recent posts...

Thursday, August 14, 2008

Mixture - பெட்டிஷன், இனி பின்னூட்டங்கள் கவனிக்கப்படட்டும், Phelps, ரஜினி வாழ்க, பதிவர் போட்டி

 

1) வணக்கம்! முன்னமே சொன்னதுதான், நல்ல விஷயம் என்று பட்டதால், மறுக்கா சொல்றேன் (ரிப்பீட்டறேன்).
அதாகப்பட்டது, உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னனயைப் பற்றி ஆதங்கப்பட்டு எழுதிய பதிவு, அதைத் தொடர்ந்து அனுப்பிய பெட்டிஷன், அதுக்கப்பரம் உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் எல்லாத்துக்கும் பதில் கிடைத்துள்ளது . முழு விவரத்தையும் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கரேன். படிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னையில் உங்கள் இருப்பிடத்தைச் சுற்றி புதுச் சாலை போடும்போது, இந்த சுரண்டலை கடைபிடிக்காவிட்டால், இந்தப் பதிவில் உள்ள Superintending Engineerன் முகவரிக்கு உடனே தெரியப் படுத்த வேண்டியது உங்கள் கடமையும், என் வேண்டுகோளும்! நன்னி!

2) பதிவுகள் எழுதறோம் சரி. அந்தப் பதிவை படிச்சு பின்னூட்டம் இடுபவர்களைப் பலர் கண்டுக்கரதில்லை. பின்னூட்டங்களைக் கவனிக்கணும். ப்ளாகுகளின் பெரிய சக்தியே அதுதானே? அடுத்தவரின் கருத்தை அறிதலும், அவர்களோடு கருத்து மோதல்களில் ஈடுபடவும் ப்ளாகரின் அழகான வசதியை சில பேர் நல்லாவே பயன்படுத்தராங்க. ஆனா, எல்லாரும் அப்படிச் செய்வதில்லை.
ரூம் போட்டு யோசிச்சு, இதுக்கு ஒரு தீர்வு காண என்னா பண்ணனும்னு ஆஃபீஸ் நேரத்துல யோசிச்சேன்.
என்ன பண்ணலாம்னா, ஒரு பதிவு எழுதி அடுத்த பதிவு எழுதப் போகும் முன், முந்தைய பதிவில் உள்ள 'சிறந்த பின்னூட்டத்தை' மக்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் முந்தைய பதிவை நிறைவு செய்யவேண்டும்.
படிக்கரவங்களுக்கும் யோசிச்சு பின்னூட்டம் போட இது ஒரு முன்னோடியா இருக்கும்.
தொடர்ந்து சிறந்த பின்னூட்டக்காரரா வரும் அன்பருக்கு, வருஷக் கடைசியில் பரிசு தருவதெல்லாம் உங்க விருப்பம். மட்டமான பின்னூட்டத்தை எடுத்துச் சொல்றதும் உங்க விருப்பம் ;)
2அ) என் IPKF, LTTE பதிவில், சுந்தரவடிவேல் சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.
2ஆ) புதிய சூப்பர் ஸ்டார் பதிவில், அதிஷா சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.

 


3) Michael Phelps, Biejingல் பட்டையைக் கிளப்புவது உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனா, அவரு வரிசையா தங்கம் வாங்குவதர்க்கு முக்கிய காரணம், அவர் அணிந்திருக்கும் NASAவின் Speedo உடை என்று சில தரப்பு கலவரப்படுகிறது.
உடை கண்டிப்பா வேகமாக நீந்த உதவும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவர் தங்கப் பதக்கம் வாங்குவதற்கு அது உதவுகிறது என்று சொல்லமுடியாது.
ஏன்னா, எல்லாரும்தான் அதே ட்ரெஸ் போட்டிருக்கானுவ.
இவரு, வரிசையா world record ஒவ்வொரு போட்டியிலும் உடைப்பதற்கு உடை காரணமாயிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், he has an amazing talent!
Morgan Freeman குரலில் VISAவின் Phelps விளம்பரம் அருமை.

4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)

5) அடுத்த பதிவர் போட்டி? ஒரு ஜூப்பர் ஐடியா இருக்கு. PiT போட்டி, சிறில் போட்டி, ஒலிம்பிக் போட்டி எல்லாம் முடியட்டும், அப்பாலிக்கா சொல்றேன். அடிச்சு ஆடுவோம்! வெறும் படம், பாட்டு, கதைன்னெல்லாம் இல்லாம, இம்முறை ஒரு படையலே வைக்க போட்டி நடத்தலாம் என்று ஐடியா! எல்லாம் அவன் செயல்!

 


ஹாப்பி சுதந்திரதின வாழ்த்துக்கள்!

சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்! ஸோ, அனுபவிங்க!

லாலுவின் இந்தக் காமெடியை ரசித்துவிட்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடுங்கள்! :)

இதயும் பாருங்க, கீதா சாம்பசிவத்தின் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

17 comments:

Geetha Sambasivam said...

அட, வராத ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்களேனு பார்த்தால், இங்கே ஆச்சரியத்துக்கு மேலே ஆச்சரியம், என்னோட பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கீங்க! :P

அது சரி, பெட்டிஷன் கொடுக்கலாமா??? எனக்கும் ஒண்ணு கொடுக்கணுமே??? மெயில் ஐடி இருக்கா, முதல்லே அதுக்கு அனுப்பறோம், பாருங்க, அப்புறமா என்ன செய்யறதுனு ஆலோசனை சொல்லுங்க, நாங்களும் ஒரு 10 வருஷமா முட்டி மோதறோம், பார்க்கலாமே???

Geetha Sambasivam said...

திரும்ப வரேனுங்கோ!!!

SurveySan said...

கீதா, வாங்க வாங்க.

கண்டிப்பா தெரிஞ்சத சொல்வோம்.
இங்க போனீங்கன்னா (http://fixmyindia.blogspot.com/) , வலது ஓரத்தில் சில லிங்க்ஸ் இருக்கு. முதல் லிங்கில் பெட்டிஷன் கொடுக்கலாம் டில்லிக்கு.

http://pgportal.gov.in/

ஊர் கூடி இழுப்போம், கொஞ்சமாவது நகரும் :)

Sanjai Gandhi said...

//4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)//

ரசிகர்கள் எதிர்ப்பு காரணமா சில காட்சிகளையும் கூட வெட்ட் சொல்லிட்டாராமே. அது சரி.... ரஜினி ஏன் 10 கோடி திருப்பி தரனும்? படத்தோட தயாரிப்பளர் ரஜினியா? இல்லை அவ்வளவு சம்பளம் வாங்கி வைதிருந்தாரா? :(

சுதந்திர தின வாழ்த்துக்கள் சர்வ்ஸ்.. :)

கோவி.கண்ணன் said...

//ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)//

ஆயிரங்களுக்கு பதில் கோடியைக் கொடுத்த ரஜினி சார் வாழ்க !
:)

SurveySan said...

sanjai,

/// படத்தோட தயாரிப்பளர் ரஜினியா? இல்லை அவ்வளவு சம்பளம் வாங்கி வைதிருந்தாரா? :(///

சம்பளமேதான். திருப்பிக் கொடுத்ததே இவ்வளவுன்னா, வாங்கினது எவ்வளவுன்னு யோசிச்சுப் பாருங்க.

உழைப்புக்கேத்த ஊதியம் வாங்கலன்னா, ஒட்டாதோ?

(சாப்ட்வேர் காரனுக்கு ஒட்டுதான்னு யாராவது கேட்டீங்கன்னா, பின்னூட்டம் டெலீட் பண்ணிடுவேன் ;) )

SurveySan said...

கோவி,

//ஆயிரங்களுக்கு பதில் கோடியைக் கொடுத்த ரஜினி சார் வாழ்க !//

ரொம்ப அடிபட்டிருக்கீங்க போலயிருக்க ரசிகக் கண்மணிகள் கிட்ட? :)

SurveySan said...

http://tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=coc18329&work=1

பரிசல்காரன் said...

பின்னூட்டங்கள் குறித்த உங்கள் கருத்தை அடிமுதல் முடிவரை வழிமொழிகிறேன். ஆரம்பத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுது?) நான் பல சீனியர்களுக்கு பின்னூட்டம் போட்டு, என்ன சொல்வார்களோ என்று காத்திருந்து ஒன்றுமே சொல்லாமலிருக்கும்போது ஒரு மாதிரி ஆன உணர்வை நினைத்துத்தான் எனக்குப் பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு ச்சின்ன நன்றியையாவது சொல்வதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். 100% சொல்வேனென்று இல்லாவிட்டாலும் மேக்ஸிமம் சொல்லி வருகிறேன்!

(ஆமா.. இவ்ளோ சீரியஸா ஒரு பின்னூட்டம் போட்டதே இல்ல. அதுக்காகவாவது இதை செலக்ட் பண்ணி ஒரு AUDI காரை பரிசாக அனுப்பிவைக்கவும்!)

Kavi said...

//சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்!//

உண்மை.

¤உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்!¤

SurveySan said...

பரிசல்காரன்,

////என்ன சொல்வார்களோ என்று காத்திருந்து ஒன்றுமே சொல்லாமலிருக்கும்போது ஒரு மாதிரி ஆன உணர்வை////

இதைப் படித்தாவது திருந்தட்டும் பெருசுகள் :)

SurveySan said...

நன்றி ஓவியா!

SurveySan said...

பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது :)

SurveySan said...

பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது :)

ராமலக்ஷ்மி said...

உங்க ஜூப்பர் ஐடியாவின் படி ஜூப்பர் போட்டி எப்போ? ஆனா அழைப்பு விடாமல் அவரவர் ஆர்வப்பட்டு தானா வந்து கலந்துக்கற மாதிரி இருக்கும்தானே:))?

////வெறும் படம், பாட்டு, கதைன்னெல்லாம் இல்லாம, இம்முறை ஒரு படையலே வைக்க போட்டி நடத்தலாம் என்று ஐடியா! எல்லாம் அவன் செயல்!//

நமக்கு ஓரளவு உருப்படியா வரக்கூடிய ஏரியாவையெல்லாம் விட்டுட்டீங்களே:((!

இந்தப் பின்னூட்ட விஷயம்...இதற்கு அடுத்த பதிவில்தான் பதில் சொல்வேன்.

SurveySan said...

////அழைப்பு விடாமல் அவரவர் ஆர்வப்பட்டு தானா வந்து கலந்துக்கற மாதிரி இருக்கும்தானே:))?////

அறிவிப்பு வரும். அதுதான் எல்லாருக்கும் அழைப்பு.


பின்னூட்ட ஐடியா பத்தி ஏதாச்சும் நல்ல விதமா சொல்லி, ஐடியாவ பரப்புங்க. :)

ராமலக்ஷ்மி said...

//
பின்னூட்ட ஐடியா பத்தி ஏதாச்சும் நல்ல விதமா சொல்லி, ஐடியாவ பரப்புங்க. :)//

நிச்சயமா என் கருத்து நல்ல ஐடியாவாகத் தோணாதே உங்களுக்கு
:((! வேற என்ன பண்ணலாம்..ம்ம்ம்?!