recent posts...

Monday, February 18, 2008

இராமேஸ்வரம் - திரை விமர்சனம்

'யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்'னு டைட்டிலில் பார்த்ததும், ஏதோ பெரிய விஷயம் சொல்லப் போறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு வந்துடுச்சு.

எதிர்பார்ப்புக்கு ஏத்த அளவு படம் இருந்துதா?
இல்லியே. சப்புன்னு முடிஞ்சுடுச்சு.

ஈழப் ப்ரச்சனைதான படம்?
இல்லீங்க, வழக்கமான இன்னொரு காதல் கதைக் களம். ஸ்ஸ்ஸ். வேற யோசிக்கவே மாட்றானுங்களேய்யா.
ஹீரோ ஜீவா, ஈழத்துக்காரர். ஈழத்தில் இருக்கும் ப்ரச்சனைகளால், சொந்த ஊரை விட்டு, இராமேஸ்வரம் வந்துடறாரு. இவங்களுக்கு தங்க இடம் கொடுக்கரவரு ஊர் பெரியவர் லால். லாலின் மகள் பாவனா. அப்பரம் என்ன? வழக்கம் போல், பாவனா, புல் மேக்கப்ல, ஹீரோவ சுத்தி சுத்தி காதலிப்பாங்க. ஹீரோ கன்ப்யூஸ் ஆகி என்ன பண்றாருங்கரதுதான் கதை.

நல்லாதான இருக்கு கதை. என்ன கொறை கண்டீக?
நல்லாதான் இருக்கு. ஒரே ஆறுதல் ஜீவாவின், யதார்த்த நடிப்பு. புதுசா தேடித் தேடி கதைக்களம் அமச்சு நடிக்கறாரு. குட்!
படத்தின் குறை, எதை சொல்லணும்னு தெரியாம, ரொம்ப கொழப்பமா கொண்டு போன டைரக்டர்.
ஈழப் ப்ரச்சனையை பெருசா படம் போட்டுக் காட்டர மாதிரி, படத்துக்கு ஒரு பேரு. அதோட நிக்காம, 'யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்'னு ஒரு எக்ஸ்ட்ரா எபெக்டு வேர.
இத செஞ்சவரு, கொஞ்சமாவது நெஜ ப்ரச்சனையை மனசில பதிக்க வேண்டாமா?
கொஞ்சம் ப்ளாஷ் பேக் போயி, ஒரு 1/2 மணி நேரத்துக்கு, ப்ரச்சனைகளின் தீவிரத்தைக் காட்டியிருந்தால், ஜீவாவின் மேலும், அவரின் சுற்றம் மேலும், அவர்களின் துயரத்தின் மேலும் ஒரு பிடிப்பு வந்திருக்கும்.

ஹிட்லர் பல ஆயிரம் மக்களை கொண்ணவன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், ஹிட்லர் கதையம்சம் கொண்ட படங்கள் எடுக்கும்போது, அவனின் கொடுமைகள் சிலவற்றை காட்சிப்படுத்தினால்தான், பார்வையாளனுக்கு, அந்தப் படத்தின் மீது ஒரூ தாக்கம் வரும்.
அதை விட்டுட்டு, முதல் சீன்லயே, எல்லோரும் அழுதுகிட்டு, முகாமுக்குள்ள போற மாதிரி காட்சிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலை.
'அகதி' என்ற வார்த்தையின் வலி, நமக்கு வலையுலகில் புழங்குவதால், நமது ஈழத்து நண்பர்களின் பதிவுகளின் மூலம் தெரியும். ஆனால், சாதாரண ஒரு ரசிகன், படத்தைப் பார்க்கும்போது, ஒரு தெரிவும் கிட்டாது அவனுக்கு.

படத்தின் இசை?
முதல் பாடலும், முதல் அரை மணி நேர பின்னணி இசையும், படத்தோடு சேரவே இல்லை. 'ஏத்திப் போக கப்பல் வருமா' பாடல் அருமை. மத்த பாட்டெல்லாம் சுமார்.
'யதார்த்த' நடிப்பில் நுங்கு எடுத்துக் கொண்டிருந்த ஜீவா, வழக்கம் போல கனவுப் பாட்டுக்கு மாடர்ன் ட்ரஸ் மாத்தினது கொடுமை. ஒட்டவே இல்லை.

மத்த விஷயங்கள்?
போட்டோகிராபி அருமையா இருந்தது.
பாவனாவின் மாமாவாக வரும், 'மெட்டி ஒலி போஸ்'ன் நடிப்பும் நல்லாயிருந்தது.
பாவனா நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா, ஒட்டல.
மணிவண்ணன் நல்ல நடிப்பு. ஆனா, நமக்குதான் அவர் மேல ஒரு பிடிப்பு வரல.
லால், நல்ல அமைதியான நடிப்பு.
மற்ற பாத்திர படைப்பெல்லாம் யதார்த்தம்.

பாக்கலாமா? வேண்டாமா?
பாத்தே ஆகணும்னு சொல்ற அளவுக்கெல்லாம் படமில்லை.
படம், வழக்கமான பிசுபிசுப்புடன் கூடிய, கொஞ்சம் போர் அடிக்கும் ரகம்.

நீங்க பாத்தாச்சா?

பி.கு:
கீத்துக் கொட்டாயின் விமர்சனம்.
கோவி கண்ணனின் விமர்சனம்

16 comments:

வவ்வால் said...

சர்வே,

இப்போ அலைகள் ஓய்வதில்லைனு ஒரு படம் வந்திருக்கு, பாடல்கள் எல்லாம் நல்லா லேட்டெஸ்ட் ட்ரெண்ட்ல இருக்கு, இதில காதல் தான் பிரச்சினையாம், ஒரு புது பையன் கார்த்திக்னு பேரு நல்லா நடிச்சிருக்கான், படம் பார்த்தாச்சா, பார்த்தா ஒரு திரை விமர்சனம் போடவும் :-))

SurveySan said...

வாங்க வவ்ஸ்,

என்னங்க பண்றது, ஓ.சி, டி.வி.டி இப்பதான் கெடச்சுது :)

அடுத்ததா, கர்ணன்னு ஒரு படம், அதப் பத்தி எழுதலாம்னு ஒரு ஐடியா. நல்லா நடிச்சிருக்காரு ஜிவாஜி. ஆனா பாருங்க, ntrனு ஒரு தெலுங்க நடிகர் ரொம்ப ஓவர் ஏக்டிங் பண்றாரு. :)

துளசி கோபால் said...

பார்த்தாச்சு.

தலைப்பு ஏற்படுத்திய பரபரப்பைப் படம் ஏற்படுத்தலை.

SurveySan said...

//லைப்பு ஏற்படுத்திய பரபரப்பைப் படம் ஏற்படுத்தலை.//

அதே அதே.

கோவிக்கு தான், 'திரைக்காவியமா' தெரிஞ்சிருக்கு.
எப்படின்னு புரியல. :)

Santhosh said...

சர்வேசன்,
கடுப்பேத்தாதிங்க, மாயாஜாலுக்கு(தியேட்டாரா சார் அது? அது ஒரு கொடுமை) போயி வாழ்க்கையே வெறுத்த படம் இது. இடைவேளையில் அங்க வெளியே உட்காந்துகிட்டு இருந்த வாட்ச்மேன் கிட்ட சார் சார் படம் செம கேவலமா இருக்கு அழகிய தமிழ் மகன்ல போயி உக்காந்துகிட்டுமான்னு கூட கேட்டுப்பாத்தோம் அந்தாளு விடலை :((.. அப்படி இருந்தது படம்..

ஆரம்பத்துல செம் பில்டப்பு இம்முட்டு கிலோ மிட்டரு அம்முட்டு சதுரமீட்டருன்னு. ஹீரோ அகதியாம், ஆனா அகதின்னு சொன்னா கோவம் வருமாம், என்ன கொடுமை சார் இது? இதுவாவது பரவாயில்லை, ஹீரோவோட காஸ்டுயூமை பாத்திங்களா? எப்பவுமே சார் டிசைனர் ஜீன்ஸ், சர்ட்.. அகதி மாதிரியா இருக்காரு ஒரு nativity வேணாம்? அப்புறம் ஜீவா கூட இருக்குற இளைஞர் கூட்டம் எப்ப பாத்தாலும் கையில் சரக்கு கிளாசை வெச்சிகிட்டு போவணும் இலங்கைக்கு போவணும் அப்படின்னு 10 நிமிசத்துக்கு ஒரு டயலாக்(ஏதோ இவங்களை எல்லாம் இங்க கட்டி போட்டு கடத்திகிட்டு வந்த மாதிரி. அடிக்கடி ஒரு உடைந்த படகை வேற புதுப்பிக்கிற மாதிரி ஒரு பில்டப்பு).

பாவனா எப்ப பாத்தாலும் புல் மேக்கப்பை போட்டுகிட்டு காரணமே இல்லாம அவரை காதலிக்கிறேன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்கு. நடு நடுவுல அகதியின் காதலி அப்படி இப்படின்னு நாலு புத்தகங்களை வெச்சிகிட்டு சுத்துது.
நான் இங்க வந்து அனுபவித்த முதல் கொடுமை சீனா தானா, அடுத்த கொடுமை OM Shanthi OM அடுத்து இது, எல்லாம் அடுத்த அடுத்த வாரங்களில் நடந்ததா? சமீபத்துல பீமா முடியலை ஒண்ணுமே முடியலை, இதுக்கப்புறம் தான் முடிவு பண்ணேன் இதுக்கு மேல தியேட்டருக்கு போறது இல்லைன்னு ஒன்லி download இல்லாட்டி திருட்டு விசிடி(வெக்கமில்லாம சொல்லுறேன் இதுக்கு மேல் தமிழ் படங்களை அப்படி தான் பாக்க போறேன், முதலில் இவனுங்க ஒரு நல்ல படம் எடுக்கட்டும் அப்புறம் நான் தியேட்டருக்கு வரேன்..)

Santhosh said...

//Post a Comment (not moderated)//
Your comment has been saved and will be visible after blog owner approval.

என்ன கொடுமை சர்வேசன் இது?

SurveySan said...

சந்தோஷ்ல,
உங்கள மாதிரி தியேட்டர்ல போயி இத பாத்திருந்தேன்னா, இன்னும் கொஞ்சம் சூடா எழுதியிருப்பேன் ;)

தியேட்டருக்கு போய் ஒரு படத்த பாக்கணும்னா, பலமுறை விசாரிச்சிட்டுதான் போவேன். கடைசியா பாத்தது, தாரே ஜமீன் பர், கைவிடல :)


///////Post a Comment (not moderated)//
Your comment has been saved and will be visible after blog owner approval.
என்ன கொடுமை சர்வேசன் இது?
///////

moderation இல்லாமதான் வச்சிருந்தேன். சமீபத்தில் தான் திரும்ப moderate செய்யவேண்டிய நிர்பந்தம். ஒரு நல்ல நாள் பாத்து, மாடரேஷனை தூக்கிடறேன் ;)

SurveySan said...

அழகிய தமிழ் மகன், பாதிக்கு மேல போய் ஒக்காந்திருந்தீங்கன்னா, டார்சர் ஜாஸ்தியில்ல ஆகியிருக்கும்? ;)

திவாண்ணா said...

//லைப்பு ஏற்படுத்திய பரபரப்பைப் படம் ஏற்படுத்தலை.//

அதே அதே.

life? ஸர்வே, அர்த்தமே மாறிட்டுதே!

//இதுக்கு மேல தியேட்டருக்கு போறது இல்லைன்னு ஒன்லி download இல்லாட்டி திருட்டு விசிடி(வெக்கமில்லாம சொல்லுறேன் இதுக்கு மேல் தமிழ் படங்களை அப்படி தான் பாக்க போறேன், முதலில் இவனுங்க ஒரு நல்ல படம் எடுக்கட்டும் அப்புறம் நான் தியேட்டருக்கு வரேன்..)//

சந்தோஷின் நேர்மையை பாராட்டனும்!
யாரேனும் "படம்பிடிக்கலைனா பணம் வாபஸ்" ன்னு சொல்லுவாங்களா? அப்ப பாக்கலாம்.

வெற்றி said...

சர்வே,
விமர்சனத்துக்கு நன்றி.

நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. இருப்பினும் இப் படத்தைப் பார்த்த எனது சில நண்பர்களும் உங்களைப் போலத்தான் சொன்னார்கள்.

'சுத்திச் சுத்தி சுப்பன்ரை கொல்லேக்கைதான்' எண்டு யாழ்ப்பாணத்தில் சொல்லுவார்கள், அதே போல தமிழ்த் திரைப்படங்களும் காதல் எண்ட வட்டத்தை விட்டு வெளியேறுற மாதிரித் தெரியேல்லை.

வந்தியத்தேவன் said...

//சந்தோஷ் said...
ஆரம்பத்துல செம் பில்டப்பு இம்முட்டு கிலோ மிட்டரு அம்முட்டு சதுரமீட்டருன்னு. ஹீரோ அகதியாம், ஆனா அகதின்னு சொன்னா கோவம் வருமாம், என்ன கொடுமை சார் இது?//

சந்தோஷ் அகதி என்ற சொல் அகதியாக இருப்பனுக்குத்தான் வலிக்கும் அந்த வலியை எந்த இந்தியத் தமிழனும் இதுவரை அனுபவித்திருக்கமாட்டீர்கள்.
ஆகவே தயவு செய்து தெரியாவிடயத்தைக் கிண்டல் செய்யாதீர்கள். எப்படி ஒரு கால் ஊனமுற்றவரை நொண்டி என அழைப்பது அநாகரீகமோ அதேபோள் தான் இதுவும்.
மனிதனேயம் மிக்க எவரும் அகதி என அழைக்கவிரும்பமாட்டார்கள்.

Radha Sriram said...

சர்வேஸ்,
பேசாம இந்த படத்த பாத்த பாவத்த இந்தியாக்கு போறச்சே ராமேஸ்வரம் போயி ஒரு முழுக்கு போட்டு கரைச்சிடுங்க :):)

SurveySan said...

வந்தியத்தேவன்,

சந்தோஷ் கிண்டல் செய்யும் தொனியில் அதைச் சொல்லியிருக்கமாட்டார்.
படத்தில் உள்ள ஓட்டையைச் சுட்டிக் காட்டவே அப்படி எழுதியிருப்பார்.

I am sure he understands the issues faced by tamils.

SurveySan said...

Radha,

//சர்வேஸ்,
பேசாம இந்த படத்த பாத்த பாவத்த இந்தியாக்கு போறச்சே ராமேஸ்வரம் போயி ஒரு முழுக்கு போட்டு கரைச்சிடுங்க :):)//

இராமேஸ்வரம் அழகான ஊரு. முழுக்கு போடப் போறோமோ இல்லியோ, ஊரப் பாக்க கண்டிப்பா போலாம்.
அழகா எடுத்து காமிச்சிருக்காரு போட்டோகிராபர் :)

Santhosh said...

//தியேட்டருக்கு போய் ஒரு படத்த பாக்கணும்னா, பலமுறை விசாரிச்சிட்டுதான் போவேன். கடைசியா பாத்தது, தாரே ஜமீன் பர், கைவிடல :)//
தல,
என் கூட இருக்குறவனுங்க எல்லாம் ரொம்ப நல்லவனுங்க தல, ஒரு மொக்கை படத்தை பாத்துட்டான்னா போதும் எப்படியாவது ஒரு பத்து பேரையாவது கன்வின்ஸ் பண்ணி பாக்க வெச்சிடுவானுங்க. ஒருத்தன் ரெண்டு பேரா இருந்தா பரவாயில்லை ஒரு குரூப்பா அலையுறானுங்க :((.. அழகிய தமிழ் மகன் படத்தையே நாலு பேரை பாக்க வெக்கணுமுன்னு முடிவு செய்து ஒருத்தன் அதை நாலு தடவை பாத்தான்னா பாத்துகோங்களேன், இவனுங்களுக்கு எம்முட்டு கொலை வெறி இருக்குமுன்னு.

//moderation இல்லாமதான் வச்சிருந்தேன். சமீபத்தில் தான் திரும்ப moderate செய்யவேண்டிய நிர்பந்தம். ஒரு நல்ல நாள் பாத்து, மாடரேஷனை தூக்கிடறேன் ;)//
ரைட்டு விடுங்க..

//அழகிய தமிழ் மகன், பாதிக்கு மேல போய் ஒக்காந்திருந்தீங்கன்னா, டார்சர் ஜாஸ்தியில்ல ஆகியிருக்கும்? ;)//
இதெல்லாம் தெரிஞ்சே அவன்கிட்ட கேட்டுருக்கேன்னா பாத்துகோங்க இந்த படம் எம்முட்டு டார்சர் பண்ணியிருக்குமுன்னு..

//சந்தோஷின் நேர்மையை பாராட்டனும்!
யாரேனும் "படம்பிடிக்கலைனா பணம் வாபஸ்" ன்னு சொல்லுவாங்களா? அப்ப பாக்கலாம்.//
திவா பணம் யாருக்கு வேணும், ரிலாக்ஸா இருக்கலாமுன்னு போனா இவனுங்க மூணு மணி நேரம் டார்ச்சர் பண்ணி அதனால் உண்டாகும் மன உளச்சல் இருக்கே அதை சொல்லி மாளாது

//சந்தோஷ் அகதி என்ற சொல் அகதியாக இருப்பனுக்குத்தான் வலிக்கும் அந்த வலியை எந்த இந்தியத் தமிழனும் இதுவரை அனுபவித்திருக்கமாட்டீர்கள்.ஆகவே தயவு செய்து தெரியாவிடயத்தைக் கிண்டல் செய்யாதீர்கள். எப்படி ஒரு கால் ஊனமுற்றவரை நொண்டி என அழைப்பது அநாகரீகமோ அதேபோள் தான் இதுவும்.மனிதனேயம் மிக்க எவரும் அகதி என அழைக்கவிரும்பமாட்டார்கள//
வாத்திய தேவன்,
கண்டிப்பாக நான் கிண்டல் செய்யவில்லை.. புலம்பெயர்ந்தவர்களின் வலியை நான் அறிந்தவன் தான்.. உங்களுக்கு என்னுடைய வரிகள் அவ்வாறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

SurveySan said...

Thanks for the clarification santosh.