recent posts...

Tuesday, October 13, 2009

விஜய் டிவி கமல்50 - கமலின் அதிகப்பிரசங்கித்தனம்

கமல்50 என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
கமலின் திரை உலக வாழ்வில் 50 வருடம் முடிந்ததை கொண்டாட இந்த ஏற்பாடு.

ரொம்ப ரசிக்கும்படி அருமையா அரங்கேற்றியிருந்தார்கள்.
அதன் மேல்விவரங்கள்/டிட்பிட்ஸ் எல்லாம் எழுதலாம்னு தோணிச்சு.

அத மெதுவா சொல்லிக்கலாம், அதுக்கு முன்னாடி ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)

கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் துளி கூட சந்தேகமே லேது.
ஐ ஜஸ்ட் லவ் சம் ஆஃப் ஹிஸ் மூவீஸ்!
கமலின் வசீகரம் என்னை இஸ்துப் போட்டது, கமலின் சத்யா பாத்த போது.
இன்னும் நினைவில் நிற்பதில், சலங்கை ஒலி, குருதிப் புணல், மகாநதி, குணா, நாயகன், மை.ம.கா.ராஜன், etc.. அடுக்கிக்கிட்டே போகலாம்.

இவரின் தமிழ் பற்று எல்லார்க்கும் தெரிஞ்சதுதான். தமிழ் அறிவும் ஜாஸ்தி.
ஆனா, இந்தக் கமல்50 நிகழ்ச்சியில் ஒரு அதிகப் பிரசங்கித்தனம் செய்தார்.

கமலின் ஹீரோயின்ஸ் எல்லாம் மேடையில் தோன்றி ப்ளா ப்ளான்னு புகழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

மீனா வந்து, கமல் ஒரு encyclopediaன்னு புகழ்ந்தாங்க.
இதைக் கேட்டதும், கமல், இடையில் குறுக்கிட்டு, "மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்லுவாங்க"ன்னு அளந்தாரு.
தேவையில்லா டங்கிலீஷ்ல பேசரதை தவிர்க்க, இப்படி குத்திக் காமிச்சாராம்.

கொடுமை என்னான்னா,
'அகராதி = dictionary'
'encylopedia = கலைகளஞ்சியம்'னு என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச விஷயம்.
இது கமலுக்கு தெரியாததை மன்னிச்சிரலாம். ஆனா, இப்படி அரைகுறையா தெரிஞ்சவரு, மீனாவை குத்தஞ்சொல்லாம இருந்திருக்கலாம்.

அதையும் மன்னிச்சு விட்ரலாம். ஆனா, மீனாவை குத்தம் சொன்னவரு, பீட்டர் விட்ட மத்தவங்களையெல்லாம் கண்டுக்கலை. அதையும் மன்னிச்சிரலாம்.

ஆனா, அவரின் வாரிசு ஸ்ருதி ஹாசன், டமில் சினிமாப் பாடலை கொத்தி சொதப்பலா பாடி, தொடர்ந்து ஒரு ஆங்கிலப் பாடலை பாடினார். கமலும், புளகாங்கிதம் அடைந்து, அருகிலிருந்த ரஜினி, மம்மூட்டி கிட்டையெல்லாம், பெருமையா ஏதோ சொல்லிட்டு, தன் பொண்ணுக்கு ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்துட்டு, கைதட்டி சந்தோஷப் பட்டாரு.

மீனாக்கு ஒரு ரூலு? ஸ்ருதிக்கு ஒரு ரூலா?

என்னா சார் கொடுமை இது?

நாராயண நாராயண!

;)

பி.கு1: அந்த ப்ரோகிராம் ரொம்ப அமக்களம். தேடிப் பாருங்க!

46 comments:

மருதநாயகம் said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே

Sridhar Narayanan said...

//மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்லுவாங்க"ன்னு அளந்தாரு//

அய்யே... அது காமெடிய்யா. அகராதி புடிச்சவன்னு கிண்டலா சொல்றாங்கங்கிறதை சொன்னாருப்பா. தெற்கு பக்கத்தில அப்படித்தான் சொல்வோம். அவன் சரியான ‘அகராதி’ன்னா ஓவர் அலப்பறைன்னு. :)

பரிசல்காரன் said...

ஹலோ... என்ன பாஸு இப்படி அப்பாவியா இருக்கீங்க?

மீனா ஆங்கிலத்துல பேசினதுக்காக கமல் அதைச் சொல்லல. அதாவது ரொம்ப பேசறவனை, ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி காட்டிக்கிறவனை திட்ட ‘அவன் அகராதி பிடிச்சவன்பா’ன்னு சொல்லுவாங்க. அந்த அர்த்தத்துல மீனா இவரைப் என்சைக்ளோபீடியா-ன்னு புகழறப்போ, ‘அதையே தமிழ்ல சொன்னா அகராதி’ன்னாரு. ஏன் இங்க்லீஷ்ல பேசறன்னு குத்திக்காட்ட இல்ல.

பினாத்தல் சுரேஷ் said...

சரியான அகராதி பிடிச்ச ஆளா இருக்கீங்களே :-)

ராமலக்ஷ்மி said...

//ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)//

நாரதர் கலகம் நன்மையில் முடியணுமே, என்ன நன்மையாய் இருக்க முடியும்??? ஓ ஹிட்ஸ் தேத்திக்கறது.. சரிசரி:))!

கானா பிரபா said...

எங்க: உலக நாயகனை கிண்டலடித்த சர்வேசனை ஒரு வழி பண்ணணும் எடுடா அரிவாள

SurveySan said...

பரிசல்,

//ஏன் இங்க்லீஷ்ல பேசறன்னு குத்திக்காட்ட இல்ல.//

(வடிவேலு ஸ்டைலில்) ஐயையோ அப்படியா சொன்னாரு? :)
இருந்தாலும், சைலண்டா விடுங்க, ஹிட்ஸ் வருதுல்ல ;)

SurveySan said...

மருதநாயகம், பொன் குஞ்செல்லாம், வீட்ல கொஞ்சட்டுங்க. சபைல அடுத்தவங்கள நொட்ட சொல்லிட்டு, இவங்கள மட்டும் ஏன் தூக்கணும்?

பி.கு: (பரிசல் சொன்ன மேட்டருக்கு) அவ்வ்வ்வ்வ் :)

SurveySan said...

Sridhar Narayan,

அவ்வ்வ்வ்வ்வ் :)

பரிசல்காரன் said...

//மருதநாயகம் said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே//

என்னங்க.. மருதநாயகம்னு பேர் வெச்சுட்டு கமல் காமெடி பண்ணினது கூடவா உங்களுக்குத் தெரியல...?

:-(

SurveySan said...

பினாத்தல் சுரேஷ், ராமலக்ஷ்மி, கானா பிரபா,

வருகைக்கு நன்னி ;)

ஸ்லிப் ஆப் த டங் பதிவு இது.

ஆனாலும், நன்மைதான் ;)

அதுக்கு தனியா ஒரு மன்னிப்பு பதிவு போட்டு, அதிலையும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்திக்கலாம் ;)

பரிசல்காரன் said...

சர்வேசன் என்ற பெயர் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சிவனை வழிபடுபவர். கமல் தசாவதாரத்தில் வைணவராய் நடித்தார். அதனால்தான் அவரை திட்டமிட்டு இப்படித் தாக்குகிறீர்கள்.

(இதே மாதிரி மத்தவங்களும் சர்வேசன் இத எழுதினதுக்குக் காரணம் கண்டுபிடிங்கப்பா)

SurveySan said...

கானா, வன்முறை வேணாம். பேசித் தீத்துக்கலாம் :)

பி.கு: லா தெரிஞ்சவங்க யாராச்சும் ஒரு அரெஸ்ட் வாரண்ட் வாங்கித் தாங்கப்பா. கானாவ உள்ளப் போட்டுடலாம்.

SurveySan said...

பரிசல்,
////என்னங்க.. மருதநாயகம்னு பேர் வெச்சுட்டு கமல் காமெடி பண்ணினது கூடவா உங்களுக்குத் தெரியல...?
////

நான் சொன்ன மேட்டருல, அபரீத நம்பிக்கை வச்சு, வார்த்தைய கொட்டிட்டாரு மருது :)
லூஸ்ல விடுங்க. அவரு நிகழ்ச்சிய பார்த்திருக்க மாட்டாரு இன்னும் ;)

வந்தியத்தேவன் said...

அகராதி என்றால் அகராதி பிடித்தவன் என்ற இன்னொரு அர்த்தம் வரும் அதனைத் தான் கமல் மீனாவுடன் சொன்னாரு. ஸ்ருதியின் பாட்டை இளையராஜாவே ரசித்துக்கேட்டார். வழக்கமாக யாரும் பாடினால் மூஞ்சியைத் தூக்கிவைத்திருப்பவர் அவர். ஏதோ உன்னைப்போல் ஒருவன் முடிந்து இனி இதை வைத்து கமலைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//சர்வேசன் என்ற பெயர் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சிவனை வழிபடுபவர். கமல் தசாவதாரத்தில் வைணவராய் நடித்தார். அதனால்தான் அவரை திட்டமிட்டு இப்படித் தாக்குகிறீர்கள்.

//

யோவ் பரிசல் அண்ணே, நீ உக்காந்து யோசிக்கிற நாற்காலிக்கு அண்ணிகிட்ட சொல்லி திருஷ்டி சுத்திபோடச் சொல்லு.

நல்லா யோசிக்கிறாய்ங்கய்யா :))

SurveySan said...

வந்தி, /////ஏதோ உன்னைப்போல் ஒருவன் முடிந்து இனி இதை வைத்து கமலைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.
///

நான் மட்டும்தான் இந்த மேட்டர வச்சு பிசினஸு பண்றேன்னு நெனச்சேன். நெறையப் பேரு பண்றாங்களா? :)

அப்துல்லா, வருகைக்கு நன்னி ;)

goma said...

கமலின் வெற்றியின் இன்னொரு மைல்கல் ,ஒரு நகைச் சுவை நடிகைக்கு[கோவை சரளா] ஜோடியாக நடித்து மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.
கோவை சரளா ஏன் விழாவில் இல்லை.
ஊரில் இல்லையா ,அழைப்பு அனுப்பப் படவில்லையா.
அல்லது என் கண்ணில் படவில்லையா?
என் நியாயமான சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்களேன்

ஆயில்யன் said...

//ஸ்லிப் ஆப் த டங் பதிவு இது.

ஆனாலும், நன்மைதான் ;)

அதுக்கு தனியா ஒரு மன்னிப்பு பதிவு போட்டு, அதிலையும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்திக்கலாம் ;)//

குட் உங்களோட இந்த அப்ரோச்சும் ரொம்ப புச்சிருக்கு பாஸ் :))))))))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

எங்க: உலக நாயகனை கிண்டலடித்த சர்வேசனை ஒரு வழி பண்ணணும் எடுடா அரிவாள//


வன்முறை எங்கேயும் எப்பொழுதும் கண்டிக்கதக்கது! ஆனா இவுரு காமெடி பண்ணியிருக்காரு பாஸ் விடுங்க விடுங்க :)))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

போச்சு வந்தியத்தேவனுக்கு கோபம் வந்திருச்சு..!

சர்வேசன் ஸார்.. மருவாதையை மூட்டையைக் கட்டிருங்க.. இல்லேன்னா அவ்ளோதான்..!

நானும் கமல் சொன்னதை கேட்டேன். "மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்வாங்க" அப்படீன்னுதான் கமல் சொன்னாரு..

யாருக்கு எந்த அர்த்தம் வருதோ எடுத்துக்கலாம்..!

SurveySan said...

ஆயில்யன், நன்னி.

உண்மைத் தமிழன்,
//மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்வாங்க//

அப்படி போடுங்க அருவாளை.

பரிசல், இப்ப என்னா சொல்றீங்க?
அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்டு!

:)

ஆயில்யன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

போச்சு வந்தியத்தேவனுக்கு கோபம் வந்திருச்சு..!///

LOL :)))

வந்தியத்தேவன் said...

உண்மைத்தமிழரே எனக்குத் தெரியும் சர்வேசன் காமெடி பண்ணுகின்றார். நீங்களும் காமெடிதான் பண்ணுகின்றீர்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா. சர்வேசன் அவர் சின்னப் பொடியன் பிழைச்சுப்போகட்டும்(அன்பே சிவம்) என விட்டுவிடலாம்.

கோவை சரளா மட்டுமல்ல ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, அசின் என கமலின் சில ஹிரோயின்கள் வரவில்லை, ஆனால் சித்தி கலக்கிஎடுத்துவிட்டார்.

நாஞ்சில் பிரதாப் said...

உலகநாயகனை தவறாக மதிப்பீடு செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.. :-)

ILA(@)இளா said...

all stomach fire' தானுங்களே?

Nataraj said...

எல்லாரும் சொன்ன மாதிரி அது கமலோட attempt of a joke-ங்க..இது மாதிரி தான் கோபிநாத் ப்ரோக்ராம்ல "எல்லாரும் கிள்ளினா நான் கிள்ளி வளவன் ஆயிடுவேன்னு ஜோக் மாதிரி ஒன்னு சொன்னார். தலைவர் ஜோக் சொன்னா ஆராய கூடாது. அனுபவிக்கனும்.

ஆமா, US-ல தானே இருக்கீங்க. இங்க விஜய் டிவி-ல இன்னும் போடலையேங்க. எங்க பார்த்தீங்க?

கோபிநாத் said...

தல...நானும் உங்களை அகராதி பிடிச்சவர்ன்னு சொல்லாமுன்னு வந்தேன் அதுக்குள்ள ஊரே சொல்லிடுச்சி ;))

என்ன ஆச்சு உங்களுக்கு. ;))

Nataraj said...

// பரிசல்காரன் said...
சர்வேசன் என்ற பெயர் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சிவனை வழிபடுபவர். கமல் தசாவதாரத்தில் வைணவராய் நடித்தார். அதனால்தான் அவரை திட்டமிட்டு இப்படித் தாக்குகிறீர்கள்.
இதே மாதிரி மத்தவங்களும் சர்வேசன் இத எழுதினதுக்குக் காரணம் கண்டுபிடிங்கப்பா)

//

Well, இதை அமெரிக்க முதலாளிதத்துவ மனோபாவத்துடன் தத்துவ விசாரம் பேசும் கெட்டிகாரத்தனம் எனவும் அர்த்தப்படுத்தி கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டால் அதற்கு பதில் என்னிடம் இல்லை, களப்பிரர் காலத்துல சமணர்லேர்ந்து, யூசுப் கான், குஜராத்தி கிழவர் வரை பார்க்காத விமரிசனமா, ஆ...

LOSHAN said...

ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)//

நடத்துங்க நடத்துங்க..
நல்ல விஷயமெல்லாம் கண்ணில் தெரியாதே..

goma said...

கோவை சரளா மட்டுமல்ல ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, அசின் என கமலின் சில ஹிரோயின்கள் வரவில்லை, ஆனால் சித்தி கலக்கிஎடுத்துவிட்டார்.

மற்றவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் இருந்திருக்கலாம் ....ஆனால் கோவைக்கிளி ஒதுங்கிக் கொண்டாரா,ஒதுக்கப் பட்டாரா..

Digtal House said...

avar sonna Sariyathan Irukkum

Truth said...

இம்முறை உங்களை மன்னிச்சுவிட்டுடலாம் :-)

agp said...

Surja, Ajith, Vijay were also missing?!!!

any politics?? :-)

agp said...

another joke by someone.. forgot who it is..

sonnar avaru, "anju varusham oru idathualle irunthaale ellam edamum teriyum, entha kurukku vazhiyle ponakka main road reach pannalam teriyum" , but kamal 50 varuzhuam intha idathulle irukkaru appadeennarru...


appadeena, kamal kurukku vazhi use pannrara? :-)

SurveySan said...

ILA,

///all stomach fire' தானுங்களே?//

not exactly! :)

SurveySan said...

Nataraj,

//ஆமா, US-ல தானே இருக்கீங்க. இங்க விஜய் டிவி-ல இன்னும் போடலையேங்க. எங்க பார்த்தீங்க?

///

ellaam, thiruttu t.v. dhaan ;)

எனது தேடல்! said...

SurveySan said...
ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)//

LOSHAN said...
//நடத்துங்க நடத்துங்க..
நல்ல விஷயமெல்லாம் கண்ணில் தெரியாதே..//

லோஷன், வரவேற்கப்படவேண்டிய கருத்து.
ஆனால்,
அது எல்லோருக்கும் பொருந்தும்.


SurveySan said...
//'அகராதி = dictionary'
'encylopedia = கலைகளஞ்சியம்'னு என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச விஷயம்.//

சர்வேசன் கூறியதுபோல் 'Encyclopedia' க்கு தமிழில் 'கலைக் களஞ்சியம்' என்ற சொல்லே பொதுவாக வழக்கிலுள்ளது.
எப்படியிருந்தபோதிலும்,
கமல் கூறிய மொழிமாற்றம் பிழையென்றே கருதவேண்டியுள்ளது.

மீனா கமலைப் பார்த்து 'நீங்கள் எல்லாம் தெரிந்த கலைக் களஞ்சியம்' எனக் கூறமுற்பட, 'நான் அப்படியொன்றும் எல்லாம் தெரிந்த கலைக் களஞ்சியம் அல்ல' என்று மொழிமாற்றத்தைப் பிழையாகக் கூறி கமல் சொல்லாமல் சொல்ல நினைத்தாரோ?
எப்பூடி?!!

Anonymous said...

இது கமலின் அதிகபிரசங்கித்தனம் இல்லை; சர்வேசனின் அதிகபிரசங்கித்தனம்!

செந்தழல் ரவி said...

கமல் ரசிகர்கள் ஏற்கனவே கடிச்சு குதறியிருப்பாங்க.

இருந்தாலும்...

சர்வேசன் என்ற ஐக்கான், பேக் மேன் மாதிரி இருக்கு. அவ்ளோதான்.

SurveySan said...

Ravi,

////சர்வேசன் என்ற ஐக்கான், பேக் மேன் மாதிரி இருக்கு. அவ்ளோதான்///

hmm. i started with a pie chart to come up with this. i luv pacman though :)

SurveySan said...

kingghost,

////இது கமலின் அதிகபிரசங்கித்தனம் இல்லை; சர்வேசனின் அதிகபிரசங்கித்தனம்!
////


avvvvv :)

ஜோ/Joe said...

ஸப்பாபா ..முடியல்ல :)

SurveySan said...

வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்னி.

இத்த ப்ரோகிராமை இன்னொரு முறை பாத்துட்டு மன்னிப்பு பதிவு போடணுமா, மீள் பதீவு போடணுமான்னு முடிவு பண்றேன் ;)

VSK said...

கண்டிப்பா மன்னிப்புப் பதிவுதான் போடணும்!:))
ரொம்பவே அவசரப்பட்டுட்டீங்க!
கமல் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கறப்பவே கூட நாலு பின்னூட்டம் பார்க்க ஆசைப்பட்டுப் போட்டமாரி இருக்கு!

[நானும் தி.டி.வி. பார்த்தாச்சு!:))]

SurveySan said...

VSK,

/////
கண்டிப்பா மன்னிப்புப் பதிவுதான் போடணும்!:)) ///

இல்லியேங்க. நேத்து கூட நண்பர் ஒருத்தரு நான் சொன்னதுதான் சரின்னாரே. தி.வி திரும்பிப் பாக்கணும்.

/////ரொம்பவே அவசரப்பட்டுட்டீங்க!
கமல் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கறப்பவே கூட நாலு பின்னூட்டம் பார்க்க ஆசைப்பட்டுப் போட்டமாரி இருக்கு!/////

ஹிஹி. இல்லை. நம்புங்க. அந்த நிகழ்ச்சி பாத்ததும், பதிவு எழுத பொறி தட்டியது உண்மை. ஆனா, நேர்மையான பொரி. உள்குத்து வைக்கலை :)