recent posts...

Thursday, October 29, 2009

துள்ளி துள்ளி...

Paul Potts பாடிய Nesson Dormaவை கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த பாடகன் துடிச்சு எழுந்துட்டான். அதைத் தொடர்ந்து Pavarottiயின் Nesson Dormaவை கேட்டதும், சாமியே ஆட ஆரம்பிச்சிட்டேன்.

பாஷை புரியலன்னாலும், ராகம் தெரியலன்னாலும், சில பாடகர்களும் பாடல்களும் இப்படி இழுக்க வைக்குதே. எம்மாம் பெரிய பலமில்லை அது?

நம்ம SPB ஜானகியெல்லாம் பாடினதை வெளி நாட்டவர் கேட்டாலும் இப்பேர்பட்ட ஒரு எழுச்சி அவங்களுக்குள்ள வரும்னே தோணுது. யூ.ட்யூப்ல, மேயும்போது, ஒரு ஸ்வீடிஷ் பெண்மணி நம்ம உஷா உதூப்பின் மலையாளப் பாடலை பாடியது கண்ணில் பட்டது.

சென்ற வாரம் ஒரு get togetherல் நண்பர் ஒருவர் ஏதோ ஒரு ஹிந்திப் பாட்டை பாடினார். முதல் முறையாக அப்பத்தான் கேக்கறேன் அதை. அப்படியே மனசுல தங்கிடுச்சு. அப்பரம் தேடிப் பாத்தா, நம்ம கிஷோர் அண்ணாத்தை பாடின பாட்டு அது. இப்பெல்லாம், அடிக்கடி முணு முணுக்கும் பாடல் அது.

இசையின் இந்தப் பவரை அறுவடை செய்ய வேண்டும் என்று என்னில் எழுந்த பெரிய எழுச்சியை சேனலைஸ் செய்து, Nesson Dormaவை பாடலாம்னு கத்திப் பாத்தேன்.
என் கொரல என்னாலேயே சகிச்சுக்க முடியலை.

சரி, நமக்கு ஒத்துவராது, நாம நம்ம லெவலுக்கு, SPB பாட்டை மட்டும் கொதறி கொஸ்து போடுவோம்னு, SPB பாடல்களை மனதில் அசை போட்டேன்.

சிப்பிக்குள் முத்து படத்தில் வரும், துள்ளி துள்ளி பாட்டு கேட்டிருப்பீங்க.
அந்தப் படத்தில், பாடல்களை விட பிரமாதம், SPB கமலுக்கு குரல் கொடுத்திருக்கும் சுகம் தான். என்னமா பேசியிருப்பாரு.

துள்ளி துள்ளி பாட்டு, ஸ்கூல் படிக்கும்போது கேட்டு கேட்டு மனப்பாடம் ஆன பாட்டு. ஆனா, சின்ன புள்ளத்தனமா நெறைய தடவ துள்ளி துள்ளின்னு வந்துக்கிட்டே இருக்கும்.
ஆனா, பாடலின் பல்லவி 'கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்'.. னு ஆரம்பிக்கும். அந்த தாளமும், SPB யின் லயமும், கூடவே பாடும் ஜானகியின் குரலும், சுண்டி இழுக்கும்.
எல்லாத்துக்கும் சிகரம் வச்சது போல், கமலின் அற்புத நடிப்பும் நடனமும்.
ஆஃபீஸை விட்டு வீட்டுக்கு வரும்போது, காரில், மெய் மறந்து பாடும் பாடல்களில், அநேகம் தடவை இடம் பெறும் பாடல்களில் இதுவும் ஒண்ணு.

காருக்குள்ளையும், பாத்ரூமுக்குளையும், கிட்டும் எக்கோவில், கழுதை பாடினாலும், தனக்கு தன் குரல் பிரமாதமா இருக்கும். நம்ம கதை கேக்கணுமா.
எனக்கென்னமோ, நான், SPBயை விட குரல் வளம் அதிகமா வச்சிருக்கர மாதிரி ஒரு பீலிங் வரும், காருக்குள்ள பாடிக்கிட்டே ஓட்டும்போது. அடச்சீ, தப்பான வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோமே, SPBக்கு போட்டியா எறங்கிடலாம்னெல்லாம் கூட தோணும். (ஹிஹி).

நேத்து எழுந்த எழுச்சியை அடக்க, இத்தைப் பாடி அரங்கேற்றி, உங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்தால்தான் என் தாகம் தணியும் என்ற நிலை வந்ததால்,
ஐ ஆம் த சிங்கிங்
யூ ஆர் த எஞ்சாய்!

ஹாப்பி ஃப்ரைடே!

பாடலின் அற்புத வரிகளும், SPB சுமாரா பாடியதும், நான் பாடிய பாடலுக்கு கிழே :)

Get this widget | Track details | eSnips Social DNA



இந்த பாட்டு ஸ்டார்ட்டிங்ல, ஜானகி, நிசநிசநிச ன்னு ஏதோ பாடறாங்களே, எப்படிங்க அதெல்லாம் முடியுது? சான்ஸே இல்லை ஜானகி அம்மா! கலக்கிட்டீங்க!


வரிகள் இங்கே இருக்கு.

பி.கு1: VSK, சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடினப்போ, நேசல் வாய்ஸுன்னீங்க. இப்ப உன்னிப்பா கவனிச்சா, இதுவும் அப்படித்தான் வருது. அதெல்லாம் அதுவா வரதுதான் போலருக்கு. சரி பண்ணனும்னா சாதகம் பண்ணணுமாமே?

பி.கு2: சென்ற அரங்கேற்றத்தின் போதெல்லாம் த.மணி, சங்கதிகளை ஓரளவுக்கு கவனித்து திருத்த உதவுவாங்கோ, இப்ப கரெக்ஷன் ஆஃபீஸர் அருகில் இல்லாததால், 'ரா'வா வந்திருக்கு ஒலிப்பதிவு. என்சாய் மாடி :)

பி.கு3: 25 கதைகள் இதுவரை நச் போட்டியில் களமிறங்கியுள்ளன. அனுப்பாதவங்க அனுப்புங்க. அனுப்பினவங்க சரிபாருங்க. அனுப்புனவங்களும் அனுப்பாதவங்களும் அனுப்பப்போறவங்களும் அனுப்பப் போகாதவங்களும் இங்க போய் கதைகளைப் படியுங்க.

Wednesday, October 28, 2009

ஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு!

Looks can be deceivingன்னு சொல்லுவாங்க.
சூப்பர் ஸ்மார்ட்டா இருக்கர ஆளு, சூப்பர் ஹீரோவா இருக்கணும்னு அவசியம் இல்லை.
அதேப் போல, டொக்கா இருக்கர ஆளு, மொக்கையாதான் இருக்கணும்னும் அவசியம் இல்லை.

இந்த தத்துவம் எல்லாம் நமக்கு தெரிஞ்சாலும், புரிஞ்சாலும், நாமளும் கூட இந்த வெளித் தோற்றத்தை கண்டுதான் ஒரு மனிதரை கணக்கிடுகிறோம்.

ஆ, இவன் இப்படி இருக்கானே,இவன் கண்டிப்பா அப்படிதான்.
ஆஹா, இவன் அப்படி இருக்கானே, இவன் கண்டிப்பா இப்படிதான், இருப்பான்னு நாம ஒரு முன் முடிவு செஞ்சுட்டுத்தான் ஒரு ஆளை அணுகுவோம்.

அவன் உண்மையான குணாதிசியம் என்ன, அவன் திறமை என்ன, அவனால் முடிவது என்னன்னெல்லாம் பின்னாலதான் ஆராய்வோம்.

ஆனா, இப்படி இருக்கரதுக்கு,அந்த் ஆளும் ஒரு காரணமா இருக்கான். ஆள் பாதி ஆடை பாதிங்கர கணக்கின் படி, யாரு, தங்கள் வசீகரத்தை ஏத்தி காட்டறாங்களோ, அவங்களுக்கு எப்பவுமே தனிக் கவனம் கிட்டுவது உண்டு.

ஆனா, என்ன வசீகரிச்சாலும், 'டொக்கா'தான் இருப்போங்கர ஆளுங்க என்னதான் பண்ணுவாங்க?
ஸோ, அவங்க வசீகரச்சாதான் நான் கவனிப்பேன், நல்ல விதமா நடத்துவேன் என்ற அளவுகோலிலிருந்து வெளிய வரப் பாருங்க.

'அன்பே சிவ'த்துல, கோட்டு டை போட்டுக்கிட்டு வர உத்தமன் மாதிரி ஆளுங்களும் இருப்பாங்க, அதே சமயம், நல்லது மட்டுமே செய்யத் தெரிஞ்ச, 'அன்பே சிவம்' சொறி நாய் மாதிரியும் ஆளுங்க இருப்பாங்க.

ஆழமா பாத்து, ஒரு ஆளை மதிக்கப் பழகுங்க.

மேலோட்ட தோற்றத்தைப் பார்த்தல்ல.

"அடங்கு! இன்னாத்துக்கு இப்ப இவ்ளோ பில்டப்பு?"ன்னு மனசுக்குள்ள நெனைக்கும் வாசகரே, "சர்வேசன்னாலே மொக்கை" என்ற முன் முடிவை மாத்துங்க, கொஞ்சம் ஆழமா படிங்க ;)

யூ-ட்யூபில் வழக்கம் போல் எத்தையோ பாக்கப் போய், எத்தை எத்தையோ பார்த்து, கடைசியில் இத்தைப் பார்த்தேன்.
ப்ரிட்டானிய பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று பாடிய Paul Pottsன் வீடியோ கண்ணில் பட்டது.

அவர் முகம் பார்த்ததும், "ஹையா, ஏதோ அபச்வரமா பாடி, காமெடியா இருக்கப் போவுது ஜாலி"ன்னு முன் முடிவு பண்ணி வீடியோவ பார்க்க ஆரம்பிச்சேன்.

மனுஷன் பாடினது ஓப்ரா.

நீங்களும் மொதல்ல வீடியோ பாருங்க, அப்பரம் மேலப் படிக்கலாம்.




பாத்தாச்சா? மனசுக்குள்ள ஒரு கனமான பீலிங் வரல?

எனக்கு இந்த ஓப்ரா வகை பாடல்கள் மேல் பெரிய ஈடுபாடில்லை, ஆனாலும், முன்னொரு பதிவில் சொல்லியிருந்த படி, சில பாடல்கள் ரொம்பவே வசீகரிக்கும் டைப்பு, இந்த ஓப்ராவில்.

இந்த Paul Potts பாடினத கேட்டுட்டு, மூச்சு பேச்சு வரல எனக்கு. கண்ணுல கண்ட மேனிக்கு தண்ணி வரும் அபாயமே வந்துடுச்சுன்னா பாருங்க.

மொபைல் சேல்ஸ்மேனுக்கு உள்ள என்னா தெறமைய்யா?

காலக் காட்டு பாலு! அசத்திட்டீங்க சாரே!

மக்கள்ஸே, தோற்றத்தை பார்த்து ஏமாறாதீர்.

தீர ஆராய்ந்த பின்னேரே ஒருவரைப் பற்றி எந்த முடிவுக்கும் வரவும்.

வாழ்க Paul Potts! very inspirational!

Tuesday, October 27, 2009

இதற்கு வசனம் தேவையில்லை

கீழிருக்கும் படங்களுக்கு தனியா வசனம் தேவையில்லை.

நாம் இங்கிலீஷ டங்கிலீஷாக்கி கொல்வது போல், சைனாக்காரர்கள் சிங்கிளீஷாக்கி கிழித்து தொவைத்து காயப் போட்டிருக்கிறார்கள்.

சைனாக்காரர்களை கிண்டல் பண்ணும் நோக்கில் இது எழுதப்படவில்லை.
சைனாவிலிருந்து வரும் எனதருமை வாசகர் பெருமக்களுக்கு பெரிய 抱歉 சொல்லிக்கிறேன். கண்டுக்காதீங்க!

என்சாய்! எதுனா பிரீலன்னா கேளுங்க,வெளக்கறேன். சிரிச்சு வைக்கலாம் ;)





















Sunday, October 25, 2009

கொசுவத்தி செய்வது எப்படி?

உங்க கிட்ட DSLR கேமிரா இருந்தா, iso100ம், ஷட்டர் வேகம் 15 விநாடிகள் கிட்டையும் வச்சுட்டு, ட்ரைபாடில் கேமராவை பொறுத்தி, டைமரை தட்டி விடவும்.

முக்கியமா, இருட்டு ரூமோ, இல்ல ராத்திரியோ இதை செய்யவும்.

(பிற்சேர்க்கை: இருட்டா இருக்கும்போது ஃபோக்கஸ் பண்ண முடியாதே, என்ன பண்றது என்ற பன்ச் கேள்வியை நாதஸ் ஞாபகப் படுத்தினார்.
இதை கையாள ரெண்டு வழியிருக்கு
1. உங்க ரூம் மேட்டையோ, அல்லது வேர ஏதாவது ஒரு பொருளையோ முன்னாடி நிக்க வச்சு, லைட்டப் போட்டு அந்த பொருளை ஃபோக்கஸ் செய்து கொள்ளவும். டைமர் போட்டு க்ளிக்கி விட்டு, கிடு கிடுன்னு லைட்டை அணைத்து விட்டு, நண்பரை தள்ளி விட்டு, அந்த இடத்தில் நீங்க நின்னு கொசுவத்தி சுத்தவும்.
2. கேமரா ஃபோக்கஸை manual மோடில் போட்டி விட்டு, மேற் சொன்னபடி, எத்தையாவது முன்னால் நிற்க வைத்து, லைட்டைப் போட்டு, ஃபோக்கஸ் செய்தபின், டைமரைப் போட்டு, லைட்டை அணைத்து விட்டு, க்ளிக்கி, கொசுவத்தி சுத்தவும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
)

கேமராக்கு முன்னாடி போய் நின்னு, ஒரு டார்ச்சையோ சுறு சுறு வத்தியையோ எடுத்துக்கிட்டு, கலைத் துவமா சுத்தவும்.

சுத்தினா, இப்படியெல்லாம் பண்ணலாம்:


ஆர்வம் முத்திட்டா இப்படியும் பண்ணலாம்:



ரொம்ப முத்திட்டா, உங்க முகமெல்லாம் வரஞ்சு பழகலாம். நான் என் முகத்தை ஈஸியா வரஞ்சுட்டேன் :)


பி.கு: இதை ஏன் PiTல் போடாமல், இங்க போட்டேன்னு யாராவது யோசிச்சீங்கன்னா, அங்க மொக்கைக்கு இடமில்லை. பயலுவளெல்லாம் படிப்பை முடிச்சுட்டு, research பண்ற லெவலுக்கு பட்டைய கெளப்பறாங்க. பயமா இருக்கு. :)

Friday, October 23, 2009

தங்கமணி ஊருக்கு போனா எஞ்சாயா?

தங்கமணிகளுக்கு தங்கமணி என்று பெயர் தந்த படம் அக்னி நட்சத்திரம். ஜனகராஜு, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா எஞ்சாய்'ன்னு கத்திக்கிட்டு அலப்பறை பண்ணுனது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்.

தங்கமணி ஊருக்கு போயி, தனியா கொஞ்ச நாட்கள் கெடைச்சா நல்லாதான் இருக்கும்னு, எல்லாருக்கும் தோன்றுவது இயல்பே (இல்லியா?).

சில உறவுகளையும் நட்புகளையும் காப்பாத்திக்க 'distance is good'னு சொல்லுவாங்க. எப்பவுமே இல்லன்னாலும், கொஞ்ச நாள் இப்படி விலகி 'distance'டா இருந்தா, உறவுக்கு உறம் போட்ட மாதிரி, "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்"னு டூயட் பாடர அளவுக்கு ஒரு வலு கிட்டும். உறவு கெட்டியாகும். பாசத்துக்கு பவர் கிட்டும். வாழ்க்கை மேம்படும்.

நானும் பலமா கனாக் கண்டுக்கினுதான் இருந்தேன்.

என்னென்னமோ பிளானெல்லாம் போட்டேன். அட்வான்ஸ்டா யோசிச்சு, நச் போட்டியெல்லாம் கூட ஆரம்பிச்சு வச்சேன். தெனம் ஒரு பதிவு 'தங்கமணி இல்லாத நாட்கள் 1,2,3,4,5...'ன்னு எடுத்து ஒரு காமெடிக் கதம்பமா தொடுக்கலாம்னும் நெனச்சேன்.

அந்த நாளும் வரத்தான் செய்தது.

ஆனா பாருங்க, என்ன மாயமோ தெரீல, என்ன கொடுமையோ புரீல, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா' எஞ்சாய்னு கத்திக்கினே ஏர்போர்ட்லேருந்து வீட்டுக்கு வந்தவன், காலியா இருக்கர வீட்டை பாத்ததும் ஆஃப் ஆயிட்டேன்.
கொடுமை அதோட நின்னுதா? ராத்திரி எட்டு மணிக்கு டாண்ணு பசிக்குது. கொஞ்ச நாளைக்கு, 'ஸ்டாக்'ல இருக்கர தோச மாவையும், 'சாம்பாரையும்' வச்சு ஓட்ட முடிஞ்சது.

அப்பாலிக்கா, சாம்பார் போரடிச்சு போய், சமைக்க வேண்டிய கட்டாயம்.

கொடுமைல பெரும் கொடுமை, இந்த பாத்திரம் தேய்கிரது. என்னதா டிஷ் வாஷரெல்லாம் இருந்தாலும், கைல தேச்சு வச்சாதான் எல்லாம் வெளங்குது.

காலைல எழுந்து ப்ரேக்ஃபஸ்ட்டையும் நாமளே பண்ணிக்கிட்டு, மதியானத்துக்கும் எதையாவது ஏற்பாட்டை பண்ணிக்கிட்டு, பொட்டிய தூக்கி ஆஃபீஸுக்கு போலாம்னு ஷூவை தேடினா, ஸாக்ஸை காணும். தொவைக்க வேண்டியதெல்லாம் அப்படியே கெடக்குது.
திரும்ப டயர்டா சாயங்காலம் வூட்டுக்கு வந்தா, சாப்பாட்டை ரெடி பண்ணவே எட்டு ஒம்போதாயிடுது. இதுல எங்கேருந்து வலைய மேயரது? பதியரது?

இந்த நேரம் பாத்து ஆஃபீஸ்லையும் ஆணியப் புடுங்க்கோ புடுங்குன்னு புடுங்க வுடறாங்க. சிவாஜிய ப்ராஜக்ட் மேனேஜராக்கி கிண்டலடிச்ச வெனை.

வார நாட்களாவது பரவால்ல, ஆஃபீஸ், ஆணி, சமையல்னு ஓடிடுது.
வீக் எண்டு கொடுமையிலும் கொடுமை.
இன்னும் எப்படித்தான் மிச்சம் இருக்கர நாட்களை ஓட்டரதுன்னு நெனச்சா மேல் மூச் கீழ் மூச் வாங்குது. யார் கண்ணு பட்டுதோ ?

நான் 'எஞ்சாய்'னு கத்தரேனோ இல்லையோ, என் சுற்றமும் நட்பும், 'சர்வேசனின் தங்கமணி ஊருக்கு போயிட்டா, எஞ்சாய்'னு, லைன் கட்டி நிக்கரானுவோ.
வூட்ல, கை கட்டி வாய் பொத்தி, ஜெயில் கைதி வாழ்க்கை வாழர 'அடக்கமான' ரங்கமணிகள் இவர்கள்.
பாவம், அவங்களாவது 'எஞ்சாய்' பண்ணட்டும்னு, என் தனிமையை பல்லக் கடிச்சுக்கிட்டு, பொறுத்துக்கிட்டு தியாகச் சுடரா மாறிட்டேன்.
மெழுகுவத்தி எரிகின்றது...

தனிமை கொடுமை.
தங்கமணிகள் இனிமை.

ஹாப்பி வெள்ளி! :)

Wednesday, October 21, 2009

நச்னு ஒரு கதை போட்டி - முக்கிய அறிவிப்பு

நச் கதை போட்டி அறிவிப்பை பாத்திருப்பீங்க. பரிசெல்லாம் உண்டு.

அறிவிப்பை பாக்காதவங்க இங்க போய் விவரங்கள் பாருங்க.

போட்டிக்கு கதைகள் வர ஆரம்பிச்சிருச்சு.

பதிவின் தலைப்பில், சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை போட்டி ன்னு சேக்க சொல்லியிருந்தேன். இதில் வில்லங்கம் இருக்காம். 'நச்'க்கு பதிலா, வெறும் நச் மட்டும் போடுங்க, இல்லன்னா தமிழ்மணம் தலைப்பை முழுங்கிடுதாம்.
அதாவது, single quote போடாதீங்க.

அதாவது, இப்படி - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி.


இல்லன்னா, தலைப்பில் எதையும் சேர்க்காமல் லேபிலில் மட்டும் சேர்த்துப் போடலாம். உங்க இஷ்டம்.

இன்னொரு முக்கியமான விஷயம், போட்டிக்கான கடைசி தேதி நவம்பர் 15 2009 11:59 pm IST வரை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 30க்குள்ள எல்லாம் படிச்சு போட்டி வைக்க முடியுமான்னு தெரியல்ல. ஆணி அதிகமாயிடுச்சு, ஆஃபீஸ்லையும், வீட்லையும். அதப் பத்தி நாளிக்கு சொல்றேன் :)

போட்டியில் பங்குபெற்ற/பெருகிற அனைவருக்கும் நன்னி. விளம்பரதாரர்களுக்கும் நன்னி :)
புதிய விளம்பரதாரர்கள்,கீழிருக்கும் ஸ்க்ரிப்ட்டை வலையேத்தவும்.


பி.கு: ப்ரோகிராமர் மகனில் வரும் டயலாக்கை, தேவர் மகன் வீடியோவுக்கு யாராவது டப்பிங் செய்ய முடியுமா? anyone? :)

Thursday, October 15, 2009

ப்ரோகிராமர் மகன்...

சிவாஜி: டேய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

கமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

சிவாஜி: இங்கிட்டு வா..
கமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.

சிவாஜி: client officeக்கு போனீகளா??

கமல்: ஆமா ஐய்யா..

சிவாஜி: தம்மாத்தூண்டு ப்ராஜக்ட்டையா இம்புட்டு நாளா முடிக்க முடியலன்னு சண்டை போட்டீகளே.இப்போ இந்த டீமோட நெலமை புரிஞ்சுதா??

கமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த வேலைய விட்டே போயிரலாம்னு இருக்கேன்

சிவாஜி துனுக்குற்று எழுகிறார்
சிவாஜி:வேலைய...வேலைய விட்டு போறீகளா??..ஹ..இருக்கர bugஐ fix பண்ண யோசிக்காம..வேலைய விட்டு போறேன்னு சொல்லுறது மொள்ளமாரித்தனம் இல்லை??

கமல்(உடனே):அதுக்காக....

சிவாஜி:அதுக்காக???

கமல்: அதுக்காக ..கண்ட தடிப் பசங்க சொதப்பி வச்சிருக்கர கோடையெல்லாம் திருத்தப்பாக்கரது முட்டாத்தனம்.

சிவாஜி: இந்த முட்டாப் பசங்க கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. முப்பது வருஷம் டெக்னாலஜியில பின்தங்கியிருக்கற இந்த ஆஃபீஸ்ல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி: பத்து வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். முப்பது வருஷமா cobolலயும் unixலயும் கோடு தட்டிக்கிட்டு இருந்த பயக. நாராயண மூர்த்தி YYய YYYY ஆக்கணும்னு ஆள்வேணும்னப்போ ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன COBOL தூக்கிப்போட்டுட்டு Object oriented ப்ரோகிராம் எழுதுடான்னா எப்படி எழுதுவான்?? நீ படிச்சவனாச்சே...சொல்லித் தா...ஆனா நம்ம பய மெதுவாதான் புரிஞ்சுப்பான்..மெதுவாதான் பொட்டி தட்டுவான்.

கமல்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

சிவாஜி: போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. Code அடிச்சு முடிச்சதும் clientகிட்ட ரிலீஸ் செஞ்சா வேலை செய்யும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா bugஉ..நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.

கமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.
சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

சிவாஜி: செல்ஃபோனும் ப்ளூடூத்தும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..

கமல்:..இல்ல...அப்படி இல்லைய்யா...

சிவாஜி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன். வேர ஒண்ணுத்துக்கும் ப்ரயோஜனமில்லாத ஒதவாக்கரயாயிருந்த உனக்கு ப்ரோகிராமிங் சொல்லிக் கொடுத்தேன்ல.இது வரைக்கும் ஒரு code எழுத சொல்லியிருப்பேனா உன் கிட்ட ....ஒரு code...என்ன?...ஒரு டாக்குமெண்ட்டாவது அடிக்க சொல்லியிருப்பேனா? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா?? நீ பெருசா java படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..இந்த முட்டாப்பயபுள்ளைகளுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வேலைய விட்டுப் போ..Javaல எழுது..இல்ல SAP இம்ப்ளிமெண்ட்டு பண்ணு..அந்த தெலுங்கச்சியோட கால் செண்ட்டர்ல போயி ஜல்சா பண்ணு..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...

கமல்: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..

சிவாஜி: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் ஆஃபிஸ்ல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா டெக் லீடு?? எலே யார்ரா அவன்..எங்கே டெக் லீடு??(டெக் லீடை கூப்பிடுகிறார்..)

டெக்லீடு ஓடி வந்து பணிவாக : ஐயா..

சிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா வேலைய விட்டுப் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. சீக்கிரம் K.Tய வாங்கிக்கிட்டு அனுப்பி வைக்கணும். எவ்ளோ நாளு வேணும் K.Tக்கு?

டெக் லீடு: ஒரு பத்துநாள் கெடைக்குமுங்களா??

சிவாஜி: ஏண்டாப்பு..பத்து நாள் இருந்து சொல்லிக் கொடுத்துட்டு போவீயா??...
டெக் லீடைஅனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.

சிவாஜி: பத்து நாள் முடியாது?? இவ்ளோ நாளு பொட்டி தட்டினதை சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்கன்னா நாங்கெல்லாம் என்ன பண்றதப்பூ? என்ன பண்றது?

கமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.

சிவாஜி: என்னையா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகர வரை, ஈமெயிலும் சாட்டும் செய்ய மாட்டேனப்பூ. எதுவா இருந்தாலும் நேர்ல பேசி தீத்து வையப்பூ.. அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

கமல்: ஐயா நான் இந்த ஆஃபீஸுல இருக்கர பெருசுங்களுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..

சிவாஜி: உங்களத்தானே நம்பனும்!!இந்த ஆஃபீஸ்ல வேற எந்த தருதலை இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

கமல்: போகட்டுமாய்யா??

சிவாஜி: போ...

கமல் விலகி செல்கிறார்..போகும்போது செல்ஃபோனில், "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்.." ரிங் டோனில் விளிக்கிறது. ஃபோனை எடுத்து, "செப்பம்ம்மா செப்பு" என்று கொல்ட்டியில் கதைக்கிறார்.

சிவாஜி: யப்பா இதெல்லாம் ஒவருப்பா...

கமல்: குஜிலி...கூப்ட்ரா....

என சொல்லிவிட்டு செல்கிறார்

கமல் போவதை சிவாஜி குனிந்து காண்டோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை திரும்பிப் பார்த்து மூக்க ஒடச்சுடுவேன் என்று பாசாங்கு செய்து கும்மாங்குத்து குத்துவதை போல் செய்கை செய்கிறார். சிவாஜி திருப்பி அடிக்கிறார்...
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.

-சர்வேசன் - http://surveysan.blogspot.com

ஹாப்பி வெள்ளி;)
**********************

பி.கு1: தேவர் மகன் ஒரிஜினல் இங்கே. :)

பி.கு2: இந்த டய்லாக்குகளை மேலும் மெருகேத்தி நன்னா சிரிப்பு வரமாதிரி பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் கோத்து, ஈ-மடலில் அனுப்பி, இதப் படிச்சு இன்னும் பத்து பேருக்கு அனுப்பலன்னா மண்ட வெடிச்சு கபாளம் தொறந்துடும்னு மெரட்டி, ப்ரபலம் ஆயிடலாம். மொயற்சி பண்ணுங்க. இல்ல, இதுவே ஜூப்பருன்னா, ஆனந்தக் கண்ணீரோட சொல்லிட்டுப் போங்க :)

சூப்பரு சீனுங்க இது. சும்மா சொல்லப்டாது. வாழ்க சிவாஜி, வளர்க கமலு:

Tuesday, October 13, 2009

விஜய் டிவி கமல்50 - கமலின் அதிகப்பிரசங்கித்தனம்

கமல்50 என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
கமலின் திரை உலக வாழ்வில் 50 வருடம் முடிந்ததை கொண்டாட இந்த ஏற்பாடு.

ரொம்ப ரசிக்கும்படி அருமையா அரங்கேற்றியிருந்தார்கள்.
அதன் மேல்விவரங்கள்/டிட்பிட்ஸ் எல்லாம் எழுதலாம்னு தோணிச்சு.

அத மெதுவா சொல்லிக்கலாம், அதுக்கு முன்னாடி ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)

கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் துளி கூட சந்தேகமே லேது.
ஐ ஜஸ்ட் லவ் சம் ஆஃப் ஹிஸ் மூவீஸ்!
கமலின் வசீகரம் என்னை இஸ்துப் போட்டது, கமலின் சத்யா பாத்த போது.
இன்னும் நினைவில் நிற்பதில், சலங்கை ஒலி, குருதிப் புணல், மகாநதி, குணா, நாயகன், மை.ம.கா.ராஜன், etc.. அடுக்கிக்கிட்டே போகலாம்.

இவரின் தமிழ் பற்று எல்லார்க்கும் தெரிஞ்சதுதான். தமிழ் அறிவும் ஜாஸ்தி.
ஆனா, இந்தக் கமல்50 நிகழ்ச்சியில் ஒரு அதிகப் பிரசங்கித்தனம் செய்தார்.

கமலின் ஹீரோயின்ஸ் எல்லாம் மேடையில் தோன்றி ப்ளா ப்ளான்னு புகழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

மீனா வந்து, கமல் ஒரு encyclopediaன்னு புகழ்ந்தாங்க.
இதைக் கேட்டதும், கமல், இடையில் குறுக்கிட்டு, "மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்லுவாங்க"ன்னு அளந்தாரு.
தேவையில்லா டங்கிலீஷ்ல பேசரதை தவிர்க்க, இப்படி குத்திக் காமிச்சாராம்.

கொடுமை என்னான்னா,
'அகராதி = dictionary'
'encylopedia = கலைகளஞ்சியம்'னு என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச விஷயம்.
இது கமலுக்கு தெரியாததை மன்னிச்சிரலாம். ஆனா, இப்படி அரைகுறையா தெரிஞ்சவரு, மீனாவை குத்தஞ்சொல்லாம இருந்திருக்கலாம்.

அதையும் மன்னிச்சு விட்ரலாம். ஆனா, மீனாவை குத்தம் சொன்னவரு, பீட்டர் விட்ட மத்தவங்களையெல்லாம் கண்டுக்கலை. அதையும் மன்னிச்சிரலாம்.

ஆனா, அவரின் வாரிசு ஸ்ருதி ஹாசன், டமில் சினிமாப் பாடலை கொத்தி சொதப்பலா பாடி, தொடர்ந்து ஒரு ஆங்கிலப் பாடலை பாடினார். கமலும், புளகாங்கிதம் அடைந்து, அருகிலிருந்த ரஜினி, மம்மூட்டி கிட்டையெல்லாம், பெருமையா ஏதோ சொல்லிட்டு, தன் பொண்ணுக்கு ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்துட்டு, கைதட்டி சந்தோஷப் பட்டாரு.

மீனாக்கு ஒரு ரூலு? ஸ்ருதிக்கு ஒரு ரூலா?

என்னா சார் கொடுமை இது?

நாராயண நாராயண!

;)

பி.கு1: அந்த ப்ரோகிராம் ரொம்ப அமக்களம். தேடிப் பாருங்க!

Monday, October 12, 2009

எனக்குப் பிடிக்காத ஒரே குறள்...

படிக்கர காலத்துல திருக்குறள் மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை.
யோசிச்சு பாத்தா குறள் மீது எரிச்சல்தான் அதிகம்.

டமில் டீச்சர், 'கண்'ல முடியரது எது, 'நன்று'ன்னு முடிவது எதுன்னு பரீட்சை கேள்வி அமைத்து நம்ம குட்டி ப்ரெயினுக்கு ரொம்பவே டார்ச்சர் கொடுப்பாங்க.
(அதையும் மீறி நான் பிரகாசித்த விஷயம் என் எட்டை படிச்சவங்க தெரிஞ்சுக்கிட்டு புளகாங்கிதம் அடைஞ்சிருப்பீங்கங்கரது தனிக் கதை)

ஆனா, அப்பாலிக்கா, காலேஜ், வேலை, பம்பாய், டில்லி, சிங்கை, அம்பேரிக்கா, பதிவுலகம்னு சுத்தி அறிவை வளத்துக் கொண்ட பிறகு, சின்ன வயசுல பிடிக்காதது பலதும் பிடிக்க ஆரம்பிச்சது.
மிக முக்கியமா, தமிழ் மீதான ஆர்வம் வளர்ந்திருக்கு.
பொன்னியின் செல்வனெல்லாம் தேடிப் பிடிச்சு படிக்கும் அளவுக்கு வளந்திருக்கு. கூடப் படிச்ச மத்த டமில் ஆர்வமில்லா பயலுவளெல்லாம், "பொன்னியின் செல்வனா? whats that dude?"ன்னு கேட்டப்போ, "அது புதினம் டா மச்சி. உனக்கு அதெல்லாம் புரியாது"ன்னு உதார் விட்டு திரிந்தபோது ஒரு நமுட்டு சந்தோஷம் உள்ளூர படர்ந்தது உண்மை.

இப்படி தொடர்ந்த எமது தமிழார்வத்தில், திருக்குறளின் பவர் இன்னா என்பெதும், அதை எழுதிய வள்ளுவனின் அறிவாற்றலும் வியப்பில் ஆழ்த்தாத நாளில்லை.
இன்னா ஆளுப்பா வள்ளுவரு? எவ்வளவோ பேரு எவ்வளவோ ஆயிரம் வருஷமா, என்னென்னமோ எழுதியிருக்காங்க. ஆனா, குறள் மாதிரி ஒரு மேட்டரு வேர யாரும் செஞ்சதா ஞாபகம் இல்லை.
(எமக்குத் தெரிந்து வள்ளுவரின் திருக்குறளுக்கு ஈக்வலா இருப்பது, நம்ம கொத்ஸ் அப்பப்ப கொத்தி விடும் டிவிட்டருள் தான், என்பதை இங்கே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்)

எனக்கு பர்சனலா ரொம்ப பிடிச்சு, ஓரளவுக்கு பின்பற்றும் குறள்,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
"
இதுல, 'விடல்'னு ஒரு குட்டி வார்த்தைக்குள், பலப் பல கருத்தை அள்ளி வீசியிருக்காருங்கரது, உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். (தெரியலைன்னா சபைல கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க)

இப்பேர்பட்ட திருக்குறளில், ஒரு குறள் மட்டும் எப்ப கேட்டாலும், "இன்னாபா சொல்றாரு வள்ளுவரு? டைம் பத்தாம, அஸிஸ்டெண்டை வச்சு எழுதச் சொல்லிட்டாரா இந்த குறளை"ன்னு யோசிக்க வச்சது ஒரு குறள்.
நேத்து கமல்50 நிகழ்ச்சி (beautiful program) விஜய் டிவியில் பார்க்கும்போதும் இந்த குறள் பிரதானமாக காட்டிக்கிட்டு இருந்தாங்க.

இதுதான் குறள்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.


என் மேலோட்ட சாமான்ய அறிவில், இது நாள் வரை நினைச்சது இன்னான்னா, "பொறந்தா, நல்லா வளந்து பல பேரும் பாராட்டர அளவுக்கு சக்ஸஸ்ஃபுல்லா வாழணும். இல்லன்னா, பொறக்கரதே வேஸ்ட்டு"ன்னு.

சின்ன வயசுல என் ஃப்ரெண்டு ஒருத்தனை அவங்கப்பா போட்டு, டார்ச்சர் குடுத்துக்குனே இருந்தாரு, "டேய் பக்கத்து வீட்டு அவன பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு, எதிர் வீட்டு அவன பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு, பின் வீட்டு அவனை பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு. நீயும் இருக்கியே ஓதவாக்கரை"ன்னு போட்டு செம மாத்து மாத்தினாராம்.
என் ஃப்ரெண்டும், வலி பொறுக்காம, "லூஸாப்பா நீ? எப்பப் பாரு அவன பாரு இவன பாருன்னு ரோதன பண்ர. எல்லாரும் ராஜீவ் காந்தி ஆக முடியுமா?"ன்னு எதிர் கேள்வி கேட்டு அவங்க நைனாவை கப்-சிப் ஆக்கிட்டானாம்.

ஞாயம்தானே? பொறந்தவங்க எல்லாரும், வளந்து ஜெயிச்சு, ஃபேமஸ் ஆகணும்னா நடக்கர விஷயமா? அடுத்தவனுக்கு டார்ச்சர் கொடுக்காம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அதை மட்டும் ஒழுங்கா செஞ்சு போனா பத்தாது?

ஏன் வள்ளுவரு இப்படி எழுதி சொதப்பிட்டாருன்னு, என் மூளையை கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சுப் பாத்தேன்.
நமக்குதான் அறிவு கம்மியாச்சே. ஒன்னியும் தோணலை.
ஆனா, நாம தான் பொழைக்க தெரிஞ்சவங்களாச்சே.
சரின்னு, தேடு பொறியில், குறளை எடுத்து உள்ள விட்டு, சர்ச்சினேன்.

என் அறிவுக் கண்ணை கூகிள் ஆண்டவர் திறந்து வைத்தார்.

முதலில் கண்ணில் பட்டது, தினகரனில், கருணாநிதியும், சாலமன் பாப்பையாவும், இந்த குறளுக்கு அளித்துள்ள விளக்கம்.

கருணாநிதி : எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

இதுவும் எனக்கு சப்பு'ன்னு இருந்தது.
வள்ளுவர் கண்டிப்பா இப்படி ஒரு அர்த்தத்தை சொல்ல வரல.
என்னென்னமோ சூப்பரா சொன்ன வள்ளுவரு, இந்த மாதிரி மொட்டையா, என்னை மாதிரி சாமான்யர்களுக்கு, 'வராத மேட்டரை ட்ரை பண்ணாம, ஒதுங்கிப் போயிடு'ன்னு கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டாரு.

சரின்னு, இன்னும் தீவிரமா தேடினேன், அப்பதான் நம்ம கபீரன்பனின் விளக்கம் கண்ணில் பட்டது. நெத்திப் பொட்டில் அரஞ்ச மாதிரி, சூப்பரா ஆராய்ந்து, அமக்களமா ஒரு விளக்கம் சொல்லியிருக்காரு.
கண்டிப்பா படிச்சுப் பாருங்க.

கபீரன்பனின் விளக்கம்:
புகழொடு தோன்றுக= நல்ல காரணங்களுக்காக புகழ் அடைவது , அஃதிலார்= அப்படி இயலாதவர்கள், தோன்றலின்=தவறான காரியங்களுக்காக அறியப்படுவதைக் காட்டிலும், தோன்றாமை= ஏதும் செய்யாமலும் அறியப் படாமலும் இருப்பதே, நன்று =நல்லது.

very good analysis கபீரன்பன்! என் அறியாமை நீங்கியது :)


பி.கு: உங்களுக்கு பிடிச்ச/பிடிக்காத குறள்?

Sunday, October 11, 2009

செருப்பையும் எடுப்பேன்...

வந்தனம்!

என்னென்னமோ எடுத்துட்டோம், இத்த எடுக்காட்டா எப்டீன்னு தோன்றியதால் வந்த வினை இது.





Wednesday, October 07, 2009

துபாய் வழி சென்னை, Emirates, கேள்விகள்

தேவையில்லாம இன்னிக்கு ஒரு மொக்கை பதிவை போட்டு நேர விரயம் ஆயிடுச்சு. கேட்கவேண்டிய முக்கியமான மேட்டரு இருந்தும், சட்டுன்னு ஞாபகத்துக்கு வராமல், டமில் பதிவுலக மொக்கையில் மேலும் ஒரு மொக்கையை போட்ட பாவியானேன். மன்னிக்க!

சரி, இப்ப நிற்க! (நல்லா எழுதர பலரும், இப்படி நிற்க அங்கங்க போடறாங்க)

அதாகப்பட்டது, வருடாந்திர விடுமுறை நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது (November ~ December). சிங்கை வழி, மலேஷிய வழி, ஹாங்காங் வழி, ஐரோப்பா வழி போய் போரடிச்சுடுச்சு.
புச்சா ரூட் ட்ரை பண்ணலாம்னு ஐடியா.

சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து, சென்னைக்கு, துபாய் வழி, Emirates Airlines போவுதாம்.
எங்கையும் நிக்காம 15 மணி நேரத்தில் துபாயையும், அங்கிருந்து 3 1/2 மணி நேரத்தில் சென்னையையும் சென்றடையுமாம். நடுவில் கொஞ்ச நேரம் தான் வெயிட்டிங் டைமாம்.

இப்போ கேள்விகள்:

* இது நல்ல ரூட்டா? யாராச்சும் போனவங்க இருக்கீங்களா?
* எமிரேட்ஸ் ஃப்ளைட் எப்படி? ஆடாம அசங்காம போவுதா?
* ஏர் ஃஹோஸ்டஸ் எல்லாம் எப்படி? (இத சாய்ஸ்ல விடுங்க)
* துயாய் க்விக்கா சுத்திப் பாக்கணும்னா (குசும்பன், not the hammer & ஒரே எடத்துல நின்னு இல்லை), ஒரு நாள் தங்கினா போதுமா? தங்கும் செலவு, எங்க தங்கணும், போக்குவரத்து வசதி, etc.. ?
* முக்கியமா பாத்தே ஆகணும்னு இருக்கர ஐட்டம்ஸெல்லாம் என்ன?
* வேர ஏதாச்சும் ரூட்டு தெரிஞ்சவங்க சொல்லுங்க



நன்றீஸ்!

please advice!

பெண் பூச்சியா?

புள்ளி போட்ட சிவப்பு பூச்சி (Spotted Red Bug). கேமராவில், reverse ring என்ற ரிங்கை பொறுத்தி சாதா லென்ஸை மேக்ரோ லென்ஸாக டபாய்ச்சு எடுத்த படம்.

PiTல் மேக்ரோ படங்கள் எடுப்பது எப்படின்னு நாதஸ் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காரு. படித்து கலக்கவும்.





my experiment with மொக்கை. ஒழுங்கா தலைப்பு வச்சு ஒரு படம் போட்டா, யாரும் கண்டுக்கலை. அதான், இப்படி செக்ஸியா தலைப்பு வச்சு இஸ்கலாம்னு.
lady bug = பெண் பூச்சிதானே? :)

Tuesday, October 06, 2009

Covered Calls தெரிஞ்சுக்கோங்க... அச்சாரம் பெறுங்கள்...

முன்ன மாதிரி இல்லை. இப்பெல்லாம் பங்குச் சந்தையில், பங்குகள் வாங்குவது விற்பதெல்லாம், இணையத்தின் வழியே ரொம்ப சுலபமாக செய்ய முடியுது.
விஷயம் தெரிஞ்சவங்களும், தெரியாதவங்களும், ரெண்டு பொத்தான க்ளிக்கினா, ஒரு சில நிமிடங்களில்/நாட்களில்/மாதங்களில்/வருடங்களில் சில/பல டாலர்கள் நட்டமடையவும், லாபமீட்டவும் வாய்ப்பிருக்கு.

ஒரு கொம்பேனியின் பங்கு (Stock) முதலில் சந்தைக்கு வருவது, பொதுமக்களிடமிருந்தும், பெரிய முதலைகளிடமிருந்தும், முதலீடாக பணம் ஈட்டுவதற்காக.

இப்ப, நானோரு இட்லிக்கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்றேன். குட்டியா சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ல, தள்ளு வண்டீல வச்சு 'அண்ணாச்சி இட்லிக்கடை'ல இட்லியும் கெட்டிச் சட்னியும் விக்கறேன்.
இட்லி+சட்னி சைதை பஸ் ஸ்டாண்டுல செம ஹிட் ஆகிடுச்சு. எல்லாரும், அண்ணாச்சி, அருமையா இருக்கு, சென்னை முழுசும் உங்க கடைய எஸ்டாப்ளிஷ் பண்ணீங்கன்னா எங்கையோ போயிடலாங்கறாங்க.
நமக்கும் சபலம் வருது.
சென்னை முழுக்க எல்லா பஸ் ஸ்டாண்டுலையும் இட்லிக்கடை போடணும்னா, கொறஞ்சது, 50 லட்சம் செலவாகும்.
என் கிட்ட இருக்கரதோ வெறும் 1 லட்சம். மிச்சம் 49 லட்சத்துக்கு இன்னா பண்றது?

கடனை வாங்கலாம். ஆனா, அதுல ரிஸ்க்கு ஜாஸ்தி. நமக்கு எதுக்கு தேவையில்லா ரிஸ்க்?

அடுத்த வழி, நம்ம 'அண்ணாச்சி இட்லிக்கடை' கொம்பேனியை, பப்ளிக் நிறுவனமா மாத்தி, பொது மக்கள் கிட்டையும், பெரிய நிதி நிறுவனங்களிலிருந்தும், அந்த 50 லட்சத்தை பெறுவது.

இது பெரிய வேலை. அதுக்கான உறுப்படிகளை ரெடி பண்ணி, சென்னை பங்குச் சந்தையில் 'இட்லி' என்ற ஸ்டாக் குறியீட்டில் என் கம்பெனிக்கான பங்கை விக்க முடிவு பண்றேன்.
50 லட்சம் வேணும். ஒரு ஸ்டாக் 100 ரூவாய் வீதம், 50,000 பங்குகளை விக்கறேன்.

அண்ணாச்சி இட்லிக்கடை அநேகம் பேருக்கும் தெரியுமாதலால், நம்ம மக்கள்ஸே அடிச்சு புடிச்சு 50,000 பங்கையும் வாங்கிடறாங்கன்னு வச்சுப்போம்.

நம்ம சைதை குப்புசாமி அண்ணன், 1000 பங்கு வாங்கியிருக்காரு.
நம்ம தாம்பரம் சின்னசாமி அண்ணன், 1000 பங்கு வாங்கியிருக்காரு.

அக்டோபர் 1ஆம் தேதி ரெண்டு பேரும், இந்த பங்குகளை வாங்கியிருக்காங்க.

நம்ம இட்லிக்கடை ஓஹோன்னு போகும்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.
நவம்பர்ல கிட்டத்தட்ட 200ஐ தொட்டுடும்னு ஊர்ல பேசிக்கறாங்க.

குப்புசாமி இணைய அறிவு கெம்மி. அங்க இங்க தேடர பழக்கமெல்லாம் கிடையாது. பங்கை வாங்கியாச்சு, நவம்பர்ல என்ன வெலைக்கு போகுதோ வித்துடலாம்னு முடிவு பண்ணி, பங்கைப் பத்தி இப்போதைக்கு மறந்துடறாரு.

ஆனா, சின்னசாமி வெவரமான ஆளு. அங்க இங்க ஓசியில கெடைக்கர இணைய பாடங்களை பாத்து சில பல வெவரம் தெரிஞ்சு வச்சிருக்காரு.
அதுல ஒண்ணுதான், இந்த covered calls ( மெல்லத் தமிழினிச் சாவும்? டமில்ல என்னங்க இதுக்கு? )

Covered Calls எப்படி வேலை செய்யுதுன்னு சொல்றேன் கேளுங்க.

டீட்டெயிலுக்கு போரதுக்கு முன்னாடி ஒரு டிஸ்கி. பங்குச் சந்தையை பொறுத்தவரை, நாளைக்கு என்னங்கரது, யாருக்குமே தெரியாது. எவ்ளோ பெரிய தில்லாலங்கடியாயிருந்தாலும், நாளைக்கு பங்கின் விலை ஏறும் இறங்கும்னு யாராலையும் அடிச்சு சொல்ல முடியாது. பலப் பல விஷயங்கள், பங்கின் விலையை ஏற்றும் இறக்கும். கிட்டத்தட்ட சூதாட்டம் போலாகி விட்டிருக்கிறது, நம் பங்குச் சந்தை.

இப்போ, சின்னசாமி, 1000 பங்குகளை தலா 100 ரூ கொடுத்து வாங்கி, சொந்தம் பண்ணியிருக்காரு. சின்னசாமி என்னா முடிவு பண்ணியிருக்காருன்னா, 'இட்லி' 200 ரூவாய் ஆயிடுச்சுன்னா, வித்துட்டு லாபம் பாத்துடலாம்னு. அதுக்கு கீழ இருக்கரவரைக்கும் கைல வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு.

இந்தப் பங்கு 200 போரதுக்கு ஒரு மாசமாகலாம், ரெண்டு மாசமாகலாம், இல்ல ஒரு வருஷமே ஆகலாம். இந்த காலகட்டத்தில், தன் முதலீட்டுக்கு ஒரு சிறு தொகையை, 'கமிஷனாக' ஈட்டுவதுதான், covered calls.

இப்போ, அண்ணாநகர்ல கோயிந்தசாமி இருக்காருன்னு வச்சுப்போம்.
இவரு, ரொம்ப புத்திசாலியாமாம். இவருகிட்ட, 100 ரூவா கொடுத்து, 'இட்லி' பங்கை வாங்க துட்டில்லை.
ஆனா, இவரு இன்னா பண்ணலாம்னா, சின்ன சாமிக்கிட்ட போயி, "சின்ன சாமி, நீ 200 ரூவாய்க்கு வந்தா வித்துடலாம்னு முடிவு பண்ணிட்ட. 'இட்லி' டிசம்பர் மாசம் 200க்கு மேல போயிடுச்சுன்னா, நீ எனக்கு '200'ரூவாய்க்கு வித்துடணும். அதுக்கு சம்மதம்னா, நான் இப்ப உனக்கு அச்சாரத் (கமிஷன்) தொகையா, 1 ரூவா தாரேங்கறாரு".

சின்ன சாமியும் ஒத்துக்கறாரு. இனி ரெண்டு விஷயங்கள் நடக்கலாம்.

1)
100ரூவாய்க்கு வாங்கிய 'இட்லி', டிசம்பர்ல, குபு குபுன்னு மேலப் போய் 250ரூவாய் ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க.
சின்னசாமி, கோயிந்துகிட்ட மேலே சொன்ன அச்சாரம் போட்டுட்டாருன்னு, வாய மூடிக்கிட்டு, அந்தப் பங்கை 200ரூவாய்க்குதான் விக்கணும்.

ஸோ, சின்னசாமியை பொறுத்தவரை, அவரின் லாபக் கணக்கு:
முதலீடு: 100ரூ * 1000 = 100,000 ( ஆரம்ப செலவு )
வரவு1: 1ரூ * 1000 = 1,000 ( கோயிந்த்சாமி தந்த அச்சாரத் தொகை )
வரவு2: 200ரூ * 1000 = 200,000 ( பங்கை 200க்கு கோயிந்திடம் விற்ற தொகை )

ஸோ, சின்னசாமிக்கு 200,000 + 1,000 - 100,000 = 101,000 ரூ.(101%)

கோயிந்த்சாமியை பொறுத்தவரை, அவரின் லாபக் கணக்கு:
முதலீடு1: 1ரூ * 1000 = 1,000 ( ஆரம்பச் செலவு, சின்னசாமிக்கு கொடுத்த அச்சாரம் )
முதலீடு2: 200ரூ * 1000 = 200,000 ( 250ரூ ஆகிவிட்ட பங்கை, அச்சாரம் போட்டதால், 200க்கே வாங்க முடிகிறது)
வரவு: 250ரூ * 1000 = 250,000 ( வாங்கியது, 250க்கு டக்குனு வித்துடறாரு )

ஸோ, கோயிந்தசாமிக்கு 250,000 - 200,000 - 1,000 = 49,000 ரூ. (4900%)

2)
100ரூவாய்க்கு வாங்கிய 'இட்லி', டிசம்பர்ல, பெருசா மாற்றம் அடையாமல் 150ல நிக்குது.
கோயிந்தசாமி எதிர்பார்த்த மாதிரி, 'இட்லி' 200ரூ ஆகலை. ஸோ அவரு கொடுத்ட்த அச்சாரம், ஸ்வாஹா!
சின்னசாமி, கோயிந்தின் அச்சாரத் தொகையை அவரே வச்சுக்கலாம். பங்கையும் தன் வசம் அப்படியே வச்சுக்கலாம்.

ஸோ, கோயிந்துக்கு, 1,000 ரூ நட்டம். (-100%)
சின்னசாமிக்கு, 1,000 ரூ லாபம். (1%)

200ரூ வந்தா வித்துடலாம்னு முடிவு பண்ண சின்னசாமி, இந்த covered calls 'அச்சாரத்தை' கோயிந்துக்களிடம், மாசா மாசம், திட்டம் போட்டு 'கறக்கலாம்'.
200ஐ தொடாத பட்சத்தில், கோயிந்துக்கள் கொடுக்கும் கமிஷன், ஃப்ரீ மணி.
200 தொட்டுடுச்சுன்னா, பங்கை கைமாத்தி கொடுத்துடணும். வந்த வரைக்கும் லாபம் அடிப்படையில்.

ஒரே புகைச்சல் என்னன்னா, சின்னசாமி அச்சாரம் போட்ட அடுத்த வாரத்தில், என் இட்லிக்கடை கன்னா பின்னான்னு, பிக்கக் ஆகி 100ரூ பங்கெல்லாம் 10,000 ஆயிடுச்சுன்னாதான்.
அச்சாரம் போட்டுத் தொலைத்ததால், சின்னசாமி 200க்கே விற்கும் கட்டாயத்தில் இருப்பார்.
ஆனா, கோயிந்து, 200க்கு வாங்கி, 10,000 வித்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெறுகிறாரு.

எல்லாம், எந்த சாமிக்கு எங்க மச்சம் இருக்குங்கரதைப் பொறுத்து.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

இந்த covered calls சமாச்சாரமும், மேலும் பல தில்லாலங்கடிகளும், Options trading என்று வகைப் படுத்தப்பட்டு புழக்கத்தில் உள்ளது.
உங்கள் கைவசம் ஏதாவது ஒரு பாப்புலர் பங்கு இருந்தா, அதுக்கு எம்புட்டு covered calls கிட்ட்டும்னு ஊங்க இணைய broker தளத்தில் பார்க்கலாம்.
உ.ம்: அமெரிக்க பங்குச் சந்தையில் Mittal Steel (MT) நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பவர்கள் இங்கே க்ளிக்கி தெரிந்து கொள்ளலாம்.
$36 விலையுள்ள MT Dec09ல், $40க்கு போகும்னு நெனைக்கர கோயிந்துக்கள், $1.50 அச்சாரமா தராங்க.

Strike Symbol Last Chg Bid Ask Vol Open Int
40.00 MTLH.X 1.50 0.00 1.65 1.80 32 1,072

ஓ.கே வா? ரோடு போட்டுட மாட்டீங்க?

ஏதாச்சும் புரியல்லன்னா கேளுங்க!

பி.கு: படிக்கரவங்கள்ள எவ்ளோ பேரு, பங்குச் சந்தையில் வெளையாடறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எந்த ஊரு பங்குச் சந்தைன்னும் சொல்லுங்க. இதை தொடரலாமா வேணாமான்னும் சொல்லுங்க.

Monday, October 05, 2009

Goddess of Love and Beauty...

PiTன் பொம்மை போட்டிக்கு தோதா ஏதாவது ஒரு பொம்மையை க்ளிக்கலாம்னு வீட்டிலிருக்கும் பொம்மைகளை எல்லாம் க்ளிக்கித் தள்ளியாச்சு.
பொம்மைக்கு மட்டும் உயிரிருந்திருந்தா, ஓலமிட்டு அழுதிருக்கும். பாவம். செம டார்ச்சர் கொடுத்துட்டேன்.

முதலாவதாக, Venus ஆத்தா. இது ரோமர்களின் காதல்/அழகுக்கான கடவுளாம். மே மாத ஐரோப்பா சுற்றுலாவில் பல ம்யூசியங்களில் காணக் கிடைத்த ஒரு அழகிய சிலை இது. பளிங்குத் தூளை (marble dust) ஒண்ணு சேத்து செஞ்ச குட்டி பொம்மை. 30யூரோன்னு சொன்னவன் கிட்ட, துண்டு போட்டு பேரம் பேசி 10க்கு கொடுத்தான். வாங்கினப்பரம் பாத்தா, வேறு சில கடைகளில், 7க்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. இவனுங்க கிட்ட துண்டு போட்டிருந்தா, 5க்கு கெடைச்சிருக்கும் போல. ஹ்ம்!

ஜெக்கம்மா வீனஸ்ஸைப் பாத்து கன்னத்துல போட்டுக்கங்க.
அளகும், இளமையும், யௌவனமும் அளவில்லாமல் கிட்டும்.!!

(க்ளிக்கிப் பெருசா பாருங்க)
கறுப்பு டீ-ஷர்ட் பின்னணியில் வெச்சு, முன்னாடி கண்ணாடி ரிஃபெள்க்ஷன் வெளிச்சத்தில் ஒண்ணு, இன்னொண்ணு, அதே கண்ணாடியை பின்னாடி வச்சு, அதன் ப்ரதிபலிப்பை காட்டுவது.







கொசுறு: குட்டிப் புள்ளையாரு. வீட்டுக்குள்ள எதையாவது க்ளிக்கும்போது, இவரை மொதல்ல க்ளிக்கி புள்ளையார் சுழி போட்டுட்டுத்தான் மத்ததை க்ளிக்கணும்னு ஐதீகம் சொல்லுது.
கன்னத்துல போட்டுக்கங்க, எல்லார்கும் எல்லாமும் கிட்டட்டும்.

டைனிங்க் டேபிள் மேலே புள்ளையாரு!
( டேய், சிக்கன் எல்லாம் வச்சு சாப்பிடர டேபிள்ள புள்ளையார வெக்கரையே முண்டம்னு, அசரீரீ குரல் பின்னாடி கேட்டுது. யாருன்னு திரும்பிப் பாக்கல :) )


பி.கு: நச்! போட்டிக்கு அறிவிப்பை பாக்காதவங்க பாருங்க. சூப்பரா ஒரு 'நச்' கதை வந்திருக்கு.

Sunday, October 04, 2009

Y நைனா Y Y Y?

நைனா, சௌக்கியமா? நான் ரொம்ப சௌக்யம்.
VoIP தொலைபேசி வீட்டில் போட்டதிலிருந்து, கிட்டத்தட்ட தெனம் தெனம் பேசிக்கிட்டுதான் இருக்கோம்.
அப்படி இருக்கும்போது, ஏன் இந்த மடல்? அதுவும், நீ படிக்காத என் பதிவுப் பக்கத்தில் எதுக்காக இந்த மடல்னு கேள்வி எனக்கே வருது.
ஆனா, மத்தவங்களை Y Y Yனு கை நீட்டி கேள்வி கேட்கும் போது, நம்ம முதுகும் ஒழுங்கா இருக்கான்னு பாத்துக்கணுங்கரது என் கொள்கை.
அந்தக் கொள்கையிலிருந்து தளராமல் இருக்க இந்தப் பதிவு.
(பெயர்காரணம் முடிஞ்சாச்சு, இனி மேட்டருக்கு போவோம்).

ரெண்டு வருஷத்துக்கு முன்ன வெகேஷனுக்கு வந்தப்ப, நம்ம தெரு ரொம்ப கலீஜா இருந்துச்சு. குண்டும் குழியும் தெரு முழுசும் இருந்துச்சு. ட்ரெயினேஜ் கட்டறேன்னு ஆறு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு 5000 வசூலிச்சு, அங்கங்க நோண்டி வச்சு, ரோட்டையே நாசம் பண்ணி வச்சிருந்தாங்க நம்ம கம்முனாட்டிப் பசங்க.
கேட்டா, ஸ்டே ஆர்டர், அது இதுன்னு நொண்டிச் சாக்கு.

சரி, அந்த கருமாந்திரம் எப்ப வேணா வந்துட்டுப் போகட்டும், தெருவை சுத்தமா வச்சு, ரெண்டு பக்கமும் மரத்தை நட்டு வைங்கைய்யான்னா, அதுக்கும் ஒருத்தரும் வரல்ல.

நான் உன்கிட்ட ரொம்ப எடுத்துச் சொல்லி, நீ மெனக்கெட்டு, நாலஞ்சு மரம் தெருவுல வச்ச. அதையும், சில ஒதவாக்கரைங்க, மரம் பெருசானா, வீடு இடிஞ்சு விழுந்துரும், குப்பை சேரும்னு, சில நாஸ்டார்டாமஸ் வகையராக்கள், நட்டு வச்சதை ராவோடு ராவா பிடுங்கிப் போட்டுட்டாங்கன்னு சொன்ன. அதுக்கப்பாலிக்கா, நான் எவ்ளோ சொல்லியும் நீ, எந்த ஷமூக ஷேவாவும் செய்ய மாட்டேன்னுட்ட.

சரி, ரோடு ஒரு பக்கம் குண்டும் குழியா இருக்கட்டும், தெருவுல மரம் கூட வேணாம்னு பல்ல கடிச்சுக்கிட்டு பொலம்பலை கொறைச்சேன். ஆனா, போன வருஷம் வெகேஷனுக்கு வந்தப்ப, தெரு ஓரத்துல, பெரிய காவா வெட்டி வுட்டுருந்தானுவ.
இன்னா நைனா இதுன்னு நான் கேட்டப்ப, மழ நீர் ஒழுகிக் போக, நம்ம கவுன்சிலர் கட்டி வுட்டுருக்கான்னு சொன்ன.
என்ன கொடுமைடா இது? மழ நீர கெணத்துல வுட சொல்லில்ல அம்புட்டு பேரும் கத்தரானுவ, இது இன்னான்னு கேட்டதுக்கு, உனக்கும் பதில் தெரீல, அந்த கவுன்சிலருக்கும் பதில் தெரீல.

மறு நாள், பொடி நடையா தெருவுல நடந்தா, மழ நீர் போவ கட்டியிருந்த காவாய்ல, எல்லாப் பயலும், சாக்கடையை அதில் வந்து கொட்டர மாதிரி அறிவுஜீவித்தனமா கட்டி வச்சிருந்தான். ஒரே கப்பு. வீட்டு வாசல்லையே, இப்படி திறந்த வெளி சாக்கடைய வச்சுக்கிட்டு, இந்த கப்புல எப்படிங்கடா வாழறீங்கன்னு ரெண்டு மூணு மாமாஸ் கிட்டையும் மாமீஸ் கிட்டையும் கேட்டேன். எல்லாம், ஈஈன்னு இளிச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க.

தெருவுலையே, சாக்கடைய அந்த 'மழை நீர் காவாயில்' விடாத வூடு நம்ம வீடும், நம்ம எதிர் வீட்டு மணி மாமா வீடும், எட்டாம் நம்பர் வர்கீஸ் வீடும் தான்.

இதுல பெரிய கொடுமை, நடு ராத்திரில, தெருமுனைல இருக்கர ஃப்ளாட் காரன், தன் 'மொத்த' ஸெப்டிக் டாங்க் கழிவையும், பம்ப் வச்சு, இதுல எடுத்து வுட்டுட்ரதுதான். இப்படி பண்றதால, அந்த புத்திசாலி மாசத்துக்கு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்கறாராம்.

தெருவாழ், மத்த கேணயன்களும், இதை கேள்வி கேக்கரது கிடையாது.

இந்த ஐடியா நல்லாருக்கேன்னு, எல்லார் வீட்டிலும், நள்ளிரவில், இந்த ஐடியாவை அப்பப்ப அமுல் படுத்தி வந்தார்கள் என்பது, ராத்திரியில் வீசும் வாசத்திலிருந்தே நன்கு உணர முடிந்தது.

நம்ம ஊரு கவுன்சிலரே ஒரு உதவாக்கரை. ஆறு வருஷத்துக்கு மேலாகியும், ஒரு ரோட்டை போட வக்கில்லா கவுன்சிலரு. அவரை நம்பி ஒண்ணியும் ஆகப் போரதில்லைன்னு, நானே சில வீடுகளுக்கு போய், அங்க இருந்த மாமாஸ் கிட்டையும் மாமீஸ் கிட்டையும் போராடி, இப்படி எல்லாம் பண்ணாதீங்க, நம்மளுக்கு பின்னாளில் கேடுன்னு சொல்லி மாஞ்சு போயிட்டேன்.

பின்னாளை பத்தி எவன் கவலைப் படறான்? அவங்க் வீட்டுக்குள்ள சாக்கடை இல்லை, வெளீல தான் விட்டாச்சேன்னு, ஹாய்யா லைஃபை எஞ்சாய் பண்றானுங்க கெரகம் புடிச்சவனுங்க.

இந்த தபா ஊருக்கு வரப்போ எல்லாரையும் நாக்கப் புடிங்கிக்கர மாதிரி கேள்வி கேட்டு ஏதாவது புரட்சிகரமா பண்ணனும்னு நானும் பல திட்டம் தீட்டி வச்சிருந்தேன்.
(இணைய சக பதிவர் ரமேஷ் சதாசிவம் இப்படி ஒரு போராட்டம் நடத்தி கெலிக்க வேர செஞ்சுட்டாரு. அத்த படிச்சு புதுத் தெம்பு வந்திருக்கு)

ஆனா, என் ஐடியாக்கெல்லாம் ஆப்பு வெக்கர மாதிரி, நேத்து நம்ம வர்கீஸ் பையன் ஆன்லைன்'ல வந்து ஒரு மேட்டர சொன்னான் நைனா.

"அண்ணே, நேத்து, ஒங்க வீட்லையும் சாக்கடைய வெளீல இருக்கர காவாய்ல கொட்டர மாதிரி செஞ்சுட்டாங்கண்ணே"ன்னு ஒரு ஆட்டம் பாமை என் தலைல போட்டான்.
"டேய் மெய்யாதான் சொல்றியாடா, எங்க நைனா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரேடா"ன்னேன்.
அதுக்கு அவன் வெப்கேம்ரால கைய காட்டி, கற்பூரம் அணச்சு சத்தியம் வேர செஞ்சுட்டான்.

நைனா, ஏன் நைனா இப்படி நீயும், அந்த கெரகம் புடிச்சவனுங்க செஞ்ச மாதிரி செஞ்ச?

இனி, நான் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு, அந்த கெரகம் புடிச்சவனுங்க கிட்ட போய் மல்லுக்கு நிப்பேன்?

சாக்கடைய இப்படி தொறந்த வெளீல ஓட விட்டா, கண்ட கண்ட நோய் எல்லாம் வரும்னு ஏன் யாருக்கும் தோணலை? ஸெப்டிக் டாங்க்ல விட்டு, அது ரொம்பும்போது, சில வருஷத்துக்கு ஒரு தபா ஒரு ஆயிரம் ரூவா செலவு செஞ்சு அதை எடுத்துக் கொட்டினா என்ன கொறஞ்சுடப் போவுது?

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம, ஏன் இப்படி எல்லாரும் நடந்துக்கறீங்க?

ஒரு அடிப்படை சுத்த உணர்வு கூட இல்லாத காட்டுமிராண்டியா நம்ம ஊர்வாசிகள் மாறிக்கிட்ட்டே வராங்களே ஏன்?

Y நைனா Y Y Y?

Thursday, October 01, 2009

புள்ளி போட்ட சிவப்புப் பூச்சி

புள்ளி போட்ட சிவப்பு பூச்சி (Spotted Red Bug). கேமராவில், reverse ring என்ற ரிங்கை பொறுத்தி சாதா லென்ஸை மேக்ரோ லென்ஸாக டபாய்ச்சு எடுத்து படம்.

PiTல் மேக்ரோ படங்கள் எடுப்பது எப்படின்னு நாதஸ் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காரு. படித்து கலக்கவும்.