK said...

//John McCain said, "failure is mine, not yours".

இந்த மாதிரி சொல்லவே ஒரு திட மனசு வேணும்.//

எனக்கு ஜான் மெகெய்ன் பேசியதைக் கேட்ட பொழுது, "சோற்றாலடித்த பிண்டங்கள்" -தான் ஞாபகத்திற்கு வந்தது :-(

SurveySan said...

//சோற்றாலடித்த பிண்டங்கள்//

meaning?

SRK said...

$$ //சோற்றாலடித்த பிண்டங்கள்//

meaning? $$

http://www.google.com/search?hl=en&q=சோற்றாலடித்த+பிண்டங்கள்&btnG=Google+Search

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=பிண்டம்&table=fabricius

போதுங்களா?

SurveySan said...

//சோற்றாலடித்த பிண்டங்கள்/////

i know what பிண்டங்கள் is.

but, what is the meaning for சோற்றாலடித்த பிண்டங்கள்.

meaning, udhavakkarai jenmangal?