recent posts...

Tuesday, February 05, 2008

Lay Off - சரியா தப்பா?

Lay Off என்பது அமெரிக்க வாழ்வில் ரொம்ப சாதாரணமான விஷயமாயிடுச்சு.
2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.

UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )

lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):
Layoff is the termination of employment of an employee or (more commonly) a group of employees for business reasons, such as the decision that certain positions are no longer necessary

அதாகப்பட்டது, ஒருவரோ, ஒன்றிற்கு மேற்பட்டவரோ, இனி நமக்கு தேவையில்லை என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து, அந்த நபர்களை வேலையை விட்டு நிறுத்தும் முறை layoff.
இந்த மாதிரி layoffகள், cost-cutting என்று சொல்லப்படும், செலவைக் குறைக்கவே அதிகமா செய்வாங்க.

இது ஒரு அலுவலகத்தில் இருக்கும் ப்யூன் முதல், CEOவரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

ஆனா, நிறுவனத்தின் சரிவு தொடங்கும் போது, மிக்காரும், இது கீழ் நிலை வேலையாட்களை முதலில் பாதித்து, படிப்படியாகத்தான், மேல் மட்ட அதிகாரிகளை பாதிக்கும்.

இப்போ, இது, இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் துவங்கியுள்ளது.

IBM, TCS இந்த layoffகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்காங்களாம்.

ஆனா, கொடுமை என்னன்னா, இவங்க, தெருத் தெருவா, காலேஜ் காலேஜா ஓடிப் போய், சரியான தேர்வுமுறை எல்லாம் இல்லாமல், கைல கெடச்ச எல்லா பசங்களையும் வேலை தரேன் வேலை தரேன்னு வளச்சு போட்டுக்கிட்டு, இப்ப, சின்னதா தங்களின் லாபம் குறையும் என்று தெரிந்ததும், தயவு தாட்சண்யம் இல்லாம, "நீ எனக்கு இப்போதைக்கு தேவையில்லை, கெளம்பு" என்பது கொஞ்சம் கசப்பாதான் இருக்கு கேக்க.

இன்னொரு பக்கம் யோசிச்சா, ஒரு நிறுவனத்தை நடத்தரவங்க, லாபம் ஈட்டுதலை குறிக்கோளா வச்சுக்கிட்டு காயை நகத்தரது எப்படி தப்பாகும்னும் தோணுது.

உதாரணத்துக்கு, நீங்களே, உங்க சொந்த பணம், ஒரு லட்சத்தை போட்டு ஒரு ஐஸ்-க்ரீம் கடை ஆரம்பிக்கறீங்க.
ஆரம்பத்துல, நல்ல வாடிக்கையாளர்கள் வராங்க.
மாசத்துக்கு 10,000 லாபம் கெடைக்குது.
சரின்னு, ரெண்டு பசங்கள வேலைக்கு வெக்கறீங்க.
ஆளுக்கு 1000 சம்பளம்.
ஒரு வருஷம் ஆச்சு. நல்லா போகுது கடை.
இதுவரை, ஒரு வருஷத்துல, 1,00,000 லாபம் கெடச்சுடுச்சு.

குளிர் காலம் ஆரம்பிச்சு, வாடிக்கையாளர்கள் வரவு கொறையுது.
உங்க லாபம் 10,000 லேருந்து கொறஞ்சு கொறஞ்சு 2,000 ஆவுது. இப்ப ரெண்டு பேருக்கு சம்பளம் மத்த செலவெல்லாம் போவ, ஒரு 1,000 நஷ்டம் ஆவுது.

ரெண்டு பேருக்கு சம்பளம் கொடுத்து, இந்த கடைய நடத்தரது கட்டுப்படி ஆவாதுன்னு தெரியுது.

என்ன பண்ணுவீங்க? ரெண்டு விஷயம் பண்ணலாம்.

1) இப்படியே போனா சரிவராது. ரெண்டு பேர்ல ஒருத்தர வீட்டுக்கு அனுப்பிடலாம். கடைய, தொடர்ந்து நஷ்டமில்லாம நடத்தலாம்.
2) மொத வருஷத்துல தான் 1,00,000 லாபம் பண்ணியாச்சே. இந்த காசு கரையர வரைக்கும், ரெண்டு பேரையும் வேலைல வச்சுக்கிட்டு, நிறுவனத்தை நஷ்டத்துக்கே நடத்தலாம்.

நீங்க என்ன பண்ணுவீங்க?

யோசிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச காரணங்கள சொல்லுங்க. அப்படியே ஒரு வாக்கும் வாக்குங்க! :)

24 comments:

SurveySan said...

தப்புங்கரவங்க, ஏன்னு சொன்னா நல்லாயிருக்கும்.

ஒரு நிறுவனம் வேறு என்ன செய்யணும்னும் சொல்லலாம்.

Anonymous said...

If you want to exit from the company, you know how they are begging to hold the canditate, increments,bonus etc....
Still you don't want the job you will get all the troubles till end day. In case of lay off lot of companies didn't give proper intimation before that.If they give valid reason and time its ok.

The voting result concludes, 8 non-IT peoples and 3 IT peoples voted (Y/N) (I am an IT'ian)
These who 8 and all will happy if IT feild goes down.Nothing more than Jealous :)

---KING

Anonymous said...

The companies who lay off people can give a small amount of the companies shares to the laid off employees.

So as the share value rises because of increased profits (because of cost cutting) the laid off employees also will benefit and see reason in their firing.

This was proposed in 2001 but i dont know any company actually did it.

As for your ice cream boy question. I will restructure the salary linking a major part with the revenues.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஒண்ணும் செய்ய வேணாம். என் நண்பனுக்குக் கிடைத்த மாதிரி 6 மாச சம்பளத்தை வேலை இழப்புக்கு ஈடா கொடுத்தா போறும்.

ஓகை said...

எந்த காரணமும் சொல்லாமல் வேறு நிறுவனத்துக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் மசால் வடை நன்றாக இருக்கிறது என்பது போன்ற அல்ப காரணங்களுக்காக நிறுவனப் பொருப்புகளை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்லும் உரிமையை தொழிலாளர்கள் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தொழிலில் பல காரணங்களினால் நட்டமடைபவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களின் பல நடவடிக்கைகளில் ஆட்குறைப்பும் ஒன்று.

வேலை நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு முடிந்தவரை நட்டயீடு கொடுப்பது ஓரளவுக்கு இருதரப்புக்கும் பாதிப்பில்லாத ஒரு தீர்வாக இருக்கும்.

தோழி said...

hello Surveysan, Very good thing to discuss. But again there are two things.

1. What is the purpose of this discussion. Becos whatever we discuss here is not going to reach TCS or IBM anymore. They have already taken decision.
2. We can atleast start the discussion somewhere instead of thinking this didnt happen to me.

So lets start the discussion.. I would say its wrong to take a decision now. becos...

If we start discussing about their point of view as per the example you have given, yes its true. every owner would love to make money. Take your example when you start your ice cream business you know this business is for summer and the owner should forecast in winter the business might come down. And of course the competition is increasing in every business. we are not the only business in the Industry. There are going to be lot of players. so when you are planning your business strategy these guys should have expected all these. Without the forecast how are they doing business. Just to show to the customers that i have so much of employees with me to work for you, they have recruited. And with no reason they are sending them out.

If they had forecasted in advance this wouldnot hve happened now.

But unnecessarily they hiked the salary also. now its affecting everything.

Based on their starting salary, many guys have invested in many things. If they lay off and cut their salary now many things are going to get affected. But the cost of living in the outside world will not change. No house owner is going to reduce the rent, no price in any restaurant is going to come down. So when everything remains the same, if the money flow keeps changing this is not really good for the Indian Economy.

Finally, both the owner and the employees have to forecast what will happen tomorrow.

Not only the night life and lavish expenditures are the Life. Life has got many things which are to be anticipated. So guys plan out well for everything.

let me complete my opinion now and interested to hear from others.

Anonymous said...

Hi,

do you think a petty ice cream shop and a big organization like TCS or IBM is same?

Before hiring, wont they have any statergy like how many employees they require for the future expected projects?

If they are not so sure they can very well hire the employee for contractual positions.

Being such a huge organization they should have some kind of social responsibilities.

If the lay off is due to the lack of companies planning, then the HR should be fired first.

(i am not talking abt termination cases due to fack documents or experiences)

lay off is a definite no no.

Nithya

SathyaPriyan said...

சர்வேசன் நல்லதொரு விவாதத்தை தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

இதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பார்க்க முடியாது.

TCS/IBM போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருமானத்தை தீர்மானிப்பது அந்நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கையே.

Revenue is a function of manpower.

ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்களின் budgetted revenue விற்கு தகுந்தது போல atrition rate ஐ கணக்கிட்டே ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். இதெல்லாம் மிகுந்த பொருட் செலவில் செய்யப்படும் operations planning/recruitment planning.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது எல்லாம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வர்த்தகம் இப்படியெல்லாம் போகும் என்ற forecast அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. It all depends on the budgetted data and all other external influencing factors. Any predictions can go wrong.

அதனால் இதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாமல் போனால் செலவை குறைக்க இந்த ஆட்குறைப்பு அவசியமானது. நிறுவனம் தொடர்ந்து நடக்க குறிப்பிட்ட operating margin ல் நிறுவனத்தை தொடர்ந்து இயங்க வைப்பது அவசியம்.

இன்னும் தெளிவாக சொன்னால் ஒரு financial year ல் share holder களுக்கு எவ்வளவு அதிகம் லாபம் ஈட்டி தந்திருக்கிறது ஒரு நிறுவனம் என்பது தான் முக்கியமே அல்லாது எவ்வளவு ஆட்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறது என்பது அல்ல.

இன்னும் பச்சையாக சொன்னால் தொழில் நுட்ப பொறியாளர்களின் நன்மதிப்பை பெறுவதை விட share holders/investers/customers போன்றவர்களின் நன்மதிப்பை பெறுவது தான் முக்கியம். அதற்கு ஆட் குறைப்பு அவசியம் என்றால் அதனை செய்து தான் ஆக வேண்டும்.

திரு ஓகை சொன்னது போல market நன்றாக இருந்த போது சாப்பாட்டில் கல் இருந்தது என்றெல்லாம் காரணம் காட்டி ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு குரங்கை போல தாவியவர்கள் இன்று நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது நியாயம் இல்லை.

இவ்வளவும் சொல்லி விட்டு கடைசியாக ஒன்றும் சொல்ல வேண்டும். அமெரிக்காவில் lay-off அதிகம் என்றால் இங்கு மக்கள் அதனை எதிர் பார்த்தே இருக்கிறார்கள். இங்கு அரசங்கத்தால் unemployment benefits அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு எந்த வேலை செய்வதும் இழிவாக கருதப்படுவது இல்லை. தகவல் தொழில் நுட்ப வேலை போனால் ஏதாவது மளிகை கடையிலோ துணிக் கடையிலோ வேலை செய்தாலும் minimum wage guarantied.

ஆனால் இந்திய சூழலில் அவ்வாறெல்லாம் இல்லாத நிலையில் ஒருவருக்கு திடீரென்று வேலை போய்விட்டால் அவர் மட்டும் அல்லாமல் ஒரு குடும்பமே தவிக்கும் நிலை இருக்கிறது. தவறுகள் இரு தரப்பிலும் இருந்தாலும் பாதிப்புகள் அதிக அளவில் ஊழியர்களுக்கு தான் என்பதால் அவர்கள் அதிகப் பொறுப்போடு இருக்கத் தொடங்குவது அவசியம். மாற்றத்தை பாதிக்கப்பட்டவர்களே தொடங்க வேண்டும்.

SurveySan said...

anony,
//In case of lay off lot of companies didn't give proper intimation before that.If they give valid reason and time its ok.
//

I agree. Usually, they won't give much advance notice due to various reasons. fear of vandalism by the laid-off employee is one of the reasons. but the company could/should pay out a few months salary and lay-off.

SurveySan said...

anony,

///The companies who lay off people can give a small amount of the companies shares to the laid off employees.
///

good idea. but giving out shares is also a expensive procedure. If they had the money to spend, they would probably retain their employees instead ;)

SurveySan said...

anony,

///The companies who lay off people can give a small amount of the companies shares to the laid off employees.
///

good idea. but giving out shares is also a expensive procedure. If they had the money to spend, they would probably retain their employees instead ;)

SurveySan said...

சாமான்யன்,
//ஒண்ணும் செய்ய வேணாம். என் நண்பனுக்குக் கிடைத்த மாதிரி 6 மாச சம்பளத்தை வேலை இழப்புக்கு ஈடா கொடுத்தா போறும்.//

அதே அதே!
நம்ம ஊருக்கு, இப்படி கண்டிப்பா செய்யணும்.

SurveySan said...

ஓகை,

நியாயமான கருத்துக்கள்.

//வேலை நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு முடிந்தவரை நட்டயீடு கொடுப்பது ஓரளவுக்கு இருதரப்புக்கும் பாதிப்பில்லாத ஒரு தீர்வாக இருக்கும்.//

கண்டிப்பா செய்யணும்.

SurveySan said...

anuradha,

//1. What is the purpose of this discussion. Becos whatever we discuss here is not going to reach TCS or IBM anymore. They have already taken decision.///

ஹி ஹி. இப்படி எல்லாம் யோசிச்சா, அப்பரம் பாதி பேரு எழுதவே முடியாதே ;)
the idea is to kindle peoples thoughts. :)


/////If they had forecasted in advance this wouldnot hve happened now. //////

forecasts will not always be perfect. If they can predict the future with 100% perfection, world would be a better place :)


////Finally, both the owner and the employees have to forecast what will happen tomorrow. ////

world is filled with rapid changes. both should take precautionary expects and expect the unexpected ;)

SurveySan said...

anony,

/////do you think a petty ice cream shop and a big organization like TCS or IBM is same?

Before hiring, wont they have any statergy like how many employees they require for the future expected projects?
//////

icecream shop and big biz, could have the same blue print in terms of running the show.

they both have strategies, but unfortunately all forecasting and strategising won't always play out favourably.

rough times need rough actions.

SurveySan said...

////Being such a huge organization they should have some kind of social responsibilities./////

yeah right! :) money matters my friend. they will act responsibly for their stake holders.

/////If the lay off is due to the lack of companies planning, then the HR should be fired first.///

அது சரி! HR will eventually get impacted as well. But, we can't blame only them for the downturn.

Anonymous said...

When the employees have the right to leave a company for better salary, they simply excercise their choice. Likewise, when the employers dont need the employee anymore, they excercise their choice.

In the IT job boom time, how many employees left their employers in middle of projects? How many prospective employees shopped/negotiated for higher salary with multiple offers in hand. The wheel is simply turning my friend!

Anonymous said...

//Before hiring, wont they have any statergy like how many employees they require for the future expected projects?
//

Stupid argument .. you are not able to comprehend or draw parallels.

In case of large corporations, there are economic factors outside their control of preparing strategy, forecasting etc. No business can forecast things like sub-prime crisis or 9/11 crisis.

மங்களூர் சிவா said...

//
market நன்றாக இருந்த போது சாப்பாட்டில் கல் இருந்தது என்றெல்லாம் காரணம் காட்டி ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு குரங்கை போல தாவியவர்கள் இன்று நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது நியாயம் இல்லை.
//

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பிய கலவரம் ஓயவில்லை அதுக்குள் சாப்ட்வேர் கம்பெனிகள் கிளப்பும் கலவரமா??

supersubra said...

In the name of social security advocated by communists I know how bank employees spoiled the whole banking system and brought all banks to a stand still level. Now after VRS Scheme and new marketing strategies so many govt banks are really growing and challenging the private banks. Even now many of the existing employees are ignorant of the new technologies that is enveloping rest of the industry and refuse to change. IBM has given pink slip only after conducting an aptitude test and removed the disqualified persons only. When Survival of the fittest is the norm of the day for a overall better growth it is inevitable.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
சத்யப்ரியன் சொல்ரார்.
அதிக அளவில் ஊழியர்களுக்கு தான் என்பதால் அவர்கள் அதிகப் பொறுப்போடு இருக்கத் தொடங்குவது அவசியம். மாற்றத்தை பாதிக்கப்பட்டவர்களே தொடங்க வேண்டும்.
==>
என் மென்பொருள் மார்க்கெடிங் நண்பன் சொல்வான் "இதுக்குத் தான் நான் கைப்பையில் எப்போதுமே ஒரு பயோடேட்டா வச்சுருப்பேன். நான் போற நிறுவனத்துக்கு என் நிறுவனத்தோட மென்பொருட்களை விற்க்கப் பார்ப்பேன். வாய்ப்பு இருந்தா, என்னோட பயோடேட்டாவைக் அப்படியே கொடுப்பேன்."

சந்தைப் பொருளாதாரத்துக்கு வந்துட்டோம். இதெல்லாம் எதிர்பார்த்து/சகிச்சுத்தான் ஆகணும்.

இதுக்கும் ஒரு இன்சூரன்ஸ் இருந்தால் நல்லாது.

என்னென்னவோ மாற்று வழி இருக்கு. ஆனால்,அதையெல்லாம் செயல்படுத்த கம்பெனிகள் முன்வரணுமே.

நான் பல வருடங்கள் பொறியியல் கம்பெனிகளில் வேலை பார்த்துருக்கேன். அங்கேயெல்லாம் இப்படி ஒரு முறை உண்டு. திடீரெனெ கம்பெனிக்கு வர்ர பெரிய ஆர்டர் நின்னுபோச்சுன்னா, அதுக்குத் தக்கமாதிரி, வேலை நாட்களையும்(வாரத்துக்கு 3 நாள்) & சம்பளத்தையும்(பாதி சம்பளம்)/போனஸையும்(சம்பளமே இல்லை, அப்புரம் எப்படி போனஸ்?), குறச்சுருவாங்க. மீண்டும் அந்தப் பெரிய ஆர்டர் வந்ததும் பழையபடி முழு சம்பளம் கிடைக்கும்.

களப்பிரர் - jp said...

Boss,

As an invester i want the company to be back in profit and return some good profit. If they decide to reduce the operational cost by making job cut, let them do it.

India's economic and political system is capitalism. And the job market / employment is totally unregulated. People like Narayana murthy wrote big emails about the importance of having work and personal life balance ( i dont remember very well. there was such mail chain long time ago.) But they dont let any one to start an employement union.

The great ministers like P.Chidambaran are talking like PR officer of Reliance ( Reliance IPO subscription proves the confident of investors in indian economy - p.c) rather than doing any goodthing to any common man.

Here in EU, the company what i work for also talking about lay off. however we all get great lay off compensation ( union has negotiated for a 6 weeks pay per every year we worked, and no tax on it ) and also good unemployment benifit. so many people wanted to be the volenteer for it.

coming back to the point, there is no question whether lay off is right or not. If the company has to return profit, if it is needed it is correct thing. (only then people have confident in invetment. only then you can list your company and get money from public.) however the labour market needs very good regulation. sorry, i am expecting too much from PC or govt of india. we still dont even have minimum salary and so many.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
களப்பிரர் said...
Here in EU, the company what i work for also talking about lay off. however we all get great lay off compensation ( union has negotiated for a 6 weeks pay per every year we worked, and no tax on it ) and also good unemployment benifit. so many people wanted to be the volenteer for it.
==>
இதத்தாங்கண்ணா நாங்களும் சொல்ரோம். நீங்க வெளிநாட்டுல உள்ளவங்க காண்ட்ராக்ட் பணியாளரா எளிதாக அட்ஜட்ஸ் ஆயிருவீங்க. இங்கெ இன்னும் அந்த கலாச்சாரம் வரலைண்ணா. மென்பொருள் கம்பெனிகள் எப்ப வேணாலும் வீட்டுக்கு அனுப்பலாம். ஆனா, வேலை, நிரந்தர வேலைன்னு சொல்லிதான் கொடுப்பான் ==)=)

SurveySan said...

/////நீங்க வெளிநாட்டுல உள்ளவங்க காண்ட்ராக்ட் பணியாளரா எளிதாக அட்ஜட்ஸ் ஆயிருவீங்க. இங்கெ இன்னும் அந்த கலாச்சாரம் வரலைண்ணா. ///

pazagikkanum medhuvaa.
adhiga sambalam, velinaadu alavukku valandhirukku.
There will be side-effects like lay-offs and late-hours that comes along with that :)

pazagikkanum.