அத்தனையும் முத்துக்கள்னு ஒரு பதிவப் போட்டு, சமீபத்தில் வாங்கிய முத்து மாலையை, கட்டம் கட்டி எடுத்த புகைப்படங்களைப் வலை ஏத்தியிருந்தேன். அந்தப் பதிவில், அந்த மாலையை வாங்கிய கதையை சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.
முத்து வாங்கரத பத்தி எனக்கு ஒரு விஷயமும் தெரியாது. அலுவலகத்தில் உள்ள சில எக்ஸ்பேர்ட்ஸ் கிட்ட கேட்டு இந்த பக்கத்தில் வாங்கியதுதான்.
அப்பரம் என்னாத்துக்கு, 'கதையை' சொல்றேன்னு சொன்னன்னு கேக்கறீங்களா?
விஷயத்துக்கு வரேன்.
எனக்கு இந்த நகை நட்டு வாங்கரதுல எல்லாம் பெரிய இன்வால்வ்மெண்ட் இல்லை. (அதெல்லாம் உனக்கு எதுக்கு? இன்வால்வ்மெண்ட் இருக்கரவங்களுக்கு வாங்கிக் கொடுக்கரதோட நம்ம வேலை முடியுதுங்கறீங்களா?)
அதிலும், குறிப்பா, இந்த வைரம், முத்துக்கள் எல்லாம், கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.
நிஜ வைரம், Blood Diamond போன்ற படங்களில் சுட்டிக் காட்டியபடி, தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி/குண்டுகள் வாங்கவும், சிறுவர்களையும், ஏழைகளையும் அடிமைகளாக உருவாக்கவும், மட்டுமே பெருமளவு பயன்படுகிறது.
இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சதும், வைரத்துக்காக செலவு செய்ய, (அது என்னதான் நல்ல இன்வெஸ்ட்மெண்ட்டா இருந்தாலும்), மனது ஒத்துழைப்பதில்லை.
முத்து என்ன பாவம் செஞ்சுச்சு?
முத்து தனிக்கதை. உயிர் சம்பந்தப்பட்டது. வைரத்தை விடக் கொடுமை :)
நிஜ முத்து எப்படி உருவாகுது?
நீரில் வாழும் சிப்பிகள் (oysters), தன் உடம்புக்குள் புகுந்து கொள்ளும் 'ஒட்டுயிர்'களை (parasites) அழிக்க, ஒரு திரவத்தை உற்பத்தி பண்ணும். அந்த திரவம், ஒட்டுயிரை சூழ்ந்து கொண்டு கொன்று விடும். இந்த திரவம் தான் சில வருஷங்களில் கெட்டியாகி, முத்தாகிறது.
இப்படி இயற்கையில் உருவாகும் முத்துக்களில், அழகான வட்ட வடிவம் கிடைப்பது, மிக அரிதான விஷயம்.
அப்படி கிடைத்தா, அதன் விலை, பல ஆயிரங்கள் முதல், சில லட்சங்கள் வரைக்கும் கூட இருக்கும்.
எல்லாருக்கும் முத்து கெடைக்க என்ன வழின்னு யோசிச்ச, ஜப்பானிய மூளை ஒண்ணு, ஒரு சிப்பிய புடிச்சு, அதன் ஓட்டை கீரி, அதனுள், ஒரு ஒட்டுயிரை, இவரே போட்டாராம்.
அப்பரம் என்ன, அப்பாவியான சிப்பியார், ஐயையோ, நமக்கு ஜொரம் வந்துடுச்சு, ஒட்டுயிரை அழிக்கணும்னு, அந்த திரவத்தை உற்பத்தி பண்ணி, முத்தை உருவாக்கிக் கொடுத்ததாம்.
மேட்டர் சூப்பரா வர்க்-அவுட் ஆயிடுச்சேன்னு, ஜப்பானிய தொரை, ஆடு மாடு கோழி மீன் வளக்கர மாதிரி, சிப்பிகளை வளத்து, ஒவ்வொண்ணுத்தையும் கீரி, அதுக்குள்ள ஒரு ஒட்டுயிரை ஊசி போட்டு, மூணு வருஷத்துக்கு ஒரு தரம், முத்து அறுவடை செய்ய ஆரம்பிச்சாராம். மேலும் மேட்டர்ஸ் இங்கே.
ஸோ, ஒவ்வொரு குட்டி முத்துக்கும், ஒரு உயிர் பலியாகுது.
உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது......
வூட்ல இனி யாராச்சும், முத்து வேணும்னு கேட்டா, மேலே இருப்பதைச் சொல்லி, எஸ்கேப்ப முடீதான்னு பாருங்க.
ஆடு, மாடு, கோழி, மீனெல்லாம், மசாலா தடவி சாப்பிடும்போது, இந்த 'அக்கரை' உனக்கு வரலியேன்னு, உங்கள்ள சில பேர் என்னைக் கேட்பது புரீது.
அது என்னமோ தெரீல, என்ன மாயமோ புரீல, சிக்கன் மட்டும் சலிக்கவே மாட்டேங்குது.
ஏக்சுவலி, அமெரிக்கால, ஆடு,மாடு,கோழி எல்லாம் வளக்கர விதம் பத்தி விலாவாரியா நான் சொன்னேன்னா, ஒருத்தரும், முட்டை கூட சாப்பிட மாட்டீங்க.
கூடிய விரைவில், திகிலும், பல திருப்பங்களும் நிறைந்த அந்தப் பதிவுடன் சந்திக்கிறேன்.
;)
பின்னூட்டம், பரிந்துரை இதெல்லாம், பாத்து பண்ணீங்கன்னா, முத்து வாங்கின பாவம் போகும், உங்களுக்கு ;)
11 comments:
மொத்து மொத்துன்னு மொத்துவோம், இல்ல ஓட்டு குத்து குத்துன்னு குத்துவோம்
Me the first
நானே ஒரு முத்துப் பிரியை. வெண் மற்றும் சாம்பல் முத்துக்களில் நிறைய வச்சிருக்கேன் கலெக்ஷன். பதிவுன்னு சொல்லி பாம் போட்டுட்டீங்களே:(! சரி கடைசி வரிகளில் நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டு பாதி பாவத்தை போக்கிட்டேன். போற வழியியே பரித்துரையும் பண்ணி மீதியையும் போக்கிக்கறேன்:)!
பி.கு: இனி வாங்கல முத்து. ஆனா வாங்கினதை விடுவானேன். பாருங்க உங்களாலும்தான் விட முடியல சிக்கனை:)!
[சொல்ல மறந்துட்டனே, நான் சைவம்:)!]
சின்ன அம்மணி, நன்றி! :)
ராமலக்ஷ்மி,
///இனி வாங்கல முத்து. ஆனா வாங்கினதை விடுவானேன்.///
:)
'நிஜ' முத்து, தாராளமா வாங்கலாம். இயற்கையா உருவாகி, சிப்பி செத்தப்பரம், எடுத்தா.
ஆனா, அதை எல்லாம் ஆராஞ்சு கண்டு பிடிக்கரதுக்கு, வாங்காம இருந்திடலாம்.
இமிடேஷன் வாங்கி, சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான் ;)
சிக்கனை விட முடியாது - ஆனா, இயன்றவரை, ஆர்கானிக் வாங்கி சாப்பிட்டா, பாவம் கம்மியாகும் ;(
நான் இந்த பதிவை படிக்கவே இல்லை.
அமுதா,
தெரிஞ்சே குத்தம் செய்யரதுதான் பெரீய பாவம்னு எங்க பெரீம்மா அடிக்கடி சொல்லுவாங்க
:)
காய்கறி விக்கிர விலைவாசில, ஏதோ சிக்கன், மட்டன்னு ஏழைக்கேத்த எள்ளுருண்ட்டையா பொழப்ப ஒட்டீட்டு இருக்கோம். அதையும் கெடுத்துராதீங்க.
வடகரை வேலன்,
////காய்கறி விக்கிர விலைவாசில, ஏதோ சிக்கன், மட்டன்னு ஏழைக்கேத்த எள்ளுருண்ட்டையா பொழப்ப ஒட்டீட்டு இருக்கோம். அதையும் கெடுத்துராதீங்க.///
;) யார் என்ன சொன்னாலும், நாம அசரக்கூடாது. சிக்கன் உள்ள போயிக்கிட்டே இருக்கணும்.
நல்ல கதையா இருக்கே.. இப்படித்தான் எங்கம்மா பட்டுப்புடவையே கட்டறதில்லை ரொம்ப வருசமா...
எங்க பெரியப்பா பஞ்சாமிர்தம் செய்யர கதையைசொல்லி நான் பஞ்சாமிர்தமே சாப்பிடரதில்ல..ஹோட்ட்டல்ல சாப்பாடு எபப்டின்னு சொல்றேன்னு சொன்னாங்க..காதை மூடிட்டு கேக்காம வந்துட்டேன்.. ஏன்னா அங்க எல்லாம் சாப்பிடாம இருக்கமுடியாதே...
பதிவு எங்க இருக்கு ?
Post a Comment