கமலின் திரை உலக வாழ்வில் 50 வருடம் முடிந்ததை கொண்டாட இந்த ஏற்பாடு.
ரொம்ப ரசிக்கும்படி அருமையா அரங்கேற்றியிருந்தார்கள்.
அதன் மேல்விவரங்கள்/டிட்பிட்ஸ் எல்லாம் எழுதலாம்னு தோணிச்சு.
அத மெதுவா சொல்லிக்கலாம், அதுக்கு முன்னாடி ஒரு நாரதர் வேலையப் பண்ணி ஹிட்ஸ் தேத்திக்கலாம்னு இந்தப் பதிவு. :)
கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் துளி கூட சந்தேகமே லேது. ஐ ஜஸ்ட் லவ் சம் ஆஃப் ஹிஸ் மூவீஸ்!
கமலின் வசீகரம் என்னை இஸ்துப் போட்டது, கமலின் சத்யா பாத்த போது.
இன்னும் நினைவில் நிற்பதில், சலங்கை ஒலி, குருதிப் புணல், மகாநதி, குணா, நாயகன், மை.ம.கா.ராஜன், etc.. அடுக்கிக்கிட்டே போகலாம்.
இவரின் தமிழ் பற்று எல்லார்க்கும் தெரிஞ்சதுதான். தமிழ் அறிவும் ஜாஸ்தி.
ஆனா, இந்தக் கமல்50 நிகழ்ச்சியில் ஒரு அதிகப் பிரசங்கித்தனம் செய்தார்.
கமலின் ஹீரோயின்ஸ் எல்லாம் மேடையில் தோன்றி ப்ளா ப்ளான்னு புகழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.
மீனா வந்து, கமல் ஒரு encyclopediaன்னு புகழ்ந்தாங்க.
இதைக் கேட்டதும், கமல், இடையில் குறுக்கிட்டு, "மீனா, அதுக்கு தமிழ்ல அகராதின்னு சொல்லுவாங்க"ன்னு அளந்தாரு.
தேவையில்லா டங்கிலீஷ்ல பேசரதை தவிர்க்க, இப்படி குத்திக் காமிச்சாராம்.
கொடுமை என்னான்னா,
'அகராதி = dictionary'
'encylopedia = கலைகளஞ்சியம்'னு என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச விஷயம்.
இது கமலுக்கு தெரியாததை மன்னிச்சிரலாம். ஆனா, இப்படி அரைகுறையா தெரிஞ்சவரு, மீனாவை குத்தஞ்சொல்லாம இருந்திருக்கலாம்.
அதையும் மன்னிச்சு விட்ரலாம். ஆனா, மீனாவை குத்தம் சொன்னவரு, பீட்டர் விட்ட மத்தவங்களையெல்லாம் கண்டுக்கலை. அதையும் மன்னிச்சிரலாம்.
ஆனா, அவரின் வாரிசு ஸ்ருதி ஹாசன், டமில் சினிமாப் பாடலை கொத்தி சொதப்பலா பாடி, தொடர்ந்து ஒரு ஆங்கிலப் பாடலை பாடினார். கமலும், புளகாங்கிதம் அடைந்து, அருகிலிருந்த ரஜினி, மம்மூட்டி கிட்டையெல்லாம், பெருமையா ஏதோ சொல்லிட்டு, தன் பொண்ணுக்கு ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்துட்டு, கைதட்டி சந்தோஷப் பட்டாரு.
மீனாக்கு ஒரு ரூலு? ஸ்ருதிக்கு ஒரு ரூலா?
என்னா சார் கொடுமை இது?
நாராயண நாராயண!
;)
பி.கு1: அந்த ப்ரோகிராம் ரொம்ப அமக்களம். தேடிப் பாருங்க!