recent posts...

Wednesday, September 10, 2008

OMG ~ ஜஸ்ட்டு மிஸ்டு! செத்துப் பிழைத்தல்!

எட்டு மணிக்கு எழுந்தோமா, ப்ரெட்டத் தின்னோமா, காஃபியக் குடிச்சோமா, 10 நிமிஷ தூரத்துல இருக்கர ஆஃபீஸுக்குப் போனோமா, இல்லாத ஆணியத் தேடித் தேடி 3 மணி நேரம் பிடிங்குனோமா, 1 மணி நேரம் அரட்டை அடிச்சுக்கிட்டு கும்பலா குந்திக்கினு மதிய உணவு தின்னோமா, அடுத்த 4 மணி நேரம் திரும்ப இல்லாத ஆணியத் தேடினோமா, 5 மணிக்கு டான்னு வீடு போய் சேந்தோமா, 6 மணிக்கு கிளம்பி வாலிபாலோ, கிரிக்கட்டோ வெளையாடினோமா, 8 மணிக்கு ப்ளாகரத் தொறந்தமா, ஒரு பதிவும், பத்து பின்னூட்டங்கள் போட்டமா, மூக்குப் பிடிக்கத் தின்னமா, ஓ.சி டிவிடிப் படம் பாத்தமா, கட்டைய சாச்சமான்னு தெனம் தெனம் ரொட்டீன் லைஃபா போயிக்கிட்டே இருக்குது.

ஆனா, முந்தாநேத்து (திங்கள்) ஒரு திடுக் திடுக் மேட்டர் நடந்தது.

வழக்கம் போல 6 மணிக்கு வெளையாட போயிட்டு, வேர்க்க விருவிருக்க வூட்டப் பாத்து வண்டிய ஓட்டினேன்.

எப்பவும் 8 மணிக்குதான் வெளையாட்டு முடியும். திங்கக்கிழமை மட்டும் 7:45க்கு பொட்டிய கட்டிட்டோம். இப்பெல்லாம் சீக்கிரமே குளிர ஆரம்பிச்சுடுது.

வெளையாட்டு மைதானத்துக்கும் எங்க வீட்டுக்கும் போர வழியில நம்மூரு காய்கறிக் கடை இருக்கு. ஓ.சி டிவிடியெல்லாம் அங்கனதான் கெடைக்கும்.

சனிக்கெழம எடுத்திருந்த தசாவதாரம் டிவிடியப் திரும்பப் போட்டிடலாம்னு கடைக்குள்ளப் போய் டிவிடிய கொடுத்திட்டு கெளம்பி வீட்டுக்குப் போயிட்டு, 8 மணிலேருந்து மத்த ரொட்டீன் விஷயங்கள செஞ்சு முடிச்சேன்.

எப்பவும், கடைக்குள்ள போனா, முறுக்கு வகையராக்கள அள்ரது வழக்கம், ஆனா திங்கக் கெழம, அது தோணல, டிவிடிய கொடுத்துட்டு, விருக்குன்னு கெளம்பிட்டேன்.

நேத்து லோக்கல் ந்யூஸ் பாத்தா திடுக் திடுக் நியூஸ்.

நான் போர அந்தக் கடைக்கு, சரியா 8:00 மணிக்கு ரெண்டு திருடர்கள் துப்பாக்கியோட வந்திருக்கானுவ. கடைல கல்லால இருக்கர பொண்ண மெரட்டி மொத்தக் காசையும் லவுட்டிட்டாங்க. அதைத் தவிர, கடையில் இருந்த மத்தவங்ககிட்டையும் மெரட்டி பணத்த புடுங்கிக்கிட்டாங்களாம்.

நான் கடைக்குள்ள 7:55 மணிக்கு இருந்திருக்கேன். முறுக்கு, காய்கறி வகையராக்கள் வாங்கியிருந்தா, நானும் இந்த திருட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருப்பேன்.

அமெரிக்கால, துப்பாக்கி வாங்கரது, முட்டாய் வாங்கர மாதிரி சுலபமான விஷயம், கண்ட கண்ட நாய்களும் துப்பாக்கி வச்சிருக்கும்.
மிக்காரும், எல்லாரும் வீட்ல துப்பாக்கி வெச்சிருப்பாங்களாம். இது கலிஃபோர்னியால கம்மி, மத்த சில மாநிலங்களில் மிக அதிகம்.

'Bowling for Columbine' டாக்குமெண்டரி பாத்து நொந்தே போயிட்டேன். அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்தை சாடும் படம் அது. ஏதோ ஒரு வங்கியில, சேமிப்புக் கணக்குத் தொடங்கினா, பெரிய துப்பாக்கி இனாம்னு, ஸ்கீமெல்லாம் இருக்குன்னா பாத்துக்கங்க, இங்க துப்பாக்கி கலாச்சாரம் எப்படி இருக்குன்னு.

எல்லார் கிட்டையும் துப்பாக்கி இருக்கரதால, துப்பாக்கியில் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக மிக அதிகம்.

நான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடியே அந்த கடையிலிருந்து எஸ்கேப் ஆகலன்னா, கீழ இருக்கரதுல ஏதாச்சும் ஒண்ணு ஆயிருக்கும்:

1) கை கால் நடுங்கி, வேர்த்து கொட்டி, மிஸ்டர்.திருடர் கேட்டதை எடுத்துக் கொடுத்திருப்பேன். பர்ஸ்ல, $115 இருந்துச்சு. வாச்செல்லாம் கட்டல, கப்படிக்கர ஷார்ட்ஸ், டி.ஷர்ட், பழைய ஷூவெல்லாம் தப்பிச்சிருக்கும்.

2) "யூ ப்ளடி இந்டியன். கிவ் மீ யுவர் வேலட்!"னு திருடன் எங்கிட்ட சொல்லியிருப்பான். நான் பி.பி ஏறி, நாட்டுப் பற்று தலைக்கேறி, யாரடா சொன்னன்னு, கடைல இருந்த தேங்காவ, விஜய்காந்தை மனசுல வேண்டிக்கிட்டு, கட்ட வெரல்ல சுண்டி பாதியா ஒடச்சு, வலது கைலேருந்து விருக்னு ஒரு மூடி, எடது கைலேருந்து விருக்னு இன்னொரு மூடி ரெண்டு திருடனுங்க துப்பாக்கிலயும் அடிச்சு எகிர வெச்சு, சொய்ங்க்னு மேல எகிறி, விருக் விருக்னு சொழண்டு, அலமாரி மேல இருக்கர தூசு படர்ந்த தம்ஸ்-அப் பாட்டிலை காலால அடிச்சு, அது பறந்து திருடனுங்க மண்டைல அடிச்சு அவங்க கீழ விழ, கடைல இருக்கர பொண்ணுங்க கிட்ட, "கிவ் மீ எ ரோப்"னு கேட்டு, கயிறு வாங்கி, ரெண்டு பேரின் காலையும் கையையும் விஷ்க் விஷ்க்னு கட்டி, "கால் த போலீஸ் நவ்"னு சொல்லிட்டு, கடையிலிருந்து கெளம்பி வெளீல வரும்போது, கடையின் உள்ளிலும் வெளியிலும் இருக்கரவங்க எல்லாம் "சர்வேசா, சர்வேசா, சர்வேசா"ன்னு பாஷா ஸ்டைல்ல கத்தியிருப்பாங்க. இன்னிக்கு, கவர்னர் தல.சுவாட்சநேகர் கையால, 'good samaritan' அவார்டெல்லாம் வாங்கியிருப்பேன்.

3) "அடப்பாவிகளா, மீ த எஸ்கேப்"னு திருடர் கிட்டயிருந்து நழுவி ஓடப் பாத்திருப்பேன். டுமீல்னு அவன் பின்னாடியே சுட்டிருப்பான். இன்னிக்கு எங்காவது ஒரு அழகான நர்சு என்னப் பாத்துக்க,அக்கடான்னு ஆஸ்பத்திரி கட்டில்ல படுத்துக்கினு இருப்பேன். என்ன, ஒரே கஷ்டம், பெரிய கட்டு கட்டியிருப்பாங்க "பின்னால".

ஸோ, இந்த மூணும் நடக்காம, ஜஸ்ட் மிஸ்ஸாகி, நான் சிராய்ப்பே இல்லாம பொழச்சதுக்கு யார் காரணம்?

1) கடவுள் / விதி
2) nothing. its just coincidence.

உங்களுக்கு இந்த மாதிரி "ஜஸ்ட்டு மிஸ்டு" நிகழ்ச்சி ஏதாச்சும் நடந்திருக்கா? யார் காப்பாத்தினான்னு நெனைக்கறீங்க?
கருத்து இல்லாதவங்க இங்க க்ளிக்கி வாக்கலாம்.

கருத்து இருக்கரவங்க விலாவாரியா என்ன மாதிரி 1,2,3 போட்டு அளந்து சொல்லுங்க.

;)

3 comments:

கா.கி said...
This comment has been removed by the author.
கா.கி said...

எனக்கு இந்த 20-3 = 17 வருஷத்துல (3 வருஷம் செரியா நடக்க கூட இல்ல) இத மாதிரி எதுவும் நடந்ததில்ல... ஆனா poll போல் விவாதம் பண்ணா (though u r nt debating anything) எந்த பலனும் கெடைக்காதுன்னு நெனைக்கறேன்... இப்ப சொல்றத வெச்சு கலாச்சிடாதீங்க.... இதெல்லாம் ஒரு butterfly effect... ஒரு வேளை 5 நிமிடம் தாமதம நீங்க அங்க போயிருந்தா மாட்டியிருக்கலாம், இல்ல அந்த சம்பவமே நடக்காம இருந்துருக்கலாம்....

SurveySan said...

//இதெல்லாம் ஒரு butterfly effect...//

;)