வணக்கமுங்க. ரெண்டு மேட்டரு சொல்லப்போறேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம ஊர் ப்ரச்சனை ஒண்ண இங்க எழுதியிருந்தேன்.
சென்னையில் ரோடு போடும் அதிகாரிகளின் பொறுப்பற்ற வேலையை சுட்டிக் காட்டும் பதிவு அது.
அதாவது, சில வருஷங்களுக்கு ஒரு முறை ரோடு போடும்போது, ஏற்கனவே இருக்கும் தார்/கற்களை அப்புறப் படுத்தாமல், அதுக்கு மேலயே புது ரோடு போடறாங்க, இதனால என்னாவுதுன்னா, அக்கம் பக்க வீடெல்லாம் ரோடு லெவலுக்கு கீழ போயி, மழைல வீட்டுக்குள்ள்ள தண்ணி வர அளவுக்கு ஆகிடுச்சு.
எங்க தெருவுல இந்த ப்ரச்சன வந்தப்பரம் தான் எனக்கு ஒரச்சது.
திருவொற்றியூர் மாதிரி எடங்கள்ள, வீட்டுல பாதி, ரோடுக்கு கீழதான் இருக்கு.
அந்த பக்கம் இருக்கர யாராச்சும், நான் சொல்ற மேட்டரு நல்லா வெளங்கரமாதிரி, ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினீங்கன்னா, உபயோகமா இருக்கும்.
செய்வீங்களா? அட்வான்ஸ்ட் நன்றீஸ் :)
இந்த மாதிரி ஊர் ப்ரச்சனைய எடுத்துச் சொல்ல, ஒரு கூட்டுப் பதிவு ஆரம்ப்பிச்சிருக்கோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இதுவரைக்கும் Anandha Loganathan, தருமி, நக்கீரன், தஞ்சாவூரன், நானு கோதால இருக்கோம்.
என்ன பெருசா செய்யமுடியும்னு இதுவரைக்கும் தெரியல. ஆனா, ஏதாவது, சின்ன சின்ன மாற்றமாவது அமைய முயற்சி செய்லாம்னு ஏற்பாடு.
FixMyIndia.blogspot.com என்ற அந்த கூட்டு முயற்சிக்கு, நம்ம அப்பாவி, ஒரு லோகோ பண்ணிக் கொடுத்திருக்காரு. அவருக்கு எங்கள் நன்றி. இங்க க்ளிக்கி லோகோ பாருங்க.
இந்த தளத்தில், உறுப்பினராக யார் வேணும்னாலும் சேரலாம். ஊரை சீரழிக்கும் சின்ன சின்ன ப்ரச்சனை முதல் (தெரு விளக்கு, ரோடு, சாக்கடை, etc..) , பெரிய பெரிய (லஞ்சம், சுகாதாரம்,...) விடைதெரியா ப்ரச்சனைகளைப் பற்றியும் அங்கு அலசலாம்.
அலசுவதோடு மட்டுமில்லாமல், நமது புகார்களை, மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்லவும் முயற்சிகள் செய்யலாம்.
நீங்களும் உறுப்பினராக, அந்தப் பதிவில் பின்னூட்டமிடுங்கள். நன்றி!
ஊர்கூடி தேர் இழுப்போம்!
2 comments:
அண்ணாத்தே நம்மளை யும் சேத்துகோங்க
//திருவொற்றியூர் மாதிரி எடங்கள்ள, வீட்டுல பாதி, ரோடுக்கு கீழதான் இருக்கு//
not true.only 2,3 houses.i am now not in tvt:((
Post a Comment