நச் கதை போட்டி அறிவிப்பை பாத்திருப்பீங்க. பரிசெல்லாம் உண்டு.
அறிவிப்பை பாக்காதவங்க இங்க போய் விவரங்கள் பாருங்க.
போட்டிக்கு கதைகள் வர ஆரம்பிச்சிருச்சு.
பதிவின் தலைப்பில், சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை போட்டி ன்னு சேக்க சொல்லியிருந்தேன். இதில் வில்லங்கம் இருக்காம். 'நச்'க்கு பதிலா, வெறும் நச் மட்டும் போடுங்க, இல்லன்னா தமிழ்மணம் தலைப்பை முழுங்கிடுதாம்.
அதாவது, single quote போடாதீங்க.
அதாவது, இப்படி - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி.
இல்லன்னா, தலைப்பில் எதையும் சேர்க்காமல் லேபிலில் மட்டும் சேர்த்துப் போடலாம். உங்க இஷ்டம்.
இன்னொரு முக்கியமான விஷயம், போட்டிக்கான கடைசி தேதி நவம்பர் 15 2009 11:59 pm IST வரை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 30க்குள்ள எல்லாம் படிச்சு போட்டி வைக்க முடியுமான்னு தெரியல்ல. ஆணி அதிகமாயிடுச்சு, ஆஃபீஸ்லையும், வீட்லையும். அதப் பத்தி நாளிக்கு சொல்றேன் :)
போட்டியில் பங்குபெற்ற/பெருகிற அனைவருக்கும் நன்னி. விளம்பரதாரர்களுக்கும் நன்னி :)
புதிய விளம்பரதாரர்கள்,கீழிருக்கும் ஸ்க்ரிப்ட்டை வலையேத்தவும்.
பி.கு: ப்ரோகிராமர் மகனில் வரும் டயலாக்கை, தேவர் மகன் வீடியோவுக்கு யாராவது டப்பிங் செய்ய முடியுமா? anyone? :)
8 comments:
வேண்டுகோள். கதைக்கான உரலை, ஒரிஜினல் பதிவிலேயே கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்னி.
ரொம்ப அவசியமான அறிவிப்பு.
தலைப்பை முழுங்குவதோடு ' '- இவற்றால் மறுமொழி திரட்டியிலும் இணையாது பதிவு. எனது பதிவு தமிழ்மண முகப்பில் வெறும் பின்னூட்ட எண்ணிக்கையோடு ஓடுது:(! க்ளிக்கிட்டால் என் பக்கத்துக்கு வரவில்லை.
ஆக இனி எப்போதும் சிங்கிள் கொட்டேஷன் தவிர்ப்போம்:)!
கவனமாக இருப்போம்:))!
முடிவுத்தேதி தள்ளி வைத்திருப்பது நன்று. அப்போதுதான் பலபேர் கோதாவில் கலந்துக்க, விழா களை கட்டும்:)!
ரெண்டு மூணு கதை எழுதிட்டு கமென்ட் பார்த்துட்டு அனுப்பலாம்தானே???....அதுக்கப்புறம் தலைபபில் சேர்க்கவா...இல்லை இப்போவே சேர்க்கணுமா???
////முடிவுத்தேதி தள்ளி வைத்திருப்பது நன்று. அப்போதுதான் பலபேர் கோதாவில் கலந்துக்க, விழா களை கட்டும்:)!///
yes! எனக்கும் ஆணி புடுங்கிட்டு மெதுவா வந்து போட்டியை வைக்க நேரம் கிட்டும் :)
அருணா,
/////ரெண்டு மூணு கதை எழுதிட்டு கமென்ட் பார்த்துட்டு அனுப்பலாம்தானே???....அதுக்கப்புறம் தலைபபில் சேர்க்கவா...இல்லை இப்போவே சேர்க்கணுமா???
/////
மெதுவாவும் அனுப்பலாம். இப்பவே அனுப்பிட்டு பின்னால மாத்தரதா இருந்தாலும் பரவால்ல.
இங்க சேத்தீங்கனா, இங்க வரவங்க பார்க்க வாய்ப்பிருக்கு.
நானும் எழுதியிருக்கேன்.
http://nanaadhavan.blogspot.com/2009/10/500-2009.html
//பி.கு: ப்ரோகிராமர் மகனில் வரும் டயலாக்கை, தேவர் மகன் வீடியோவுக்கு யாராவது டப்பிங் செய்ய முடியுமா? anyone? :)//
I am interested....
என் கதையை சேர்த்ததிற்கு நன்றி.இது என் முதல் சிறு கதை.
Post a Comment