recent posts...

Thursday, October 15, 2009

ப்ரோகிராமர் மகன்...

சிவாஜி: டேய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

கமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

சிவாஜி: இங்கிட்டு வா..
கமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.

சிவாஜி: client officeக்கு போனீகளா??

கமல்: ஆமா ஐய்யா..

சிவாஜி: தம்மாத்தூண்டு ப்ராஜக்ட்டையா இம்புட்டு நாளா முடிக்க முடியலன்னு சண்டை போட்டீகளே.இப்போ இந்த டீமோட நெலமை புரிஞ்சுதா??

கமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த வேலைய விட்டே போயிரலாம்னு இருக்கேன்

சிவாஜி துனுக்குற்று எழுகிறார்
சிவாஜி:வேலைய...வேலைய விட்டு போறீகளா??..ஹ..இருக்கர bugஐ fix பண்ண யோசிக்காம..வேலைய விட்டு போறேன்னு சொல்லுறது மொள்ளமாரித்தனம் இல்லை??

கமல்(உடனே):அதுக்காக....

சிவாஜி:அதுக்காக???

கமல்: அதுக்காக ..கண்ட தடிப் பசங்க சொதப்பி வச்சிருக்கர கோடையெல்லாம் திருத்தப்பாக்கரது முட்டாத்தனம்.

சிவாஜி: இந்த முட்டாப் பசங்க கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. முப்பது வருஷம் டெக்னாலஜியில பின்தங்கியிருக்கற இந்த ஆஃபீஸ்ல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி: பத்து வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். முப்பது வருஷமா cobolலயும் unixலயும் கோடு தட்டிக்கிட்டு இருந்த பயக. நாராயண மூர்த்தி YYய YYYY ஆக்கணும்னு ஆள்வேணும்னப்போ ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன COBOL தூக்கிப்போட்டுட்டு Object oriented ப்ரோகிராம் எழுதுடான்னா எப்படி எழுதுவான்?? நீ படிச்சவனாச்சே...சொல்லித் தா...ஆனா நம்ம பய மெதுவாதான் புரிஞ்சுப்பான்..மெதுவாதான் பொட்டி தட்டுவான்.

கமல்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

சிவாஜி: போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. Code அடிச்சு முடிச்சதும் clientகிட்ட ரிலீஸ் செஞ்சா வேலை செய்யும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா bugஉ..நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.

கமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.
சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

சிவாஜி: செல்ஃபோனும் ப்ளூடூத்தும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..

கமல்:..இல்ல...அப்படி இல்லைய்யா...

சிவாஜி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன். வேர ஒண்ணுத்துக்கும் ப்ரயோஜனமில்லாத ஒதவாக்கரயாயிருந்த உனக்கு ப்ரோகிராமிங் சொல்லிக் கொடுத்தேன்ல.இது வரைக்கும் ஒரு code எழுத சொல்லியிருப்பேனா உன் கிட்ட ....ஒரு code...என்ன?...ஒரு டாக்குமெண்ட்டாவது அடிக்க சொல்லியிருப்பேனா? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா?? நீ பெருசா java படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..இந்த முட்டாப்பயபுள்ளைகளுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வேலைய விட்டுப் போ..Javaல எழுது..இல்ல SAP இம்ப்ளிமெண்ட்டு பண்ணு..அந்த தெலுங்கச்சியோட கால் செண்ட்டர்ல போயி ஜல்சா பண்ணு..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...

கமல்: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..

சிவாஜி: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் ஆஃபிஸ்ல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா டெக் லீடு?? எலே யார்ரா அவன்..எங்கே டெக் லீடு??(டெக் லீடை கூப்பிடுகிறார்..)

டெக்லீடு ஓடி வந்து பணிவாக : ஐயா..

சிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா வேலைய விட்டுப் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. சீக்கிரம் K.Tய வாங்கிக்கிட்டு அனுப்பி வைக்கணும். எவ்ளோ நாளு வேணும் K.Tக்கு?

டெக் லீடு: ஒரு பத்துநாள் கெடைக்குமுங்களா??

சிவாஜி: ஏண்டாப்பு..பத்து நாள் இருந்து சொல்லிக் கொடுத்துட்டு போவீயா??...
டெக் லீடைஅனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.

சிவாஜி: பத்து நாள் முடியாது?? இவ்ளோ நாளு பொட்டி தட்டினதை சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்கன்னா நாங்கெல்லாம் என்ன பண்றதப்பூ? என்ன பண்றது?

கமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.

சிவாஜி: என்னையா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகர வரை, ஈமெயிலும் சாட்டும் செய்ய மாட்டேனப்பூ. எதுவா இருந்தாலும் நேர்ல பேசி தீத்து வையப்பூ.. அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

கமல்: ஐயா நான் இந்த ஆஃபீஸுல இருக்கர பெருசுங்களுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..

சிவாஜி: உங்களத்தானே நம்பனும்!!இந்த ஆஃபீஸ்ல வேற எந்த தருதலை இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

கமல்: போகட்டுமாய்யா??

சிவாஜி: போ...

கமல் விலகி செல்கிறார்..போகும்போது செல்ஃபோனில், "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்.." ரிங் டோனில் விளிக்கிறது. ஃபோனை எடுத்து, "செப்பம்ம்மா செப்பு" என்று கொல்ட்டியில் கதைக்கிறார்.

சிவாஜி: யப்பா இதெல்லாம் ஒவருப்பா...

கமல்: குஜிலி...கூப்ட்ரா....

என சொல்லிவிட்டு செல்கிறார்

கமல் போவதை சிவாஜி குனிந்து காண்டோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை திரும்பிப் பார்த்து மூக்க ஒடச்சுடுவேன் என்று பாசாங்கு செய்து கும்மாங்குத்து குத்துவதை போல் செய்கை செய்கிறார். சிவாஜி திருப்பி அடிக்கிறார்...
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.

-சர்வேசன் - http://surveysan.blogspot.com

ஹாப்பி வெள்ளி;)
**********************

பி.கு1: தேவர் மகன் ஒரிஜினல் இங்கே. :)

பி.கு2: இந்த டய்லாக்குகளை மேலும் மெருகேத்தி நன்னா சிரிப்பு வரமாதிரி பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் கோத்து, ஈ-மடலில் அனுப்பி, இதப் படிச்சு இன்னும் பத்து பேருக்கு அனுப்பலன்னா மண்ட வெடிச்சு கபாளம் தொறந்துடும்னு மெரட்டி, ப்ரபலம் ஆயிடலாம். மொயற்சி பண்ணுங்க. இல்ல, இதுவே ஜூப்பருன்னா, ஆனந்தக் கண்ணீரோட சொல்லிட்டுப் போங்க :)

சூப்பரு சீனுங்க இது. சும்மா சொல்லப்டாது. வாழ்க சிவாஜி, வளர்க கமலு:

28 comments:

SurveySan said...

பொட்டி தட்டாத வாழ்க்கை வாழும், புண்ணியவாங்களுக்கு, சில ட்ரான்ஸ்லேஷன்ஸ் :)

K.T = knowledge transfer. ரெண்டு பக்கமும் knowledge எல்லாம் இருக்காது. ஆனாலும், எதையாவது செய்வாங்க/செய்வோம் ;)

Java = computer பாஷை. மெட்ராஸ் பாஷை மாதிரி. ஈஸி.

cobol - இதுவும் computer பாஷை. சமுஸ்கிரதம் மாதிரி.

bug - ஓட்டை. ரிப்பேரு.

SurveySan said...

வலப்பக்கம் 'நச் போட்டி' விளம்பரம் இருக்குது பாருங்க. க்ளிக்கி படிச்சு கலந்துக்குக்கோங்கோ.

VSK said...

பதிவையும் போட்டு, பின்னூட்டம் எழுத 'டிப்ஸும்' கொடுத்தாச்சுன்னா நாங்க என்னத்த எழுதறதாம்!:))

அருமையான கற்பனை!

இதை பீட் பண்ற மாரி எழுதுன்னு சவால் வேற!

நல்லாருங்கப்பு!

ஆயில்யன் said...

:)))))))))))))))))))))))

SurveySan said...

VSK,

//இதை பீட் பண்ற மாரி எழுதுன்னு சவால் வேற!
//

மெய்யாலுமே சவால் இல்லை. கோரிக்கைதான் ;)

ஆயில்யன், டாங்க்ஸ் ஃபார் த ஸ்மைலி ! :)

ஆயில்யன் said...

//கமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.பின்பு விடுகிறார்./

அட்டகாசம் :)))

ஆயில்யன் said...

//கமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.//

நிதர்சனத்தை எல்லாம் லைட் போட்டு காமிச்சிருக்கீங்கோ :))))))

ஆயில்யன் said...

ஜூப்பரூ !!!!


கண்ணு கலங்குது பாஸ் ஆனந்த கண்ணீர்ல :))

SurveySan said...

ஆயில்யன், நன்றீ! நன்றீ! நன்றீ!

இப்படி நீங்க ஒவ்வொரு மேட்டரையும் தனித்தனி பின்னூட்டமா போடர ஒங்க ஸ்டைலு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ;)

KABEER ANBAN said...

சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',

எல்லாத்தையும் உங்க கிட்டேயே இரவல் வாங்கிட்டேன். :))))

நல்ல கற்பனை !!

SurveySan said...

Kabeer Anban, நன்றி :)

Truth said...

//இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா code..நான் எழுதினது.

'ஆனா code... நான் எழுதினது' -> இதுக்கு பதிலா 'ஆனா bug... நான் போட்டது' அப்படின்னு இருக்கும்னு எதிர்பாத்தேன் :-)

நல்லா இருக்குங்க தல

யாசவி said...

So Hilarious

:))

கோபிநாத் said...

;))) கலக்கல் தல ;)

நாதஸ் said...
This comment has been removed by the author.
நாதஸ் said...

ஜூப்பரு !

நான் இதுவரைக்கும் COBOL, Mainframeல தான் பொட்டி தட்றேன்.

எனக்கு இந்த OOP பார்த்த கொஞ்சம் டெர்ரர் ஆகுது. அதுவும் Java பாத்தா தெறிச்சு ஓடிடுவேன் :)

ஷங்கி said...

நல்லாருக்கு சர்வேசன்!

CVR said...

Ultimate!!!!
loved it TOTALLY!!

Great work :D

Sampath said...

சூப்பரப்பு ...

ச.பிரேம்குமார் said...

அண்ணே, தூள் கெளப்பிட்டீங்க :)

SurveySan said...

dank u dank u dank u!


Truth, added this. excellent suggestion ;)
//ஆனா bugஉ..நான் போட்டது///

SurveySan said...

யாசவி, கோபிநாத், CVR, நாதஸ், ஷங்கி, Sampath, ப்ரேம்குமார்,

டாங்க்ஸ்!

ரவிஷா said...

சூப்பரப்பு!

kanagu said...

kalakkal :)

ithuku mela merugetha enna irukku...

sema comedynga :)

சரவணகுமரன் said...

சூப்பரோ சூப்பரு... :-))

கலக்கிட்டீங்க...

SurveySan said...

ரவிஷா, kanagu, சரவணகுமரன்,

நன்னி!

:)

SurveySan said...

சில காமெடியெல்லாம் ஈ மெயிலில் ரவுண்டு கட்டி வருதே, அதே மாதிரி இதுவும் ரவுண்டு கட்டும், பின்னாளில் எனக்கே வந்தா, ஆனந்தக் கண்ணீர் விடலாம்னு இருக்கேன். யாராச்சும் புண்ணியவான், ஸ்டார்ட் மீஜிக் பண்ணி விடுங்க ;)

வடுவூர் குமார் said...

மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

:-))