recent posts...

Wednesday, February 20, 2008

நல்லா தூங்குங்கய்யா, எல்லாம் வெளங்கிடும்!

தூக்கம் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. நான் கூட தூக்கத்தை துச்சமா மதிக்கறவன்தான். நேரங்கெட்ட நேரம் வரைக்கும் படத்த பாத்துக்கிட்டு, ராத்திரி பன்னெண்டு, ஒரு மணின்னு தூங்கரது.
ரொம்ப முக்கிய வேலை இருந்தா மட்டும், ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்துக்கரது.
இல்லன்னா, ஏழு, எட்டு மணிதான்.
சனி ஞாயிறுகள்ள, பக்கத்து வீட்டுலேருந்து சத்தமோ, வெளியில புல்லு வெட்டர சத்தமோ, வயிறு கப கபன்னு பசிச்சாலோதான் முழிப்பு வரும்.

இந்த மாதிரி ஒரு pattern இல்லாம தூங்கரது நல்லதில்லை.
சரியான நேரத்துல தூங்கி, தேவையான அளவு ஆழ்ந்த உறக்கம் கிட்டினால், அந்த நாள் முழுவதுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன் (முயன்றதில்லை :) ).

பதிவர் அனுராதா, தூக்கத்தை பற்றிய அருமையான கருத்துக்களை அனுப்பினாங்க. ( ஏற்கனவே இவங்க cancer பத்தி அனுப்பின பதிவு படிச்சிருப்பீங்க. )

உங்க பார்வைக்கு, தூக்கத்தின் நன்மைகள் கீழே, தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி டு அனுராதா.
இதன் ஆங்கில வடிவம் இங்கே.

இனி தொடர்வது, அனுராதா. படிச்சு முடிச்சுட்டு, உங்களுக்குப் பிடிச்ச தாலாட்டுப் பாட்ட சொல்லிட்டுப் போங்க. எனக்குப் பிடிச்சது, 'லாலி, லாலி.. வரம் தந்த சாமிக்கு...'.

===== ---- ==== ---- ====
நமக்கெல்லாம் முக்கியமான விஷயம், ‍வேறென்ன? தூக்கம்தான்

ராத்திரி 9 டூ 11 : ரொம்ப முக்கியமான நேரம். அழுவாச்சி சீரியல் பாக்கறதுக்கு இல்லைங்க. நம்ம உடம்புல இருக்கற தேவையில்லாத கெமிக்கல்ஸ் எல்லாம் வெளியே போற நேரம். அதுனால ரிலாக்ஸ்டா ஒரு இடத்துல உக்காருங்க இல்லை ஏதாவது ம்யூஸிக் கேளுங்க. அதை விட்டுட்டு சமைக்கிறேன்,குழந்தைகளை கவனிக்கறேன் முக்கியமா சீரியல் பாக்க உக்காந்தீங்க யாருக்கு நஷ்டம்? வேற யாருக்கு? உங்களுக்குதான்

ராத்திரி 11 மணி டூ 1 மணி ‍: நச்சுப்பொருள் வெளியேற்றம் இப்ப நம்ம நுரையீரல்ல‌, அது நம்மோட ஆழ்ந்த தூக்கத்துல நடக்கணும். ஆபீஸ்ல தூங்கறதெல்லாம் கணக்கில சேராதுங்க. அதுனால இந்த நேரத்துல கண்டிப்பா துங்குங்க.

விடிகாலை 1மணி டூ 3மணி ‍: இப்ப அந்த நச்சுபொருள் ப்ராசஸ் குடல்‍ல நடக்கும். அதுனால இப்பவும் நல்லா இழுத்து போத்தி தூங்குங்க. சொல்லியா தரணும்

விடிகாலை 3மணி டூ 5மணி : இப்ப நம்ம ப்ராசஸ் சுவாசப்பைல நடந்துட்டிருக்கும். அதுனால பல நேரங்கள்ல இருமல் இருக்கும் பரவால்லன்னு ரெண்டு தடவை இருமிட்டு விட்டுடுங்க. மருந்தெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க.. அது பாட்டுக்கு அந்த ப்ராசஸ் நடந்துட்டிருக்கு அதை ஏன் தொல்லை பண்றீங்க.

காலை 5மணி டூ 7மணி : விடிஞ்சிருச்சுங்க. எழுந்துக்கோங்க. இன்னும் நம்ம ப்ராசஸ் முடியலை. அது இப்ப நம்ம பெருங்குடல்ல நடந்துட்டிருக்கு. வேறென்ன. அதேதான். காலைக் கடன்கள் முடிக்கணுமே. வயித்தை சுத்தப்படுத்தணும் அது ரொம்ப முக்கியம்

காலை 7மணி டூ 9மணி : இப்ப நம்ம சிறுகுடல் நம்ம உடம்புக்கு தேவையான விஷயங்களை வாங்கறதுக்கு ரெடியா இருக்கு. அதுனால ஒண்ணும் யோசிக்காதீங்க சாப்பிட ஆரம்பிச்சுடுங்க. உடம்பு சரியில்லாம இருக்கறவங்க காலையில 6.30க்கு முன்னால கூட சாப்பிடலாம். (உடம்பு சரியில்லாம இருக்கறவங்க மட்டும். எல்லா நேரமும் சாப்பிட்டுட்டே இருக்கறவங்கள பத்தி நோ கமெண்ட்ஸ்..

உடம்ப கரெக்ட்டா வச்சுக்கணும்னு நினைக்கறவங்க காலையில 7.30க்கு முன்னால சாப்பிடறது பெட்டர். சிம்பு படம் வெற்றிகரமா ஓடற அதிசயம் (தியேட்டருக்கு வெளிய இல்லைங்க தியேட்டர் உள்ளே) நடந்தாலும் காலையில சாப்பிடறத மிஸ் பண்ணாதீங்க.

நம்ம தூங்கறதுனால (ராத்திரில) இவ்வளவு நல்லது இருக்கும்போது அதை ஏன் விடணும். நல்லா தூங்குங்க. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா நடுராத்திரில இருந்து காலையில் 4 மணி வரைக்கும் நம்ம எலும்பு மஜ்ஜை ரத்தத்தை உற்பத்தி பண்ணும். நாம முழிச்சிருந்து உருப்படியா ஒண்ணும் பண்ணப்போறதில்லை அட தூங்கறதையாவது சரியா பண்ணுவோமே. என்ன சொல்றீங்க.

அதுனால சீக்கிரம் துங்குங்க, சீக்கிரம் எழுந்துக்கோங்க. அம்புட்டுதான்ய்ய்ய்
===== ---- ==== ---- ====

நன்றி அனுராதா.

பி.கு1:
கேள்வி: இந்த மாதிரி நல்ல விஷயங்கள் அவங்களே பதிவா போடாமா, என் கிட்ட ஏன் போடச் சொல்றாங்க?
பதில்: ஒண்ணுத்துக்கும் ஒதவாத பதிவுகள வருஷம் பூரா போடறேனே, இந்த மாதிரி எப்பயாச்சும், ப்ரயோஜனம் இருக்கரா மாதிரி போட்டுப் பொழச்சுக்கோன்னு நெனைக்கறாங்களோ என்னமோ :)

பி.கு2:
சங்கமம் சிறந்த பதிவர்கள் வாக்கெடுப்பு நடத்தறாங்க. கண்டுக்கோங்க. வாக்காதவங்க வாக்குங்க. வாக்கப் பிடிக்கலன்னா, கருத்தையாவது அங்க சொல்லிட்டுப் போங்க. கடைய விரிச்சு ஒக்காந்திருக்காங்கல்லா.
தேர்தல்1
தேர்தல்2
தேர்தல்3

;)

Flickr'ல் sleep என்று தேடியபோது மாட்டிய அழகான Sleeping Beauty.


மேலும் தூங்குமூஞ்சி படங்கள் இங்கே

11 comments:

SurveySan said...

flicker sleeping pics.

http://flickr.com/search/?q=sleeping&m=tags

SurveySan said...

பிடிச்ச தாலாட்டு பாட்ட சொல்லிட்டுப் போங்க, கானா பிரபாகிட்ட நேயர்விருப்பமா, மொத்தமா கொடுத்து போடச் சொல்லிக் கேக்கறேன் ;)

எனக்கு பிடிச்சது, லாலி லாலி.

வடுவூர் குமார் said...

இந்த கால அட்டவணை எந்த வயதுகாரர்களுக்கு?
நம்மாட்களுக்கு தூங்க சொல்லியா கொடுக்கணும்? :-) ஆனா எப்ப? என்று சொல்லியிருக்கீங்க.

உண்மைத்தமிழன் said...

சர்வேசன் புதிய செய்திகளையும், அதன் அறிமுகத்திற்கும் நன்றிகள்.

'லாலி, லாலி வரம் தந்த சாமி' பாடலைவிட 'ஓ பாப்பா லாலி.. கண்மணி லாலி' பாட்டு இயல்பாகவே தூங்க வைக்கும் பாடல்..

நிலா said...

ஹையோ, அந்த தூங்கும் குட்டிப்பையன் செம அழகு. ம்ஹூம் எங்கப்பாவும் எந்த நேரமும் என்ன போட்டோ எடுத்துகிட்டேதான் இருக்கார். இந்த மாதிரி ஒரு போட்டோகூட வரல :(

சர்வேசன் அங்கிள் நீங்கள்ளாம் அவருக்கு சரியா கத்துக்கொடுங்க

நிலா said...

ஹையோ, அந்த தூங்கும் குட்டிப்பையன் செம அழகு. ம்ஹூம் எங்கப்பாவும் எந்த நேரமும் என்ன போட்டோ எடுத்துகிட்டேதான் இருக்கார். இந்த மாதிரி ஒரு போட்டோகூட வரல :(

சர்வேசன் அங்கிள் நீங்கள்ளாம் அவருக்கு சரியா கத்துக்கொடுங்க

சின்னப் பையன் said...

சரி வுடுங்க... நான் தூங்கப் போறேன்... அப்புறமா வந்து படிக்கிறேன்....:-)

SurveySan said...

வடுவூர் குமார்,

//இந்த கால அட்டவணை எந்த வயதுகாரர்களுக்கு?
நம்மாட்களுக்கு தூங்க சொல்லியா கொடுக்கணும்? :-) ஆனா எப்ப? என்று சொல்லியிருக்கீங்க.//

:) எப்ப தூங்கரோங்கரதுதான் முக்கியம். சாப்ட ஒடனே சில பேர் தூங்குவாங்க, அதெல்லாம் சரிப்பட்டு வராது

SurveySan said...

உண்மைத் தமிழன்,
//'லாலி, லாலி வரம் தந்த சாமி' பாடலைவிட 'ஓ பாப்பா லாலி.. கண்மணி லாலி' பாட்டு இயல்பாகவே தூங்க வைக்கும் பாடல்..//

அப்படியா சொல்றீங்க. எனக்கென்னம்மோ, லாலி கொஞ்சம் softஆ இருக்கர மாதிரி தெரியுது.ஓ பாப்ப்பா லாலி, கொஞ்சம் மாடர்ன்.

SurveySan said...

நிலா,

//ஹையோ, அந்த தூங்கும் குட்டிப்பையன் செம அழகு. ம்ஹூம் எங்கப்பாவும் எந்த நேரமும் என்ன போட்டோ எடுத்துகிட்டேதான் இருக்கார். இந்த மாதிரி ஒரு போட்டோகூட வரல :(
//

:) உங்கப்பா என்னவிட சூப்பரா படம் எடுக்கறாரேம்மா. அவருக்கு நான் என்னத்த சொல்லித்தர ;)

SurveySan said...

ச்சின்னப் பையன்,

//சரி வுடுங்க... நான் தூங்கப் போறேன்... அப்புறமா வந்து படிக்கிறேன்....:-)//


நல்லா தூங்கு நல்லா தூங்கு.