படிக்கர காலத்துல திருக்குறள் மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை.
யோசிச்சு பாத்தா குறள் மீது எரிச்சல்தான் அதிகம்.
டமில் டீச்சர், 'கண்'ல முடியரது எது, 'நன்று'ன்னு முடிவது எதுன்னு பரீட்சை கேள்வி அமைத்து நம்ம குட்டி ப்ரெயினுக்கு ரொம்பவே டார்ச்சர் கொடுப்பாங்க.
(அதையும் மீறி நான் பிரகாசித்த விஷயம் என் எட்டை படிச்சவங்க தெரிஞ்சுக்கிட்டு புளகாங்கிதம் அடைஞ்சிருப்பீங்கங்கரது தனிக் கதை)
ஆனா, அப்பாலிக்கா, காலேஜ், வேலை, பம்பாய், டில்லி, சிங்கை, அம்பேரிக்கா, பதிவுலகம்னு சுத்தி அறிவை வளத்துக் கொண்ட பிறகு, சின்ன வயசுல பிடிக்காதது பலதும் பிடிக்க ஆரம்பிச்சது.
மிக முக்கியமா, தமிழ் மீதான ஆர்வம் வளர்ந்திருக்கு.
பொன்னியின் செல்வனெல்லாம் தேடிப் பிடிச்சு படிக்கும் அளவுக்கு வளந்திருக்கு. கூடப் படிச்ச மத்த டமில் ஆர்வமில்லா பயலுவளெல்லாம், "பொன்னியின் செல்வனா? whats that dude?"ன்னு கேட்டப்போ, "அது புதினம் டா மச்சி. உனக்கு அதெல்லாம் புரியாது"ன்னு உதார் விட்டு திரிந்தபோது ஒரு நமுட்டு சந்தோஷம் உள்ளூர படர்ந்தது உண்மை.
இப்படி தொடர்ந்த எமது தமிழார்வத்தில், திருக்குறளின் பவர் இன்னா என்பெதும், அதை எழுதிய வள்ளுவனின் அறிவாற்றலும் வியப்பில் ஆழ்த்தாத நாளில்லை.
இன்னா ஆளுப்பா வள்ளுவரு? எவ்வளவோ பேரு எவ்வளவோ ஆயிரம் வருஷமா, என்னென்னமோ எழுதியிருக்காங்க. ஆனா, குறள் மாதிரி ஒரு மேட்டரு வேர யாரும் செஞ்சதா ஞாபகம் இல்லை.
(எமக்குத் தெரிந்து வள்ளுவரின் திருக்குறளுக்கு ஈக்வலா இருப்பது, நம்ம கொத்ஸ் அப்பப்ப கொத்தி விடும் டிவிட்டருள் தான், என்பதை இங்கே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்)
எனக்கு பர்சனலா ரொம்ப பிடிச்சு, ஓரளவுக்கு பின்பற்றும் குறள்,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்"
இதுல, 'விடல்'னு ஒரு குட்டி வார்த்தைக்குள், பலப் பல கருத்தை அள்ளி வீசியிருக்காருங்கரது, உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். (தெரியலைன்னா சபைல கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க)
இப்பேர்பட்ட திருக்குறளில், ஒரு குறள் மட்டும் எப்ப கேட்டாலும், "இன்னாபா சொல்றாரு வள்ளுவரு? டைம் பத்தாம, அஸிஸ்டெண்டை வச்சு எழுதச் சொல்லிட்டாரா இந்த குறளை"ன்னு யோசிக்க வச்சது ஒரு குறள்.
நேத்து கமல்50 நிகழ்ச்சி (beautiful program) விஜய் டிவியில் பார்க்கும்போதும் இந்த குறள் பிரதானமாக காட்டிக்கிட்டு இருந்தாங்க.
இதுதான் குறள்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என் மேலோட்ட சாமான்ய அறிவில், இது நாள் வரை நினைச்சது இன்னான்னா, "பொறந்தா, நல்லா வளந்து பல பேரும் பாராட்டர அளவுக்கு சக்ஸஸ்ஃபுல்லா வாழணும். இல்லன்னா, பொறக்கரதே வேஸ்ட்டு"ன்னு.
சின்ன வயசுல என் ஃப்ரெண்டு ஒருத்தனை அவங்கப்பா போட்டு, டார்ச்சர் குடுத்துக்குனே இருந்தாரு, "டேய் பக்கத்து வீட்டு அவன பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு, எதிர் வீட்டு அவன பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு, பின் வீட்டு அவனை பாரு, ஃபர்ஸ்ட்டு ராங்க்கு. நீயும் இருக்கியே ஓதவாக்கரை"ன்னு போட்டு செம மாத்து மாத்தினாராம்.
என் ஃப்ரெண்டும், வலி பொறுக்காம, "லூஸாப்பா நீ? எப்பப் பாரு அவன பாரு இவன பாருன்னு ரோதன பண்ர. எல்லாரும் ராஜீவ் காந்தி ஆக முடியுமா?"ன்னு எதிர் கேள்வி கேட்டு அவங்க நைனாவை கப்-சிப் ஆக்கிட்டானாம்.
ஞாயம்தானே? பொறந்தவங்க எல்லாரும், வளந்து ஜெயிச்சு, ஃபேமஸ் ஆகணும்னா நடக்கர விஷயமா? அடுத்தவனுக்கு டார்ச்சர் கொடுக்காம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அதை மட்டும் ஒழுங்கா செஞ்சு போனா பத்தாது?
ஏன் வள்ளுவரு இப்படி எழுதி சொதப்பிட்டாருன்னு, என் மூளையை கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சுப் பாத்தேன்.
நமக்குதான் அறிவு கம்மியாச்சே. ஒன்னியும் தோணலை.
ஆனா, நாம தான் பொழைக்க தெரிஞ்சவங்களாச்சே.
சரின்னு, தேடு பொறியில், குறளை எடுத்து உள்ள விட்டு, சர்ச்சினேன்.
என் அறிவுக் கண்ணை கூகிள் ஆண்டவர் திறந்து வைத்தார்.
முதலில் கண்ணில் பட்டது, தினகரனில், கருணாநிதியும், சாலமன் பாப்பையாவும், இந்த குறளுக்கு அளித்துள்ள விளக்கம்.
கருணாநிதி : எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
இதுவும் எனக்கு சப்பு'ன்னு இருந்தது.
வள்ளுவர் கண்டிப்பா இப்படி ஒரு அர்த்தத்தை சொல்ல வரல.
என்னென்னமோ சூப்பரா சொன்ன வள்ளுவரு, இந்த மாதிரி மொட்டையா, என்னை மாதிரி சாமான்யர்களுக்கு, 'வராத மேட்டரை ட்ரை பண்ணாம, ஒதுங்கிப் போயிடு'ன்னு கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டாரு.
சரின்னு, இன்னும் தீவிரமா தேடினேன், அப்பதான் நம்ம கபீரன்பனின் விளக்கம் கண்ணில் பட்டது. நெத்திப் பொட்டில் அரஞ்ச மாதிரி, சூப்பரா ஆராய்ந்து, அமக்களமா ஒரு விளக்கம் சொல்லியிருக்காரு.
கண்டிப்பா படிச்சுப் பாருங்க.
கபீரன்பனின் விளக்கம்:
புகழொடு தோன்றுக= நல்ல காரணங்களுக்காக புகழ் அடைவது , அஃதிலார்= அப்படி இயலாதவர்கள், தோன்றலின்=தவறான காரியங்களுக்காக அறியப்படுவதைக் காட்டிலும், தோன்றாமை= ஏதும் செய்யாமலும் அறியப் படாமலும் இருப்பதே, நன்று =நல்லது.
very good analysis கபீரன்பன்! என் அறியாமை நீங்கியது :)
பி.கு: உங்களுக்கு பிடிச்ச/பிடிக்காத குறள்?
13 comments:
சொல்ல மறந்துட்டேன். இந்த பிடிக்காத குறள், இப்ப 'ஓரளவுக்கு' பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. :)
அருமையான விசயத்த சொல்லியிருக்கீங்க சர்வே.
'அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பில்லாதவர்'என்ற குறளில், அரம் என்பதற்கு நல்லதொரு விளக்கம் சொன்னார் நன்னன் அய்யா.வாள்,கத்தி போன்றவை அரத்தை விடக் கூர்மையானவை,அவற்றை விட்டுவிட்டு அரத்தை சொல்லக்காரணம்,கூர்மையான வாளையும் கூர்மையாக்க பயன்படும் கூர்மையான ஆயுதம் அரம்.அதுபோல அறிவாளிகளுக்கெல்லாம் அறிவூட்டும் பேரறிவாளனாயிருந்தாலும் மக்கள் பண்பில்லாதவர் மரத்தைப் போன்றவர் ஆவார்.
'விடல்' என்ற சொல்லில் உள்ள சுவையை அள்ளி விடுங்க தல.
சாலிசம்பர், அருமையான குறளை எடுத்துச் சொன்னீங்க.
எனக்குத் தெரிஞ்ச 'விடல்' விளக்கம் இன்னான்னா, கெட்டது செஞ்சவங்களுக்கு பழிக்கு பழி வாங்காம, அதுக்கு பதிலா அவங்களுக்கு நல்லது செஞ்சுட்டு, அத்தோட விட்டுடாம, நீங்க செஞ்ச நல்லதை நீங்களே மறந்துடணுமாம்.
நாமதான் அவனுக்கு நல்லது பண்ணிட்டமேன்னு ஒரு 'இருமாப்பு' மனசளவிலும் இருக்கக் கூடாதாம். அதான், செஞ்சுட்டு 'விட்டுடு'ங்கறாரு.
இந்த 'விடல்'க்கு ஸ்பெஷலா விளக்கம் சொல்லாமதான் பல இடத்திலும் படிச்சேன்.
குறளின் பெருமையே இதுதானோ? ஆளாளுக்கு, அவங்க மனசுக்கு பட்டதை எடுத்துக்கிட்டு, ப்ரயோஜனமான வாழ்க்கை வாழ்தல். :)
அடாடா, ஆத்திகம் VSK பதிவில், 'விடல்' மேட்டர் இல்லை.
மேல்விளக்கம் தருமாறு, டாக்டரை வருக வருக என்று அழைக்கிறேன் ;)
http://aaththigam.blogspot.com/2008/05/20.html
குறள் விளக்கம் தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அந்த இடுகைக்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.
கபீரன்பன், உங்களுக்குத்தான் நன்னி சொல்லணும் :)
'விடல்' பத்தி உங்க கருத்தை நேரம் கிடைக்கும்போது பதிவாப் போட்டீங்கன்னா, பயனுள்ளதா இருக்கும் :)
அட!
'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',
pappu, danks!
கபீரன்பனின் விளக்கம் வெகு அருமை.
குறளின் பெருமையாக
//ஆளாளுக்கு, அவங்க மனசுக்கு பட்டதை எடுத்துக்கிட்டு, ப்ரயோஜனமான வாழ்க்கை வாழ்தல். :)//
நீங்கள் சொல்லியிருப்பதும் அருமை:)!
ராமலக்ஷ்மி, வருகைக்கு நன்னி.
உங்களுக்குத் தெரிஞ்ச 'விடல்' விளக்கம் என்னன்னு நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க :)
கபீரன்பனின் குறள் விளக்கம் அருமை!
:) ரொம்ப அருமையான விளக்கம்.நானும் இந்த விளக்கம் கேட்டதில்லை.Thanks for Sharing. என்னுடைய favourite குறள்,
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி மிக்கக்கொளல். வாழ்கையின் எல்லா நேரங்களிலும் இந்த Formula use பண்ணாம இருக்க முடியாது.
Post a Comment