ஆடர் ஆடர் ஆடர்... ஷ்ஷ்!
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்1: போடோவின் அட்டூழியங்களும் அதைத் தொடர்ந்த அமைதி கெடுக்கும் சூழல்களும்.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
டவாலி: போடோ, போடோ, போடோ
டவாலி: 'போடோ'வ தனியா நிக்க வுடுங்க. யாரும் கிட்டப் போகாதீங்க. மத்தவங்களெல்லாம் எதிர்த்த கூண்ட்ல போய் நில்லுங்க.
ஜட்ஜு: இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. கேடுகெட்ட பல மனிதர்களையும் கண்டிருக்கிறது. இந்த வழக்கு விசித்திரமானதல்ல. மிகக் கேவலமானது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போ.டோ, வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் மனிதர்களைப் போன்றவன் அல்ல. மனம் பிழன்றவன். பல இடங்களில் குழப்பம் விளைவித்தவன். என்ன செய்கிறோம் என்று தெரிந்தே இன்னல்கள் பல புரிந்தவன். படித்தவன், ஆனால் புத்தியைப் பிரயோகிக்காமல், ஈன-புத்தியை ப்ரயோகித்தவன். இங்கு சாட்சி கூண்டில் இருக்கும் பலரின் சாட்சிகளின் படியும், பலரின் வாக்குமூலத்தின் படியும், இன்ன பிற சாட்சிகளின் அடிப்படையிலும், இவன் செய்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. போடோ, உங்கள் தரப்பில் யாரும் வாதிட வராத நிலலயில், நீங்கள் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா?
போடோ: இதையெல்லாம் நான் மறுப்பேன் என்று எதிர்பார்ப்பீர்கள். இல்லை நிச்சயமாக இல்லை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்தும் ப்ரயோகித்து பலரை அர்ச்சனை செய்தேன். ஏன்? பதிவுலகம் நல்லவர்கள் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. டோவைக் கேடுகெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தேன். ஏன்? அது ஏன்னு எனக்கே தெரீல. உனக்கேன் இவ்வளவு அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன். சமீபத்தில் சமீபத்தில் என்று தினமொரு டார்ச்சர் தரும் பதிவுகள். ஜிவ்வென்று சூடு தலைக்கேறும் எரிச்சலூட்டும் வசனங்கள். பொதுநலமா என்பீர்கள் இதிலே சுயநலம் தான் இருக்கிறது. இப்படிச் செய்வதால் எனக்குள்ளே ஏதோ ஒரு இன்பம் கிட்டியது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்த படுத்துகிறதே மீன், அது போலல்லாமல், நல்ல ஆகாரம் சாப்பிட்டுவிட்டு, பொழுது போகாத நேரங்களில் பதிவுலகில் அழுக்கேற்றுவதே பிழைப்பாய் வைத்திருந்தேன்.
ஜட்ஜ்: செய்த குற்றத்தை முழுவதுமாய் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று தெரிகிறது. அப்படித்தானே?
போடோ: @#$@#$@#$!!!$#!$!$!$#@$ !$@#$#@$@#$#@
ஜட்ஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். அவன் வாய்ல ஒரு ப்ளாஸ்திரிய போடுங்க. எப்படித்தான் இவ்ளோ நாள் தாக்குப் பிடித்தார்களோ பாவம். ஆடர் ஆடர். எங்க வுட்டேன்? ஹாங். குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், போடோ அடுத்த ஒரு வருடத்துக்கு, தினம் ஆயிரம் முறை, 'இனி நான் கெட்ட வார்த்தைகள் எழுதவோ, பேசவோ, நினைக்கவோ மாட்டேன்' என்று ஜெர்மனில் எழுதி டோவுக்கு அனுப்ப வேண்டும்.
பார்வையாளர்கள்: நல்ல தீர்ப்பு. ப்ரென்சுல எழுத சொல்லிருக்கணும். ப்ளா ப்ளா ப்ளா.. ஜட்ஜய்யா, இதுல சம்பந்தப்பட்ட மத்தவங்களுக்கு என்ன தண்டன?
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். வாதிப் பிரதிவாதிகள் சிலரும், போடோவின் நல விறும்பிகள் சிலரும் போடோவுடன் நட்பு பாராட்டியிருப்பது இந்த வழக்கு விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஆனால், கெட்ட வார்த்தை விநியோகத்தில் யாருக்கும் பங்கு இருந்ததாய் திட்ட வட்டமாய் தெரியாத காரணத்தால், இன்னார் தான் அன்னார், அன்னார் தான் இன்னார், என்ற சப்பைக் கட்டு வாதங்களை இந்த நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. ஆகையால், போடோக்கு நடந்ததை நினைவில் கொண்டு, கெடுவான் கேடு நினைப்பான் என்ற தர்மத்தின் உண்மையை புரிந்து கொண்டு, அனனவரையும், பழதை மறந்து, புதிய உற்சாக பாணம், ச, உற்சாக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமாய் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், ஒழுக்கமாய் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்2: சிலரின் so-called 'கலீஜ் உவ்வே' பதிவுகளை நீக்கக் கோறிக்கை.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். அனைவரின் கருத்து சுதந்திரமும், வாசிப்புச் சுதந்திரமும் ரொம்ப முக்கியம். குற்றவாளிக் கூண்டில் நிற்பவரின் பதிவுகளைப் பார்த்தேன். நூறில், நாலஞ்சு பதிவுகள், நல்ல கருத்துடன் தேருது. ஆனா, அந்த மூணு நாலும் கூட, கருத்து சுதந்திரத்தினை கேலி செய்யும் விதத்தில் கலீஜ்-உவ்வே தலைப்புடன் வெளிவருது. குறிப்பா ஆப்ரிக்கா காட்டுப் பழங்குடியனரின் ஒரு கெட்ட பழக்கவழக்கத்தை பறைசாற்றும் பதிவு பார்த்தேன். நல்ல கருத்துக்கள் அதில். ஆனா, அதுக்கு, கலீஜ்-உவ்வே தலைப்பு அநாவசியமானது.
பார்வையாளர்: ஆப்ரிக்கா காரனுக்கு தமில் தெரியுமா? நம்ம ஊருக்கு எதுக்கு அந்த பதிவு? டோக்கு ஆப்ரிக்க மொழி தெரிஞ்சா மொழி பெயர்து அனுப்புனா நல்லாருக்கும். கச முசா. ப்ளா ப்ளா ப்ளா.
ஜட்ஜ்: ஆர்டர் ஆர்டர். சம்பந்தப்பட்ட பதிவர், ட்ரமாட்டிக்கா எழுதும் கலீஜ்-உவ்வே தலைப்பை தவிர்க்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. டவாலி, அவரின் பதிவுகளை அடுத்த ஒரு வாரத்துக்கு கண்காணித்து, இந்த நீதிமன்றத்துக்கு தெரியப் படுத்துவார். கலீஜ்-உவ்வேக்கள் தொடர்ந்தால், அவரின் பதிவுகள் நீக்க உத்தரவிடப்படும். அதைத் தவிர, 'இனி கலீஜ்-உவ்வே தலைப்பு வவக்கமாட்டேன்' என்று ஆயிரம் முறை ப்ரென்சில் எழுதி, கசக்கி கிழித்து ஒரு கோணிப்பைக்குள் போட்டு, அது நிறம்பும் வரை தொடர்ந்து எழுத வேண்டி வரும். எச்சரிக்கையுடன் அவரை விடுவிக்கிறோம்.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உபயோகமாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்3: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி.
ஜட்ஜ்: எழுத்தாளர் சுஜாதா ஒரு மகத்தான கலைஞர் என்பது யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவரின் எழுத்துலக வெற்றியே இதை பறைசாற்றும். இந்த நதீமன்றம், சுஜாதாவை, எலோரும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிக் கிழிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.
ஆனால், மறைந்த ஒருவரைப் பற்றி ஏளனமாக எழுதுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
ஓ.சியில் எழுத ப்ளாக் இருக்கிறது, கேள்விகள் கேட்காமல் தெரட்டிகள் தெரட்டுகிறது என்ற காரணத்தால், எல்லோரும் நக்கீரன் ஆகி விட முயற்சிக்க வேண்டாம் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. மறைந்த கலைஞனை ஏளனம் செய்வது தூற்றுவதும், மகாக்-கேவலம், கேஸ்2வை விட, இது உவ்வே ஜாஸ்தி.
"VCR மாதிரி lifeலயும் ஒரு rewind button இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்"
- சுஜாதா
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உருப்படியாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
நல்லா இருங்க!
4 comments:
//'இனி நான் கெட்ட வார்த்தைகள் எழுதவோ, பேசவோ, நினைக்கவோ மாட்டேன்' என்று ஜெர்மனில் எழுதி டோவுக்கு அனுப்ப வேண்டும்.
பார்வையாளர்கள்: நல்ல தீர்ப்பு. ப்ரென்சுல எழுத சொல்லிருக்கணும்.//
அத்த வேற அந்த டோ அதுல ஜெர்மன் சரியா இருக்கான்னு செக் பண்ண வேண்டியிருக்குமே. நல்லா வெளங்கிடும். இந்த அழகுல ஃபிரெஞ்சிலே வேறயா?:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
vazakkam pola, azagu thamizla naraya pinnoottam vandhudhu :)
Billa,
Arakkonam mama patriya thagavalukku nanri. :)
enga irundu ivlo details ellaam pudikkareenga?
Post a Comment