சௌக்யமா?
அம்பத்தஞ்சு வயசாயிடுச்சே, வேலைக்குப் போறீங்களா இன்னும்?
ரிட்டையர்டா?
கடமைகள் எல்லாம் முடிஞ்சிருச்சா?
ஷுகர், பி.பி எல்லாம் கட்டுக்குள்ள இருக்கா?
வருங்காலத்துக்கு வேண்டியதெல்லாம் சேத்து வச்சாச்சா?
சொத்து பத்தெல்லாம் பட்டியல் போட்டு பிரிச்சு வச்சிட்டீங்களா?
பொழுது போக்க என்ன பண்றீங்க?
டி.வியா? பக்கத்துவீட்டு மாம்ஸ்/மாமீஸோட்ட வெட்டிப் பேச்சா?
கோயில் கொளமா?
எங்கத் தெருவுல நெறைய பெரியவங்க, உங்க வயசை ஒத்தவங்க இருக்காங்க.
டோட்டல் வெத்துப் பேச்சு வீரர்கள்.
தொடர்ச்சியா அஞ்சு மணி நேரம் கவருமெண்ட்ட கொர சொல்லியே செலவழிப்பாங்க.
அவங்க வீட்டுக் குப்பையெல்லாம் பெருக்கி எடுத்து, காம்ப்பவுண்டு சொவத்துக்கு வெளியில போடுவாங்க.
குப்பை அள்றவன் வறானா, தெரு வெளக்கு எரியுதா, முனிசிப்பாலிட்டி காரன் வேலை செய்யறானா, இப்படி எந்தக் கவலையும் கிடையாது இவங்களுக்கு.
தெரியாமத்தான் கேக்கறேன், அம்பத்தஞ்சு வயசாச்சு, இன்னும் இருக்கர காலத்துல, கொஞ்ச நாளாவது, ஊருக்காக வாழலாமே?
பசங்கள படிக்க வச்சீங்க, வளத்து விட்டீங்க, உங்க ஃப்யூச்சருக்கும் எல்லாம் சேத்து வச்சிட்டீங்க.
இன்னும் எவ்வளவு நாளா, 'சுயத்துக்கே' வாழப் போறீங்க?
கொஞ்சம் மெனக்கெடுங்க.
கூட்டை விட்டு வெளீல வாங்க.
வெயில்ல அலைங்க.
'பொது'வுக்காக முயற்சி எடுத்து எதையாச்சும் செய்ய முடியுதான்னு பாருங்க.
அட்லீஸ்ட், கவருமெண்ட் அலுவலங்கங்களுக்கு பொடி நடையா போய், கேள்வி கேளுங்க.
ஏன் ரோடு போடலை? ஏன் தண்ணி வரலை? ஏன் தெரு வெளக்கு எரியலை? ஏன் ஆட்டோக்காரன் மீட்டர் போட மாட்றான்? ஏன் இவன் லஞ்சம் கேக்கறான்? ஏன் இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியல? ஏன் இவனுக்கு சோறு தண்ணி இல்ல?
இப்படி எவ்வளவோ கேள்விகள் கேக்கலாம் நம்ம ஊர்ல.
கேள்விகள் கேளுங்க. முடிஞ்சத செய்யுங்க.
வெத்தா மிச்ச வாழ்க்கைய வாழ்ந்துட்டு போவாதீங்க.
பி.கு: எங்க தெரு, டோட்டல் டேமேஜா இருக்கு. ரோடு இல்லை. நோண்டிப் போட்டு மூணு வருஷம் ஆச்சு.
எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி, இந்த ஆகஸ்ட்-15க்கு, தெருவில் இருக்கும் கொடி மரத்தில், பெருசுங்க எல்லாம் சேந்து கொடி கூட ஏத்தலியாம். கேட்டா, internal-politics. இந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும், அந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும் ஒத்து வரலையாம்.
வருஷத்துல, எல்லாரும் கூடி செய்யர, ஒரே சமூகப் பணி, இந்த கொடி ஏத்தரது. அதையும் செய்யலண்ணா, என்ன வாழ்ந்து என்ன புண்ணியம்?
வெளங்கிடும்! :(
அமெரிக்கப் பெருசுகள் சிலர் செய்யும் நல்ல விஷயங்களை இங்கே க்ளிக்கி தெரிந்துகொள்ளுங்கள். மனதிருந்தால் மார்கமுண்டு!
~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~
பி.கு: என் முந்தைய ..பூ-தாங்கி.. பதிவில் ராமலக்ஷ்மி'யின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) ) |
17 comments:
கிர்ர்ர்ர்ர்ர் :(
உங்களுக்குத் தெரிஞ்ச, 'நல்ல' பெருசு, 'கெட்ட' பெருசுகள் பத்தி சொல்லிட்டுப் போங்க.
Gleaners.org is run by volunteers, mostly from retired community.
they collect left-over foods from super markets and coordinate to disburse it to the needy.
எனது பதிவில் நீங்கள் கூறியது:
//எனக்குத் தெரிஞ்ச 55+ நீங்கதான் :)//
உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். :))))
புது டோண்டுவுக்கு வயது ஆறுதான். 55+ அல்ல. வயது ஆவது பற்றிய உணர்வு எனக்கு லேட்டாகத்தான் வந்தது. இன்னமும் தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு தெம்பு உள்ள நான் மனத்தளவில் 25 வயது வாலிபனே. ஆளை விடுங்கள் சாமி.
அன்புடன்,
டோண்டு ராகவன்,
62 வயது வாலிபன்
அதான் 'சமூக சேவை'ன்னு பதிவு எழுதிக்கிட்டு இருக்கொம்லெ!!!
டோண்டு சார்,
///இன்னமும் தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு தெம்பு உள்ள நான் மனத்தளவில் 25 வயது வாலிபனே. ஆளை விடுங்கள் சாமி.////
உடம்புல தெம்பு கண்டிப்பா இருக்குங்கரதாலதான், 'பொது'வையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்றேன்.
'சுய'த்தைக் கவனிப்பதை நிறுத்திக் கொள்ளலாமே.
'எனக்கு'ன்னு இன்னும் எவ்வளவு காலம்தான் வாழ்வது? :)
துளசி கோபால்,
///அதான் 'சமூக சேவை'ன்னு பதிவு எழுதிக்கிட்டு இருக்கொம்லெ!!!//
ஹ்ம். என்னத்த சொல்றது?
எழுதப் படிக்கவே தெரியாதவங்க, என்னிக்கு உங்க எழுத்தப் படிச்சு, என்னிக்கு வெளங்கரது? ;)
மக்கள்ஸ்,
ஆள்காட்டி விரல் நீட்டி குத்தம் சொல்லும்போது, மூணு விரல் என் பக்கமும் நீண்டிருப்பதை உணர்கிறேன்.
தப்பு எல்லார் கிட்டையும் இருக்கு.
இதப் படிச்சிட்டு ஒருத்தராவது, வெட்டிப் பேச்சைக் குறைத்து, உருப்படியா, சமூகத்துக்கு ஏதாவது செஞ்சா, சந்தோஷப் படுவேன் ;)
//ஷுகர், பி.பி எல்லாம் கட்டுக்குள்ள இருக்கா?
//
இப்போதெல்லாம் 30 வயசுக்கே இதெல்லாம் வந்துடுது.
உங்களுக்கும் டெண்டுல்கர் வயசுதான் ஆகுதுன்னு கேள்விபட்டேன்.
:)
கோவி,
///உங்களுக்கும் டெண்டுல்கர் வயசுதான் ஆகுதுன்னு கேள்விபட்டேன்.
:)//
டோண்டுக்கு 6 வயசுண்ணா, எனக்கு 12 ஆவுது ;)
இப்ப என்னாத்துக்கு இதுன்னு கேக்கறேன்!:))
vsk,
55+? அவ்வ்வ்வ் :)
குடும்பத்துக்காக ஒழச்சது போதுங்க. கொஞ்சம் சமூகத்தையும் கவனிங்க.
நம் நாடு உங்களை அழைக்கிறது. :)
சில காலம் முன்னாலே ஒரு விஷயமாக சமூகத்தில் அலைந்தோம். அப்போது புரிஞ்சது என்னன்னா வேலைக்கு போறவங்களை விட ரிடயர்ட் ஆசாமிங்கதான் இன்னும் பிஸியா இருக்காங்க.
இன்றைய தலைமுறை இவங்கள எக்ஸ்ப்லாய்ட் பண்ணுதுன்னே தோணும். வயதான காலத்திலே இன்றைய மாமா மாமிக்கெல்லாம் ஓய்வு கிடையாது. அவங்களோட பையன் /பொண்ணு வேலைக்கு போயிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு தேவைனா இவங்க போகணும் . இல்லைனா திருப்பி வந்துடனும். பிரசவத்தில ஆரம்பிச்சு பேபி சிட்டிங் வழியா ஸ்கூல் பாடம் சொல்லி கொடுத்து பசங்க காலேஜ் போகிர வரை அவங்களுக்கு வேலை இருக்கு.
இன்றைய தலைமுறை சுய நலத்தை விட்டாலே ஒழிய பெரிசுங்களுக்கு சமுதாய வேலைக்கு நேரம் கிடையாது.
ஆமாம், ஏன் வயசாற வரை இதுக்கு காத்து இருக்கணும்? உடம்பில தெம்பு இருக்கிறபோதே சமுதாய பணி செய்தான்தான் உண்டு என்பதுதான் நிதர்சனம்.
//பெருசுகள் பத்தி சொல்லிட்டுப் போங்க.//
நல்ல கெட்ட என்றில்லாமல் பொதுவா எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டுப் போறேன்.
500-க்கும் மேலான வீடுகள் கொண்ட எங்கள் குடியிருப்பில் பல விஷயங்களைக் கவனித்துக் குறை களைவது முதிய ரிடையர்ட் பெரியவர்கள்தான்.
//ஏன் ரோடு போடலை? ஏன் தண்ணி வரலை? ஏன் தெரு வெளக்கு எரியலை? ஏன் ஆட்டோக்காரன் மீட்டர் போட மாட்றான்? ஏன் இவன் லஞ்சம் கேக்கறான்? ஏன் இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியல? ஏன் இவனுக்கு சோறு தண்ணி இல்ல? //
நாட்டுக்காக இதெல்லாம் கேட்கிறார்களா தெரியாது. ஆனால் குடியிருப்பில் ஏன் தண்ணி வரல..ஏன் மோட்டர் உடனே ரிப்பேர் பண்ணல, ஏன் செக்யூரிட்டி இங்க நிக்கல, ஏன் இந்த இடம் துப்பரவாயில்ல ஏன் கரெண்ட் போன உடனேயே ஜெனரேட்டர் ஆன் பண்ணல எவரெவர் மெயிண்டனன்ஸ் சார்ஜ் கொடுக்கல ஏன் கொடுக்காதவர் வீட்டு கரெண்ட்ட புடுங்கி தண்ணி சப்ளைய க்ளோஸ் பண்ணல என சகலமும் அவர்களே. ப்ராப்பர்ட்டி டாக்ஸ் கட்டுவதற்கு கூட கவர்மெண்ட்காரனை இங்க இழுத்து வந்து மேசை போட்டு உட்கார வைப்பாங்க. அசோஸியேஷன் மீட்டிங் என்றால் முதிய பெரும் தலைவர்கள்தான் ஒருவர் விடாமல் அட்டண்ட் பண்ணிடுவாங்க. பார்லிமெண்டை தோற்கடிக்கும் அளவுக்கு மோதல்களும் இருக்கும். எப்படியோ முடிவுகளும் எடுத்திடுவாங்க.
//குப்பை அள்றவன் வறானா, தெரு வெளக்கு எரியுதா, முனிசிப்பாலிட்டி காரன் வேலை செய்யறானா, இப்படி எந்தக் கவலையும் கிடையாது இவங்களுக்கு.//
முதல் பாயிண்ட்டில் தொடங்கி, லாபியிலிருந்து காம்பவுண்டு சுவர்கள் வரை எல்லா விளக்கும் எரியுதா ஸ்வீப்பர்ஸ் சரிவர செய்றாங்களா எல்லா கவலையும் உண்டு இவங்களுக்கு.
//இந்த ஆகஸ்ட்-15க்கு, தெருவில் இருக்கும் கொடி மரத்தில், பெருசுங்க எல்லாம் சேந்து கொடி கூட ஏத்தலியாம்.//
ரொம்ப சிறப்பா நடக்கும் மேடை போட்டு நிகழ்ச்சிகளுடன். பண்டிகைகளும்தான்.
//இந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும், அந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும் ஒத்து வரலையாம்.//
எத்தனை அடித்துக் கொண்டாலும் தாத்ஸ் பாட்ஸ் எல்லாம் மறந்து சேர்ந்துப்பாங்க:)!
சரி சமுதாயப் பணி. அதுவும் உண்டு. எல்லோர் வீட்டிலும் பழைய பேப்பர்களை நோட்டீச் போர்டில் தேதி அறிவித்து அன்று இவர்களே ஒரு ஹெல்ப்பரோடு வீடுவீடாக வந்து கலெக்ட் செய்து விற்று வரும் பணத்தை அருகில் உள்ள தொண்டு நிறுவனத்துக்குக் கொடுக்கிறார்கள்.
குடும்ப வட்டம் எனும் வரும் போது திவா சொல்வதும் மிகச் சரியே.
//இன்றைய தலைமுறை இவங்கள எக்ஸ்ப்லாய்ட் பண்ணுதுன்னே தோணும்.//
இங்கும் இது பொருந்துதோ? வேலை வேலையென ஓடிக் கொண்டேயிருக்கும் தலை முறைக்காக இதையெல்லாம் தாங்களாக இழுத்துப் போட்டு செய்தாலும் கூட...?
பி.கு: பூதாங்கிக்கு நன்றி. பதிவு வெளியானதுமே பார்த்தாலும் எழுத இப்போதுதான் நேரம் வாய்த்தது:))!
நிஜமாகவே இன்னும் எனக்கு 55 ஆகவில்லை அத்தோடு ரிட்டயர்மெண்டும் வரவில்லை, வந்த பிறகு செய்யலாம்.
டிராபிக் திரு ராமசாமியை நினத்து இதை எழுதினீர்களா?
திவா,
////ஆமாம், ஏன் வயசாற வரை இதுக்கு காத்து இருக்கணும்? உடம்பில தெம்பு இருக்கிறபோதே சமுதாய பணி செய்தான்தான் உண்டு என்பதுதான் நிதர்சனம்./////
வயசார வரைக்கும் காத்திருக்கணும்னு சொல்லலை.
வயசாயிடுச்சுன்னா, கண்டிப்பா செய்யணும்னு சொல்றேன் ;)
ராமலக்ஷ்மி,
ஆஹா. இந்த மாதிரி ஒரு குடியிருப்பா? எங்கங்க இருக்கு??
விலாவாரியா, உங்க பெருசுகளை பேட்டி எடுத்து, படம் போட்டு ஒரு பெரிய பதிவு எழுதுங்களேன்??
படிச்சு, கொஞ்சம் பேருக்காவது அக்கரை வந்தா நல்லதுதானே?
உங்க குடியிருப்பின் மாம்ஸ் & மாமீஸ்க்கு என் சல்யூட்ஸ்!
:)
வடுவூர்,
////நிஜமாகவே இன்னும் எனக்கு 55 ஆகவில்லை////
ஹை. நம்பர மாதிரி இல்லியே? உங்களுக்கு 54ன்னு வச்சாக்கூட, உங்கள அண்ணன்னு கூப்பிடர கோவிக்கு 53ஆ?
இது டூ.மச்சு :)
///
டிராபிக் திரு ராமசாமியை நினத்து இதை எழுதினீர்களா?///
இல்லீங்க, இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன் அவர பத்தி. amazing!
நெறைய பேருக்கு அந்த நெனப்பு வரண்ணும். அப்பதான் உருப்படும் சென்னை.
Post a Comment