இதுக்கு ஏன் லகுடபாண்டின்னு தலைப்பு வைக்கறேன்னு எனக்கே தெரியல. ஆனா, சில பேர அப்படி சொல்லணும் போல தோணிச்சு.
இம்சை அரசன் புலிகேசில, மந்திரியா வந்து, உருப்படாத ஐடியாஸெல்லாம் அள்ளி வீசுவாரே, அவரு பேரு லகுடபாண்டின்னு நினைவு.
நம்ம மத்தியில், தண்ட ஐடியாஸெல்லாம், யாரும் அள்ளி வீசல. ஆனா, எல்லாத்திலையும் குத்தம் கண்டுபிடிக்கும், சிலரை, "லகுடபாண்டியாரே"ன்னு கூப்பிடணும் போல இருக்கு. :)
சமீபத்தில் நடந்த நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம், நமது லகுடபாண்டிகளுக்கு ஒரு உதாரணம்.
* ஈழப் ப்ரச்சனையை கண்டுக்கலன்னா குத்தம்
* கண்டுக்கிட்டு தந்தி கிந்தி அடிக்கச் சொன்னாலும் குத்தம்
* பதினெட்டு பட்டி கூட்டி முடிவெடுத்து ஒரு தீர்மானம் நெறைவேத்தினாலும் குத்தம்
* தீர்மானத்திலிருந்து பல்ட்டி அடிச்சாலும் குத்தம்
* நடிகர்கள் இத்த கண்டுக்கலன்னாலும் குத்தம்
* கண்டுக்கினு உண்ணாவிரதம் இருந்தாலும் குத்தம்
* உண்னாவிரதத்தோட மொய்ப்பணம் எழுதினாலும் குத்தம்
* மொய்ப்பணம் எழுதலன்னாலும் குத்தம்
* 10 லட்சம் கொடுத்தாலும் குத்தம், நூறு ரூவா கொடுத்தாலும் குத்தம்
லகுடபாண்டிகளே, எதுதாங்க சரி?
முப்பது வருஷமா ஒரு ப்ரச்சனைக்கு முடிவே இல்லாம, இழுத்திக்கிட்டு இருக்கு. இவ்ளோ வருஷம் இழுத்து பலரும் பல ஆதாயங்கள் பாத்தாச்சு. பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அப்படியேதான் இருக்காங்க. புலிகளுக்கு ஆதரவாவோ, againstஆவோ நான் பேசலாமான்னு தெரியல. பதிவர்களுக்கு எதாச்சும் கட்டுப்பாடு இருக்கா சாரே? இருந்தாலும், நெனைக்கரத சொல்லிடறேன்.
"Natural Borders" இல்லாம இருக்கர ஒரு நிலத்தில், இரண்டு தனித் தனி நாடு உருவாக்கினாலும், இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், எப்படிதான் சேந்து இருக்க முடியும்? இது, லேசுல, முடியர விஷயமா? இப்படியே இது இழுத்துக்கிட்டு இருந்தா, எவ்வளவு நாள்தான் தாக்கு பிடிப்பாங்க.
அடுத்த தலைமுறையும் இப்படித்தான் கஷ்டப் படணுமா? சுமுகமான வேர தீர்வே இல்லையா இதுக்கு?
இந்த விஷயத்தில், இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ள நிலை, ரொம்ப மட்டமானது. அமெரிக்கா மாதிரி, நாம இண்டர்நேஷனல் போலீஸாகணும்னு இல்லை, ஆனா, கொஞ்சமாவது கேள்வி கேக்கணும். நம்ம இருப்பை காட்டணும்.
அமெரிக்கா இராக்கை போட்டுத்தாங்கும்போது, ஒரு உதவாக்கரை நாடும், கேள்வி கேட்காததால், அங்கே ஒரு லட்சம், பொது மக்கள் உயிரிழக்க நேரிட்டது.
நாளைக்கு, இந்தியாவிலும், டபிள்யூ.எம்.டீ இருக்குன்னு எவனாவது கதை கட்டி விட்டா, நம்மளையும் போட்டுத்தாக்குவாங்க, அப்ப வேற எந்த உதவாக்கரையும் கேள்வி கேக்கலன்னா, நம்ம கதி அதோ கதி.
பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பு இருக்கு. வெறும் ஈழப் ப்ரச்சனைன்னு இல்லை, நாட்டில் நடக்கும் எந்த்த ப்ரச்சனைக்கும், நாம் நியாயம்னு நெனைக்கரது நடக்கலன்னா, கொடி பிடிக்கணும். வீதிக்கு வரணும், குரல் எழுப்பணும், கேள்வி கேக்கணும்.
எவனுக்கோ என்னமோ ஆவுது, நமக்கென்னன்னா, நாளைக்கு, நம்ம வீட்டுல ஒரு ப்ரச்சனை வரும்போது, மத்த எல்லாரும், அக்கடான்னுதான் கெடப்பான்.
ஈழப் ப்ரச்சனைக்கு, நடிகர்கள், வீதியில் இறங்கி, உண்ணாவிரதம் இருக்கரதெல்லாம் வரவேற்க்கப் படவேண்டியது. நாட்ல என்ன ப்ரச்சனை நடந்தாலும், போராடரதுக்கு, நடிகர்களாவது நமக்கு இருக்காங்களேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.
ஒரு டாக்டரோ, கல்லூரி மாணவனோ, வங்கி ஊழியனோ, ஆட்டோ/பஸ் ஓட்டறவனோ, பைலட்டோ, பள்ளி மாணவனோ, ஆணி புடுங்கரவனோ, இந்த மாதிரி வீதிக்கு வந்து கொடிதூக்கி கோஷம் போட்டு, ஜெயிலுக்கு போனான்னு செய்தி வருதா?
வரணும். அப்பதான், விடிவு காலம் வரும்.
Sickoன்னு ஒரு டாக்குமெண்டரி பாத்தேன். மைக்கேல் மூர் எடுத்த படம் இது. அமெரிக்க, மருத்துவ செலவுகளும், இங்கிருக்கும் இன்ஷூரன்ஸும், சாமான்யனுக்கு, மருத்துவ வசதிகளை எப்படி எட்டாக் கனியா ஆக்கி வச்சிருக்குன்னு விலாவாரியா எடுத்துச் சொல்லறாரு.
அண்டை நாடான கனடாவிலும், U.Kவிலும், Franceலும், க்யூபாவிலும், எல்லோருக்கும், மருத்துவ வசதி இலவசமா கிட்டுவது போல், அவர்களின், அரசாங்கம் செஞ்சு கொடுத்திருக்கு.
அமெரிக்காவில், எல்லா சிகிச்சையும், இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஒத்துக் கொண்டால்தான், சாமான்யனுக்கு செய்து கொள்ள முடியும். வெறும் கைகாசு கொண்டு, எந்த சிகிச்சையும் செய்து கொள்ள கட்டுப்படி ஆகாது.
உதாரணத்துக்கு,
* appendicitis ஆப்பரேஷன் சில லட்சங்கள் ஆகும்.
* kidney stones ஆப்பரேஷன், கிட்டத்தட்ட 10 லட்சம்.
* heart attack வந்து எமெர்ஜன்ஸி போனவருக்கு, ஒரு கோடி ரூவாய்க்கு பில் வந்தது.
* காது கேட்காத சிறு குழந்தைக்கு, இரண்டு காதிலும் ஒரு கருவி பொறுத்தினால் சரியாகும் என்பது டாக்டரின் ஆலோசனை. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஒரு காதில் வச்சா போதும்னு, அதுக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கறாங்க.
இப்படி, இங்கிருக்கும், பணம் பிடுங்கும், இன்ஷூரன்ஸ் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்.
ஒழுங்கா இருந்த, மருத்துவ வசதிகளை, இப்படி சீரழிஞ்சு போகவச்சதன், பின்னணியில், நிக்ஸன் என்ற ஒரு அரசியல் பெருச்சாளி இருப்பதாய் கேள்வி.
Sorry, I digress.
இந்த மருத்துவ வசதி அமெரிக்காவில் இப்படி சீரழிஞ்சு கிடக்க, கனடா, ஐரோப்பா, க்யூபாலையெல்லாம் மட்டும், மக்களுக்கு சாதகமான வகையில் இருக்கே எப்படி?
மிக முக்கியமான காரணம். அந்த நாட்டின் அரசியல் தலைகளும், மற்ற visionariesம் தான்.
க்யூபாவில், ஃபிடல் காஸ்ட்ரோவை, வில்லன் மாதிரி, ஊடகங்கள் காட்டி வச்சிருக்காங்க. ஆனா, அந்தாளு, அவர் ஊரின், மொத்த ஜனத்தொகைக்கும், இலவச மருத்துவ வசதி செஞ்சு வச்சிருக்காரு.
அமெரிக்காவில்,$120க்கு கிடைக்கும், ஒரு ஆஸ்மா மரூந்து, க்யூபாவில், $0.05க்கு கிடைக்குதாம்.
பெரிய அரசியல் தலைவனோ, Visionaryயோ இல்லாத நாட்டுல இது எப்படி சாத்தியம்?
France ஒரு உதாரணம்.
அங்க, இந்த மாதிரி நல்ல திட்டங்கள் நிறைவேற, காரணமா இருக்கரது, அங்கு இருக்கும் பொதுமக்கள் தான்.
எந்த ப்ரச்சனையாயிருந்தாலும், இவங்க, லட்சக்கணக்குல, வீதியில தெரண்டுடுவாங்களாம்.
கத்தர கத்துல, அரசாங்கமே அரண்டு போயிடுமாம்.
அதனால, ஒவ்வொரு திட்டம் தீட்டி அறிவிக்கரதுக்கு முன்னாடி, தீர ஆலோசிச்சு, பொதுமக்களுக்கு நல்லதான்னு ஆராஞ்சப்பரம்தான் அறிவிப்பே வருமாம்.
நல்ல தலைவனோ, visionaryயோ கிட்டும் வரை, இந்தியாவிலும், பொதுமக்கள் அனைவரும், கேள்விகள் கேட்கணும்.
அப்பதான், விடிவு பிறக்கும்!!!
ஸோ, லகுடபாண்டிகளே, கேள்வி கேளுங்க. எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிக்காதீங்க. கொடியத் தூக்குங்க!
சரிதானே? ;)
"I began revolution with 82 men. If I had to do it again, I do it with 10 or 15 and absolute faith. It does not matter how small you are if you have faith and plan of action" - Fidel Castro
11 comments:
//பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பு இருக்கு. வெறும் ஈழப் ப்ரச்சனைன்னு இல்லை, நாட்டில் நடக்கும் எந்த்த ப்ரச்சனைக்கும், நாம் நியாயம்னு நெனைக்கரது நடக்கலன்னா, கொடி பிடிக்கணும். வீதிக்கு வரணும், குரல் எழுப்பணும், கேள்வி கேக்கணும்.
எவனுக்கோ என்னமோ ஆவுது, நமக்கென்னன்னா, நாளைக்கு, நம்ம வீட்டுல ஒரு ப்ரச்சனை வரும்போது, மத்த எல்லாரும், அக்கடான்னுதான் கெடப்பான்.
ஈழப் ப்ரச்சனைக்கு, நடிகர்கள், வீதியில் இறங்கி, உண்ணாவிரதம் இருக்கரதெல்லாம் வரவேற்க்கப் படவேண்டியது. நாட்ல என்ன ப்ரச்சனை நடந்தாலும், போராடரதுக்கு, நடிகர்களாவது நமக்கு இருக்காங்களேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.
ஒரு டாக்டரோ, கல்லூரி மாணவனோ, வங்கி ஊழியனோ, ஆட்டோ/பஸ் ஓட்டறவனோ, பைலட்டோ, பள்ளி மாணவனோ, ஆணி புடுங்கரவனோ, இந்த மாதிரி வீதிக்கு வந்து கொடிதூக்கி கோஷம் போட்டு, ஜெயிலுக்கு போனான்னு செய்தி வருதா?
வரணும். அப்பதான், விடிவு காலம் வரும்.//
இதை வழிமொழிகிறேன்.
நிர்ப்பந்தத்தினால் குரல் கொடுக்கிறார்களா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். குரல் கொடுக்கிறார்களா இல்லையா? அதுதான் முக்கியம்.
//ஆனா, எல்லாத்திலையும் குத்தம் கண்டுபிடிக்கும், சிலரை, "லகுடபாண்டியாரே"ன்னு கூப்பிடணும் போல இருக்கு. :)//
கூப்பிடலாம்னுதான் தோணுது உங்கள் உதாரணங்களைப் படிக்கையில்.
நாளாந்தம் நடக்கும் சில,பல கூத்துகளால் வெறுத்து உள்ளீர்கள் என்பது புரிகிறது.
ஆனால் ஈழப் பிரச்சினை பற்றி ஆழ்ந்து படித்தே இந்தியா தனது பக்கத் தீர்வை வழங்க வேண்டும்.. அவசரப் பட்டு இந்தியா தலை இடுவது இந்தியாவுக்கு ஆபத்தானது என்பது கடந்த காலப் படிப்பினை..
ஈழத் தமிழர்கள் சார்பான நிலைப்பாட்டை தமிழகம் எடுத்திருப்பதை இந்திய மத்திய அரசு உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.
வணக்கம் சர்வேசன்
\\
நாம் நியாயம்னு நெனைக்கரது நடக்கலன்னா, கொடி பிடிக்கணும். வீதிக்கு வரணும், குரல் எழுப்பணும், கேள்வி கேக்கணும்.
\\
ம்ம்ம்ம நானும் உடன்படுகிறேன்
எல்லாத்துக்கும் குரல் எழுப்பனும், இல்லனா நாம் உணர்வுள்ளவர்கள் இல்லை, வெரும் புல், பூண்டு மாதிரி ஆயிடுவோம்
நன்றி
Thanks Ramalakshmi, Loshan, Rajarajan!
//ஈழத் தமிழர்கள் சார்பான நிலைப்பாட்டை தமிழகம் எடுத்திருப்பதை இந்திய மத்திய அரசு உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.
///
yes. but, the DMK stand on this issue seems questionable. not sure, how much central is getting influenced.
To get any solution out of our governments, common folks should come to the roads, pressurize state to pressurize central.
otherwise, we will see another 30 years with no resolution.
//எவனுக்கோ என்னமோ ஆவுது, நமக்கென்னன்னா, நாளைக்கு, நம்ம வீட்டுல ஒரு ப்ரச்சனை வரும்போது, மத்த எல்லாரும், அக்கடான்னுதான் கெடப்பான்.
//
எவனாவது இருந்தாதானே அக்கடான்னு இருக்கரதுக்கு!!!
எனக்கு இந்த வரிகள் தான் ஞாபத்துக்கு வருது.
நாளைக்கு நமக்கும் இதுமாதிரி ஆனாலும் ஆகலாம்.
When the Nazis came for the communists,
I remained silent;
I was not a communist.
When they locked up the social democrats,
I remained silent;
I was not a social democrat.
When they came for the trade unionists,
I did not speak out;
I was not a trade unionist.
When they came for the Jews,
I remained silent;
I was not a Jew.
When they came for me,
there was no one left to speak out.
anand, கலக்கல் வரிகள்.
நாளைக்கு நமக்கும் இதே நெலமதான்.
கேள்வி கேக்க ஆரம்பிக்கணும்.
இன்று மேலும் பல லகுடபாண்டிகள் கண்ணில் பட்டார்கள் :)
இன்றைய எனது இந்தப் பதிவுக்கு http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post.html
உங்களது இந்தப் பதிவும் ஒரு காரணம். நன்றி சர்வேசன்.
ராமலக்ஷ்மி,
ரொம்ப நன்றி!
உங்க கவிதை பிரமாதம். வெரி டச்சிங்!
ராமலஷ்மி சொல்றமாதிரி குரல்கொடுக்கிறாங்க இல்லையா அதான் முக்கியம்/// கத்தறபிள்ளைக்குத்தான் காம்ப்ளான் கிடைக்கும்..நல்லபதிவு சர்வ்ஸ்
'லகுடபாண்டிகள்!!' பேர் நல்லாருக்கு.
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர்கள்...ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கா இரங்கப் போகிறார்கள்? நமது கையாலாகததனத்தை நன்றாகவே சாடியிருக்கிறீர்கள். உறைப்பவர்களுக்கு உறைக்கட்டும்.
நல்ல நடை சர்வேசன்!!
Post a Comment