recent posts...

Thursday, August 07, 2008

Butterfly Effect ~ திரைப் பார்வை

Butterfly Effect என்று ஒரு ஆங்கிலப் படம். 2004ல் Ashton Kutcherம் (அதாங்க 42 வயது demi mooreஐ திருமணம் புரிந்த 27 வயது Ashton தான்) சகாக்களும் நடித்த படம்.
ரொம்ப நாளா எங்க ஊரு லைப்ரரில கண்ணுல பட்ட படம் தான். இவ்வளவு நாளா பாக்கணும்னு தோணல. சென்ற வாரம் மீண்டும் கண்ணில் பட்ட போது, டகால்னு அள்ளிட்டேன்.

Butterfly effectனா தான் உங்களுக்கு தெரியுமே (நன்றி: கமல்). அதாகப் பட்டது, உலகில் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும், பிற்காலத்தில் எங்காவது எப்படியாவது ஒரு மாறுதலுக்கு காரணமாய் இருக்கும்.
ஒரு பட்டாம் பூச்சி சிறகடிப்பதால் வரும் காற்றின் இடமாற்றம், பிற்காலத்தில் ஒரு பெரிய சூராவளியின் வீச்சையே மாற்ற வாய்ப்புண்டாம்.

தசாவதாரத்தில், விஷ்ணு சிலையாகிய பெரிய பாராங்கல், கடலுக்குள் விழுந்ததால், கடலடியில் உள்ள பூமித் தட்டு (டெக்டானிக்ஸ் ப்ளேட்டு) அதிர்வுக்குள்ளானது. அந்த அதிர்வு வளர்ந்து வளர்ந்து 2006ன் சுனாமிக்கு வழி வகுத்தது. (நம்பி பாத்திரத்துக்கும் படத்துக்கு கனெக்ஷன் என்னன்னு புரியாதவங்க திரும்ப படிச்சுக்கோங்க ;) )

நீங்களே யோசிச்சுப் பாத்தா, நம்ம வாழ்க்கையில் கூட, நாம செய்யும் ஒவ்வொரு செய்கையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும், நமது வாழ்க்கையிலும் எதிர்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரும்.
இன்னிக்கு வீட்ல சாப்பிடலாமா வெளீல சாப்பீடலாமா?
வெளீல போய் சாப்பிட்டா, விபத்து ஏற்பட்டு எடக்கு முடக்கா, வாழ்க்கை திசை மாறலாம்!
வீட்ல சாப்பிட்டா அந்த நேரம் பாத்து, பூமி அதிர்வு வந்து வீட்டுக்குள்ளையே சமாதியும் ஆகலாம்!
வெளீல போய் சாப்பிட்டா, ஹோட்டல் வெளீல இருக்கர பொட்டிக் கடையில லாட்டரி சீட்டு வாங்கி, நீங்க திடீர் கோடீஸ்வரனும் ஆகலாம்!
ஸோ, ஒவ்வொரு செய்கையும் உங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் திறன் பெற்றது.
இத, ஒத்துப்பீங்கன்னு நெனைக்கறேன்.

இப்ப படத்துக்கு வருவோம்.
Butterfly Effect - இது வந்த புதுசுல, Sixth Sense படத்தை விட புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்புன்னு பில்ட் அப்பெல்லாம் இருந்தது.

கதை என்னன்னா, ஒரு சின்னப் பையன், ஸ்கூல் படிக்கறான்.
அவனுக்கு ஒரு சின்ன வியாதி. பையனுக்கு மறதி ஜாஸ்தி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் கூட மறந்துடுவான்.
அவங்க அப்பாவுக்கும் அதே வியாதி இருக்கும். அவர ஒரு மனநோய் மருத்துவமனைல வச்சிருப்பாங்க.
பையனுக்கும், மருந்தெல்லாம் கிடையாது, பேசாம பையனை ஒரு டைரி வச்சுக்க சொல்லி, அவன் தெனமும் செய்யரதெல்லாம் எழுதிக்கிட்டே வரச் சொல்லுங்க.
அப்பப்ப, அந்த டைரிய பொரட்டிப் பாத்துக்கிட்டே வந்தா, நாளடைவில ஏதாவது மாற்றம் நடக்கலாம்னு சொல்லிடுவாங்க.

பையனும் டைரி எழுத ஆரம்பிப்பான், கதையும் நல்லா வளரும். பையனை சுத்தி மூன்று நண்பர்கள். ஒரு குண்டு பையன், ஒரு அண்னனும் அவனின் தங்கையும். ஹீரோக்கு சின்ன வயசுலேருந்தே அந்த பொண்ணு மேல ஒரு இது.
ஒரு நாள் வெளையாட்டுத்தனமா அருகில் உள்ள ஒரு வீட்டின் தபால் பெட்டியில் வெடியை வைத்துவிட, அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அந்த வீட்டில் உள்ள குழந்தை ஒன்று இறந்து விடும். அதன் தொடர்சியாய் சில விஷயங்கள் நடந்து நண்பர்களுக்குள் பிரிவு வந்துவிடும். அதைத் தவிர, அந்த பெண்ணுக்கும் வீட்டுப் ப்ரச்சனைகள் சில நடந்து வாழ்க்கை திசை மாறிவிடும்.

ஹீரோவும், அம்மாவுடன் ஊரு விட்டு ஊரு போய் காலேஜ் படிக்க ஆரம்பிச்சிடுவாரு.
ஹீரோவின் மறதி தொடர்ந்து கொண்டே இருக்கும். டைரி எழுதும் பழக்கமும் தொடரும்.

ஒரு நாள், எதேச்சையாக, டைரி படிக்கும் போது, பழைய கால நிகழ்வுகள், நண்பர்கள் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்கள்.
திடீர் என்று, டைரியின் எழுத்துக்கள், காற்றில் ஆட, ஹீரோ, பழைய நாட்களுக்கு சர்ர்னு திரும்ப போயிடுவாரு (time machine எஃபெக்டுடன்).

அப்பதான், அவருக்கு புரியும், இந்த டைரி படிப்பதால், தன்னால், பின்னோக்கி பயணிக்க முடியும் என்றும், அந்நாளில் தான் செய்த சில விஷயங்களை மாற்றி செய்தால், தனது எதிர்காலம் மாறிவிடும் என்றும். பிரிந்த கேர்ள்-ஃப்ரெண்டு, கஷ்டப் படும் நண்பன், கேன்ஸர் வந்த தன் அம்மா எல்லாரையும் சரி செய்ய முடியுமே என்று தோன்றும்.

முதல் முயற்சியாய் பின்னோக்கிச் சென்று சில விஷயங்களை வேறு மாதிரி செய்து பார்ப்பான். இதன் விளைவாக, சில விஷயங்கள் வேறு மாதிரி பின்னாளில் நடந்திருக்கும். கேர்ள்-ஃப்ரெண்டு திரும்பக் கிடைப்பாள், நண்பன் உடனிருப்பான். ஆனா, கேர்ள்-ஃப்ரெண்டின் அண்ணன், சைக்கோவாகியிருப்பான். ஹீரோவை, கொல்ல வருவான். ஹீரோ அவனை கொன்று விடுவான். ஜெயிலுக்குப் போவான். அடப்பாவே இப்படியாச்சே என்று, மீண்டும், டைரி படித்து, பின்னோக்கி பயணித்து, வேறு ஒரு மாற்றம் செய்வான்.

இம்முறை, கேர்ள்-ஃப்ரெண்டு தற்கொலை செய்திருப்பாள், நண்பன் மனநோயாளி ஆகியிருப்பான். அடக்கொடுமையே, திரும்ப மாத்தலாம்னு போவான்.

இம்முறை, ஹீரோக்கு ரெண்டு கை போயிருக்கும், கேர்ள்-ஃப்ரெண்டு, தன் நண்பனுடன் ஜோடி சேர்ந்திருப்பாள், அம்மாவுக்கு கேன்ஸர் வந்திருக்கும்.

I think, you got the point ;)

இப்படியே, சுவாரஸ்யமான பல திருப்பங்களுடன் அந்நாள் இந்நாள் என பயணிக்கும் படம், விறு விறு என்று காட்சிக்கு காட்சி மாறுபட்டு, அழகாய் முடியும்.

ஸோ, பாக்க வேண்டிய படம். முதல் 15 நிமிஷம் ஒண்ணும் புரியர மாதிரி இருக்காது. அதுக்கப்பரம் ஸ்பீடு பிடிக்கும். இரண்டாம் முறை பார்க்கும்போது, ரொம்பவே பிடித்துப் போகும்.

பாத்துட்டு சொல்லுங்க! பார்த்திருந்தாலும் சொல்லுங்க!

;)

ஹாப்பி ஃப்ரைடே!

ஒலிம்ப்பிக்ஸ் பாக்க மறந்துடாதீங்க!

பி.கு: இத தமிழ்ல எடுத்தா ஓடுமா? யாரு நடிச்சா சரியா வரும்?

14 comments:

உண்மைத்தமிழன் said...

எங்க ஊர்ப் பக்கம் இன்னும் வரல.. சொல்லிட்டீங்கள்லே.. பார்த்திருவோம்..

SurveySan said...

தியேட்டர்ல வரது சந்தேகம்தான்.
2004 படம் இது.

பாகம் 2 2006ல் வந்து, இப்ப பாகம்3 வரப் போவுது.

டி.வி.டி கெடைக்குதான்னு பாருங்க சாரே.

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
தியேட்டர்ல வரது சந்தேகம்தான். 2004 படம் இது. பாகம் 2 2006ல் வந்து, இப்ப பாகம்3 வரப் போவுது. டி.வி.டி கெடைக்குதான்னு பாருங்க சாரே.//

டி.வி.டி. கிடைக்கும்தான்.. ஆனா என்கிட்ட டிவிடி பிளேயர் இல்லையே.. ஸ்பான்ஸர் பண்ண முடியுமா?

டெய்லி படம் பார்க்கும்போது முதல்லேயும், கடைசிலேயும் "அண்ணன் சர்வேசனுக்கு நன்றி"ன்னு சொல்லி நன்றியை தெரிவிச்சுர்றேன்..

கா.கி said...

நெஜமாவே நல்ல படம். one of my favs. தமிழ்ல சிம்பு சரி வருவார்னு தோணுது. ஆனா ஒரிஜினல் மாதிரியே தெளிவான திரைக்கதை இருந்தாதான் ஓடும்.. sliding doors படத்த நம்மூர்ல 12bனு எடுத்தாங்க (அதுவும் butterfly effect concept based கதை தான் ) ஆனா ரொம்ப குழப்பிட்டாங்க... இதே மாதிரி butterfly effect concept based ' Run Lola Run பாருங்க ' ... நல்ல படம்

உண்மைத்தமிழன் said...

Run Lola Run சென்னைவாழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்ட படம். இப்படியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அப்படியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்தது.. நிஜமாகவே ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..

Anandha Loganathan said...

ஆங்கில படம் எல்லாம் "Butterfly Effect" பத்தி படம் எடுக்குறதை சொல்றீங்க ஆனால் தசாவாதாரதுக்கு முன்னாடியே தமிழில் இதை பத்தி படம் எடுத்த்ட்டாங்க.

தமிழில் 12B அப்படின்னு ஒரு படம் வந்த்து. ஒளிப்பதிவாளர் ஜீவா டைரக்ட் செய்த படம். கதையின் கருவே , ஒரு இண்டர்வியூக்காக ஒரு பஸ்ஸை மிஸ் பன்னதால் என்ன ஆகுது, அந்த பஸ்ஸை பிடுச்சிறிந்தா என்ன ஆகும்ன்னு கதையை paralell-ஆக கொண்டுப்போவார்.

SurveySan said...

////நம்மூர்ல 12bனு எடுத்தாங்க (அதுவும் butterfly effect concept based கதை தான் ) ஆனா ரொம்ப குழப்பிட்டாங்க... ////

true. konjam confuse pannittaanga, 12B.

in 12B there were just two back & forth situations.

B.E had 6 or 7 and the approach on screenplay was good - no confusions :)

ராமலக்ஷ்மி said...

//நம்ம வாழ்க்கையில் கூட, நாம செய்யும் ஒவ்வொரு செய்கையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும், நமது வாழ்க்கையிலும் எதிர்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரும்.//

அருமையா சொல்லியிருக்கிறீர்கள்.

//பாத்துட்டு சொல்லுங்க! பார்த்திருந்தாலும் சொல்லுங்க!//

இன்னும் பார்க்கல. பார்க்க முயற்சிக்கிறேன். முடியாட்டலும் இத சொல்லியாகணும். சுவாரஸ்யமான விமர்சனம்.

SurveySan said...

karthick,
//தமிழ்ல சிம்பு சரி வருவார்னு தோணுது. //

;)

SurveySan said...

//Run Lola Run சென்னைவாழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்ட படம்//

I havent seen this one yet. will do soon.

thanks for the visit.

SurveySan said...

ramalakshmi,

// சுவாரஸ்யமான விமர்சனம்.//

nanri!

கா.கி said...

@ Anandha Loganathan

sir, அந்தப் படம்தான் sliding doorsnu னு ஒரு ஆங்கில படத்தோட தழுவல்... so ஆங்கிலத்துலதான் மொதல்ல எடுத்தாங்க... ஆனா இதவெச்சு நான் தமிழ் படங்கள மட்டமா பேசல... jus pointing out...

Unknown said...

This story is somewhat same like "DEJAVU"

Ananya Mahadevan said...

என்னை ரொம்ப disturb பண்ணின படம்.Definitely wouldnt call it favourite but quite impressive work.