ரங்கீலான்னு ஒரு படம் எடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டயிருந்து அமக்களமான பாட்டு எல்லாம் கறந்து கொடுத்தாரு.
படம் சுமார்னாலும், அதில் வரும் பாட்டும், அதன் பீட்டும், ரெக்கார்டிங்கும், இன்னிக்கு கேட்டாலும் கிர்ர்ர்னு இருக்கும்.
இவருக்கு யாரு காசு கொடுக்கராங்கன்னு தெரியல. வருஷத்துக்கு ஒரு 28 படமாவது எடுத்துடுவாரு போல இருக்கு. எப்ப வீடியோ கடைக்குப் போனாலும், ஏதாவது புது படம் இவரு பேர் போட்டு ஷெல்ஃப்ல இருக்கும்.
ரங்கீலாக்கப்பரம், Daud, Company, Satya, Bhootனு ஓரளவுக்கு நல்லாவே படம் எடுத்திருக்காரு.
இவரின் வெற்றியே, நம்மாளுங்க மாதிரி கும்பலோட கோயிந்தா போடாம, ஒரு தனி ஸ்டைல்ல, வித்யாசமான கதையை எடுத்துக் கொடுக்கரதுதான்.
சமீபத்தில் வந்த Sarkarம், Sarkar Rajம் இவரின் ரசிகனாக பலரை மாற்றியிருக்கும்.
நல்லா எடுக்கராரு.
பெரிய செலவு, ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்றது இல்லை, ஆனா, படம் நேர்த்தியா இருக்கு.
இந்த மாதிரிதான் நிறைய பேர் வேணும்.
இந்த வரிசையில் இந்த வருஷம், Contractனு ஒரு படம் வந்திருக்கு.
யார் நடிச்சிருக்காங்கன்னு கேட்டீங்கன்னா, எனக்கு பேரெல்லாம் தெரியாது.
99% எல்லாம் புது முகம்.
ஒரு தீவிரவாத கும்பலின் குண்டு வெடிப்பால், மிலிட்டரி ஹீரோ, தன் அழகான குழந்தையையும், மனைவியையும் பறிகொடுக்கராரு.
கும்பலை பழிவாங்க, RAWல் இணைந்து, அவர்களின் உதவி மூலம், தீவிரவாத கும்பலுக்குள் புகுந்து, கடைசியில் வில்லனை கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளும் கதை.
படம் போரடிக்காம விரு விருன்னு போகுது.
RAWவில் இருக்கும் ஒரு ஆஃபீஸருக்குத் தான் ஹீரோவின் இந்த 'ஊடுரவலை' பற்றித் தெரியும். கிட்டத்தட்ட, கமலின் குருதிப்புணல் டைப் காட்சிகள் (குருதிப்புனல், ஹிந்தியின் துரோகல் என்ற படத்தின் தமிழாக்கம்).
கடைசியில், அந்த RAW ஆபீஸர் வில்லன் கிட்ட மாட்டிக்கிட்டு அடி வாங்குவாரு. வில்லன், ஆபீஸர் கிட்ட, "யார் அந்த கறுப்பு ஆடு"ன்னு சித்திர வதை பண்ணி கேப்பான்.
ஆனா, நம்ம ஆபீஸரு, போட்டுக் கொடுக்காம, சிரிச்சுக்கிட்டே "கியான் ஸே ஜாதா காம்"னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
நல்ல வேளை சப்-டைட்டிலு இருந்துச்சு. அதாவது, "Duty is much important than LIFE"னு சொல்றாராம்.
ஹீரோவ போட்டுக்கொடுக்காததால, வில்லன் ஆபீஸர போட்டுத் தள்ளிடுவான்.
கடைசியில, ஹீரோ, வில்லன போட்டுத்தள்ளிடுவாரு.
பாடல்களும் அமக்களமா இருந்தது. குறிப்பா, ஆகு ஆகு சே தில்பர்ரு ஜாவேன்னு, ஒரு பாட்டு, தாளம் போடும் வ்கை. இந்தியுலகில் பெரிய ஹிட்டாகியிருக்கும்னு தோணுது.
குருதிப்புனலா?, Contractஆ?ன்னு கேட்டா, நிச்சயம், மசாலா-தடவப்படாத குருதிப்புணல் தான்.
( ஒலகத்தரம்னா என்னான்னு காட்டின கமல், அதுக்கப்பரம், அந்த ஃபார்முலாவை எங்கையோ போட்டுத் தொலச்சிட்டாரு. தேடி எடுத்து அடுத்த படம் எடுத்தா நல்லாருக்கும். )
ஆனா, Contract பார்க்ககூடிய படம். டிவிடி கிடைத்தால் ஒரு முறை பார்க்கவும்.
ராம் கோபால் வர்மா சார், தமிழ்ல ஒரு படம், எங்காளுங்கள போட்டு 'நச்'னு எடுத்து, எங்க ஆளுங்க ட்ரெண்டை மாத்துங்க சார்.
:( ரொம்ப நொந்துபோயிருக்கோம் சார். :(
ப்ளீஸ், பாத்து செய்யுங்க சார்.
~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~
பி.கு: ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களே பதிவில், டிராஃபிக் ராமசாமியை அறியத் தந்த வடுவூர் குமார், சிறந்த பின்னூட்டக்காரராகிறார். பி.கு2: யாருமே கண்டுக்கொள்ளாத Architecture படங்கள் பதிவில் தைரியமாய் வந்து பின்னூட்டிய பரிசல்காரனின் ஒரே மன தைரியத்தை பாராட்டி, அவர் சிறந்த பின்னூட்டக்காரர் அவார்டைப் பெறுகிறார். |
6 comments:
:(((
குருதிப்புனல்
gulf-tamilan,
:(((
கொத்ஸ்,
திருத்திட்டேன். நன்னி.
ராம் கோபால் வர்மா, எதாவது யோசிச்சி நல்லா இருக்கும்னு நினைச்சாருன்னா உடனே படத்தை ஆரம்பிச்சிடுவாராம். ரிசல்ட் கண்டுக்க மாட்டாராம். ஜித்தன்'ன்னு ஒரு தமிழ் படம் வந்திச்சே? அது கூட அவர் ஐடியா தானாம்.
சரவணகுமரன்,
அப்படியா? ரூம் போட்டு யோசிச்சாதான் சொதப்பலா வருதா அப்போ? நம்மாளுங்க கவனிக்க!
:)
ஜித்தன் from Gayab. interesting story line. இன்னும் பாக்கலை.
http://www.imdb.com/title/tt0414040/plotsummary
Post a Comment