நம்ம சிந்தாநதி 'கணினி ஓவியப் போட்டி'ன்னு ஒண்ணு வச்சாரு.
வரையத் தெரியுமோ இல்லியோ, நானும் தடால்னு கோதால குதிச்சு ஒரு படம் வரஞ்சு அனுப்பிணேன்.
ஜூலை 2007ல வச்ச போட்டி, ரிஜல்ட்ட சொல்ல சொன்னா, ஒவ்வொரு மாசமா டபாய்ச்சுனே இருந்தாரு. இப்ப போட்டி வச்சு 8 மாசம் ஆயிடுச்சு. இன்னும் ரிஜல்ட்ட காணும்.
பிஸியா இருந்தா ஒரு வாரம் தள்ளலாம், ரெண்டு வாரம் தள்ளலாம், ஏன், ஒரு மாசமே தள்ளலாம். 8 மாசம் தள்ளினா என்னங்க அர்த்தம்?
கேக்கரதுக்கு ஆளில்லன்னு நெனச்சிட்டாரா?
ஒரு படைப்பாளியின் வேதனை அவருக்குப் புரியலியா?
எவ்ளோ கஷ்டப்பட்டு, இப்படி ஒரு படம் வரஞ்சிருப்போம். பரிசெல்லாம் வேணாங்க, யாரு கெலிச்சான்னு சொல்லுங்க போதும்.
என் படையல் இங்கே. படையலைக் கண்டு உணர்சிவசப்படாமல், பரவசமடையுங்கள்!
மற்றவர்களின் படையல்கள் இங்கே.
சொர்கவாசல்:
சும்மா டமாஸு :)
6 comments:
தலைவா நன்றி
சாக்குப்போக்கெல்லாம் சொன்ன, சொல்ற கட்டம் தாண்டிப் போச்சுன்னு தெரியும்... இந்த வாரம் கண்டிப்பாக வரும்...( இது அரசியல்வாதி உறுதிமொழி ஆகிவிடாது என்று நம்புங்கள்)
ஒவ்வொரு வேலையா புதுசு புதுசா செஞ்சிட்டு இருக்கனா தொடர்ச்சியா செய்ய நினைத்த வேலைகள் அங்கங்கே புட்டுக்கிச்சு...
வலைமொழி என்றொரு இணைய இதழ் ஒரு இதழோட நிக்குது... அதுக்காக ஒரு கவிஞரைப் பேட்டி கூட எடுத்தேன்...அவங்க காதுல புகை வராத குறை இப்போ அப்போன்னு இன்னும் அதையும் வெளியிட தாமதமாகி கிட்டே வருது... இந்த மாத செயல்முறைப் பட்டியல்ல ( அப்படின்னா என்னங்க) அதையும் சேர்த்துக்க நினைத்திருக்கேன்...
இந்த வாரம் போட்டி முடிவு...வந்துரும்.
சிந்தாநதி, சும்மா டமாஸுக்கு எழுதினதுதான் இது :)
முடிவுகள் அறிவிச்சீங்கன்னா சந்தோஷம்தான் ;)
நேரம் இல்லன்னா சொல்லுங்க, உங்க பேர சொல்லி ஒரு சர்வே போட்டு, வெற்றியாளரை நானே தேர்வு பண்ணிடுவேன். வேற ஒண்ணும் எழுதத் தோணல நமக்கு. :)
/நேரம் இல்லன்னா சொல்லுங்க, உங்க பேர சொல்லி ஒரு சர்வே போட்டு, வெற்றியாளரை நானே தேர்வு பண்ணிடுவேன். வேற ஒண்ணும் எழுதத் தோணல நமக்கு. :)
/
nice blackmail.
/நேரம் இல்லன்னா சொல்லுங்க, உங்க பேர சொல்லி ஒரு சர்வே போட்டு, வெற்றியாளரை நானே தேர்வு பண்ணிடுவேன். வேற ஒண்ணும் எழுதத் தோணல நமக்கு. :)
/
nice blackmail.
சர்வே,
ஆஹா இன்னுமா அந்தப்போட்டிக்கு முடிவு சொல்லாமல் இருக்காங்க, நான் முடிவெல்லாம் சொல்லி வழக்கம் போல யாராவது கெலிச்சு இருப்பாங்க , அது பற்றி நமக்கென்ன என்று மறந்தே போய்ட்டேன், நான் கூட படம்லாம் போட்டேனாக்கும், இப்போ படத்துல சிலந்தி வலைப்பின்னி இருக்குமே :-))
அவசரப்படாதிங்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எல்லாம் முடியட்டும் சிந்தாநதி பிசியா தேர்தல் வேலைல இருப்பாங்க :-))(கின்னஸ் ரெக்கார்டில் பேர் வாங்கும் திட்டத்தில ஆப்பு வச்சுட்டிங்களே)
http://tamiltalk.blogspot.com/2008/02/blog-post.html
Post a Comment