recent posts...

Wednesday, September 03, 2008

DOWNFALL ~ திரைப் பார்வை

எங்க ஊரு லைப்ரரி பத்தியும், அதில் கிடைக்கும் ஓசிப் படங்கள் பத்தியும் ஏற்கனவே பலமுறை வாய்கிழிய சொல்லிட்டதால, இம்முறை அடக்கி வாசிக்கிறேன்.
சுருக்கச் சொல்லணும்னா -- சிம்ப்ளி சூப்பர்ப். அமக்களமான படங்கள அடுக்கி வச்சிருக்காங்க, அத்தனையும் இலவசம்.

போன வாரம் கண்ணுல பட்டது தல ஹிட்லரு.
படம் பேரு DownFall. அட்டையில ஹிட்லரு கொஞ்சம் சோகமா கீழப் பாத்துக்கிட்டு இருக்காரு.
டிவிடி பின் பக்கம் படிச்சு பாத்தா, ஹிட்லரின் கடைசி சில நாட்களைப் பற்றிய அலசல்தான் படம்னு போட்டிருந்தது.

எமக்கு வரலாற்று அறிவு கொஞ்சம் கெம்மிதான்.
மேலோட்டமா எல்லா விஷயங்களும் தெரியும்னாலும், அதுனுள்ள ஞாய அநியாயங்கள் டீப்பா தெரியாது.
வயசிருக்கு பொறுமையாப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு விட்டுட்டேன்.
அப்பப்ப, இந்த மாதிரி படங்களைப் பாத்துதான் வரலாறு கத்துக்கரது. ( ராஜீவ ஏன் சாகடிச்சாங்கன்னு ஒரு படத்தை பாத்து கேள்வி கேட்டதுக்கு சுந்தரவடிவேல் வந்து கொமட்லயே குத்திட்டுப் போனது தனி கதை. இருந்தாலும், வரலாற்று அறிவ வளத்துக்கரதுக்காக, டிவிடியை நோக்கிச் செல்லும் பழக்கம் மாறவில்லை )

ஹிட்லர் ஒரு கொலைவெரி பிடிச்ச மிருகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. தனிப்பட்ட மத விருப்பு வெறுப்புக்களுக்காக பல கோடி மக்களை கொன்று குவித்த சண்டாளன்.

ஹிட்லரின் வெறி ஆட்டம் தொடர்ந்து, போலந்தை கைப்பற்றிய போது, அன்றைய USSRம், அமெரிக்காவும், ப்ரிட்டனும் இணைந்து ஹிட்லருக்கு எதிராக கைகோர்த்தனர்.
உலகப் போராக மூண்ட இந்த எதிர்ப்பு 1939லிருந்து 45 வரை தொடர்ந்தது.

ஜெர்மனி, சின்னாபின்னமாக தாக்கப்பட்டது.
தோல்வி உறுதி ஆனதும், ஹிட்லரின் கடைசி சில நாட்கள், ரொம்பவே டென்ஷன் மிகுந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

ஹிட்லருடன் கூடயிருந்த அவரது செக்ரட்டரி இப்பதான் 2002ல் மறைந்தார். அவர் நேரில் பார்த்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தை எடுத்திருந்தாங்க.

தோல்வியின் கடைசி நாள் வரை, மனுஷன் விடாப்பிடியா இருந்திருக்காரு.

படத்தில், நெஞ்சை அடைக்கும் பல காட்சிகள்.

+ சரெண்டர் அடையவே கூடாது, தோல்வி நிச்சயமானால், தற்கொலை செய்து கொள்வேன், நீங்களும் அப்படியே செய்யணும்னு தன் சகாக்களுக்குச் சொல்லிடறாரு.

+ ஒரு சில பேரு கட்சி மாறுவாங்க, அவங்களையெல்லாம், அப்பப்ப டுமீல் பண்ணிடறாங்க.

+ முடிவு நெருங்கப் போவது தெரிஞ்சதும், தன் 15 வருட நண்பியை திருமணம் செஞ்சுக்கராரு.

+ ஹிட்லரின் மந்திரியின் 6 குட்டிப் பசங்க போர் முடியரதுக்கு முன்னாடி விஷம் வைத்து அவர்கள் தாயாலேயே கொல்லப் படுகிறார்கள். முதலில் தூக்க மாத்திரையை கொடுத்து தூங்க வைக்கறாங்க. அப்பரம், தூங்கும்போது, சயனைடு குப்பியை அவங்க ஒவ்வொருத்தர் வாய்லையும் வச்சு வாயை சடக்னு மூடராங்க. குழந்தைகள் வலியில்லாமல் சாகராங்க. ஸ்ஸ். பக் பக் காட்சிகள் இவை.

+ ஹிட்லரின் நாய்க்கும், விஷம் வெச்சு கொல்றாங்க

+ இவரின் கூட இருக்கும் சில மந்திரிகள், தாங்களே விருப்பப்பட்டு, துப்பாக்கியால் தங்களை
சுடச் சொல்லி இறக்கிறார்கள். இறந்தவுடன், பெட்ரோல் ஊற்றி உருத்தெரியாமல் எரிக்கவும் சொல்கிறார்கள்

+ ஹிட்லர் கடைசி ரெண்டு மூணு நாள்ள, சில பேரு சரெண்டர் அடஞ்சுடலாம்னு சொல்றதை சுத்தமா ஏத்துக்க மாட்றாரு. ஜெர்மனியில் மிஞ்சி இருக்கும், ரோடு, ப்ரிட்ஜு, எண்ணைக் கிணறு, எல்லாத்தையும் தரமட்டம் ஆக்கணும்னு சொல்றாரு. ரஷ்யர்கள் வெற்றி பெற்றால் அவங்க கைக்கு ஒண்ணும் கிடைக்கக் கூடாதுன்னு எண்றாரு. ஆனா, கூட இருக்கும் சகாக்கள் அப்படிச் செய்யரது தப்பு, அப்படிப் பண்ணா போரில் பிழைக்கும் நம்ம ஆளுங்களுக்கே ஒண்ணும் இல்லாம போயிடும்னு ஹிட்லர் சொல்றத கேக்காம விட்டுடராங்க.

+ ஹிட்லர் ரஷ்யர்கள் நெருங்கிய தருணத்தில், தான் தன்னை சுட்டுக் கொண்டு இறக்கப் போவதாக சொல்றாரு. தன்னுடன் தன் புது மனைவியும் தற்கொலை செஞ்சுப்பாங்கன்னு சொல்றாரு. மருத்துவர் ஒருத்தர் கிட்ட, எப்படி சாகரதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கறாரு. மருத்துவரும், விஷ மாத்திரை ஒண்ணக் கொடுத்து, மொதல்ல இத வாய்ல போட்டுக்கங்க, அப்பரம் துப்பாக்கியால் வாயில் சுட்டுக்கங்க, மரணம் நிச்சயம்னு சொல்றாரு. தான் சுட்டுக் கொண்டவுடன், தன்னை உறுத்தெரியாமல் எரித்து விடணும்னும் ஆணையிடறாரு. ரஷ்யர்களின் காட்சியகத்தில் வைக்க தன் உடமைகள் எதுவும் மாட்டக் கூடாதுன்னு தன்னுடன் இருக்கரவங்களுக்கு கட்டளையிடறாரு.

+ ரஷ்யர்கள் வருகதற்குள், ஹிட்லரும் அவங்க மனைவியும் சுட்டுக்கராங்க, அவங்கள சகாக்கள் எரிச்சிடறாங்க. அதைத் தொடர்ந்து, பல சகாக்களும், அதே முடிவை எடுத்துக்கராங்க

+ சாகரதுக்கு முன்னாடி எதுக்கும் யார்கிட்டையும் மன்னிப்பு கேக்கல ஹிட்லரு.

+ போர் முடிந்து சமாதானம் அறிவிக்கப்பட்ட பின்னும், பலர் தற்கொலை செஞ்சுக்கராங்க

+ ஹிட்லரின் செக்ரட்டரி தப்பிச்சிடறாங்க

படம் ரொம்ப கனமா இருந்தது. குறிப்பா கடைசி 20 நிமிடங்கள். ஹிட்லரா நடிச்சவரு வாழ்ந்திருக்காரு. அபார நடிப்பு. infact, யாரையுமே நடிப்புல குறை சொல்ல முடியாது.

படம் முடிஞ்சதும், சில statistics போட்டுக் காமிச்சாங்க.

அதாகப்பட்டது, ஹிட்லரின் கையால் மாண்டவர்கள் 6 மில்லியன் மக்கள்.

உலகப் போர் இரண்டின் போது மாண்டவர்கள் ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன்.

உயிர் பிழைத்த பல ஹிட்லரின் சகாக்கள் ரஷ்ய ஜெயிலில் இறந்துவிட்டிருக்கிறார்கள்.

சிலர் விடுதலை அடைந்து நிறைய வருஷம் உயிர் வாழ்ந்திருக்காங்க.

ஹிட்லரின் செக்ரட்டரி 2002ல் போய் சேந்திருக்காங்க.

அவங்க சொல்றது, ஹிட்லர் ஒரு gentleman, அவரின் 'வில்லன்' பக்கம் அவங்க பாத்ததே இல்லையாம். ஹிட்லர், இவங்களுக்குத் தெரியாமதான் 6 million மக்களை ஸ்வாகா பண்ணியிருக்காராம்.

படத்தைப் பாத்ததும் ஒரு விஷயம் ரொம்பவே புரிஞ்சுது!

பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்டுக்குவான்.
அன்றிலிருந்து இன்றுவரை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை இது.

ஆனா, இது புரியாம பலரும் ஆடறாங்க.

ஹிட்லரே கூட கொஞ்சம் முன்னோக்கிப் பாத்து, தன் கடைசி காலம் இவ்ளோ டென்ஷன் நிறைஞ்சதா இருக்கும், துப்பாக்கியால் வாயில் சுட்டுதான் சாகப்போறோம்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் ஒழுங்கா இருந்திருப்பாரோ என்னமோ.

ஹிட்லர்ஸ், beware!

ஓ, சொல்ல மறந்துட்டனே, இது ஜெர்மானிய மொழிப்படம், ஆங்கில subtitles இருந்தது.

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

கண்டிப்பா, ஒரு முறை பாக்கலாம். பாருங்க!

உலகப் போர் பற்றிய வேறு விஷயங்கள் இருந்தா சொல்லுங்க.
தெரிஞ்சுக்கலாம்.
வரலாறு மிக்க அவசியம் மக்களே ;)

Interesting reads:

Hitlers last will - செக்ரட்டரிக்கு சாகரதுக்கு முன்னாடி வாசிச்சதாம்.

World War II in a nutshell - விக்கிப் பக்கம்

Adolf hitler, the Führer - விக்கிப் பக்கம்

10 comments:

SurveySan said...

பின்னூட்ட அவார்டு, ஒவ்வொரு பதிவுக்குக் கிழையும் போடரதுக்கு பதிலா, வாரத்துக்கு ஒரு தபா, சேத்து வச்சு கொடுக்கலாம்னு மேலிடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

;)

Bleachingpowder said...

//முடிவு நெருங்கப் போவது தெரிஞ்சதும், தன் 15 வயது நண்பியை திருமணம் செஞ்சுக்கராரு//

தன்னைவிட 15 வயது குறைந்த பெண்னை தான் அவர் திருமணம் செய்தார், 15 வயது நண்பியை அல்ல. pls correct the typo :-)

போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்த வுடன் பங்கரில் இருக்கும் குழந்தைகளை தூங்கும் முன் விட்டமின் மருந்து என்ன கூறி மயக்க மருந்தில் விஷம் கலந்து கொடுக்கும் காட்சியும் ரொம்ப நெகிழ்சியாக இருக்கும்

யாத்ரீகன் said...

It was a haunting movie.... had its impact in me for many days

SurveySan said...

bleachingpowder, தவறு திருத்திவிட்டேன்.
15 வருடப் பழக்கம் உள்ள நண்பிதான் சரி. :)

குழந்தைகளைக் கொல்லும் காட்சி ரொம்பவே மனத்தைப் போட்டு பிசைந்தது உண்மை. கொடுமை.
ஆனா, 24 கோடில எப்படியும், ஒரு 8 கோடி குழைந்தங்களா இரூந்திருக்க்னு நெனச்சப்போ, மனசு திக் திக் ஆயிடுச்சு :(

SurveySan said...

யாத்ரீகன்,

yes. and a well made movie too.
very natural and talented acting.

Bleachingpowder said...

//குழந்தைகளைக் கொல்லும் காட்சி ரொம்பவே மனத்தைப் போட்டு பிசைந்தது உண்மை. கொடுமை.
ஆனா, 24 கோடில எப்படியும், ஒரு 8 கோடி குழைந்தங்களா இரூந்திருக்க்னு நெனச்சப்போ, மனசு திக் திக் ஆயிடுச்சு :( //

ரொம்ப உண்மை. life is beautiful படத்தில் concentration campற்கு புறப்பட இருக்கும் ரயிலின் முன்பு குவிந்திருக்கும் பொம்மைகளை காட்டுவார்கள். அதை காட்சி என் மனதில் இருந்து இன்று வரை அகல மறுக்கிறது

Bleachingpowder said...

//குழந்தைகளைக் கொல்லும் காட்சி ரொம்பவே மனத்தைப் போட்டு பிசைந்தது உண்மை. கொடுமை.
ஆனா, 24 கோடில எப்படியும், ஒரு 8 கோடி குழைந்தங்களா இரூந்திருக்க்னு நெனச்சப்போ, மனசு திக் திக் ஆயிடுச்சு :( //

ரொம்ப உண்மை. life is beautiful படத்தில் concentration campற்கு புறப்பட இருக்கும் ரயிலின் முன்பு குவிந்திருக்கும் பொம்மைகளை காட்டுவார்கள். அந்த காட்சி என் மனதில் இருந்து இன்று வரை அகல மறுக்கிறது

உண்மைத்தமிழன் said...

அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்..

நானும் முன்பே பார்த்துவிட்டேன்..

ஹிட்லர் என்ற தனிப்பட்ட மனிதரின் கதையைச் சொல்வதுபோல் அவருடைய இறுதிக் காலக் காட்சிகள் 'சினிமா மொழியில்' அமைந்துவிட்டதால் அவர் மீதான இரக்க உணர்வு பார்வையாளர்களுக்கு கூடியது என்னவோ உண்மை..

CVR said...

//6 மில்லியன் = 24 கோடி மக்கள்.//
idhu enna kanakku?? :-|

SurveySan said...

unmai thamizhan, thanks for the visit.

CVR, :) me being me, i did the $ math instead of the people math. removed the KODI conversions ;)