recent posts...

Wednesday, October 07, 2009

துபாய் வழி சென்னை, Emirates, கேள்விகள்

தேவையில்லாம இன்னிக்கு ஒரு மொக்கை பதிவை போட்டு நேர விரயம் ஆயிடுச்சு. கேட்கவேண்டிய முக்கியமான மேட்டரு இருந்தும், சட்டுன்னு ஞாபகத்துக்கு வராமல், டமில் பதிவுலக மொக்கையில் மேலும் ஒரு மொக்கையை போட்ட பாவியானேன். மன்னிக்க!

சரி, இப்ப நிற்க! (நல்லா எழுதர பலரும், இப்படி நிற்க அங்கங்க போடறாங்க)

அதாகப்பட்டது, வருடாந்திர விடுமுறை நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது (November ~ December). சிங்கை வழி, மலேஷிய வழி, ஹாங்காங் வழி, ஐரோப்பா வழி போய் போரடிச்சுடுச்சு.
புச்சா ரூட் ட்ரை பண்ணலாம்னு ஐடியா.

சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து, சென்னைக்கு, துபாய் வழி, Emirates Airlines போவுதாம்.
எங்கையும் நிக்காம 15 மணி நேரத்தில் துபாயையும், அங்கிருந்து 3 1/2 மணி நேரத்தில் சென்னையையும் சென்றடையுமாம். நடுவில் கொஞ்ச நேரம் தான் வெயிட்டிங் டைமாம்.

இப்போ கேள்விகள்:

* இது நல்ல ரூட்டா? யாராச்சும் போனவங்க இருக்கீங்களா?
* எமிரேட்ஸ் ஃப்ளைட் எப்படி? ஆடாம அசங்காம போவுதா?
* ஏர் ஃஹோஸ்டஸ் எல்லாம் எப்படி? (இத சாய்ஸ்ல விடுங்க)
* துயாய் க்விக்கா சுத்திப் பாக்கணும்னா (குசும்பன், not the hammer & ஒரே எடத்துல நின்னு இல்லை), ஒரு நாள் தங்கினா போதுமா? தங்கும் செலவு, எங்க தங்கணும், போக்குவரத்து வசதி, etc.. ?
* முக்கியமா பாத்தே ஆகணும்னு இருக்கர ஐட்டம்ஸெல்லாம் என்ன?
* வேர ஏதாச்சும் ரூட்டு தெரிஞ்சவங்க சொல்லுங்கநன்றீஸ்!

please advice!

20 comments:

சென்ஷி said...

துபாய்க்கு வரச்சொல்லி இப்பவே துண்டு போட்டுட்டு போறேன் :)

மத்த விவரங்களை விஷயம் தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க!

Leo Suresh said...

எமிரேட்ஸ் துபாய் டு சென்னை சுமாராதான் இருக்கும். சுற்றி பார்ப்பதற்கு லண்டன் பிக் பஸ் போல ஒரு பஸ் இருக்கிறது 220 டிர்ஹம் ஆகும்.
லியோ சுரேஷ்

இராகவன் நைஜிரியா said...

என் அனுபவத்தில் எமிரேட்ஸ் ப்ளைட் பயணம் ரொம்ப நல்லா இருக்கு. கவனிப்பும் நல்லா இருக்கும். மேலும், உங்களுடைய ப்ரேக் டைம் துபாயில் 8 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், எமிரேட்ஸ் அவர்களுடைய செலவில், ஹோட்டல், விசா, பிக் அப் & டிராப் என்ல்லாம் உண்டு.

மேலும் எமிரேட்டில் எகானமி கிளாசுக்கு இப்போ 40 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.

எமிரேட்ஸைப் பொருத்தவரை, துபாயில் உள்ள கிரவுண்ட் ஸ்டாப்ஸ்தான் கொஞ்ச லொள்ளு. ஹேண்ட் பேக்கேஜ் ஓவர் வெயிட், அது இது என்று ரொம்ப லொள்ளு பண்ணிகிட்டு இருப்பாங்க.

பிசினஸ் கிளாசில் டிராவல் செஞ்சீங்கன்னா, really superb flight experience.

துபாய் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. பதிவர்களை சந்தித்து உரையாடவே ஒரு நாள் வேண்டும்.

துபாயில் வெள்ளிக்கிழமை இருப்பது மாதிரி சென்றீர்கள் என்றால் பதிவர்களுக்கு உங்களை பார்ப்பது வசதியாக இருக்கும்.

வேறு தகவல்கள் வேண்டுமென்றால், raghavannigeria@gmail.com க்கு தனிமடல் அனுப்புங்க.

ஆயில்யன் said...

இங்க தோஹாவில வந்து நின்னுட்டு போற அளவுக்கு புச்சா ஒரு ரூட் இருக்கு பாஸ்! :))

அது ஒரு கனாக் காலம் said...

Must see /do in Dubai
1) Gold Souk - few hrs required
2) Sand bashing / 4 WD ..half a day
3) one shopping mall atleast - few hrs
4) few destinations like Atlantis hotel /palm / etc - -half day
5) Dubai -creek - boat - museum - half a day
6) pathivar santhippu !!!!! few hrs

you should be able to get visa from emirates - to move around / bus /taxi /food for one person can be anywhere between $ 50 to 100 per day depending on what you eat ? and how you travel.

குசும்பன் said...

அண்ணாச்சி வாங்க வாங்க துபாய் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று தட்டி வெச்சுடுறோம்.

* இது நல்ல ரூட்டா? யாராச்சும் போனவங்க இருக்கீங்களா?

நண்பன் ஒருவன் போய் வந்து அருமையாக இருக்கிறது என்றான், ”கவனிப்பு” செம கவனிப்பாம்:)* எமிரேட்ஸ் ஃப்ளைட் எப்படி? ஆடாம அசங்காம போவுதா?

எமிரேட்ஸ் ஃப்ளைட் ரொம்ப நல்லா இருக்கும் என்று கேள்வி! மத்த பிளைட் மாதிரியே இதுவும் வானத்துலதான் பறக்குதாம்:)

* ஏர் ஃஹோஸ்டஸ் எல்லாம் எப்படி? (இத சாய்ஸ்ல விடுங்க)
இன்று கோவிலுக்கு போனேன் தரிசனம் திவ்ய தரிசனம்:)


* துயாய் க்விக்கா சுத்திப் பாக்கணும்னா ஒரு நாள் தங்கினா போதுமா? தங்கும் செலவு, எங்க தங்கணும், போக்குவரத்து வசதி, etc.. ?

இங்க ஷாப்பிங் மால்ஸ், Ski Dubai தான் ஸ்பெசல், டிபரண்டான்னா டெசர்ட் சபாரி 3 மணி நேரம்,கலக்கலான வித்தியாசமான அனுபவமாக இருக்கும் பெல்லி டான்ஸும் உண்டு அங்கு:) 300 திர்ஹாம் தான், கோல்ட் வாங்கும் ஐடியா இருந்தா அவசியம் வாங்க, இங்க சேதாரம் என்று நம்ம ஊரில் அடிக்கும் கொள்ளை கிடையாது, கோல்ட் சுத்தமான கோல்ட்.

* முக்கியமா பாத்தே ஆகணும்னு இருக்கர ஐட்டம்ஸெல்லாம் என்ன?

நிறைய ஐட்டம்ஸ் இருக்கு ரஸ்யா, பராகுவே,சைனா,கொரியன், ஆப்பிரிக்கன்ஸ் என்று விதவிதமான ஐட்டம்ஸ் உண்டு கிடைக்காத ஊரே கிடையாது:)

* வேர ஏதாச்சும் ரூட்டு தெரிஞ்சவங்க சொல்லுங்க
இத சாய்ஸில் விட்டு விடுகிறேன்:)

* கோல்ட் வாங்கி இன்வெஸ்ட் செய்யும் ஐடியா இருந்தால் அவசியம் வரவேண்டிய ஊர்.

kusumbuonly@gmail.com மேலதிக விவரங்களுக்கு:)

SurveySan said...

சென்ஷி,

//துபாய்க்கு வரச்சொல்லி இப்பவே துண்டு போட்டுட்டு போறேன் :)///

ஓ, நீங்க துயாய்தானா. வந்துட்டாப் போச்சு. அநேகமா சென்னையிலிருந்து திரும்பி வரும்போது துயாப் எட்டிப் பாக்கலாம்னு இப்ப ஐடியா. தகவல் சொல்றேன்.

SurveySan said...

Leo suresh,

//லண்டன் பிக் பஸ் போல ஒரு பஸ் இருக்கிறது 220 டிர்ஹம் ஆகும்.
லியோ சுரேஷ்//

$60 சுற்றுலா பஸ்ஸுக்கு அதிகம்தான். கவருமெண்ட்டு பஸ் ரயிலெல்லாம் லேதா?

SurveySan said...

இராகவன் நைஜிரியா,

/////பிசினஸ் கிளாசில் டிராவல் செஞ்சீங்கன்னா, really superb flight experience./////

ஹ்ம். வெலையப் பாத்தேன். நெம்ப ஜாஸ்தி. இந்த வருஷ சேமிப்பெல்லாம் ஐரோப்பாக்கே சரியாப் போச்சு ;)

///துபாய் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. பதிவர்களை சந்தித்து உரையாடவே ஒரு நாள் வேண்டும்.
//////

ஹ்ம். எனக்கு ஒரு நாள் தான் கிடைக்கும். அதுக்கு மேல இருக்கலாம்னா, வூட்ல ஒதைப்பாங்க. பதிவர்களை லூஸ்ல விட்டுட வேண்டியதுதான் :)

SurveySan said...

ஆயில்யன்,

//////இங்க தோஹாவில வந்து நின்னுட்டு போற அளவுக்கு புச்சா ஒரு ரூட் இருக்கு பாஸ்! :))///

தோஹாலதான் இருக்கீங்களா? :)
எனக்கு நிறைய நண்பர்கள் அங்க இருந்தாங்க. இப்பெல்லாம் ஒவ்வொரு மூலையில இருக்கானுவ.

SurveySan said...

அது ஒரு கனாக் காலம்,

/////
Must see /do in Dubai
1) Gold Souk - few hrs required
2) Sand bashing / 4 WD ..half a day
3) one shopping mall atleast - few hrs
4) few destinations like Atlantis hotel /palm / etc - -half day
5) Dubai -creek - boat - museum - half a day
6) pathivar santhippu !!!!! few hrs
///////

sand bashing and palm thing is what i would want to do mostly. shopping will be skipped.

தங்கரதுக்கு எம்புட்டு ஆகும்? எங்க தங்கினா அந்த ரெண்டு இடமும் பாக்க சுலபமா இருக்கும்?

வெள்ளி மதியம் வந்து, ஞாயிறு காலைல ரிட்டர்ன் ஆகணும்.

ஸோ, வெள்ளி மதியத்துக்கு மேல/ராத்திரி - மணல் ?

சனி - பால்ம் அட்லாண்டிஸ்?

சரி வரும்ல?

SurveySan said...

குசும்பன்,

/////நிறைய ஐட்டம்ஸ் இருக்கு ரஸ்யா, பராகுவே,சைனா,கொரியன், ஆப்பிரிக்கன்ஸ் என்று விதவிதமான ஐட்டம்ஸ் உண்டு கிடைக்காத ஊரே கிடையாது:)////

சிவ சிவா!

இப்போதைக்கு, மணல் சஃபாரியும், அந்த புது பால்ம் ஹோட்டலும் மட்டுமே காண அவா.
ஒரு நாள்ள ரெண்டையும் கவர் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடறேன்.
சென்னையிலிருந்து ரிட்டர்ன் ஆகும்போது, ஒரு நாள் ஒதுங்கிட்டுப் போகலாம்னு, பளான் பண்றேன்.

மெட்ராஸ்லேருந்து ஏதாவது கொண்டு வரணும்னா சொல்லுங்க. :)

குசும்பன் said...

//மணல் சஃபாரியும், அந்த புது பால்ம் ஹோட்டலும் மட்டுமே காண அவா.
//

மணல் சஃபாரி நல்ல ஆளா பார்த்து போவனும் பாதிபேரு சும்மா பாலைவனத்துக்குள்ள காரை ஓட்டிட்டு ஆச்சு ஆச்சு இறங்குங்கன்னு இறக்கி விட்டு விடுகிறார்கள். ரியல் அட்வென்ஜரா பீல் செய்ய நல்ல ஆளா புடிக்கனும். அட்லாண்டிஸ் ஹோட்டல் பாருங்க.

SurveySan said...

danks kusumban.

airport kitta, enga thangaradhu? adhayum sonneengannaa dhanyanaaven.

Mãstän said...

எமிரேட்ஸ் ஃப்ளைட் எப்படி?
நல்லாருக்கும், தமிழ் படமே 2,3 படம் போடுவங்க, தமிழ் பாடலும் கேட்கலாம். எனக்கு புடுச்சுருந்துசு. :)

ஏர் ஃஹோஸ்டஸ் எல்லாம் எப்படி? எல்லாரும் நல்லாருப்பாங்கன்னு சொல்ல முடியாது, சிலத பாக்கா சகிக்காது. :( , ஆனா சில பிகருங்க சும்மா சூப்பரா இருக்கும் :D என்ன பன்னுறது, நமக்கு என்ன வாய்க்கிதோ அட்சஸ்ட் பன்னவேண்டியதுதான். ஹிஹி

துபாய் க்விக்கா சுத்திப் பாக்கணும்னா?
தனியார் சிட்டி டூர் பஸ் ஓடுது, அவர்களே நல்லா சுத்தி காட்டுவாங்க.

இதே நல்ல ரூட்டுதான், துபாய் போய் பாருங்க. இப்பவுலாம் வெயிலா இருக்கும், நவம்பர் போல சூப்பரா இருக்கும்.

all the best.
any more info???

Karthick Krishna CS said...

ungalai marupadiyum tagitten. mannichirunga...

http://creativetty.blogspot.com/2009/10/blog-post.html

Karthick Krishna CS said...

oru nalla vishayam, adhanaaladhaan

SurveySan said...

Mastan,

////நவம்பர் போல சூப்பரா இருக்கும்///

டிசம்பர்ல தான் போலாம்னு இருக்கேன்.

////தமிழ் படமே 2,3 படம் போடுவங்க////

பயமா கீதே. :)

////என்ன பன்னுறது, நமக்கு என்ன வாய்க்கிதோ அட்சஸ்ட் பன்னவேண்டியதுதான்///

:) அந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.

SurveySan said...

danks eveyrone. dubai பாத்தாச்சு.

karthick, இப்பதான் கவனித்தேன். கலக்கிடுவோம்.

Emirates பொறுத்தவரை, திரும்பி துபாயிலிருந்து வரும்போது, சோறு போடாம ப்டுத்தி எடுத்துடறாங்க.
ஏறியதும், breakfast தராங்க. ஆனா, அதுக்கப்பரம் 12 மணி நேரத்துக்கு அப்பரம் ஒரு குட்டி சாண்ட்விச், அப்பால்லிக்கா 15 மணிநேரத்தில் இறங்கும் முன், lunch த்ராங்க்ய. கெரக்கம் புடிச்சவனுங்க. வயிறு கப கபன்னு எரிய ஆரம்பிச்சிடுது.

SurveySan said...

danks eveyrone. dubai பாத்தாச்சு.

karthick, இப்பதான் கவனித்தேன். கலக்கிடுவோம்.

Emirates பொறுத்தவரை, திரும்பி துபாயிலிருந்து வரும்போது, சோறு போடாம ப்டுத்தி எடுத்துடறாங்க.
ஏறியதும், breakfast தராங்க. ஆனா, அதுக்கப்பரம் 12 மணி நேரத்துக்கு அப்பரம் ஒரு குட்டி சாண்ட்விச், அப்பால்லிக்கா 15 மணிநேரத்தில் இறங்கும் முன், lunch த்ராங்க்ய. கெரக்கம் புடிச்சவனுங்க. வயிறு கப கபன்னு எரிய ஆரம்பிச்சிடுது.