பலருக்கும் பலவிதமான அபிப்ராயங்கள் டாக்டர் அன்புமணி பற்றி இருந்தாலும், இந்த வீடியோ பாக்கும்போது ஒரு "genuinity" தெரியுது அவருகிட்ட.
ஸ்டாலினிம் இருக்கும் அதே ஃபீல் இருக்கு இவர்கிட்டையும்.
ஏதாவது, வித்யாசமா, நல்லதா நாட்டுக்குப் பண்ணனும்னு ஒரு ஆர்வம் இருப்பதா படுது.
உங்களுக்குப் படுதா? :)
You can watch other videos here
12 comments:
ஒரே ஒரு வரியைத் தெளிவாய்ச் சொன்னார் - "குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியை (உயர்தரம்) - ஊரின் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் பெறச்செய்யவேண்டும்" என்று அன்புமணி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.
sharepoint the great அவர்களே, நானும் அந்த வரிகளை கவனித்தேன்.
இவரும் பதவிக்கு வந்து பல வருஷம் ஆச்சு. எந்த அளவுக்கு சாதிச்சிருக்கார்னு தெரியல.
சிகரெட்டுக்கு எதிரா சில வெற்றிகள் கெடச்சிருக்கு. ஆனா, அதுவும், எந்தளவுக்கு மாற்றத்தைக் கொடுத்ததுன்னு தெரியல.
முழு அதிகாரம் இருந்தால் இன்னும் செய்வாரோ என்னமோ?
டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் முழு மது விலக்கு அமல் படுத்தரேன்றாரே. பாப்பம்.
மதுவையும் சிகரெட்டையும் ஒழிக்க ஒரே வழி அவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதே. மதுவினால் கெட்டழியும் எத்தனயோ குடும்பங்கள், முக்கியமாக ஏழைக் குடும்பங்கள் பயனடையும். மேலும் சிகரெட்டினால் நோய் வந்து சாகும் சிகரெட்-அடிமைகளையும் காப்பாற்ற முடியும். மது மற்றும் புகையிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் டாக்டர் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் பாராட்டுகிறேன்.
பார்த்தேன் ரசித்தேன்.. இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போயிற்று.. உங்க தயவில் பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.. நன்றி சர்வேசன்..
... அன்புமணியின் மீது குறை ஒன்றும் இல்லை ... அவர் மைத்துநருக்கு மருந்து காண்ட்ட்ராக்டுகள் வாங்க உதவுவதாக செய்தி கசியும் அவ்வப்போது... அம்புட்டு தான்... வெறு பெரிய குறை சொல்ல ஒன்றும் இல்லை.. நல்ல பண்பாடு உள்ளவர்... வாய்ப்பு கிடைத்தாலும் அநாகரிக அரசியல் செய்வதாக தெரியவில்லை... அப்பாவை ஒப்பிடாமல் பார்த்தால் மிக நல்லவர்.. :)
//அப்பாவை ஒப்பிடாமல் பார்த்தால் மிக நல்லவர்.. :)//
சாரி.. மாறிடிச்சி... அப்பாவை ஒப்பிட்டு பார்த்தால் மிக மிக நல்லவர். :)
எல்லாவற்றையும் அரசியல் சாயம் பூசிப் பார்க்காமல், அரசியலில் இருக்கும் இவர் போன்ற சிலர் கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள் வந்தால் நாடு எப்படி சுபிட்சமாகும் என்பதை எண்ணி, கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க முன் வந்தால் நன்றாக இருக்கும்.
தயாநிதி மாறனும் அன்பு மணியும் தான் இளைய அமைச்சர்கள். என்ன தான் இருந்தாலும் நல்லது செய்தார்கள்.
விடுவானுகளா நம்ம நாத்த்ம் பிடிச்ச சனியனுகள்.
robin,
///மதுவையும் சிகரெட்டையும் ஒழிக்க ஒரே வழி அவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதே.////
yes. ஆனா, செய்ய விடமாட்டாங்க. எக்கச்சக்க பணம் புழங்கும் industry, அவ்வளவு லேசுல ஒழியாது.
ஒழிக்கவும் முடியாது.
அப்படியே ஒழிச்சாலும், இல்லீகலா, இன்னும் மட்ட ரக சிகரெட்டும், சரக்கும் வெளி வர வழிதான் பிறக்கும்..
மனுஷன் தான் திருந்தணும். அட்லீஸ்ட், quantity குறைக்கப் பழகணும்.
sanjai,
//சாரி.. மாறிடிச்சி... அப்பாவை ஒப்பிட்டு பார்த்தால் மிக மிக நல்லவர்//
உண்மைதான். இவரு பேசுவதைப் பார்த்தால் நல்லெண்ணம் இருப்பதா தெரியுது.
ராமதாஸின், 'பாலிடிக்ஸ் பாலிஸி' இவருக்கு வராமல் இருக்கணும். :)
ராமலக்ஷ்மி,
////அரசியலில் இருக்கும் இவர் போன்ற சிலர் கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள் வந்தால் நாடு எப்படி சுபிட்சமாகும்///
சிலர் கொண்டு வர நினைத்தாலும், விடமாட்டாங்கல்ல கெரகம் புடிச்சவங்க ;)
எங்க ஊர்ல, ரோடு போட எல்லாம் sacntion ஆன பிறகும், இரு கவுன்ஸிலர்களின் ஈகோ ப்ரச்சனையால் எல்லாம் முடங்கிக் கிடக்குதாம். என்னத்த சொல்ல?
நானும் இந்த வீடியோ பார்த்தேன். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வரை ராமதாஸ், அன்புமணி ... இருவரும் மற்ற அரசியல்வாதிகள் போல தான் எண்ணம் இருந்தது. காரணம், இவர்களைப் பற்றி பத்திரைகள் வாயிலாக தான் அறிகிறோம். இல்லையா ?
எனக்கு ஒரே ஷாக், அன்புமணி தானா இவரு, என்ன ஒரு டிப்ளமாடிக் பேச்சு, ஒரு கண்ணியம், மனைவியுடன் அந்நியோன்யம், தந்தையை பற்றி இன்னும் பயம், தாயின் புத்திமதி ... இதெல்லாம் பார்க்க நாடகம் மாதிரி தெரியவில்லை !!!!
அமெரிக்காவில் ஒரு ஸ்பீச் கொடுத்து, அரங்கமே ஸ்டாண்டிங் ஓவேஷன் தந்த பொழுது கண்ணீர் வடித்தாகக் கூறியது நெகிழவைத்தது.
இது வரை நம் மனதில் இருந்த அன்புமணி வேறு, இவர் வேறு என அன்றிலிருந்து இமேஜ் சேன்ச்ட் இன் மை மைன்ட்.
இவர்களைப் போன்ற (அட்லீஸ்ட், தமிழகம் நல்லா வரணும் என்று சிந்தனையிலாவது) அரசியல்வாதிகள் நிறைய வரணும். நிறைய மாற்றங்கள் தரணும்.
Sathanga,
நான் இந்த ப்ரோக்ராம் பாத்துட்டு நினைச்சத அப்படியே சொல்லியிருக்கீங்க.
வருகைக்கு நன்னி! :)
Post a Comment