recent posts...

Tuesday, October 06, 2009

Covered Calls தெரிஞ்சுக்கோங்க... அச்சாரம் பெறுங்கள்...

முன்ன மாதிரி இல்லை. இப்பெல்லாம் பங்குச் சந்தையில், பங்குகள் வாங்குவது விற்பதெல்லாம், இணையத்தின் வழியே ரொம்ப சுலபமாக செய்ய முடியுது.
விஷயம் தெரிஞ்சவங்களும், தெரியாதவங்களும், ரெண்டு பொத்தான க்ளிக்கினா, ஒரு சில நிமிடங்களில்/நாட்களில்/மாதங்களில்/வருடங்களில் சில/பல டாலர்கள் நட்டமடையவும், லாபமீட்டவும் வாய்ப்பிருக்கு.

ஒரு கொம்பேனியின் பங்கு (Stock) முதலில் சந்தைக்கு வருவது, பொதுமக்களிடமிருந்தும், பெரிய முதலைகளிடமிருந்தும், முதலீடாக பணம் ஈட்டுவதற்காக.

இப்ப, நானோரு இட்லிக்கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்றேன். குட்டியா சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ல, தள்ளு வண்டீல வச்சு 'அண்ணாச்சி இட்லிக்கடை'ல இட்லியும் கெட்டிச் சட்னியும் விக்கறேன்.
இட்லி+சட்னி சைதை பஸ் ஸ்டாண்டுல செம ஹிட் ஆகிடுச்சு. எல்லாரும், அண்ணாச்சி, அருமையா இருக்கு, சென்னை முழுசும் உங்க கடைய எஸ்டாப்ளிஷ் பண்ணீங்கன்னா எங்கையோ போயிடலாங்கறாங்க.
நமக்கும் சபலம் வருது.
சென்னை முழுக்க எல்லா பஸ் ஸ்டாண்டுலையும் இட்லிக்கடை போடணும்னா, கொறஞ்சது, 50 லட்சம் செலவாகும்.
என் கிட்ட இருக்கரதோ வெறும் 1 லட்சம். மிச்சம் 49 லட்சத்துக்கு இன்னா பண்றது?

கடனை வாங்கலாம். ஆனா, அதுல ரிஸ்க்கு ஜாஸ்தி. நமக்கு எதுக்கு தேவையில்லா ரிஸ்க்?

அடுத்த வழி, நம்ம 'அண்ணாச்சி இட்லிக்கடை' கொம்பேனியை, பப்ளிக் நிறுவனமா மாத்தி, பொது மக்கள் கிட்டையும், பெரிய நிதி நிறுவனங்களிலிருந்தும், அந்த 50 லட்சத்தை பெறுவது.

இது பெரிய வேலை. அதுக்கான உறுப்படிகளை ரெடி பண்ணி, சென்னை பங்குச் சந்தையில் 'இட்லி' என்ற ஸ்டாக் குறியீட்டில் என் கம்பெனிக்கான பங்கை விக்க முடிவு பண்றேன்.
50 லட்சம் வேணும். ஒரு ஸ்டாக் 100 ரூவாய் வீதம், 50,000 பங்குகளை விக்கறேன்.

அண்ணாச்சி இட்லிக்கடை அநேகம் பேருக்கும் தெரியுமாதலால், நம்ம மக்கள்ஸே அடிச்சு புடிச்சு 50,000 பங்கையும் வாங்கிடறாங்கன்னு வச்சுப்போம்.

நம்ம சைதை குப்புசாமி அண்ணன், 1000 பங்கு வாங்கியிருக்காரு.
நம்ம தாம்பரம் சின்னசாமி அண்ணன், 1000 பங்கு வாங்கியிருக்காரு.

அக்டோபர் 1ஆம் தேதி ரெண்டு பேரும், இந்த பங்குகளை வாங்கியிருக்காங்க.

நம்ம இட்லிக்கடை ஓஹோன்னு போகும்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.
நவம்பர்ல கிட்டத்தட்ட 200ஐ தொட்டுடும்னு ஊர்ல பேசிக்கறாங்க.

குப்புசாமி இணைய அறிவு கெம்மி. அங்க இங்க தேடர பழக்கமெல்லாம் கிடையாது. பங்கை வாங்கியாச்சு, நவம்பர்ல என்ன வெலைக்கு போகுதோ வித்துடலாம்னு முடிவு பண்ணி, பங்கைப் பத்தி இப்போதைக்கு மறந்துடறாரு.

ஆனா, சின்னசாமி வெவரமான ஆளு. அங்க இங்க ஓசியில கெடைக்கர இணைய பாடங்களை பாத்து சில பல வெவரம் தெரிஞ்சு வச்சிருக்காரு.
அதுல ஒண்ணுதான், இந்த covered calls ( மெல்லத் தமிழினிச் சாவும்? டமில்ல என்னங்க இதுக்கு? )

Covered Calls எப்படி வேலை செய்யுதுன்னு சொல்றேன் கேளுங்க.

டீட்டெயிலுக்கு போரதுக்கு முன்னாடி ஒரு டிஸ்கி. பங்குச் சந்தையை பொறுத்தவரை, நாளைக்கு என்னங்கரது, யாருக்குமே தெரியாது. எவ்ளோ பெரிய தில்லாலங்கடியாயிருந்தாலும், நாளைக்கு பங்கின் விலை ஏறும் இறங்கும்னு யாராலையும் அடிச்சு சொல்ல முடியாது. பலப் பல விஷயங்கள், பங்கின் விலையை ஏற்றும் இறக்கும். கிட்டத்தட்ட சூதாட்டம் போலாகி விட்டிருக்கிறது, நம் பங்குச் சந்தை.

இப்போ, சின்னசாமி, 1000 பங்குகளை தலா 100 ரூ கொடுத்து வாங்கி, சொந்தம் பண்ணியிருக்காரு. சின்னசாமி என்னா முடிவு பண்ணியிருக்காருன்னா, 'இட்லி' 200 ரூவாய் ஆயிடுச்சுன்னா, வித்துட்டு லாபம் பாத்துடலாம்னு. அதுக்கு கீழ இருக்கரவரைக்கும் கைல வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு.

இந்தப் பங்கு 200 போரதுக்கு ஒரு மாசமாகலாம், ரெண்டு மாசமாகலாம், இல்ல ஒரு வருஷமே ஆகலாம். இந்த காலகட்டத்தில், தன் முதலீட்டுக்கு ஒரு சிறு தொகையை, 'கமிஷனாக' ஈட்டுவதுதான், covered calls.

இப்போ, அண்ணாநகர்ல கோயிந்தசாமி இருக்காருன்னு வச்சுப்போம்.
இவரு, ரொம்ப புத்திசாலியாமாம். இவருகிட்ட, 100 ரூவா கொடுத்து, 'இட்லி' பங்கை வாங்க துட்டில்லை.
ஆனா, இவரு இன்னா பண்ணலாம்னா, சின்ன சாமிக்கிட்ட போயி, "சின்ன சாமி, நீ 200 ரூவாய்க்கு வந்தா வித்துடலாம்னு முடிவு பண்ணிட்ட. 'இட்லி' டிசம்பர் மாசம் 200க்கு மேல போயிடுச்சுன்னா, நீ எனக்கு '200'ரூவாய்க்கு வித்துடணும். அதுக்கு சம்மதம்னா, நான் இப்ப உனக்கு அச்சாரத் (கமிஷன்) தொகையா, 1 ரூவா தாரேங்கறாரு".

சின்ன சாமியும் ஒத்துக்கறாரு. இனி ரெண்டு விஷயங்கள் நடக்கலாம்.

1)
100ரூவாய்க்கு வாங்கிய 'இட்லி', டிசம்பர்ல, குபு குபுன்னு மேலப் போய் 250ரூவாய் ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க.
சின்னசாமி, கோயிந்துகிட்ட மேலே சொன்ன அச்சாரம் போட்டுட்டாருன்னு, வாய மூடிக்கிட்டு, அந்தப் பங்கை 200ரூவாய்க்குதான் விக்கணும்.

ஸோ, சின்னசாமியை பொறுத்தவரை, அவரின் லாபக் கணக்கு:
முதலீடு: 100ரூ * 1000 = 100,000 ( ஆரம்ப செலவு )
வரவு1: 1ரூ * 1000 = 1,000 ( கோயிந்த்சாமி தந்த அச்சாரத் தொகை )
வரவு2: 200ரூ * 1000 = 200,000 ( பங்கை 200க்கு கோயிந்திடம் விற்ற தொகை )

ஸோ, சின்னசாமிக்கு 200,000 + 1,000 - 100,000 = 101,000 ரூ.(101%)

கோயிந்த்சாமியை பொறுத்தவரை, அவரின் லாபக் கணக்கு:
முதலீடு1: 1ரூ * 1000 = 1,000 ( ஆரம்பச் செலவு, சின்னசாமிக்கு கொடுத்த அச்சாரம் )
முதலீடு2: 200ரூ * 1000 = 200,000 ( 250ரூ ஆகிவிட்ட பங்கை, அச்சாரம் போட்டதால், 200க்கே வாங்க முடிகிறது)
வரவு: 250ரூ * 1000 = 250,000 ( வாங்கியது, 250க்கு டக்குனு வித்துடறாரு )

ஸோ, கோயிந்தசாமிக்கு 250,000 - 200,000 - 1,000 = 49,000 ரூ. (4900%)

2)
100ரூவாய்க்கு வாங்கிய 'இட்லி', டிசம்பர்ல, பெருசா மாற்றம் அடையாமல் 150ல நிக்குது.
கோயிந்தசாமி எதிர்பார்த்த மாதிரி, 'இட்லி' 200ரூ ஆகலை. ஸோ அவரு கொடுத்ட்த அச்சாரம், ஸ்வாஹா!
சின்னசாமி, கோயிந்தின் அச்சாரத் தொகையை அவரே வச்சுக்கலாம். பங்கையும் தன் வசம் அப்படியே வச்சுக்கலாம்.

ஸோ, கோயிந்துக்கு, 1,000 ரூ நட்டம். (-100%)
சின்னசாமிக்கு, 1,000 ரூ லாபம். (1%)

200ரூ வந்தா வித்துடலாம்னு முடிவு பண்ண சின்னசாமி, இந்த covered calls 'அச்சாரத்தை' கோயிந்துக்களிடம், மாசா மாசம், திட்டம் போட்டு 'கறக்கலாம்'.
200ஐ தொடாத பட்சத்தில், கோயிந்துக்கள் கொடுக்கும் கமிஷன், ஃப்ரீ மணி.
200 தொட்டுடுச்சுன்னா, பங்கை கைமாத்தி கொடுத்துடணும். வந்த வரைக்கும் லாபம் அடிப்படையில்.

ஒரே புகைச்சல் என்னன்னா, சின்னசாமி அச்சாரம் போட்ட அடுத்த வாரத்தில், என் இட்லிக்கடை கன்னா பின்னான்னு, பிக்கக் ஆகி 100ரூ பங்கெல்லாம் 10,000 ஆயிடுச்சுன்னாதான்.
அச்சாரம் போட்டுத் தொலைத்ததால், சின்னசாமி 200க்கே விற்கும் கட்டாயத்தில் இருப்பார்.
ஆனா, கோயிந்து, 200க்கு வாங்கி, 10,000 வித்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெறுகிறாரு.

எல்லாம், எந்த சாமிக்கு எங்க மச்சம் இருக்குங்கரதைப் பொறுத்து.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

இந்த covered calls சமாச்சாரமும், மேலும் பல தில்லாலங்கடிகளும், Options trading என்று வகைப் படுத்தப்பட்டு புழக்கத்தில் உள்ளது.
உங்கள் கைவசம் ஏதாவது ஒரு பாப்புலர் பங்கு இருந்தா, அதுக்கு எம்புட்டு covered calls கிட்ட்டும்னு ஊங்க இணைய broker தளத்தில் பார்க்கலாம்.
உ.ம்: அமெரிக்க பங்குச் சந்தையில் Mittal Steel (MT) நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பவர்கள் இங்கே க்ளிக்கி தெரிந்து கொள்ளலாம்.
$36 விலையுள்ள MT Dec09ல், $40க்கு போகும்னு நெனைக்கர கோயிந்துக்கள், $1.50 அச்சாரமா தராங்க.

Strike Symbol Last Chg Bid Ask Vol Open Int
40.00 MTLH.X 1.50 0.00 1.65 1.80 32 1,072

ஓ.கே வா? ரோடு போட்டுட மாட்டீங்க?

ஏதாச்சும் புரியல்லன்னா கேளுங்க!

பி.கு: படிக்கரவங்கள்ள எவ்ளோ பேரு, பங்குச் சந்தையில் வெளையாடறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எந்த ஊரு பங்குச் சந்தைன்னும் சொல்லுங்க. இதை தொடரலாமா வேணாமான்னும் சொல்லுங்க.

16 comments:

SurveySan said...

இவ்ளோ பெருசா மொக்க போட்டு, யாரும் ஒரு வார்த்த சொல்லாம போனா, ரொம்ப சோகமாயிடுவேன்.

புரிஞ்சுதா,இல்லியான்னு சொல்லிட்டுப் போங்க, சொல்லிட்டேன் ;)

Indian said...

ஓகே.. ஓகே.. எங்க சந்தைகள் மும்பை மற்றும் தேசியப் பங்கு.

Indian said...

கட்டுரை நல்லா இருக்கு. பொறவு டீட்டெய்லா படிச்சுட்டு கருத்து சொல்றோம்.

RaviSuga said...

Good one. Start covering advanced concepts of Derivatives (Options & Futures) also wrt NSE. Also, explain about open positions and how to use that to predict swings during end of contract expiry

யாசவி said...

go ahead

Prabhu said...

ரொம்ப நாளா பங்கு சந்தை தெரிஞ்சுக்கனும் ஆச! (பின்ன, நாங்களும் ஒரு அம்பானி ஆக வேண்டாமா?) இதை தொடர்ந்து செஞ்சு எங்க அறிவுக் கண்ண தொறங்க :)

;)

நீங்க சொன்ன மாதிரி என் கதைய எடிட் செஞ்சு ஒரு பக்கம் குறைச்சாச்சு!
வித் டேரடக்கர்ஸ் கட்!

ராமலக்ஷ்மி said...

வெரி இண்ட்ரஸ்டிங். தொடருங்க.

//பங்குகள் வாங்குவது விற்பதெல்லாம், இணையத்தின் வழியே ரொம்ப சுலபமாக செய்ய முடியுது.
விஷயம் தெரிஞ்சவங்களும், தெரியாதவங்களும்,//

ஹிஹி, நடுவில 'ஓரளவு தெரிஞ்சவங்களும்'னு ஒரு கேட்டகரி இருக்கே:)!

ஸ்டாக் எக்ஸ்சேஞ்? மும்பைதான்!

Anonymous said...

//ஏதாச்சும் புரியல்லன்னா கேளுங்க!//

பேசிக்காவே ஒரு டவுட்டு சார்!

நீங்க இட்லி கடை ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டு அப்புறமெதுக்கு அண்ணாச்சி இட்லிக்கடை'ல போய் இட்லியும் கெட்டிச் சட்னியும் விக்கறீங்க?

SurveySan said...

thenali,

///அண்ணாச்சி இட்லிக்கடை'ல போய் இட்லியும் கெட்டிச் சட்னியும் விக்கறீங்க///

very good question. namma kadaidhaan adhu ;)

SurveySan said...

indian, நன்றி! படிச்சுட்டு கருத்ஸ் சொல்லுங்க.

Ravisuga, பெரிய மேட்டரெல்லாம் கேக்கறீங்க. தெரிஞ்சவரைக்கும் கவர் பண்றேன், விரைவில் :)

யாசவி, வில் டூ!

pappu, அம்பானி ஆவரோமோ இல்லியோ, அட்லீஸ்ட் ஓட்டாண்டி ஆகாமல் காப்பாத்திக்க, பேஸிக் சந்தை அறிவை வளத்துப்போம்.

ராமலக்ஷ்மி, நன்றி,
//'ஓரளவு தெரிஞ்சவங்களும்'னு ஒரு கேட்டகரி இருக்கே:)!//

நானும் அந்த கேட்டகரிங்கரதால, கண்டுக்காம வுட்டுட்டேன் ;)

அகில் பூங்குன்றன் said...

ஆப்சன்ஸ் பத்தி ரொம்ப எளியமனிதனின் உரையாடல்கள் மூலம் விளக்கியுள்ளீர்கள்.

நன்றி..

nse, bse...

SurveySan said...

அகில், நன்றீஸ்! :)

CVR said...

நல்லா எழுதியிருக்கீங்க...
Finance பத்தி அவ்வளவா ஆர்வமில்லாத என்னாலேயே ஒரே தடவை படித்து புரிந்துக்கொள்ள முடிந்தது...
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி :)

SurveySan said...

நன்றி CVR. இப்படி நாலு பேருக்கு புரிஞ்சு, நீங்களும் கோதால எறங்கினா, பங்கு சந்தைக்கு மேலும் $கள் புழங்கும்.
எனக்கும் விளையாட வாய்ப்புகள் அதிகரிக்கும் :)

சங்கர் said...

நல்ல பதிவு, சரளமான, எளிதில் புரியும் நடை, மிக்க நன்றி

Anonymous said...

'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',