recent posts...

Tuesday, December 29, 2009

ஓட்டகத்த கட்டிக்கோ...

இப்படி இருந்தது,


இப்படி ஆக்கினாதான், பாக்க நல்லாருக்கு...


நீங்க என்ன நெனைக்கறீங்க?

Monday, December 28, 2009

Times of India - புடிச்சிருக்கு

இம்முறை, சென்னைக்குச் சென்றிருந்த போது கண்ட பல மாற்றங்களில், ஒரு குட்டி மாற்றம் எங்க வீட்டில் வாங்கும் தினசரி பேப்பர் மாறியிருந்தது.

படிக்கரமோ இல்லியோ, ஒரு கெத்துக்காக, The Hindu வாங்குவது, அநேகம் வீடுகளில் வாங்குவது வழக்கம். எங்க வீட்லயும் அப்படித்தான்னு நெனைக்கறேன்.

இந்த தடவ பாத்தா, Hindu போய், ஸ்லீக்கா, Times Of India வந்து கொண்டிருந்தது.

முதல் ஸ்பரிசத்திலேயே, ஒரு வித்யாசம் தெரிந்தது. நல்ல வாசிப்பு அனுபவம் தந்தது.
இந்தப் பக்கம் அந்தப்பக்கம் சாயாமல், பேலன்ஸ்டா செய்திகள் வந்த மாதிரி தெரிந்தது.
(நுண்ணரசியல் புரியா ஜென்மம் நானு)

நிறைய பாஸிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டது.
குடிமகனுக்கு தேவையான விஷயங்களும் கண்ணில் பட்டது. முக்கியமா, லஞ்சம் வாங்கி Vigilence மூலமா மாட்டறவங்க பத்தி, தினசரி ஒரு செய்தியாவது கண்ணில் பட்டது.
அதைத் தவிர Right to Information (RTI) வச்சு அவரு இத்தை செய்தார், இவரு அதை செய்தாருன்னும் செய்திகள் வருது.

நல்ல தொகுப்பு.

மிக முக்கியமாய், என்னை வெகுவாக கவர்ந்த விஷயம், ஒவ்வொரு செய்தியிலும் இடம்பெறும் புகைப்படம் ஒரு mug-shot போலல்லாமல், மிகவும் நேர்த்தியான கோணத்தில், ரசனையுடன், திறம்பட எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ஆம் தேதி, கண்ணில் பட்ட ஒரு படம்.
'சென்னையில் மழை'யை இப்படி படம் போட்டு காமிச்சா, நல்லாத்தேன் இருக்கு. :)


I recommend, Times of India.

Sunday, December 27, 2009

3 Idiots - புடிச்சிருக்கு

அவ்தார் பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 3 Idiotsக்காக காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு போலாம்னு போனது வீண் போகலை.
Qayamat காலங்களில் இருந்தே அமீரை ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த அமீர் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, 3 Idiotsல். கூடவே, நம்ம ஊரு மாதவனும், ஷர்மன் ஜோஷியும்.

இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (அமீர், மாதவன், ஷர்மான்), அவர்களின் கல்லூரி முதல்வரும், முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (ஓம் வைத்யா) சேர்ந்து கலக்கும் படம் 3 Idiots.

இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, 3 Idiots பார்க்கும்போதும்.
3 Idiots நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.

கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், அமீர் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, மாதவனும், ஷர்மானும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, அமீரைப் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.

முன்னாபாய் புகழ் ராஜ்குமார் இரானியின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.

அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?

மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?

படத்துக்கு வருவோம்.

திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.

படத்தில், அமீரைத் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், அமீர் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் Boman Irani கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.

கரீனா கபூர், பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க.
மாதவன், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, ஓம் வைத்யா. சதூர் ராமலிங்கம் என்ற மாணவனாக வராரு இவரு. ஹிந்தி படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். அமீரை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை அமீர் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.

அமீர் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, கரீனாவின் அக்காவுக்கு, அமீர் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், அமீர் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. அமீரின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.

சிம்லாவை படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.

படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.

ஹிந்தி தெரிஞ்சிருந்தா, இன்னும் நிறைவா இருந்திருக்கும். ஹ்ம்!

பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.

பி.கு1: ஆங்கிலத்தில், எனது 3 Idiots திரைப் பார்வை, இங்கே.

பி.கு2: சமீபத்தில் பார்த்த ரேனிகுண்டா, பேராண்மை கூட, வழக்கம் போலில்லாமல், நன்றாக இருந்தது. காணவும்.

Monday, December 21, 2009

வாவ்வ்வ் துபாய்!

துபாய் வழியா சென்னை போனா, போகும் வழியில் துயாயையும் சுத்திப் பாத்திடலாம்னு, இம்முறை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் புக்கியிருந்தேன்.
மக்கள்ஸ் சொன்ன மாதிரி, அநேகம் இடங்களையும் பாத்தாச்சு.

அமக்களமான ஊர் துபாய். எடுத்த படங்களில் சில கீழே தொகுத்துள்ளேன். மேல் விவரங்கள், பதிவாக, ஜெட் lagகெல்லாம் போனப்பரம் வரும் :)

பழைய கால துபாயை நினைவூட்டும் ஒரே விஷயம் இந்த 'ஆப்ரா' தோணி. சில்லரை காசுக்கு, இக்கரையிலிருந்து அக்கரை கொண்டு விடராங்க்ய.

எக்கானமிக்கு உதவலாம்னு தோணிச்சு. ஆனா, படம் மட்டும் புடிச்சு எல்லா கடையிலிருந்தும் எஸ்கேப்
Desert Safari போன போது, எங்களுக்கு முன்னால் போன ஜீப் போட்ட வட்டம். என்னமா ஓட்ராங்க்ய. பின்னாடி சீட்ல இருந்த கொரியன் பொண்ணு அழுதுடுச்சு.

ஒட்டகம், என் வெயிட்டு தாங்குமான்னு டவுட்டு இருந்தது. பாவம், என்னையும் தாங்கிச்சு. அதுக்கு மேலையும் தாங்கிச்சு.
300dhs (துபாய் திர்ஹம்) இருக்க வேண்டிய desert safari, 125dhs விக்கறாங்க. 200dhsக்கு விற்க வேண்டிய dinner cruise, 100dhsக்கு விக்கராங்க. கூட்டமும் கம்மி.
நம்ம ஊருல ஆடு மாடு மேயர மாதிரி, இங்க ஒட்டகம் ரோட்டை கிராஸ் பண்ணுது. ஹார்ன் அடிச்சு லொள்ளு பண்ணாம, அது போர வரைக்கும் வெயிட் பண்ணி போராங்க.
Desert Safari பெருசுங்களை விட, வாண்டுகள்தான் ரொம்ப என்சாய் பண்றாங்க. மணல்ல பெரண்டு பெரண்டு வெளையாடராங்க. மணலும், ஜலிச்ச மணல் மாதிரி நைசா இருக்கு.
விற்பனைக்கு வச்சிருந்தாங்க. வெலை ஜாஸ்தி. வழக்கம் போல், போட்டோ மட்டும் எடுத்துட்டு எஸ்கேப்.
ராத்திரிதான் களை கட்டுது. பாலைவனத்தின் உள்ளே இந்த மாதிரி செட்டப் போட்டு, பாட்டை போட்டு, ஆட்டமும் போட்டு, ரம்யமான பொழுது போக்கு.
அக்கா சூப்பரா ஆடினாங்க. பல பேரை ஆடவும் வச்சாங்க. க்ளிக்கி க்ளிக்கி கேமராவின் க்ளிக்கர் தேய்ந்தது தனிக் கதை ;)
கட்டடங்கள் ஒவ்வொண்ணும் ரம்யமா கட்டியிருக்காங்க. பெத்தையா மட்டும் இல்லாம, ஒரு ரசனையோடையும் இருக்கு. ஷாப்பிங் மால்ஸ் ஒவ்வொண்ணும், பப்பளான்னு இருக்கு. அம்பட்டன் கடைகூட மின்னுது. சரவணா பவன், லீ மெரிடியன் லுக்ல இருக்கு
சாலையும் அமக்களம். ஏழு லேனு. சார் படம் தான், பல எடத்துலையும் வச்சிருக்காங்க. சிலை வடிக்கத் தெரியாதா இவிகளுக்கு? நம்ம ஊர்லேருந்து எக்ஸ்போர்ட் பண்ணலாமே?
ஏழு ஸ்டார் ஹோட்டலாம். ஈ.மெயிலில் வந்த இந்த ஹோட்டலில் புகைப்படம் பாத்ததும் தான், துபாய் பாக்கணும்னு எண்ணம் ஸ்பார்க் ஆச்சு. இதில் தங்கும் காலம் எப்ப வருமோ?
பனை மர ஓலை வடிவில் அமைந்திருகும் ஒரு குட்டித் தீவின் உள் இது. ஓரத்தில் Atlantis ஹோட்டல். கடல்ல மணலையும் கல்லையும் போட்டு, இப்படியெல்லாம் கட்டணும்னு தோணிருக்குதே,அடேங்கப்பா, என்னா ஒரு visionary அந்தாளு?
உலகிலேயே உயரமான கட்டிடம் இதுதான். ஜனவரி 2010ல் பால் காய்ச்சி கிரஹப்ரவேசம் பண்றாங்களாம். 160 மாடிகளாம். 2684 அடி உயரமாம்.
துயாய் மெட்ரோ. இந்த வருஷம்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நான் வருவேன்னு தெரிஞ்சிருக்கும் போல :) செம வசதியா இருந்தது.
அழகோ அழகு மெட்ரோ. தொடச்சு பள பளன்னு வச்சிருக்காங்க மொத்த ஊரையும். மெட்ரோ கேக்கணுமா?
துபாய் க்ரீக்.
- ஓவரா செலவு பண்ணி, எக்கானமி ஆட்டம் காணுது. பல இடங்களில் கண்கூடா தெரியுது. Dinner cruise போன தோணி. பேரம் பேசாமலே, பாதி விலைக்கு டிக்கெட் தராங்க.

வெயில் காலம் தான் தாங்க முடியாதாம். கொளுத்திக் காயப் போட்டுடுமாம். இந்த வாரம் மழையெல்லாம் பெஞ்சு குளு குளுன்னு இருந்தது. (நல்ல மனசிருக்கரவங்க வந்தா மழை வராம என்ன பண்ணுமாம்)

Thursday, December 17, 2009

தஞ்சை பெரிய கோயில்

ஏற்கனவே பார்த்திருந்தாலும், பொன்னியின் செல்வன் படித்தபின் பார்த்தது, ஒரு புதிய ஃபீல் தந்தது.
amazing temple. ஆனா, பக்திப் பரவசம் கம்மியாதான் இருந்தது. கட்டமைப்பு தந்த ப்ரமிப்புதான் அதிகம்.

படத்தை க்ளிக்கினால், Flickrல் பெருசா பாக்கலாம்.


விக்கியில், பெரிய கோயிலைப் பற்றி விவரங்கள் இல்லை. யாராவது, மேட்டரை எழுதவும். நன்றீஸ்!

Wednesday, December 16, 2009

தெரு ஓர மரங்கள், வைத்ததும், பின் விளைவுகளும்

தெரு ஓரத்தில் சில மரங்களை நடலாம்னு ஒரு எண்ணம் சில பல வருஷமா இருந்துது. ஒவ்வொரு தடவையும், சோம்பேரித்தனத்தால் தள்ளிக்கிட்டே போச்சு.
வாய் கிழிய எல்லா நொட்டையையும் நொட்டை சொல்றமே, நம்மாலேயே உருப்படியா ஒண்ணு கூட பண்ணமுடியலியேன்னு, உள்ளிருந்து மனசாட்சி ஸ்ட்ராங்கா குத்திக்கிட்டே இருக்குது சமீப காலமா.
சரி, அட்லீஸ்ட் சொந்தத் தெருவுலையாவது கொஞ்சம் மரத்தை வச்சு, கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு ஃபீல் வர மாதிரியாவது தெருவை மாத்தலாம்னு முடிவு பண்ணேன்.
திறந்த வெளி சாக்கடை, தாரில்லா சாலை, ரோட்டோரக் குப்பைகள் எல்லாம் இருக்கும் தெருவில், அட்லீஸ்ட் மரத்தை வச்சு பச்சை ஃபீல் குடுத்தாலாவது, மத்த கலீஜ் எஃபெக்ட் கம்மியாகட்டும்னும் ஒரு நப்பாசை.

அதைத் தவிர, என் பள்ளி கல்லூரி நாட்களில், ரொம்ப ஏக்ட்டிவ்வா இருந்தா, தெருமக்களின் welfare association எல்லாம் முடங்கிய நிலையில், ஆளாளூக்கு அவங்க வீட்டுக்குள்ள இருக்கர welfareஐ மட்டும் கவனித்துக் கொண்டு, தெருவை அம்போன்னு விட்டதில்தான், இந்த திறந்த வெளி சாக்கடையும், தாரில்லா ரோடும், குப்பையும் வந்து சேர்ந்தன.

மெம்பர்களை, இந்த மரம் வைத்தல் மூலம், உசுப்பி விட்டா, நான் கிளம்பியதும், அவங்க மத்ததை கவனிச்சுப்பாங்கன்னு ஒரு ஸைட் கேல்குலேஷனும் மனதளவில் இருந்தது.

சரின்னு, கோதாவில் இறங்க முடிவு பண்ணேன்.

தனி ஆளா இறங்கினா வேலைக்காகாதுன்னு, இந்த மேட்டரை எடுத்துச் சொல்லி, இன்னும் சில சகபாடிகளையும் கூட்டுக்குச் சேர்த்தேன். அவங்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே புடிச்சுப் போச்சு. யாராச்சும், ஆரம்பிச்சு வக்க காத்துக்கிட்டு இருந்தாங்களாம்.

தெருவில் மரம் நட என்னென்ன தேவை?
* 20 மரக் கன்றுகள்
* அதைச் சுற்றிப் போட 20 பாதுகாப்பு கூண்டுகள்
* 10 கிலோ அடி உரம்
* குழி வெட்டி மரத்தை நட்டு உரம் போட்டு, கூண்டை வைக்க ஒரு சக்தி வாய்ந்த ஆள்/லேடி
* மரம் வைக்கப் போகும் இடத்தின் பின் உள்ள வீட்டில் இருப்போரிடம் ஒரு அனுமதி. ( அப்பத்தான் அவங்க தண்ணி ஊத்தி பாத்துப்பாங்க. அவங்க கையாலேயே வக்கச் சொன்னா இன்னும் பெட்டர்.)
* நகராட்சி கமிஷனரிடம் ஒரு சின்ன அனுமதி. (அப்பத்தான் ரோடு போடும்போது, புடுங்கிப் போட மாட்டாங்கய)
* உள்ளூர் கவுன்சிலரிடம் ஒரு குட்டி அனுமதி. (அவரை விட்டுட்டு பண்ணா கோச்சுப்பாரு, பின்னாளில் பிடுங்கியும் போடுவாரு)

சென்ற பதிவில் சில விவரங்கள் கிட்டியது.
மரக்கன்றுகளை Chennai Social Service என்ற தொண்டு நிறுவனம் வழங்கும் என்பது ஒன்று. முதல் வேலையாக அவர்களை தொடர்பு கொண்டு 20 gulmoharகளும், சில பூவரசு மரக்கன்றுகளும் தேவை என்றேன்.
அவர்களும், மட மடன்னு, "எல்லாம் ரெடியா இருக்கு, என்னிக்குன்னு சொல்லுங்க எங்க volunteers கூட்டிட்டு வந்து நட்டுடறோம்"னு ஊக்கப் படுத்தினாங்க.
மரக்கன்று ஒன்றுக்கு 10ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்தத் தொகை, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அவர்களின் நர்சரிக்குத் தேவைப் படுகிறது. ப்ரைவேட் நர்சரியில் நாமே வாங்கினா, ஒரு கன்றுக்கு 50 லிருந்து 100 ரூ வை ஆகும்.

அடுத்ததா, பாதுகாப்பு கூண்டு. ஆரம்பத்தில் 300ரூ என்று நினைத்தது, உள்ளூர் வெல்டரிடம் கேட்டதில், ஒன்று செய்ய 700ரூ ஆகும்னு குண்டத் தூக்கிப் போட்டாரு. 20க்கு 14000ரூ. கண்ணைக் கட்டியது.
நிழல் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மூங்கிலில் பாதுகாப்பு கூண்டு செய்யும் ஹரீஷின் பரிச்சியம் கிட்டியது 140ரூவாய்க்கு இந்தக் கூண்டு செய்து தருகிறேன் என்று சொன்னார். கிட்டத்தட்ட அதை லாக் செய்த நேரம், ஒரு நாள் எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவங்க கிட்ட, மரம் நடுவதைப் பற்றியும், அதன் செலவைப் பற்றியும் சொன்ன போது, "dont worry. நான் ஒரு பத்து கூண்டுக்கு sponsor பண்றே"ன்னு சொன்னாங்க. குஷி ஆயிடுச்சு. சரின்னுட்டேன்.
இந்த மெத்தட் நல்லாருக்கேன்னு, அடுத்த நாள், என் டாக்டர் கிட்ட பேசினேன், அவரும், "நானும் மிச்ச கூண்டை sponsor செய்யறேன்"னு சொல்லிட்டாரு.

அட, இவ்ளோ சுலப்மா, சில ஆயிரங்களை பொது விஷயம்னா எடுத்து வுடறாங்களேன்னு ரொம்ப ஆச்சரியமா போச்சு எனக்கு. மடமடன்னு அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தேன்.

ஒரு சர்க்குலர் அடித்து, என் சகபாடிகளுடன், ஒவ்வொரு வீடாகச் சென்று விஷயத்தைச் சொல்லி, அவர்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கினேன்.
** இருபது வீடுகளில், இரண்டு வீட்ட்டார், அவர்கள் வீட்டின் முன் மரம் நடவே கூடாது என்று சண்டைக்கே வந்து விட்டனர். குப்பை சேரும், அது இதுன்னு நொண்டிச் சாக்கு. அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை எனினும், அவர்களின் விருப்பமின்றி நட்டு வைத்தால், ராவோடு ராவா ஒடச்சி போட்டுடுவாங்கன்னு தெரிந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போனோம்.


கையெழுத்திட்ட சர்க்குலரை எடுத்துக்கினு போயி, நகராட்சித் தலைவரிடமும் கொடுத்து, விஷயத்தைச் சொல்லி, அவரின் ஒப்புதலும் கேட்டாயிற்று. அப்படியே, சந்தடி சாக்கில், ரோடு எப்ப சார் போடுவீங்கன்னும் கேட்டு வைத்தேன். வரும் தம்பி, ஹிஹின்னு மழுப்பிட்டாரு.

உள்ளூர் கவுன்சிலரிடமும், மேட்டரைச் சொல்ல, அவரும், "ஓ.கே தம்பி, நல்ல மஞ்சாப் பூ வர மாதிரி வைங்க"ன்னாரு. நானும், டபுள் ஓகே சொல்லிட்டேன்.

வெல்டர் ஒருவரிடம், தேவையான கூண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து (தலா 700ரூ), கூண்டுக்கு பெயிண்ட் அடிக்க ஒரு பெயிண்ட்டரையும் பிடித்து (தலா ரூ200), 20 குழி வெட்ட ஒரு ஸ்ட்ராங்க் பாடியையும் பிடித்து (400ரூ), (CSS) Chennai Social Serviceடம் மரக்கன்றுகளுக்கும் (தலா 10ரூ) சொல்லியாச்சு.

குறித்த நாளில், கூண்டுகள் வந்திறங்கின. பெயிண்ட்டரும் வந்து இரவு முழுக்க அமர்ந்து பெயிண்ட்டினார். குழியும் தோண்டியாயிற்று. அடி உரமும் வாங்கியாச்சு. CSS தன்னார்வலர்களும் ஒரு இளங்காலைப் பொழுதில் சர்ர்ர்ர்ர்ருனு பள பளா காரில் வந்து இறங்கினார்கள். மொத்தம் மூணு பேரு. 1 சாஃப்ட்வேர் ஆசாமியும், ஒரு பிசினஸ் மேக்னட்டும், ஒரு கல்லூரி மாணவனும்.

அந்தந்த வீட்டு மாமா/மாமிக்களை விளித்து, அவர்கள் கையாலேயே குல்மோகரை நட்டுவைக்கச் செய்தார்கள் CSS ஆசாமிகள். மாமாஸ்/மாமீஸூக்கும் ஏக குஷி.

அப்படியாக இருபதையும் நட்டு, உரம் போட்டு, தண்ணீரும் ஊற்றி, மரம் வைப்பு விழா இனிதே முடிந்திருந்தது. எனக்கும் என் சகபாடிகளுக்கும், ஒரு மகிழ்ச்சியான அனுபவமாய் இருந்தது.

அன்றிரவு மழையும் பெய்து அமக்களப் படுத்தியது.

மகிழ்ச்சியை பொரட்டிப் போட்டது அடுத்த நாள். விடிஞ்சும் விடியாத அதிகாலையில், எங்க ஊரு கவுன்சிலரு கதைவை தட்டினாரு.
"இன்னா தம்பி, நான் உன்ன பூச்செடி வெக்கச் சொன்னா, காட்டு மரம் வச்சு விட்டிருக்க. இதெல்லாம் வளந்து நம்ம பைப்பெல்லாம் ஒடச்சு போட்டுடும்"னு ஆரம்பிச்சாரு.
நானும் பொறுமையா, "ஒலகம் முழுக்க, எல்லா ரோட்டுலையும் வெக்கர மரம்ணே இந்த குல்மோகரு, அழகா செவப்பா பூ பூத்து அம்சமா வரும், பைப்பெல்லாம் ஒன்னியும் பண்ணாது"ன்னேன்.

"அதெல்லாங் கெடையாது தம்பி. நானு, மக்கள் நலனைத் தான் பாக்கணும். நாளிக்கு பைப்பு ஒடஞ்சு தண்ணி வரலன்னா என்னத்தான் கேப்பாங்க்ய", இது அவரு. சொல்லிட்டுப் போயிட்டாரு.

நானும் சகபாடிகளை அவசர மீட்டிங் அழைத்து, மேட்டரைச் சொல்ல, "இவரை யாரோ கெளப்பி விட்டிருக்கணும், இல்லன்னா, வேர மீட்டர் இருக்கும்"னு ஆரூடம் சொன்னார்கள். ஒரு சகபாடி மட்டும், "நாம அவரை கூப்பிட்டு விழா எடுத்து மேள தாளத்தோட நட்டிருந்தா, இப்ப ப்ரச்சனை பண்ணியிருக்க மாட்டாரு. ஆனது ஆச்சு, பேசாம மரத்தை மாத்திடலாம், இல்லன்னா, கொஞ்ச நாள்ள புடிஞ்கிப் போட்டுடுவாரு. நம்ம டைமும் உழைப்பும் வீணாயிடும்".

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னா, இங்க வச்ச மரத்தை பிடுங்க வேண்டியிருக்கேன்னு டென்ஷனாயிட்டேன். நான் இருப்பது சில வாரங்கள்தான், இவரிடம் மல்லுக்கு நின்னால், நாம் எஸ்கேப் ஆனப்பரம், மத்தவங்களுக்குத்தான் கொடச்சல் என்பதால், 1/4 மனதுடன், மரக்கன்றுகளை மாற்ற முடிவு செய்தோம். உள்ளூர் நர்சரியில், தலா 50ரூ செலவில், அரளி, காட்டு மல்லி, மருதாணி, போன்ற குட்டி மரக்கன்றுகள் வாங்கி, ஏற்கனவே நட்டதை பிடுங்கி இதை நட்டோம்.
(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்).

இப்படி வளர்ந்து தெருவுக்கே புதிய தோரணத்தைத் தந்திருக்க வேண்டிய குல்மோகர் மரங்கள், அடுத்துள்ள நகருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அரளி மரங்களாவது வெக்க வுட்டாங்களே, அதுவே போதும் :(


இதில் இன்னொரு கொடுமை, நகராட்சி கமிஷனரின் ஒப்புதல் கடுதாசியை, நகராட்சி அலுவலகத்தில் போய் வாங்கி வச்சுக்கலாம்னு, மூணு தபா போயிட்டேன்.
"சார், நாளைக்கு வாங்க,"
"அங்க போய் கேளுங்க"
"இங்க போய் கேளுங்க"
"இன்னும் கையெழுத்தாகி வரலியே"

அது இதுன்னு இழுத்துக்கிட்டு இருந்தாங்க. கடுப்பாகி, கொஞ்சம் ஃபைலைத் தொறந்து பாருங்களேன்னேன். அவரு கையெழுத்துப் போட்டு கொடுத்து ஒருவாரமா அது ஃபைல்லையேதான் கெடக்குது. இனி, அதை எங்கியோ எண்ட்டர் பண்ணி, ஸ்டாம்ப் அடிச்சு கொடுப்பாங்களாம். அதுக்கு இன்னும் எத்தினி தபா அலையணுமோ.
வாங்கர சம்பளத்துக்கு வேலை செய்யாத ஆளுங்களைப் பாத்தா, எனக்கு பத்திக்கிட்டு வருது. கெரகம் புடிச்சவனுங்க!

மரம் நடுங்கோ! ஜாலியான அனுபவம் அது!

மேலதிக தகவல் வேணும்னா, கேளுங்கோ!

Tuesday, December 15, 2009

நச் 2009 போட்டி முடிவுகள்

நச் போட்டிக்கு வந்த எழுபது கதைகளை, நானும் சென்ஷியும் சேர்ந்து அலசி ஆராய்ந்து இருபது கதைகளை தேர்ந்தெடுத்திருந்தோம்.

இருபதில் முதல் இரண்டு பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுக்க,
வெட்டிப்பயல், CVR, சென்ஷி ஆகிய மூவர் குழு களத்தில் இறங்கியது.
இவர்களின் மதிப்பெண்ணுடன், வாசகர்கள், கதைகளுக்கு அளிக்கும் வாக்குகளையும் கலந்து ஆராய்ந்து வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதாக அறிவித்திருந்தேன்.
சர்வே பதிவின், பின்னூட்டத்தில் சொல்லியிருந்தபடி, மூவர் குழுவுக்கும் உறுதுணையாக இருக்க நாலாவதாக இன்னொரு நடுவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஹெவி-வெயிட் வேலையை, செய்து கொடுத்தவர், முத்துச்சரம் கோர்க்கும் ராமலக்ஷ்மி அவர்கள்.

மக்கள்ஸின் சர்வே மூலம் வந்த வாக்குகளை எண்ணியதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அதாவது, மொத்தம் 1363 வாக்குகள் பதிவாயிருந்தது.
ஆனால், சர்வே பதிவுக்கு கூகிளாரின் கணக்குப்படி தொள்ளாயிரத்தி சொச்சம் ஹிட்டுகள் மட்டுமே இருந்தன. ஸோ, தோராயமாய் சில பல நூறு வாக்குகள், செல்லாத கள்ள வாக்குகள் என்பது தெரிய வந்தது.
சர்வே கொம்பேனியை பிடித்து ஐ.பி ரிப்போர்ட் அது இதெல்லாம் கேட்டு, வடிகட்ட முனையலாம். ஆனா, அதெல்லாம் தேவை இல்லாமல், நாட்களை மேலும் நீட்டிக்கொண்டுச் செல்லும். நேர விரையமும் கூட.

ஆகையால், இம்முறை, சர்வே மூலம் வந்த வாக்குகளை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று எமது சர்வே கமிட்டியில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு நடுவர்களின், முடிவுகளை மட்டும் கணக்கில் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடுவர்கள் ஒவ்வொரு கதைக்கும் மதிப்பெண் அளித்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதைக்கு 100ம், அதற்கேற்றார்போல், மற்ற கதைகளுக்கும் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கீழ் வரும் பட்டியலில், நாலு நடுவர்களின் மதிப்பெண்களும், அவற்றின், பொது (average?) கூட்டலும்.

(கீழே, ஸ்க்ரோள் செய்து பார்க்கவும்......)













































கதை
நடுவர்1
நடுவர்2
நடுவர்3
நடுவர்4
Average (%)


1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
96
60
60
100
79


3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
73
100
70
90
83


10. திருப்பம் - சின்ன அம்மிணி
67
80
60
77
71


12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
93
65
95
95
87


19. இக்கணம் இக்கதை - Nundhaa
93
55
80
82
77


30. அவரு..அவரு..ஒரு - வருண்
53
75
65
77
67


34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
56
55
70
69
63


39. காமம் கொல் - Cable Sankar
67
65
60
69
65


44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
91
85
80
85
85


45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
87
70
80
87
81


52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
81
45
70
71
67


53. சட்டை - முரளிகண்ணன்
93
55
90
94
83


55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
73
85
80
95
83


56. அபரஞ்சிதா - அடலேறு
73
50
60
69
63


59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
77
50
60
82
67


63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
67
50
60
77
63


64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
89
60
70
77
74


68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
72
85
90
87
83


69. நிபுணன் - யோசிப்பவர்
69
60
70
71
68


70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar
Narayanan
100
60
100
100
90


அனைவரது மதிப்பெண்ணையும் கூட்டிக் கழித்து பார்த்ததில்,
முதல் இடத்தை பெற்று, அதற்கான $20 பரிசை வெல்பவர், நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி எழுதிய Sridhar Narayanan.

இரண்டாம் இடத்தையும், அதற்கான $10 பரிசும் வெல்பவர், அப்பா சொன்ன நரிக்கதை எழுதிய நிலா ரசிகன் அவர்கள்.

வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களும், கரகோஷங்களும்.

முதல் இருபது வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

ஏற்கனவே அறிவித்தபடி $70ஐ, முதல் பரிசு வென்ற, Sridhar Narayan பெயரில், உதவும் கரங்களுக்கு ஒரு குட்டி டொனேஷனும் செய்யப்படும்.

வெற்றி பெற்றவர்கள், surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு ஒரு ஈ.மடல் அனுப்பவும்.

நன்றீஸ்!

வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம்ஸ் (இதை உங்க பதிவுல போட்டுக்கலன்னா செக் பவுன்ஸ் ஆகிடும்னு சொல்றதெல்லாம் பொரளி, நம்பாதீங்க! :) ):



Monday, December 07, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... happy ending

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படிக் குற்றம்

இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, 'நோட்டீஸ் ஒட்டாதே' வாக்கியத்தின் மேலேயே போஸ்டர் ஒட்டிட்டுப் போறது எவ்ளோ சாதா விஷயமோ, அதே அளவுக்கு சாதா விஷயம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்.

கேக்கறவன் சாதாரணமா கேக்கறான், கொடுக்கரவனும் சாதாரணமா கொடுக்கறான்.

ஒருத்தன் கேட்டதும் 100ரூபாயிலிருந்து சில ஆயிரம்/லட்சம் வரை, மறு பேச்சு இல்லாமல் எடுத்து கொடுத்தா, யாருக்குத்தான் கேக்கறது கஷ்டம்?

நம்மில் பலருக்கும் கூட, அந்த 'பவர்' இருந்தா, கண்டிப்பா சந்துல சிந்து பாடாம இருக்க மாட்டோம். வலிய வர ஸ்ரீதேவியை எட்டி உதைப்பானேன்?

லஞ்சத்தை ஒழிக்கணும்னா, ஒரே வழி, கேட்டதும் கொடுக்கரதை நாமெல்லாம் நிறுத்தணும்.

கேட்டதும் கொடுக்கலன்னா, கண்டிப்பா, கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. ஒரு ட்ரிப்புக்கு பதில், மூணு நாலு ட்ரிப் போக வேண்டிவரலாம். அதிக அலைச்சல், அதிக மன உளைச்சல், இதையெல்லாம் அடைய நேரிடலாம்.
ஆனா, நாமெல்லாம் இந்த கொடுமைய கொஞ்சமாவது அனுபவிச்சாதான், வருங்கால சந்ததியினருக்கு லஞ்சத்தின் விஷத்திலிருந்து விடிவு கிட்டும்.

லஞ்சத்தை முழுசா ஒழிக்கவே முடியாது. இந்தியன் தாத்தா சொன்ன மாதிரி, ஒருத்தனை தப்பு செய்யச் சொல்ரதுக்கு, லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை.
ஒரு வீட்டுப் பத்திரத்தை, அதன் உண்மை விலைக்கு பதியாமல், அடிமாட்டு விலைக்கு பதிந்து, நமக்கு அரசாங்க வரியை குறைத்து வரும்படிச் செய்யும் ரெஜிஸ்ட்ராருக்கு, தப்புச் செய்ய துட்டு கொடுப்பது இவ்வகை. இங்கே, நாமும் benefited அந்தாளும் benefited. நாமம் பெறுவது, அரசாங்கம் மட்டுமே. indirectஆ நாமும்.
இந்த இடத்தில், தவறு, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மேல் உள்ளது. இந்த இடங்களில் இந்த மாதிரி களவாணித்தனம் செய்யாமல் இருக்க systemஐ ஒழுங்க படுத்தணும்.
ஆடிட் செய்து, ஆட்களை மடக்க வழி பண்ணணும், etc.. etc..

ஆனா, ஒரு சாமான்யனின், அடிப்படை விஷயங்களை முடித்துக் கொடுக்க, லஞ்சம் கேட்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
- பென்ஷனுக்கு அல்லாடும் வயதான பெரியவர்கள்
- அடிப்படை பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ்
- ஓட்டுனர் உரிமம்
- விவசாயிகளுக்கு கடன் கிட்டத் தேவையான கோப்புகள் விநியோகம்
- etc.. etc..

இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கும், சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிக்கு, பெரிய மண்டை குடைச்சல் வேலையெல்லாம் கிடையாது. ஒக்காந்த எடத்துலேருந்து, சில பேப்பரில் கிறுக்கி, வரும் சாமான்யனுக்கு, அவன் தேவைகளை பூர்த்தி செய்யணும்.

ஒரு பிறப்பு சான்றிதழ் வழங்க, பத்து கேள்வி இருக்கும் ஃபார்ம்.
அதை, படிச்சு பாத்து, கம்ப்யூட்டரில் தட்டச்சி, ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து, ஒரு கையெழுத்து போடணும்.
கூட்டிக் கழிச்சு பாத்தா, 10 நிமிஷ வேலை.
இந்த பிசாத்து வேலைக்கு,வாய் கூசாமல் 100ரூபாயை கொடுன்னு கேக்க அவனுக்கு எப்படி மனசு வருது, அதை கேட்டதும், சொரணையே இல்லாமல், அப்படியே எடுத்துக் கொடுக்க நம்மில் பாலருக்கு எப்படி மனசு வருது?

லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொன்னா, காணாத்ததை கண்டது போல், அவன் மிரள்கிறான். கொடுத்து கொடுத்து அந்தளவுக்கு grease போட்டு வச்சிருக்கோம் இந்த ஆட்களுக்கு.

ஒரு திருமண சான்றிதழ் வாங்க, நாலஞ்சு தடவை அலைய விட்டானுங்க. ஆனா, இறுதியில், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கணக்கா, தொடர் படையெடுப்பில், grease போடாமலே, சான்றிதழ் கிட்டியது.

இப்போ, பிறப்பு சான்றிதழ் வாங்கப் போனா, அதே மட்டமான அனுபவம் தான் கிட்டியது. e-governance எல்லாம் செஞ்சு வச்சிருந்தாலும், அந்த தளங்களெல்லாம் வேலை செய்யாமல், திரும்ப நம்ம அரசாங்க ஆசாமிகளிடம் தொங்க வேண்டிய நிலை.
100ரூபாய் லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு லுக் விட்டுட்டு வந்ததை சொல்லியிருந்தேன்.

அங்கேருந்து விருட்டுனு வந்ததும், சில பல வேலைகள் செய்தேன்.
அதுக்கப்பரம் திரும்ப மூன்று நாட்கள் கழித்து, அதே ஆளிடம், ரசீது கொடுத்ததும், சட்டுனு, பதினைஞ்சு நிமிஷத்துல, கைக்கு சான்றிதழ் வந்துடுச்சு. சில பல வேலைகளில், எது இந்த வேலையை சுலபமாய் முடிக்க உதவியது என்பதில் தான் என் குழுப்பமே...

செய்த சில பல வேலைகள் இவை:
- 'நூறு ரூபாய் கொடுங்க'ன்னு அவன் கேட்டதும், என் ரத்தம் கொதித்தது உண்மை. அதை முகத்திலும் காட்டியிருந்தேன். 'அதெல்லாம் தர முடியாது'ன்னு அழுத்தம் திருத்தமாவும் சொல்லியிருந்தேன். வாசலில், 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'னு ஒரு வாசகம் இருந்தது. அதனருகில் சில தொலைபேசி எண்கள் எல்லாம் இருந்தது, புகார் கொடுக்க. அவன் கிட்ட, கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, செல்பேசியில், நம்பரை அடிப்பது போல் ஒரு ஏக்ட் கொடுத்துட்டே கோபமா வெளீல வந்துட்டேன்.

- வீட்டுக்கு வந்ததும் ஒரே மண்டை குடைச்சல். என்னடா பண்றதுன்னு. விஜிலன்ஸ் விஷயங்களையெல்லாம் தேடிக்கிட்டு இருந்தேன். கூகிளில், 'லஞ்சம் சென்னை பிறப்பு சான்றிதழ்'னு தேடி, எந்தெந்த பக்கத்தில் எல்லாம் புகார்/greivanceனு இருக்கோ, அங்கெல்லாம் ஒரு புகாரை தட்டச்சினேன். அதைத் தவிர, நகராட்சி கமிஷனர், அவரு, இவரு, அவங்க, இவங்களுக்கெல்லாம் ஒரு ஈ.மடலும் அனுப்பினேன்.

- 5th pillar ஆட்களுக்கு விஷயத்தை அனுப்பியதும், உடனே பதில் வந்தது. ஒரு வாரத்துக்கு மேல இழுத்து அடிச்சாங்கன்னா, எங்க அலுவலகத்துக்கு வாங்க, நாம RTIஎல்லாம் உபயோகிச்சு வாங்கிடலாம்னு. மனசுக்குள் ஓரு சந்தோஷம், இப்படி உதவக் கூட ஒரு க்ரூப் இருக்கேன்னு. தைரியமும் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு.

- வீட்ல இருக்கரவங்களுக்கு அவசரம். டேய், நூறு தான, கொடுத்துட்டு மேட்டர வாங்கிட்டு வந்துடு, டைம் இல்லை, இதையெல்லாம் திறுத்த முடியாது, அவன் கிட்ட சண்டைக்கு நிக்காத, வீட்டுக்கு ஆட்டோ வரும், இந்த வகை அட்வைஸுகள்.

- இரண்டாம் முறையாக அங்கே சென்ற போது, செல்பேசியை கையில் ஓப்பன் பண்ணி ரெடியா வச்சுக்கிட்டேன், என்னமோ அடுத்த லைன்ல யாரோ, எங்க சம்பாஷணைகளெல்லாம் கேக்கர மாதிரி ஒரு பில்டப் கொடுக்க. விஜிலன்ஸ் ஆளுங்க, இப்படி தான் மடக்குவாங்கன்னு ஒரு இடத்தில் படிச்சிருந்தேன். அதாவது, விஜிலன்ஸ் கிட்ட புகார் கொடுத்தா, லஞ்சமா எவ்ளோ துட்டு இந்த அதிகாரி கேக்கறானோ, அந்த துட்டை விஜிலன்ஸ் கிட்ட குடுத்திடணுமாம், அவங்களும் அதை வாங்கி வச்சுக்கிட்டு, அதே தொகையை, ரசாயணம் தடவிய கரன்ஸியில் தருவாங்க.அதை எடுத்துக்கிட்டு திரும்ப அரசு அலுவலகம் போய், லஞ்சம் கேட்டவன் கிட்ட அதை கொடுத்ததும், வெளியில் காத்திருக்கும் விஜிலன்ஸ் ஆட்களுக்கு ஒரு சிக்னல் கொடுக்கணுமாம். அவங்க உடனே வந்து கையும் களவுமா ஆளை அமுக்கிடுவாங்க. ரொம்ப சுலபமா செய்யக் கூடிய வேலை இது. ஆனா, எனக்கிருக்கு சில நாட்கள் விடுமுறையில், இந்த அளவுக்கு பண்ண முடியுமா என்ற யோசனையில், சரி, பில்டப்பாவது கொடுக்கலாம்னு செல்பேசியை வைத்து ஒரு ஏக்ட் மட்டும் கொடுத்தேன்.

மேலே உள்ளதில் எது எப்படி வேலை செஞ்சுதுன்னு தெரியலை. ஆனா, இரண்டாம் முறை போய் ரசீதை கொடுத்ததும், 15 நிமிஷத்தில் கையில் சான்றிதழ்.
முதல் தடவையே இப்படி கிட்டும் நாள் எப்ப வருதோ, வளர்ந்த இந்தியாவில் வாழ்கிறோம்னு ஒரு சந்தோஷம் அப்பத்தான் கிட்டும்.

அப்படி ஒரு நாட்டை உருவாக்குவதில், பெரும் பங்கு நம்ம கையிலதான் இருக்கு.

சுலப வழியை தவிர்ப்போம்.
லஞ்சத்தை அறவே ஒழிப்போம்.

5th pillar, anticorruptionchennai மாதிரி இயக்கங்களில், உருப்பினர் ஆகிக்கோங்க, அதுவே பாதி கிணறு தாண்டியதைப் போலத்தான். vigilenceஆளுங்களும் பழக அருமையானவங்களாம் ;)

Sunday, December 06, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல்

வருஷம் என்னமா ஓடுது பாருங்க.
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிடுச்சு!

எதுக்குள்ள? - சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையை முடிக்க, நான் பட்டபாடு முடிந்து, ரெண்டு வருஷம் ஆச்சு.

இப்ப, மீண்டும் இந்த அரசாங்க இயந்திரத்திடம் ஒரு சின்ன மேட்டர் முடிக்க வேண்டிய தேவை வந்துள்ளது. ரெண்டு வருஷத்துக்கு முன் சப்-ரெஜிஸ்ட்ரார், இப்ப நகராட்சி அலுவலரிடம் வேலை முடிக்கணும்.

ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாய் கொடுத்தா, உடனே கையில் தரப்படவேண்டிய பிறப்பு சான்றிதழுக்காக இந்த புதிய தலைவலி.

நகராட்சி அலுவலகத்துக்குப் போனேன்.
ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாயுடன் அதை நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கிளார்க்கிடம் நீட்டினால், "நூத்தி இருபது ரூபா கொடுங்க"ன்னு வாய் கூசமா அப்பட்டமா லஞ்சம் கேட்டான் கெரகம் புடிச்சவன்.

"20 ரூபாதானே. என்னாத்துக்கு நூத்தி இருவதுன்னு" நான் கேட்டதுக்கு, "நூத்தி இருபது கொடுங்க. இன்னிக்குத்தான சர்ட்டிஃபிகேட் வேணும்?னு ஒரு எதிர் கேள்வி கேட்டான்.

எனக்கு ஒரு ரூபாய் கூட, அதிகமாய் கொடுப்பதில், உடன்பாடில்லை. அதுவும், இந்த மாதிரி சாக்கடைத்தனமாக கொஞ்சம் கூட கூசாமல் லஞ்சம் கேட்கும் பெருச்சாளிகளைப் பார்த்தால், ரத்தம் கன்னாபின்னான்னு கொதிக்க ஆரம்பிச்சுடுது.

என் ஒரே, drawback என்னான்னா, வரும் கோபத்தை வார்த்தைகளால் அள்ளிக் கொட்ட முடியாதது. மென்னு முழுங்கி, "அதெல்லாம் தர முடியாது. இருபது ரூபாதான்"ன்னு கூற மட்டுமே முடிந்தது.

"ஒரு வாரம் கழிச்சு வாங்க"ன்னு சொல்லிட்டான்.

எனக்கு, இந்த சர்ட்டிஃபிக்கேட்டின் தேவை இருந்தாலும், சரி என்னதான் பண்றான்னு பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்.

கேவலம் நூறு ரூவாய்க்கு,, இந்த மண்ட கொடச்சலும், மேலும் பலமுறையும் அலையுணுமான்னு நீங்க கேக்கலாம், என் நண்பர்கள் பலரும் கேட்டது போல்.

சும்மா, பொலம்பிக்கிட்டே மட்டும் இருந்தா, எப்பதான் விடிவு வரும், இந்த பெருச்சாளிகளிடம் இருந்து?
அதுவும், போன முறையாவது, கொஞ்சம் வயசான பெருச்சாளி. இம்மூறை, முப்பதுகளில் இருக்கும் ஒரு இளைஞன், இப்படி கூசாம லஞ்சம் கேக்கறான்.

நம் தலைமுறையும் இப்படித்தான் இருக்கப் போவுதுங்கரத நெனச்சா, ரொம்பவே வேதனையா இருக்கு.

அரசாங்கம், பல நல்ல விஷயங்களை செஞ்சுக்கிட்டு தான் இருக்கு. e-governance பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கெரகம் பிடிச்சவங்க முகத்தை பார்க்காமல், வீட்டிலிருந்தபடியே இணையம் மூலமாக சான்றிதழ்களை பெறும் வகை இருக்கிறது. ஆனா பாருங்க, என் நகராட்சியின் (பல்லவபுரம்) e-governance தளம் வேலை செய்வில்லை. (இல்ல, வேணும்னே அதை ஆஃப் பண்ணி வச்சிருக்காங்களான்னும் தெரியலை).

ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு வந்தாச்சு. இனி எத்தனை தடவ அலைய விடப் போறாங்கன்னு பாப்போம்.

சென்ற முறை இதே ப்ரச்சனை வந்தபோது, இனி லஞ்சம் யாராவது கேட்டால், விஜிலன்ஸில் போட்டுக் கொடுப்பேன்னு ஓரு தீர்மானம் மனசுக்குள்ள வச்சிருந்த்தேன். இம்முறை அதை செஞ்சு பாக்கலாமான்னு ஒரு வேகம் வருது, ஆனா அதை செயல்படுத்துவதை யோசிச்சா ஒரே தயக்கமா இருக்கு. எது எப்படி இருந்தாலும், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தான் அந்த சான்றிதழை வாங்கப் போகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னடா பண்ணலாம்னு இணையத்தை மேய்ந்த போது, கண்ணில் பட்ட சில ஹீரோஸின் தகவல்கள் கீழே பாருங்க.
நல்ல உத்யோகத்தில் இருக்கும் நாமே இப்படி சோம்பேரிகளாய் இரூக்கும்போது, படிக்காத பாமரனும், நம் கிராம வாசிகளும், வயதானவர்களும் எப்படி தைரியமா இந்த துரு பிடிச்ச அரசு இயந்திரத்தை எதிர்த்திருக்காங்கன்னு பாருங்க.
* கருங்கல்பாளையம் என்ற கிராமத்தில் இருக்கும், சசிகலா என்ற கூலித் தொழிலாளி, எட்டு மாத கர்பமாய் இருக்கும்போது, அரசின் மானியம் வாங்க Village administrative officerஇடம் கேட்டதர்க்கு, 100ரூ லஞ்சம் கேட்டானாம் அவன். கோபம் கொண்ட சசிகலாவும், கணவர் பச்சையப்பனும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்து, VAOவை கையும் களவுமாக பிடித்து உள்ளே போட்டார்களாம்.

பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத, பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

* கிருஷ்ணகிரியில், கருப்பண்ணன் என்ற விவசாயி தன் நிலப் பத்திரத்தின் நகலை கேட்டு விண்ணப்பித்தாரம். இங்கேயும், ராமானுஜம் என்ற VAO 200ரூபாய் லஞ்சம் கேட்டானாம். கோபம் கொண்ட கருப்பண்ணன், vigilenceல் உடனே புகார் கொடுத்து, ராமானுஜத்தை களி திங்க வைத்துள்ளார். கருப்பண்ணனுக்கு வங்கியில் கடன் பெற,இந்த நிலப் பத்திரம் அவசரமாக தேவைப் பட்டபோதும், படிந்து போகாம, இப்படி செய்துள்ளார் என்பது இங்கே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

* ஈரோட்டில், Pollution control boardல் லஞ்சம் பெருகுவதை கண்டித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராடி, Joseph Pandiaraj என்ற அதிகாரியை கைது செய்ய வைத்துள்ளனர்.

* Coimbatoreல் இரண்டு VAOக்களுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர், உள்ளூர் வாசிகள். கணபதி என்ற VAO 6000ரூபாய் லஞ்சம் கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.

* 150ரூபாய் லஞ்சம், ஒரு ஓய்வு பெற்ற ஏழை இராணுவ வீரரிடம் கேட்டதால், coimbatore medical collegeல் இருக்கும் ஒரு clerk கம்பி எண்ணுகிறார்.


இவ்ளோ ஹீரோஸ் ஸைலண்ட்டா தங்கள் ரௌத்தித்தை காட்டிக்கிட்டுத் தான் இருக்காங்க.
அவர்களுக்கு சாஷ்டாங்கமான நமஸ்காரம்!

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

இதைப் படிக்கும் நீங்கள், இனி வரும் காலங்களில் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ செய்தால், நானும், என் மற்ற வாசகர்களும், உங்கள் பெற்றோரும், உற்றாரும், குழந்தைகளும், உங்களை ஒரு சாக்கடைப் புழுவாக காண்பார்கள் என்று கருத்தில் கொள்க.

ஒண்ணு, Vigilence/லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போங்க, இல்ல, ஒரு பைசாவும் கொடுக்காம, அலஞ்சு திருஞ்சு வேலைய முடிச்சுக்கோங்க.

Say NO to சுலபவழி, please!


தொடரும்...

பி.கு1: வீட்டுக்கு ஆட்டோ வந்தா, காப்பாத்த வருவீங்கல்ல? ;)

பி.கு2: Fifth Pillar / ஐந்தாவது தூண் பத்தி தெரிஞ்சுக்கோங்க

Zero rupee note:

Thursday, November 26, 2009

நச் கதை போட்டி - சர்வே ஆரம்பம்

நச் போட்டிக்கு 70 கதைகள் வந்து, எழுபதில், சென்ஷி துணையுடன், டாப்20ஐ தேர்வும் செய்தாயிற்று.
எழுபது கதைகளின் குட்டி விமர்சனங்களையும் பாத்திருப்பீங்க.
கே.ரவிஷங்கரும், கதைகளுக்கான விமர்சனம் எழுதியிருக்காரு.

இனி, டாப்20லிருந்து, முதல் பரிசு (US$20), மற்றும் இரண்டாம் பரிசுக்கான (US$10) கதையை தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பம். பரிசு பணமாகவோ, வேறு மார்கமாகவோ, வென்றவர் விருப்பத்தின் படி பட்டுவாடா செய்யப்படும்.
ஏற்கனவே அறிவித்தபடி, பரிசுத் தொகையைத் தவிர, US$70, முதல் பரிசு வென்றவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும்.

(டாலர் வீக்காகிக் கொண்டு வருவதைப் பார்த்தால், பரிசுத் தொகைய வச்சுக்கிட்டு ஒரு குச்சி முட்டாய் தான் வாங்க முடியும் போலருக்கே :) )

கீழே, வாக்குப் பெட்டியில் இருபது கதைகள் கட்டம் கட்டப்பட்டுள்ளன.
உங்களுக்கு மிகவும் பிடித்த நச் கதைக்கு உங்கள் வாக்கை போடுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நச் கதைகள் சம அளவில் பிடித்திருந்தால், அனைத்துக்கும் உங்கள் வாக்கை போடும் வசதி உண்டு.
கதையை யார் எழுதியது என்பதை மனதில் கொள்ளாமல், கதையின் சிறப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு, உங்கள் வாக்கைப் போடவும்.

வெற்றிக் கதை, உங்கள் வாக்குகளையும், சென்ஷி, வெட்டிப்பயல், மற்றும் CVRன் மதிப்பெண்களையும் கலந்தடித்து, தேர்வு செய்யப்படும்.

சர்வே பொட்டி December 13ஆம் தேதி மூடப்படும்.

தயவு செய்து கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்கவும். சிறந்த கதை வெல்லட்டும்.



வாக்குப்பெட்டி தெரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்!
போட்டிக்கான கதையை வாசித்து போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் பஹூத் பஹூத் நன்றீஸ்!

நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்.
பிரியாணிக்காக வெயிட்டிங்!


பி.கு: இன்னோர் கதைப் போட்டி இங்க நடக்குது. - http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Tuesday, November 24, 2009

நச் கதைகள் - டாப்20, விமர்சனம்

இதை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தை தீர்த்துக்கொள்ளவே எனக்கு சில நேரம் பிடித்தது.
கதைகளில் 'நச்' பலவகையில் கையாளப்பட்டிருக்கும், அட்லீஸ்ட் இரண்டு வகையாகவாவது இருக்கும்.

அ) கதையின் போக்கிலேயோ கதாபாத்திரத்துக்கோ ஒரு திடீர் திருப்பம் ஏற்படுவது. அந்த தடால் முடிவு வாசகருக்குத் தரும் ஒரு மினி (இன்ப/துன்ப/திடுக்) அதிர்ச்சி. 'அட'ன்னு சொல்லவைக்கும்.
ஆ) கதை எல்லாக் கதைகளையும் போல் பயணித்து, கடைசியில், வாசகரை ஏமாற்றும் விதமாய் அமைவது. அதாவது, நாம ஹீரோ ஒரு காலேஜ் பையன்னு நெனச்சுக்கிட்டு படிப்போம், கடைசீல பாத்தா, ஹீரோ ஒரு தெருவோர 'நாய்'னு முடிச்சிருப்பாங்க. கதையின் முடிவில், புன்முறுவலையும் ஒரு அசடு வழிதலையும் வாசகருக்கு ஏற்படுத்தும்.

இதில் 'O Henry' வகை கையாடல், 'அ' வகையைச் சேர்ந்தது.

கதை, அ. வகையா, ஆ. வகையான்னு பாத்தெல்லாம் மார்க் போடப் போறதில்லை. எந்த வகையாயிருந்தாலும், 'நச்' திருப்பம், ஒரு 'பன்ச்' தருதான்னு பாத்தேன்.

சரி, நாம மட்டும் இப்படி மார்க் போட்டு டாப்20ஐ தேர்ந்தெடுத்தா, நம்மள வூடு கட்டி அடிப்பாங்கன்னு தெரிஞ்சுது. அதனால, இன்னொரு தியாகி தேவப்பட்டாரு. வலைவீசி தேடி, 'சென்ஷி'யை பிடிச்சாச்சு.
அவரும் எல்லா கதைகளையும் பொருமையா படிச்சு, அவரின் டாப்20ஐ கட்டம் கட்டி அனுப்பினாரு.

எங்கள் இருவரின் டாப்20ல், காமனா வந்த கதைகள், ஆட்டோமேடிக்காக தேர்ச்சி பெற்றது. மற்றவைகளை, மீண்டும் அலசி, ஃபைனல் லிஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சில கதைகள், எனக்குப் பிடிக்காமல் போனது, சென்ஷிக்கு பிடித்திருந்தது.
அவருக்கு பிடித்தது, எனக்கு பிடிக்காமலும் போயிருந்தது.
எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதது, பின்னூட்ட வாசகர்களுக்கு பிடித்திருந்தது.
ஸோ, இதிலேருந்து இன்னா தெரியுதுன்னா, எல்லாம் சப்ஜெக்ட்டிவ் டு த ரீடர்ஸ் டேஸ்ட்.
ஆனா, ஏதாவது ஒரு ஃபார்முலா வைத்துதானே ஆகணும். அதனால, நம்ம ஃபார்முலா

டாப்20க்கு - சென்ஷி + சர்வேசன் மதிப்பெண்கள்
டாப்2க்கு - வாசகர்கள் வாக்குகள் + சென்ஷி + இன்னும் 2 நடுவர்கள் (அவங்க பேரு அப்பாலிக்கா சொல்றேன்).

இனி, எல்லா கதைகளுக்கும், எங்களாலான விமர்சனத்தைப் பாருங்கள்.
பச்சைகலரில் சாயம் பூசப்பட்ட கதைகள் டாப்20ல் தேர்ச்சி பெற்ற கதைகள்.
இவற்றில் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, கூடிய விரைவில் தேர்தலும், இன்னும் நடுவர்களின் கருத்தும் கலந்தடித்து, தீர்ப்பு கூறப்படும்.

இப்போதைக்கு, விமர்சனங்களைப் படியுங்கள்.
டாப்20ஐ, மீண்டும் ஒரு முறை படியுங்கள். தேர்தல் கூடிய விரைவில் நடத்தும்போது, உங்கள் வாக்கை போட, மனதளவில் ரெடி ஆகிக்கோங்க.

பங்கு பெற்ற அனைத்துக் கதாசரியர்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.
கலக்கிபுட்டீங்க!

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
ச: கோயிலில் சந்தித்த பெண் பின் அண்ணனுக்கு மனைவியாகியதை 'நச்'சென சொன்ன விதம் அருமை. போட்டி கான்ஸெப்ட்டுக்கு உறம் போட்ட விதம் தொடக்கக் கதை. நன்று.

செ: நிச்சயம் எதிர்பார்த்திராத ஒரு நச்தான். ஆண்பால் கதை சொல்லி இல்லைன்னு நம்ப வைக்கற இடம் கதையை மகிழ்வா உணர வைக்குது. ஆனாலும் இது மாத்திரம் போதுமா நச் கதை வெற்றிக்கு...


2. அசைன்மென்ட் - கிஷோர்
ச: கதாப்பாத்திரத்துக்கு ஏற்படும் நெருக்கடியும், நமக்கு கிஷோர் கொடுக்கும் 'நச்' திருப்பமும் ரசிக்கம் படி இருக்குது. ஆனா, நச் அறிந்தபின், இந்த பாத்திரம் எப்படி இப்ப்படியெல்லாம் யோசிக்கமுடியும் என்று லாஜிக் யோசிக்கும்போது, இடிக்கிறது.

3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
ச: கல்யாணத்துக்கு காத்திருக்கும் பெண். மாப்பிள்ளையை காணவில்லை. இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான்னு, விரு விருன்னு பயணிக்கும் கதையில், 'நச்' பாதியிலேயே ஊகிக்க முடிவதால், கெத்து கொறஞ்சுடுது. ஆ வகைக் கதை.

செ: சுஜாதாவின் பழையகதை வாசனையில் இன்னொரு புதுக்கதை.

4. புவனேஷ்வரி மாமி - சர்வேசன் (போட்டிக்கல்ல, சும்மா லுலுவாய்க்கு)
ச: அடேங்கப்பா. இந்த மாதிரியெல்லாம் கூட ஒரு கதாசரியரால் கற்பனை செய்யப்பட்டு கதை புனையப்படுவது உலக வரலாற்றிலேயே இது முதல் முறை. இந்த வருட சாகித்ய அகாடமி விருது இந்த கதைக்கு நிச்சயம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இது திரைக்காவியமாய் வரர்போகும் நாள் நீண்ட தொலைவில் இல்லை. (ஹிஹி)

5. உயிரின் உயிரே - R. Gopi
ச: வாசகரை கடைசியில் ஏமாற்றும் வகைக் 'நச்'. கதையில் கருத்ஸெல்லாம் சொல்றது ப்ளஸ் பாயிண்ட்டு. ஆனா, இது ஒரு ஃபோர்ஸ்ட் 'நச்', இயற்கையா அமையாத மாதிரி ஒரு தோணல்.

6. தொழில் - ராமலக்ஷ்மி
ச: பல நாள் திருடன் ஒரு நாள் எப்படியும் ஆப்டுக்குவான். என்னதான் தில்லாலங்கடித்தனம் பண்ணாலும், யாராவது எங்கையாவது எப்படியாவது கண்டுக்குவாங்க. 'நச்' இருந்தாலும், ஒரு யதார்த்த நச்சுத்தன்மை இல்லை. அவசரத்தில் உருவாக்கபட்ட நச்சோ?

7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
ச: நாங்களும் காஸ்ட் கட்டிங் பண்றோமுன்னு, 'பந்தா' பண்ண வேண்டிய அவசியத்தில் இருக்கும் MNCக்களில் நடக்கும் கூத்தில், சாமான்யன் பாதிக்கப்படும் சோகத்தை, சுட்டியிருக்கிறார். கருத்ஸ் சொல்ல நினைத்து கதை எழுதியதாலோ என்னமோ, 'நச்'சின் வீச்சு கம்மி.

8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
ச: கால்செண்டரில் வேலை செய்யும் ஐயங்காராத்துப் பெண் கதையின் நாயகி. சாதியை தூக்கி ஆடும் சிலர் இருப்பதைச் சொல்லும் கதை. அழகா நகர்ந்த கதையில், நச் எப்படி இருக்கும்னு ரொம்ப ஏங்கிப் போய் கடைசி வரியை படிச்சா, ஏமாற்றமாய்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேற மாதிரி ஏதாவது சொல்லிருக்கலாம்ம்.

9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
ச: நாட்டாமை கதை, நல்லாத்தேன் இருக்குது படிக்க. கதர் சட்டை போட்ட நாட்டாமை, புள்ளையை சரியா வளக்காம, வரவங்அ போரவங்களுக்கெல்லா லட்ச ரூவா கொடுத்து சரி பண்றது, ஒட்டலை.

10. திருப்பம் - சின்ன அம்மிணி
ச: எதிர்பாரா திருப்பம் இறுதியில். ஆனா, அந்த திருப்பத்தை வந்தடைய வேண்டிய மற்ற உபகரணங்கள் முந்தைய பத்திகளில் இல்லாதது, கதைக்கு வலு சேர்க்காமல் போனமாதிரி இருக்குது.

செ: நிச்சயம் யாருமே எதிர்பாராத நச் முடிவு..!

11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
ச: ஏழை காதலன், பணக்கார காதலி, வில்லன் அப்பா கொண்ட கதைக் களம். ஊரை விட்டு ஓடும் காதலனும், ஓடாமல் நின்று விட்ட காதலியும் நல்லாத்தான் இருந்தது. ஊகிக்க முடிந்த நச்தான் என்றாலும், இது கதாசிரியரின் குற்றமல்ல. நச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வந்த வாசகனின் பிழை இது.

12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
ச: இலைமறைவு காயா அருமையாச் சொல்லியிருக்காரு, ரெண்டாவது அப்பா செய்யும் கொடுமையை. அங்கங்க வச்ச 'லீட்' அருமை. இரண்டாம் முறை வாசிக்க வைத்தது. இதுவே 'நச்'சின் சத்தை காட்டுது

செ: தனிமையில் தவிக்கும் மனதிற்கு ஆறுதலாய் கை கொடுக்கும் அத்தனை உள்ளங்களும் நல்லதாய் மாத்திரம் இருப்பதில்லை. முடிவு சிறிய வலி.

13. ஆவணி பௌர்ணமி - நானானி
ச: வாலிப இளங்காளைகள், தவிர்த்து வெறுத்து ஒதுக்கும் தினத்தை மையமாக கொண்ட கதைக் கரு. ப்ராக்டிக்காலிட்டி கம்மியான அப்ரோச். முழு சினிமா எடுக்க முடியாது, ஆனா, காமெடி ட்ராக் ஓட்டலாங்கர கதைக் கரு. நச் இருக்கு. ஆனா, பச்னு ஒட்டலை.

14. நொடிப் பொழுதில் - Pappu
ச: இவரு ரொம்ப நல்லவராமாம். கடலை போடறான் என்று எண்ணிய பெண்ணிடம், திடுதிப்பென்று பழமாய்ப் போன விடலையின் கதை. 'சிறு'கதையில் 'பெரு' கதையின் வர்ணனையுடன் ஒரு ஸாஃப்ட் நச்.

15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
ச: சீட்டின் நுனிக்கே இஸ்துக்கினு வரும் வர்ணனை. ஆனா பாருங்க, நச் இப்படி இருக்கும்னு உள்ளூர ஒரு 'இது' உருவாயிடுது. நச்சில் பி.எச்.டி வாங்கிய எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும்போல. 'வழக்கம் போல்' நச்சாக்காமல், வேறு மாதிரி முடித்திருந்தால், ஸ்பார்க் ஏறியிருக்கும். உ.ம். சங்கர் பட சூட்டிங்கில் இது நடக்குது. தூர நின்னு படம் புடிச்சா, சங்கரின் அடியாட்கள் தேடி வந்து காமிராவ புடிங்கிப்பாங்க்யன்னு...

16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
ச: நல்ல விறு விறு. எதிர்பார்த்தது போல் நச்சும் இருந்தது. பாகவுந்தி. ஆ வகை நச்தான் ஒரு மைனஸ்

17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
ச: நல்ல வாசிப்பு அனுபவம். காட்சிகள் கண் முன் நடப்பது போல். சமுதாயம் ஒதுக்கிய ஒருவரின் ஆட்டோ பயோகிராஃபி. ஆனா, நச் எண்டிங்?

18. ஆதவன் - நான் ஆதவன்
ச: குசும்பான நச். நச் என்ன என்பதை பின்னூட்டம் வழியே சொல்லித் தெரியப் படுத்த வேண்டிய அவல நிலைக்கு உந்தித் தள்ளப்பட்டுள்ளார் ஆசிரியர். ரூம் போட்டு யோசிக்கராங்கப்பா...

19. இக்கணம் இக்கதை - Nundhaa
ச: வித்யாசமான கதை. என் அறிவுக்கு, இதன் 'நச்' என்னன்னு புரியல்ல. இவருதான் அவரைக் கொன்னாரா? இல்ல, வேர ஏதாவது உள்குத்து நச் இருக்கா. சபைல தெரியாதுன்னு சொன்னா, மதிப்பு கொறஞ்சுடும். அதனால, நல்ல கதைன்னு சொல்லி எஸ்ஸுகிறேன் ;)

செ: கதையின் முடிவு ஆரம்பத்திலிருந்து தொடர்கிறது. சிறப்பான உத்தி. கதைப்புத்தகங்களின் வழியே கதையை நகர்த்தி கதையோடு கதையை முடித்தது அருமை.

20. யாரோ ஒருத்தி - குகன்
ச: மசாலா தடவப் படவாத, சிம்பிளான நச் கதை. சைட் அடிப்பவரின் அசடு வழிதலும், கடைசியில் அவரின் உண்மை முகம் வெளிப்படுதலு நல்ல கதை அம்சம்.

21. செவப்புத் தோல் - ஈ.ரா
ச: முடிவு ஓரளவுக்கு ஊகிக்கக் கூடிய கதைகளில் இதுவும் ஒண்ணு. ஆனா, விறு விறுன்னு எழுத்து நடை. குட்.

22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
ச: ஷார்ப்பான நச். எமக்கு சப்ஜெக்ட் மாட்டர் தெரியலன்னாலும், ரெண்டு மூணு தபா படிக்க வைக்கும் நச். ஜூப்பர்

23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
ச: தலைப்பையே நச்செனப் பெற்ற கதை. சிம்பிளான நரேஷன். போரடிக்காத நடை. சைட் அடித்தல் என்னும் மகாத்மியம் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. நச், பன்ச் கம்மின்னாலும், மரியாவை மனதளவில் சைட் அடிக்கத் தொடங்கியதால் ஒரு கிறக்கம் வரத்தான் செய்தது.

24. ரெட் லைன் - வண்டிக்காரன்
ச: வேக நடை. கண்முன் காட்சி விரிகிறது. ஆயிரம் இருந்தும், வசதிகளும் இருந்தும், 'நார்மலான' நச் பாதையை தேர்ந்தெடுத்து, வாட்டி விட்டார் கதாசரியர். ரூம் போட்டு யோசிச்சு, வித்யாசமான முடிவை சொல்லியிருந்திருக்கலாம் (அடுத்த வருட போட்டிக்கு, இந்த 'முடிவு' வரக்கூடாதுன்னு ஒரு ரூல் போடணும் :))

25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
ச: உண்மையின் தழுவல்னு சொல்லிட்டாரு. வாழ்க்கைல அடிபட்டிருக்காரு போல. நல்ல நகைச்சுவை. வடிவேலு ரேஞ்சுக்கு டயலாக். ஆனா, பன்ச் தேடிப் பாத்தேன் கிடைக்கல்ல.

26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
ச: ஹ்ம். என்னத்தச் சொல்ல. ஆனா, எது இருக்கோ இல்லியோ, ஷார்ப்பா ஒரு திருப்பம் வச்சுட்டாரு. அந்தளவுக்கு சந்தோஷம்தேன்.

27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
ச: நன்று. நச்-சும் உள்ளது. நம்பும்படியான ஒரு ஸைன்ஸ் ஃபிக்ஷன்.

28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
ச: நல்ல கற்பனை. புத்திசாலித்தனமான குட்டிக் கதை, வித் எ மெசேஜ். ஆனா, கல்யாண நாளுன்னெல்லாம் வருதே? எப்படி?

செ: எதிர்பாராத நச்!

29. டிஸ்லெக்சியா - Vinitha
ச: மெசேஜ் இருக்கு. ஆனா, ஒரு கதைக்கான மேட்டர் இல்லை. இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியிருக்கலாம்.

30. அவரு..அவரு..ஒரு - வருண்
ச: ஐ லைக்ட் இட். சிரிப்பூட்டிய முடிவு. பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததைப் போல், இன்னும் எடிட் பண்ணியிருந்தா, நச் கூடியிடுக்கும்

31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
ச: கொஞ்சம் திகிலான நச். ரங்கமணிகள் சாக்கிரதை.

32. ஜனனி - படுக்காளி
ச: நல்ல கதை. நல்ல நடை. ஆனா, நச்-தான் புரியல்ல எனக்கு. காட்சியெல்லாம் அருமையா விவரிச்சிருக்காரு. மாதவன் ஆக்ஸிடண்டீல் செத்தான். இடிச்சவனும் சாராயம் குடிக்கறான். ஆனா, நச் புரியல்ல.

33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
ச: ஏதோ உள்குத்து வச்சு கதை. ஆனா, எனக்கு புரியல்ல. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மகப்பேறு மருத்துவரைப் பாத்து, உங்க பசங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறங்களான்னு கேக்கறாங்க. ஹ்ம். முப்பதுகளில் இருப்பவரைப் பாத்து ஏன் அப்படி கேக்கறாங்க்ய?

செ: இயல்பான வேக ஓட்ட நடை

34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
ச: ஈழத்துச் சோகம். காலை நேரத்து காட்சிகளை படிக்கும்போது, கண்முன் விரிகிறது, பச்சைப் பசேல் என்ற ஊர். இறுதியில் சோகமே பிரதானம். நச் இல்லை.

செ: சரியான ஓட்டம் உள்ளது. நச் கொஞ்சம் கம்மி.

35. புகை - kalyanaraman raghavan
ச: நச் ஓவர் டோஸா தெரியல்ல. நச்சின் வீச்சு பெருசா இல்லைன்னா, நச் இல்லைனே சொல்லத் தோணுது. குடிகாரத் தந்தையின் மனமாற்றம், சந்தோஷத்தைத் தந்தாலும், ஈர்ப்பைத் தரலை. பொண்டாட்டியை முடியை பிடிச்சு அடிக்கர குடிகாரன், மகளின் வார்த்தைக்கு டக்குனு மனமிறங்குவான் என்பது இடிக்குது.

36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
ச: யதார்த்தமான நடை. யதார்த்தமான விஷயங்கள். யதார்த்தமாவே முடிவு. ட்விஸ்ட் மிஸ்ஸிங்?

செ: இயல்பான கதை சொல்லல். பட் நோ நச்!

37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
ச: ஆபீஸரின் தில்லாலங்கடித்தனத்தை மேலாளர் போட்டுடைக்கும் கதை. கொட்டப்பாக்கு, எலுமிச்சம்பழம், எல்லாம் நல்ல வாசிப்பனுபவம். நச்சும் இருக்கு, ஆனா டூ-மச்சா இல்லை.

38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
ச: புவனேஷ்வரி புரீது. ஆனா, நச் எங்கே?

39. காமம் கொல் - Cable Sankar
ச: வில்லங்கமான ஆசாமியாரின் கதை. விறு விறுப்பு குறைவு. இளைஞனைப் புடிச்சது நச் திருப்பம்தேன், ஆனா, மைல்டா இருக்கு.

செ: செல்வன் இதை மாதிரி நிறைய ”டச்”களை முன்னாடியே உபயோகிச்சுருக்காரு. ஆனாலும் ஆதினம்ன்னு சொல்ல ஒரு தில்லு வேணும் :)

40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
ச: பணக்கார அல்ப்பைகள் பத்தி ரொம்பவே குட்டியா சொல்லியிருக்காரு. ரொம்பவே குட்டி. கதையளவு இல்லாமல், துணுக்கு மாதிரி இருக்கு.

41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
ச: யாரோ துப்பாக்கியால் சுடுவாங்கன்னு தலைப்பு சொல்லிடுது. அதாலயோ என்னவோ, சப்புனு போயிடுது முடிவு.

42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
ச: ரூம் போட்டு யோசிக்கறாங்க்யப்பா... ஆ வகை. ஆனா, தலைப்புக்கும் கதைக்கும் உள்ள கனெக்ஷ்ன்?

43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
ச: ஒரு குட்டி துணுக்கு அளவுக்கே சங்கதி உள்ளது. சிறு கதைக்கு, இன்னும் ஒரு சில வரிகளும், இன்னும் கொஞ்சம் கூட சத்தும் தேவை. முடிவு குட்.

44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
ச: நல்ல சுவாரஸ்யமான கதை. முடிவு வேர எதிர்பார்த்தேன். இதுவும் நல்லாவே இருந்தது. ஆனா, ஐந்து நாள் முடிஞ்சு ஆறாவது நாள்தான் ப்ரியாவை அமுக்கப் போறான்னு கதைல இல்லியே?

செ: புதிய களம். நல்ல விறுவிறுப்பான துவக்கம். முடிவை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் நிச்சயம் இதுதான் முதல் பரிசுக்கு வந்திருக்கும்

45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
ச: ஜாலியான கதை. திருப்பமும் இருக்கு. அனுபவபூர்வமா ரசிச்சு எழுதின மாதிரி இருக்கு.

46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
ச: நல்ல நடை. ஆனா, இஞ்சினில் அடைப்பு ஏற்பட்ட மாதிரி, அப்பப்ப திக்கி ஓடுது. கடைசியில் கிராஷ் ஆயிடுது.

47. காமம் வழிந்தோடும் உடல் - graham
ச: நல்ல வித்யாசமான முயற்சி இது. அக்கீரோ குரோசோவோ ரஷ்மோன் விருமாண்டி ஸ்டைலில். சின்ன குழுப்பம், வசந்தை மூணு வருஷம் காதலிச்சு அப்பாலிக்கா போட்டுத் தள்ளறாங்களா? அரவிந்த் அடுத்த இலக்கா?

48. லாரி விபத்து - MSV Muthu
ச: பெரீரீய்ய்ய கதை. நல்ல நச் மூடிவு. பெருசா இருக்கரதால 1/2 தாண்டியதும், ஸ்ஸ்ஸ்னு ஒரு அலுப்பு வந்துடுது. ஆனா, கதையில் ஒரு விறுவிறுப்பு இருப்பதால், மீதிப் பாதியையும் படிக்க வைத்தது. குட்.

49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
ச: டேக் இட் ஈஸி பாலிஸி கதை. பஸ் ஸைட்டு அல்வாவாகிப் போனதும் பாலிஸி வித்து வந்தவரை லாபம் சொல்லும் ஃப்ரெண்டு சூப்பர். நச் கம்மி.

50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
ச: சிம்பிளான கதை. நல்ல நரேஷன். முடிவும் ஜாலியான நச்.

51. நானே நானா - சுப.தமிழினியன்
ச: விரக்தியின் உச்சகட்டம். தனிமை விரும்பியின் வாழ்க்கைக் குறிப்பு. படிக்கவே பயமா சோகமாயிடுது. நச் மிஸ்ஸிங்?

52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
ச: பெண்ணடிமைத்தனம் இன்னும் நடக்கத்தான் செய்யுது. முடிவு சோகம். எனக்கு நச் கம்மியா தெரிஞ்சது, ஆனா, வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கு. ஓவ்வொருத்தருக்கு ஒரு புரிதலை தரும் போலருக்கு. குட்டிக் கதை. நல்ல கதை.

செ:கொடுமை செய்யும் கணவன் வாய்த்தாலும் அவனுக்கு வார்த்தைகளில் மதிப்பை கொடுத்து செத்துப்போகும் பெண்ணின் கதை. முடிவில் அந்தப் பெண்ணில் இயலாத்தன்மையை கொடுத்து விட்ட சமூகம் மீது கோபம் வருகிறது

53. சட்டை - முரளிகண்ணன்
ச: ப்யூட்டிஃபுல் ரீட். என்ன்னமா யோக்கராய்ங்கப்பா. கட்டமும் இல்லாம கோடும் இல்லாம ஒரு சட்டை. அதைத் தேடிக்கிட்டு ஒரு ஹீரோ. முடிவு நச்!

செ: மனித ஆசையின் அளவீடுகளுக்கு உள்ள இடைப்பட்ட மதிப்பீட்டை உணர்த்தும் கதை. நகைச்சுவை பிரதானப்படுத்தப்படாமல் மனங்களின் தூண்டுதல்கள் நிராகரிக்கும் பேராசைப்படும் உணர்வுகளை இயல்பாக எடுத்துச் சொல்கிறது

54. ஐ லவ் யூ - சுவாசிகா
ச: சூப்பரா பயணித்த கதை, ரிவர்ஸ் கீயரில் ஓட ஆரம்பிச்சுடுச்சு. குசும்புத்தனமான நச். எனக்கு ஒட்டலை.

55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
ச: வெகுவாய் ரசித்தேன். வயதானாலும் மேனி எழில் மாறா கமலா சூப்பர். வில்லன் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ.

செ: யாருக்கு யார் வில்லனாக மாறுகிறார்கள் என்பதைக் குறித்த நச் முடிவு..

56. அபரஞ்சிதா - அடலேறு
ச: அடேயப்பா. என்னா வர்ணனை, இன்னாமா எழுத்து. அபரஞ்சிதாவை உடனே பார்க்கும் ஆவலை தூண்டியது. நச் பெருமூச் விடவைத்தது.

செ: கதையின் முடிவிற்காக எழுதப்பட்ட கதையெனத் தோன்றுகிறது. பேசாமல் ரிவர்சபிள் போல கதையின் முடிவிலிருந்து ஆரம்பம் வரை படிக்க ஆரம்பித்தால் அருமையான புனைவு...

57. முதல் காதல் - chelladhurai
ச: முதல் காதலின் தீவிரத்தை காட்டறாரு. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்... நல்லாத்தான் இருக்கு. ஆனா, 'நச்' மிஸ்ஸிங்.

58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
ச: நண்பர்கள் ஏப்ரல் ஃபூலாக்கும் கதைக் கரு. நீளமா இருப்பதாலோ, கதாபாத்திரங்களின் பெயர் விசித்திரமாஅ இருப்பதாலோ என்னவோ, கதையோடு ஒன்ற முடியல்ல.

59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
ச: ஃபேமிலி ஸ்டோரி. அழுத்தமான அப்பாவுக்குள் இருக்கும் ஸாஃப்ட் ஸ்பாட் பற்றிய நச். தெளிந்த நீரோடை மாதிரி பயணிக்குது கதை.

செ: இன்னொரு எதிர்பார்த்திராத நச் முடிவு.. ஆனால் முடிவை செதுக்குவதில் அதிகம் அவசரப்பட்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் தந்தைகளுக்கான ஒரு சிறப்பான கதையை கொடுத்திருக்கலாம்.

60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
ச: பந்தா பண்றதுக்காக டொனேஷன் கொடுக்கும் பார்ட்டீஸின் கதை. குட்டிக் கதை. ஓ.கே.

61. நடிகையின் கதை - சாணக்கியன்
ச: பெரீய்ய்ய கதை. ஆனா, சுவாரஸ்யமான உரையாடல். நச்சும் குட். நடிகையின் ப்ராக்டிகல் அப்ரோச் பிடிச்சிருக்கு

62. Blackhole - இரா.வசந்த குமார்
ச: நல்ல ஃபிக்ஷன். முடிவு எப்படி நச் ஆகுதுன்னுதான் புரியலை. ஓரளவுக்கு திருப்பம் இருந்ததலும், நச் ஆக்கர அளவுக்கு பன்ச் இல்லியே?

செ: அறிவியல் புனைகதை. எதிர்பார்த்திராத முடிவு. ஆனால் எதிர்பார்த்த நச் இல்லை..

63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
ச: வாத்தியின் சுய சரிதை. நல்ல நடை. முடிவும். ஓ.கே. டயலாக்கெல்லாம் பளிச்னு போட்டு, விஷுவலா படிக்க ஈஸியா இருக்கு.

செ: சுவாரஸ்யமான கதை சொல்லலில் வெற்றிப் பெற்று விட்டிருக்கிறார். இது இல்லாவிட்டால் அது என்று எதிர்பார்த்த திருப்பமாகத்தான் முடிவு இருக்கிறது.

64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
ச: அமக்களம். செம ரொமாண்ட்டிக். குட் நச்.

65. திருடன் - Parameswerey Namebley
ச: ஏதோ இண்ட்ரஸ்டிங்கா வரப் போவுதுன்னு கடைசி பேராவை படிச்சா, சப்புனு பறந்து போயிடுச்சு.

66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
ச: சைல்ட் லேபரை சாடிய எழுத்தாளரின் புத்தகத்தை அச்சடிக்கும் அச்சகத்திலும் சைல்ட் லேபரர்ஸாம். நல்ல மேட்டர்.

67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
ச: நல்ல நரேஷன். பயபுள்ளையின் பயம் நம் கண் முன்னே. ஆனா, நச் தான் சப்பையாய், உப்பு சப்பில்லாமல்.

68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
ச: ஹோம் வொர்க் எழுதா விச்சு, எப்படி எஸ்கேப் ஆகரான்னு அழகா சொல்லியிருக்காரு. ஆனா, லாஜிக்ல ஓட்டைன்னு பின்னூட்டன் நக்கீரர்கள் பாயிண்ட்டை புடிச்சுட்டாங்க.

செ: தினப்படி விசயத்தை அசாதாரணமாக சொல்லியதை விட கடைசியாக அம்மாவிற்கு நன்றி சொன்ன விதத்திற்காகவே சட்டென்று மனதைத் தொடுகின்றது. அருமையான கதையில் ஒன்று.

69. நிபுணன் - யோசிப்பவர்
ச: மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கரளவுக்கு ஜாலியான ஃபிக்ஷன். ஆரம்ப வரிகளே புன்முறுவல், சுவாரஸ்யம் குறையாமல் போச்சு

70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
ச: ரூம் போட்டு யோசிப்பவர்களில் இவரும் ஒருவர். என்னமா சுத்தி விட்டிருக்காரு. இடை இடையே வரும் ஹீரோவின் நையாண்டி டயலாக் சூப்பர். தந்தத்தில் சீப்பு சிரிப்பை வரவழைத்தது. முடிவு நச்!

செ: அசத்தலான பரிச்சுக்குரிய கதைகளில் ஒன்று. எது கனவு எது நினைவு என்று பிரித்துப் பார்த்தலை வாசகரிடம் ஒப்படைக்கும் அரிய வகையில் நேர்த்தியான ஒன்று.



டாப்20 கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
10. திருப்பம் - சின்ன அம்மிணி
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
30. அவரு..அவரு..ஒரு - வருண்
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
39. காமம் கொல் - Cable Sankar
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

70 கதைகளைப் படிச்சு, இப்படி அலசி ஆராய்வது, லேசு பட்ட வேலையில்லை என்பதை, நானே செய்து அனுபவித்ததால், நல்லாவே தெரியுது.
ஆர்வத்துடன், இந்த வேலையை செய்து, முதல் சுற்றுக்கு கதைகளை நகர்த்திய சென்ஷிக்கு நன்றிகள் பல.
இனி வாக்களிக்கப் போகும் வாசகர்களுக்கும், புதிய நடுவர்களுக்கும் அட்வான்ஸ் நன்றீஸ்.
இந்த போட்டி பற்றிய விவரத்தை விளம்பரம் செய்த அன்பர்களுக்கும் நன்றீஸ் பலப் பல.


பி.கு: நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள். சரி செய்ய முடிந்ததை சரி செஞ்சுடலாம்.
தேர்தல், வரும் வெள்ளி அன்று ஆரம்பம்.

தெரு ஓர மரங்கள் வைக்க...

தெரு ஓரங்களில் மரம் வைத்து, அதை சுத்தி பாதுகாப்பா ஒரு கூண்டும் வைக்க, என்ன பண்ணனும்? யாரை அணுகணும்?

சொந்த செலவுல பண்றது எப்படீன்னு புரீது. ஒரு மரத்துக்கு 100ரூவாயிலிருந்து, 300ரூவரை ஆவுது. கூண்டுக்கு 300ரூவாயாம்.
நூறு மரம் வைக்கணும்னா, செலவு ஜாஸ்தியாவுமே.

இதுக்கெல்லாம், அரசாங்கம்/லோக்கல் NGO யாரும் உதவுவதில்லையா?

குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தெருவில் துவங்க அவா.

விவரம் அறிந்தவர்கள் சொல்லவும்.

என்ன பண்ணனும், யாரை அணுகணும்?

கூகிளில் தேடும்போது, Greenways என்ற இயக்கத்தின் விவரம் கண்ணில் பட்டது. மாதவன் சுப்ரமணியன் என்ற இருவர் மந்தவெளியில், தன்னந்ததனியாக பல ஆயிரம் மரங்களை நட்டு கலக்கியிருக்காங்க. அவர்களை தொடர்பு கொண்டு பார்த்தேன். அவங்களுக்கு இப்ப ரொம்பவே வயசாயிடுச்சு. மரக்கன்று வேணும்னா வளத்து தரோங்கறாரு.

வேறு மார்கம் உண்டா?

ஹெல்ப் ப்ளீஸ்!

குரோம்பேட்டை பதிவர்கள்/வாசகர்கள் யாராவது இப்படி ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா? ஹெல்ப்!

பிற்சேற்க்கை:
  • Dr.மாதவன் மற்றும் திரு.சுப்ரமணியம் என்ற இருவர், மந்தைவெளி அருகே, இருபது வருடங்களுக்கு மேலாக மரக்கன்றுகள் நட்டு வருகின்றனராம். இதுவரை 15000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். Project Greenways என்று பெயரிட்டு இவர்கள் இதை செய்து வருகின்றார்கள்.

  • Chennai Social Service என்று ஒரு தொண்டு நிறுவனம். மிக்காறும் Orkut இணைய தளத்தின் மூலம், ஆட்கள் சேர்ந்து உருவான இளைஞர்களாலான தொண்டு நிறுவனம். இவர்களுக்கு, மரக்கன்றுகள் தேவை என்று SMS செய்தால், மேல் விவரங்கள் பெற்று, நம் இருப்பிடத்துக்கே, தன்னார்வலர்கள் குழு வந்து, மரங்களை நட்டுத் தருவார்களாம்.

  • நிழல் என்றொரு தொண்டு நிறுவனமும், இதே போல் நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறார்கள்.


  • * Project Greenways சுப்ரமணியன்/மாதவன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ஒரு பெண்மணிதான் பேசினார். இந்த இருவரும் 70வயதைக் கடந்து விட்டதால், முன்னர் செய்தது போல், 'ஏக்டிவ்வாக' இருக்க முடிவதில்லையாம். நமக்கு எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டும் என்று சொன்னால், அதை தயார் செய்து தருவார்களாம். வண்டியில் எடுத்துச் சென்று நட்டுக் கொள்ள வேண்டியுது நம் வேலை.

    * chennai social serviceக்கும், நிழலுக்கும், மின்னஞ்சல்/SMS அனுப்பி வைத்திருக்கிறேன். மேல் விவரங்கள் இல்லை.


    Monday, November 23, 2009

    பழசி ராஜா - குட்டி அலசல்...

    எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு படம் பாக்கப் போனா, ஓரளவுக்கு திருப்திகரமா படம் முடிஞ்சு வெளீல வரலாம்.
    இந்தப் படத்துக்கும், ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம தான் போனேன் -- ஹ்ம், இல்ல இல்ல, இளையராஜாவின் இசையை பற்றிய ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல், ரெசூல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு பத்தியும் ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது.
    மத்தபடி, மம்முட்டி என்ன பண்ணுவாரு, சரத் என்ன பண்னுவாரு, கேரளா காட்டுக்குள்ள எடுக்கப்பட்ட படம் எப்படி விஷுவலா இருக்கும்னெல்லாம் ஒரு முன் முடிவு இருந்தது.

    ஆனா, படத்தை பார்த்துட்டு வெளீல வரும்போது ஒரு திருப்திகரமான பீலிங் கிடைக்கல்ல.

    * ஒரு சீனுக்கு அடுத்த சீன் ஒரு கோர்வையில்லாமல், துண்டு துண்டா ஓடின மாதிரி இருந்தது. உப்புக்கு கூட அடுத்த சீனைப் பற்றிய எதிர்பார்ப்பே இல்லாத மாதிரி ஒரு ஸ்க்ரீன் ப்ளே. பக்கத்து சீட்டு மாம்ஸ் பாதி படத்துல தூங்கி வழிஞ்சாரு.

    * பழசிராஜா, திப்புசுல்தான் காலகட்டத்தில், கேரளாவிலிருந்து, ஆங்கிலேயனுக்கு டார்ச்சர் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரராம். முடிவு சுலபமாய் யூகிக்க முடிந்த கதை என்பதால், கூடுதல் வரட்சி.

    * ரெசூல் பூக்குட்டி - ஸ்லம்டாக் மில்லியனரின் ஆஸ்கார் வின்னர். பழசியில், ஒவ்வொரு காட்சியிலும், ஒலி ஈட்டி மாதிரி பாஞ்சு காதுல ஏறுது. மழை சீன்ல, உங்க தலை மேலயே இடி இடிக்கர மாதிரி விழுது. குதிரை ஓடினா, நம்ம கால் மேல ஓடர மாதிரி ஃபீல் வருது. ஆனா, எல்லாமே கொஞ்சம் ஓவர்டோஸா தெரீது. பூனை ஒண்ணூ சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடைல போய் எல்லாத்தையும் உருட்டி விட்ட மாதிரி ஒரே சத்தம். கத்தி ஃபைட்டெல்லாம் வந்தா, காதுல பஞ்சு வெச்சுக்கத் தோணுது. குடுத்த காசுக்கு வேலை செஞ்சுட்டாருபோல.

    * படத்துக்கு செலவே இல்ல. காட்டுக்குள்ளையே எல்லா காட்சிகளையும் முடிச்சுட்டாங்க. ஹீரோ, ஹீரொயினுக்கெல்லாம் வேட்டியாலேயே ட்ரெஸ்ஸு. ஆங்கிலேயர்கள், கிலொக்கு ரெண்டு ரூவான்னு எங்கேருந்தோ புடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க போல. யாருக்கும் நடிப்பு வரல. அதிலும், டங்கன் பிரபு, காமெராவ பாத்து நடிக்கறாரு.

    * இளையராஜா - ராஜா இஸ் out-dated. சலிப்புதான் வருது இவரின் 'சிம்ப்ஃபொனி' பேக்ரவுண்ட் கேட்க. 'குரு' படத்தில், வித்யாசமா இருந்தது. தொடர்ந்து எல்லா படத்துலையும் ஒரே தீம் வச்சு போட்டா எரிச்சலே மிச்சம். அதுவும், சில டயலாக் பேசும்போது, அடக்கி வாசிக்கணும். அங்கையும், வயலினையோ, எத்தையோ போட்டு இழைக்கிறாரு. நம்ம கவனம் செதருது. பாடல்கள் ஒண்ணும் ஒட்டலை. அல்லா பாட்டு தாளம் போட வைத்தது. ராஜா சார், think outside the box, please. உங்களை எந்தளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு பிடிக்காம போயிடும் போலருக்கே. (ஜோதா அக்பரில், ரஹ்மான் போட்ட தீம்-மூஜிக் ரொம்ப பிரபலம், அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணியிருக்கலாம். நா.ண.. நா.ண..)

    * சரத்குமார் - அமக்களப் படுத்தியிருக்காரு. எனக்குத் தெரிஞ்சு, இவருதான் ஹீரோ. உண்மையான, எதார்த்தமான நடிப்பு. எல்லா காட்சியிலும் மிளிர்கிறார். கத்தி எடுத்து சொழட்டினா, அந்த வீச்சின் கனம் நமக்கே தெரியுது. அபாரமான, அலட்டலில்லா நடிப்பு.

    * மம்முட்டி - இவருக்கு, இந்த மாதிரி ரோலெல்லாம், அல்வா சாப்பிடர மாதிரி. அதனாலேயோ என்னவோ, எனக்கு ஒண்ணும் பெருசா தெரீல. இவரு செய்யவேண்டிய வேலையெல்லாம் சரத்தே செஞ்சு முடிச்சடறாரு. ஸோ, இவரு அங்கங்க டம்மி ஆயிடறாரு. ஒரே ஒரு காட்சியில் மட்டும், ஒரு பெல்ட்டு வாளை, சட்னு உருவி, படார்னு பத்து பேரை சாய்ப்பாரு, அபாரம். மத்தபடி, நடை , உடை, பாவனை எல்லாம் அம்சம். இவரு, இதுக்கு மேலையே இன்னும் பல படங்களில் பண்ணியிருக்காரு.

    * ஹீரோயின்ஸ் - ஓ.கே. குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னியும் தோணலை.

    * வில்லன்ஸ் - சுமன் ஒரு வில்லன். அவர் வேலைய செஞ்சிருக்காரு. மத்த ப்ரிட்டிஷ் வில்லர்கள் எல்லாம், ரொம்பவே அமெச்சூர் தனம். அதிலும், தேவையில்லா காட்சிகள் நெறைய வருது, இவங்கள வச்சு. படத்தின் நீளத்தை நீட்டிய கொடுமை இவர்களையே சேரும்.

    * மத்தது எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா தோணலை. சண்டைப் பயிற்சி சிறப்பா வந்திருக்கு. மேற்கூறிய சரவணா ஸ்டோர்ஸ் தொல்லையால், மனதுக்குள் பெருசா ஒட்டாமல் போனது. சரத்தும் சுமனும் போடும் சண்டை அம்சம். ஒளிப்பதுவும் அழகா பண்ணியிருக்காரு.

    Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதிலிருந்த ஈர்ப்பு ஏன் இதிலில்லாமல் போனதுன்னு புரியல்ல. இன்னொருமுறை B.H பாத்துட்டு ஒரு அலசல் பதிவு போடறேன். பாத்தவங்க சொல்லுங்க.

    பி.கு: நச் போட்டிக் கதைகளின் விமர்சனங்களும், நடுவர்களின் டாப்20 பட்டியலும் நாளை வெளியாகும்.

    Thursday, November 19, 2009

    பல்லாவரம் ஸீனரியும் ஒரு பெருமூச்சும்...

    பல்லாவரத்திலிருந்து வேளச்சேரிக்கு செல்ல ஒரு 200அடிப் பாதை உருவாகிவருகிறது.
    GSTயிலிருந்து, இந்த பாதைக்கு இணப்புத் தரவேண்டிய மேம்பால வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஸ்லோதான், ஆனா வேலை நடக்குது.

    சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல்னு இருக்கும். மழை பெஞ்சா, தண்ணி நெரஞ்சு, பல்லாவர மலையின் பிம்பம் தெரிந்து, பாக்கவே ரம்யமா இருக்கும்.

    சமீபத்தில் க்ளிக்கிய படம் இங்கே:


    புதுக் கொடுமை என்னன்னா, சாலையின் அடுத்த பக்கம், இதே போல் ரம்யமாக இருந்து வந்த இடம், இப்போ குப்பைக் கொட்டும் இடமாக மாறிவிட்டிருப்பது.

    கொக்கும் நாரைகளும் காகைகளும் கூடிக் குலாவிய இடம், இப்போ, ப்ளாஸ்டிக் குப்பைகளின் இருப்பிடமாகிப் போனது.

    டூ-வீலரில் போனா, 'ஹோ என்னுயிரே, ஓஹோஹோ என்னுயிரே'ன்னு மாதவன் கணக்கா ஓட்டிக்கினு போன காலம் போயி, இப்ப, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹ்ம்!



    இந்த மாதிரி தாழ்வான பகுதிகள், மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் இடமாக பராமரிக்காமல், இப்படி குப்பை போட்டு நாசம் செய்யப் படுவது, மிக வேதனையாக உள்ளது.
    தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிகாரிகள் யாராவது, இதை கரெக்ட் செய்ய வேண்டும்

    சுதாரிப்பார்களா அதிகாரிகள், இல்லை பல்லாவரத்தை நாரடித்துத்தான் அடங்குவார்களா?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    Monday, November 16, 2009

    போட்டியிடும் எழுபது நச்கள்

    வணக்கம் நண்பர்களே.

    இந்த வருட 'நச்' போட்டியில் எழுபது கதைகள் களமிறங்கியுள்ளன.

    எல்லாரும், கதைகளை படிச்சு மனதளவில் மார்க் போட்டு வச்சுக்கங்க.

    யார் எழுதினாங்கங்கரது முக்கியமில்லை. கதை எப்படிப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

    போட்டியை எப்படி நடத்தலாம் என்பதை கொம்பேனி இன்னும் முடிவு செய்யவில்லை.
    யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.

    வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் சட்டதிட்டங்களுடன், வில் மீட் யூ ஸூன்!

    1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
    2. அசைன்மென்ட் - கிஷோர்
    3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
    4. உதவி - ஷைலஜா
    5. உயிரின் உயிரே - R. Gopi
    6. தொழில் - ராமலக்ஷ்மி
    7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
    8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
    9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
    10. திருப்பம் - சின்ன அம்மிணி
    11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
    12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
    13. ஆவணி பௌர்ணமி - நானானி
    14. நொடிப் பொழுதில் - Pappu
    15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
    16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
    17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
    18. ஆதவன் - நான் ஆதவன்
    19. இக்கணம் இக்கதை - Nundhaa
    20. யாரோ ஒருத்தி - குகன்
    21. செவப்புத் தோல் - ஈ.ரா
    22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
    23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
    24. ரெட் லைன் - வண்டிக்காரன்
    25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
    26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
    27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
    28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
    29. டிஸ்லெக்சியா - Vinitha
    30. அவரு..அவரு..ஒரு - வருண்
    31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
    32. ஜனனி - படுக்காளி
    33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
    34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
    35. புகை - kalyanaraman raghavan
    36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
    37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
    38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
    39. காமம் கொல் - Cable Sankar
    40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
    41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
    42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
    43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
    44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
    45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
    46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
    47. காமம் வழிந்தோடும் உடல் - graham
    48. லாரி விபத்து - MSV Muthu
    49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
    50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
    51. நானே நானா - சுப.தமிழினியன்
    52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
    53. சட்டை - முரளிகண்ணன்
    54. ஐ லவ் யூ - சுவாசிகா
    55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
    56. அபரஞ்சிதா - அடலேறு
    57. முதல் காதல் - chelladhurai
    58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
    59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
    60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
    61. நடிகையின் கதை - சாணக்கியன்
    62. Blackhole - இரா.வசந்த குமார்
    63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
    64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
    65. திருடன் - Parameswerey Namebley
    66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
    67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
    68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
    69. நிபுணன் - யோசிப்பவர்
    70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

    கொசுறு. இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)


    போட்டியில் பங்கு பெறாத பதிவர்கள் யாரேனும், கதைகளுக்கு நச் விமர்சனம் எழுதினால், எமக்கும், உமக்கும், அவர்க்கும், இவர்க்கும், மெத்த மகிழ்ச்சி உண்டாகும்.

    போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!
    கலக்கிட்டீங்க. ஒவ்வொண்ணா படிச்சு, உங்க பதிவிலையே கருத்ஸ் சொல்றேன். விரைவில் வாரேன் ;)