PiTன் பொம்மை போட்டிக்கு தோதா ஏதாவது ஒரு பொம்மையை க்ளிக்கலாம்னு வீட்டிலிருக்கும் பொம்மைகளை எல்லாம் க்ளிக்கித் தள்ளியாச்சு.
பொம்மைக்கு மட்டும் உயிரிருந்திருந்தா, ஓலமிட்டு அழுதிருக்கும். பாவம். செம டார்ச்சர் கொடுத்துட்டேன்.
முதலாவதாக, Venus ஆத்தா. இது ரோமர்களின் காதல்/அழகுக்கான கடவுளாம். மே மாத ஐரோப்பா சுற்றுலாவில் பல ம்யூசியங்களில் காணக் கிடைத்த ஒரு அழகிய சிலை இது. பளிங்குத் தூளை (marble dust) ஒண்ணு சேத்து செஞ்ச குட்டி பொம்மை. 30யூரோன்னு சொன்னவன் கிட்ட, துண்டு போட்டு பேரம் பேசி 10க்கு கொடுத்தான். வாங்கினப்பரம் பாத்தா, வேறு சில கடைகளில், 7க்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. இவனுங்க கிட்ட துண்டு போட்டிருந்தா, 5க்கு கெடைச்சிருக்கும் போல. ஹ்ம்!
ஜெக்கம்மா வீனஸ்ஸைப் பாத்து கன்னத்துல போட்டுக்கங்க.
அளகும், இளமையும், யௌவனமும் அளவில்லாமல் கிட்டும்.!!
(க்ளிக்கிப் பெருசா பாருங்க)
கறுப்பு டீ-ஷர்ட் பின்னணியில் வெச்சு, முன்னாடி கண்ணாடி ரிஃபெள்க்ஷன் வெளிச்சத்தில் ஒண்ணு, இன்னொண்ணு, அதே கண்ணாடியை பின்னாடி வச்சு, அதன் ப்ரதிபலிப்பை காட்டுவது.
கொசுறு: குட்டிப் புள்ளையாரு. வீட்டுக்குள்ள எதையாவது க்ளிக்கும்போது, இவரை மொதல்ல க்ளிக்கி புள்ளையார் சுழி போட்டுட்டுத்தான் மத்ததை க்ளிக்கணும்னு ஐதீகம் சொல்லுது.
கன்னத்துல போட்டுக்கங்க, எல்லார்கும் எல்லாமும் கிட்டட்டும்.
டைனிங்க் டேபிள் மேலே புள்ளையாரு!
( டேய், சிக்கன் எல்லாம் வச்சு சாப்பிடர டேபிள்ள புள்ளையார வெக்கரையே முண்டம்னு, அசரீரீ குரல் பின்னாடி கேட்டுது. யாருன்னு திரும்பிப் பாக்கல :) )
பி.கு: நச்! போட்டிக்கு அறிவிப்பை பாக்காதவங்க பாருங்க. சூப்பரா ஒரு 'நச்' கதை வந்திருக்கு.
8 comments:
தமிழ்மணத்தில் கோளாறு. பதிவை இஸ்துக்க மாட்ரது ;(
இது எதுவும் வோணாமா?
அப்ப,
'பேங்க பேங்க முழிக்கறேன்',
'ஒன்னியும் தோணலப்பா',
'ஹ்ம். அந்தோ பரிதாபம்',
'ஹ்ம்!'
வெரிகுட் !!!
படம் எடுக்கத் தந்திருக்கும் டிப்ஸுகளுக்கு நன்றி.
துண்டுப் பேரம் ஐயோ பாவம்:)!
//அசரீரீ குரல் பின்னாடி கேட்டுது. யாருன்னு திரும்பிப் பாக்கல :)//
கண்டுக்க மாட்டீங்கன்னு தெரியும்:))!
Ravi,
//வெரிகுட் !!!//
danks! :)
Ramalakshmi,
///கண்டுக்க மாட்டீங்கன்னு தெரியும்:))!//
avangalukkum pazagip pochu ;)
நான் எழுதின கதை ஒண்ண செக் பண்ணுங்க! இல்ல இன்னும் சிறுசாக்குனாத்தான் 'சிறு'கதைனு சொன்னா தயார்தான்!
pappu, thanks. i will read your 'nodip pozhudhil' in the evening and comment.
;)
ஓ... உங்களுக்கு இது பகலோ? சரி, சரி... ஹவ் அ குட் டே!
Post a Comment