recent posts...

Tuesday, August 19, 2008

ரூம் போட்டு யோசிக்கராங்கப்பா...

Mariam Abdullahவிடம் இருந்து வந்த சுவாரஸ்யமான கடுதாசி. யாரு பெத்த புள்ளையோ? பாவம். ஒதவிடலாமா? எனக்கும் நெறைய $$$ தேறுமாமே? :))

~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~
With Due respect I humbly write to solicit for your partnership and assistance in the transfer and investment of my inheritance fund USD$17.5M from my late father who died mysteriously last Dec.

It was very evident that he was poisoned to death. In my culture, when a man dies, if he does not have a male child, the brothers shares his property leaving both the wife and the daughters empty handed including the house they live in. This is the exact case with me as I am the only daughter of my father. I lost my mother when I was barely a year old and my father refused to re-marry another wife because he felt solely responsible for my mother's death.

This is so because he concentrated much on his businesses that he rarely pays attention to domestic affairs. He was always travelling taking care of his businesses that he did not notice when my mother took ill. He thought it was a minor illness and was ignorant of this. My mother on her own resorted to self-medication.It was not until the illness degenerated that my father took my mother to hospital where she was diagnosed to find out that hypatitis had eaten deep into her blood stream. She didn't last long before she died.This happened when I was barely a year old. Based on this, my father could not forgive himself easily because of it and said he was responsible for her death as he could have saved her if only he had paid attention to the things at home rather than concentrating much on his businesses.

Despite all entreaties by friends and relatives, he refused to remarry but ensured that I had everything that I wanted. It was as a result of this that he made me the next of kin to his fund deposit with the bank and stated that in the event of any eventuality, I should have a direct access to the fund only when I am 24 years of age otherwise, I should have a guardian/partner intercede on my behalf for the release of the funds to me. Unfortunately, he died late last year and I am 21 years of age currently. This is why I have contacted you to serve as a guardian to me and as my foreign partner for the transfer and investment of the fund overseas My uncles does not know about the fund because they had already taken my father's houses and other properties because I am a girl and they said I do not have rights for any property. They have requested to have my father's bank papers but I simply told them that I do not know where he kept them. The younger brother took the house in the village while the houses in the town were sold out they shared the proceed they got from the sale. Right now, I am with a friend of mine and do sincerely want to travel out of my country. This can only happen when I have secured the release and transfer of the funds in the bank.

This why it is important that we have a plan on the type of lucrative business that we can invest the funds on. I had at various times had discussions with the director of international remittance unit of the bank where my father deposited the funds and I was assured that once, I have someone who would be willing to receive the funds on my behalf, they shall commence all proceedings to effect the release and transfer of the funds into the person's designated account.Now, that you have signified your interest to partner with me, it would only be very necessary if you contact the bank and request for the release and transfer of my inheritance fund into your nominated account for the purpose of investment and to further have me come over to your
country to continue with my studies.

I shall be giving you the bank's contact details as soon as I hear back from you so that you will go ahead and contact the bank.

Your urgent response will be appreciated,Talk to you the more.
Sincerely,
Mariam Abdullah
~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய Phelps பதிவில் ராமலக்ஷ்மி'யின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

13 comments:

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

Surveyசன் 17.5 Million Dollors க்கு அதிபதி ஆக போறீங்க, கைகொடுங்க. அப்டியே உங்க வலை பதிவு நண்பர்களையும் கொஞ்சம் கவனிச்சிக்ங்க :)

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

Now கொஞ்சம் serious.

இப்படி பல மோசடிகளை பத்தி இந்த வார விகடனில் செய்தி வந்துள்ளது (எந்த விகடன் என்று ஞாபகமில்லை) அதில் பல தீவிரவாதி கும்பலுடன் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது. கவனம் மக்களே !!!

SurveySan said...

அருண் நிஷோர் பாஸ்கரன்

///Surveyசன் 17.5 Million Dollors க்கு அதிபதி ஆக போறீங்க, கைகொடுங்க. அப்டியே உங்க வலை பதிவு நண்பர்களையும் கொஞ்சம் கவனிச்சிக்ங்க :) //

;) plan is to evenly split the $$s to all 'comment'ors on this post.

SurveySan said...

அருண் நிஷோர் பாஸ்கரன்,

///Now கொஞ்சம் serious.

இப்படி பல மோசடிகளை பத்தி இந்த வார விகடனில் செய்தி வந்துள்ளது (எந்த விகடன் என்று ஞாபகமில்லை) அதில் பல தீவிரவாதி கும்பலுடன் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது. கவனம் மக்களே !!!///

ofcourse. கெரகம் புடிச்சவனுங்க. எல்லாத்துக்கும் துணிஞ்சவனுங்க!

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

ஒரு கமெண்ட் க்கு இவ்வளவுன்னு split பண்ணாதிங்க. என்னால நிறைய கமெண்ட் எழுத முடியாது....:)இந்த பதிவுல முதல் கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெஷல் prize ஏதாவது உண்டா :) ?

திவா said...

நான் வலைப்பக்கம் வந்த 6 வருஷமா இதோட வேரியேஷன்ஸ் எல்லாமே பாத்துக்கிட்டு இருக்கேன். ரொம்பவே ஆச்சரியப்பட வைக்குது.
1. ஒவ்வொரு முறையும் வேற வேற கதை வரது. பேசாம இவங்க சினிமா எடுக்கப்போகலாம்.
2. இன்னும் எவ்வளோ பேர் ஏமாந்துகிட்டு இருக்காங்க? இல்லைனா ஏன் இவங்க தொடர்ந்து இதையே செய்யப்போறாங்க?

திவா said...

//பாவம். ஒதவிடலாமா?//
பாவம் ஒத விடவேணாம்.
:-))

SurveySan said...

அருண், ///என்னால நிறைய கமெண்ட் எழுத முடியாது....:)இந்த பதிவுல முதல் கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெஷல் prize ஏதாவது உண்டா :) ?
////

ஒருத்தர் பல கமெண்ட்டு போட்டாலும், அவருக்கு $$ல ஒரு பங்குதான் கிட்டும்.

(என் பங்கு கொறையக் கூடாதுல்ல :))

SurveySan said...

திவா,

/////. இன்னும் எவ்வளோ பேர் ஏமாந்துகிட்டு இருக்காங்க? இல்லைனா ஏன் இவங்க தொடர்ந்து இதையே செய்யப்போறாங்க//////


இந்த ஈமெயில் எப்படியும் ஒரு ஆறு மில்லியன் ஆளுங்களைப் போய்ச் சேறுமாம்.
ஆறு மில்லியன்ல, ஆறு பேராவது ஏமாறுவாங்க. ஆறுல, ஒருத்தராவது, இவங்க கிட்ட ஆப்டு, சில பல ஆயிரங்களை இழப்பார்கள்.
ஒன்னியும் பண்ண முடியாது இவங்கள. இவங்க இருந்து செயல் படர ஊர் அந்த மாதிரி :)

ராஜ்திலக் said...

நேற்று நான் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்ள நினைகிறேன். இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியர்களை குறிவைக்கும் இ-மெயில் மோசடி
http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_2954.html

SurveySan said...

நன்றி ராஜ்திலக்.

ராமலக்ஷ்மி said...

கடந்த பதிவுக்கு ஒருவாறாக[ஒருவேளை வேறு வழியின்றியா?
:( , எப்படியோ] என்னைச் சிறந்த பின்னூட்டக்காரராகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

இப்பதிவிலே நீங்கள் வெளியிட்டிருக்கும் மெயில் அத்தனை புதிதல்ல. இது போன்று வெவ்வேறு கதைகளுடன் மில்லியன்களுக்கு ஆசைகாட்டி கடந்து ஏழெட்டு வருடங்களாகவே அவ்வப்போது இம்மாதிரியான மெயில்கள் வந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன். ஒவ்வொன்றிலும் அவர்கள் இட்டுக்கட்டும் கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கும். இதிலெல்லாம் உஷாராக ஏமாற்று என ஒதுங்கி விடும் நாம் பல சமயங்களில் நடைமுறை வாழ்க்கையில் ரூம் போடாமலே.. யோசிக்காமலே.. சோகக் கதையென அவிழ்த்து விடும் சொந்தக் கதைகளில் ஏமாந்துதான் போகிறோம் சமயங்களில். உதாரணத்துக்கு இரண்டு வருடங்கள் முன் வரை எம்மிடம் ஐந்து ஆண்டுகள் ஒருவர் ஓட்டுநராக வேலையிலிருந்தார். கடைசி இரண்டாண்டு காலக் கட்டத்தில், மாமனார் இறந்து விட்டதாகவும் பையன்களுக்கு (ஒருவன் ஓடிப் போய் விட்டானாம்) தகவலும் சொல்ல முடியாத இக்கட்டில் தான்தான் ஈமக்கடன்களை செய்ய நேரிட்டதாகவும் பத்து நாள் விடுப்பு எடுத்த பிறகு ஜோரான மொட்டை தலையுடன் வந்து நின்றார். நம்பினோம். பின் திடீரென் மைத்துனன் தூக்கு மாட்டி இறந்து போனதாகச் சொல்லி ஒருவாரம் மாயாமாகிக் திரும்பினார். வந்து நடந்த சம்பவங்களை விவரிக்கும் பாங்கு இருக்கிறதே... கோடம்பாக்கத்துக் காரர்கள் கேட்க வேண்டுமே! பின் மைத்துனி தன்ஆறு வயதுக் குழந்தையைக் கிணற்றில் தள்ளி தானும் உள்ளே விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் சத்தம் கேட்டு குழந்தையைக் காப்பாற்றியவர்களால் தாயைக் காப்பாற்ற முடியாது போய் விட்டது என எஸ்கேப். சரி இப்படி ஒரு சம்பவம் எந்த ஆங்கில தினசரியிலும் காணுமேயென கன்னட தினசரிகளில் வந்ததா என வேலைக்கு வரும் பெண்மணிகளிடமும் விசாரித்தாகி விட்டது. திரும்பி வந்தவர் செய்தித் தாளுக்கு போகாமல் விஷயத்தை அமுக்கி விட்டதாக வேறு கூற மந்திரிமார்களே தப்ப முடியாத காலத்தில் நடக்கக் கூடியதா அல்லது அத்தனை முக்கியத்துவம் அற்றதா என்று கூட யோசிக்க விடாமல் தாயை இழந்த குழந்தை தன் மடியில் வந்து "அச்சா" என அழுததாகவும் தானே அதை வளர்க்கப் போவதாகவும் பில்டப் வேறு. பின்னர் வேறொரு காரணத்துக்காக அவரை விலக்க நேர்ந்த பின் தெரியவந்தது அவரது மாமனார்,மைத்துனர், மைத்துனி யாவரும் வெரி மச் அலைவ் என்று:(! இதில் இன்னொரு பாயின்ட் பாருங்க, இவர் உயிரோடு சாகடித்த எல்லோருமே மனைவியின் உறவினர்கள்...!

அருண் போன்று சிலபலருக்கு அதிக பின்னூட்டங்கள் இட்டால்தான் அவார்டா எனும் சந்தேகம் வருவதாலும், அவார்டுக்காக அடிக்கடி பின்னூட்டமிடுவதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்பதாலும், சிந்தித்துச் சிறந்த பின்னூட்டத்துக்கு தாராளமாக அவார்டு கொடுக்கும் படி கேட்டுக் கொண்டும், இந்த பின்னூட்டம் சத்தியமாக இப்பதிவைப் பற்றியதுதான்:) என்பதைத் தெளிவும் படுத்தி விட்டு ஒரே பின்னூட்டத்துடன் உங்களிடமிருந்து நன்றி கூறி விடை பெறுவது,

ராமலக்ஷ்மி.

SurveySan said...

ராமலக்ஷ்மி, எனக்கும் இந்த மாதிரி பலப் பல மடல்கள் நெறைய தடவ வந்திருக்கு. இந்த மடல் இன்று வந்ததும்ம் பதியக் காரணம்

1) இதில் இட்டுக் கட்டும் கதை சுவாரஸ்யம். நெறைய பேர சாகடிச்சு, எல்லாத்துக்கும் ஒரு காரணம் போட்டு, நல்ல திரைக்கதை

2) ஆபீஸ்ல பெருசா வேலை இல்லை

3) பதிவு எழுத கெடைச்ச காரணத்தை விடுவானேன்?


btw, இந்தப் பதிவுக்கு ஏற்கனவே திவாவுக்கு அவார்டு கொடுத்தாச்சு.
லேட்டா வந்திட்டீங்க (இல்ல, இல்ல நான் சீக்கிரமா அடுத்த பதிவ போட்டுட்டேன் ;) )

நன்றி, மீண்டும் வருக!