எல்லாருக்கும் ரொம்ப நாளா இந்த கேள்வி மனசுல இருக்குது.
ஆளாளுக்கு ஒவ்வொரு பேரை சொல்லிக்கிட்டு ரொம்பவே கொழம்பி போயிருக்காங்க.
கொழம்புனா உனக்கென்ன? நீயே ஒரு அனாமதேயம்னு நெனைக்கறது எனக்குக் கேக்குது.
ஆனா, உண்மைகளை கண்டுபிடித்துக் கூறவே இந்த அவதாரம் எடுத்துள்ள எனக்கு, இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டிய பொறுப்பு ரொம்பவே அதிகம்.
ஆனா, அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்கர விஷயமா அது?
இவர்தான் இட்லிவடை, அவருதான் இட்லிவடைன்னு பலப் பல ஊகங்களும் பேச்சுகளும், நான் இணையத்தில் இணைந்த ஒருவருஷத்துல (ரெண்டு வருஷம் ஆகப்போவுதா? அடக் கொடுமையே) நெறைய பாத்துட்டேன்.
சரி, இதுக்கு முடிவு கட்டலாம்னு, நான் முடிவு பண்ணதன் விளைவே இந்தப் பதிவு.
கண்டிப்பா இந்தப் பதிவின் மூலம், பெரும்பான்மையான மக்களின் ஊகங்கள் புரிந்துவிடும்.
பலரின் எண்ணங்கள் தவிடு பொடியாகும் நிலமையும் ஏற்படலாம்.
ஸோ, எல்லாத்துக்கும் தயாராகிடுங்க.
Brace YourSelf!
இட்லிவடை, இஸ், நன் அதர் தன்...
ஹிஹி. எனக்குத் தெரிஞ்சா நேரா சொல்லிடமாட்டேனா?
யோசிச்சு வாக்குங்க. பொட்டி தெரியாதவங்க இங்கண க்ளிக்கியும் வாக்கலாம்
உங்களுக்கு யாருன்னு தெரிஞ்சு, அந்தப் பேரு மேல இல்லன்னா, இலை மறைவு காயா, அந்த பேரை பின்னூட்டுங்க ;)
அடடா, பொட்டீல, கோ.அண்ணன் பேர் சேக்க மறந்துட்டேன்.
எனிவே, பொட்டி போட்டாச்சு, இனி, வடைய கண்டுபிடிச்சுட்டுத்தான் அடுத்த சோலி :)
பி.கு: சும்மா டமாசுக்கு, இட்லிவடையார், சப்ளை நிறுத்தவேண்டாம், கெட்டி சட்னியுடன், தொடரட்டும் பணி ;)
37 comments:
சமமான வாக்கு யாராச்சும் வாங்கினா, tie breaker சர்வே நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
Itz a wellknown answer.
Check here :
http://mayavarathaan.blogspot.com/2006/11/393.html
;)
அத ஏற்கனவே படிச்ச ஞாபகம் இருக்கு.
நீங்கதான் லீட்ல இருக்கீங்க மா.ரத்தான் சார்.
அடக் கொடுமையே? எனக்கும் ஒரு வாக்கா. அத, நான் போடல, மெய்யா சொல்றேன் ;(
//நீங்கதான் லீட்ல இருக்கீங்க மா.ரத்தான் சா//
Hiyaiyo..
அது சரி, உண்மையான 'இட்லி, வடை' பேரு இங்க இல்லவே இல்லையே! கிழக்கு பக்கம், மேற்கு பக்கமெல்லாம் போய் விசாரிச்சு எழுத மாட்டீங்களா?
கிழக்கு பக்கமா? நீங்க சொன்னப்பரம் தான் தெரியும்.
ப.ரி யா? ;)
//கிழக்கு பக்கமா? நீங்க சொன்னப்பரம் தான் தெரியும்.
ப.ரி யா? ;)//
பாராட்டுக்கள் :)
இவ யாரை எல்லாம் ட்விட்டரில் பாலோ பண்ணறாருன்னு பாருங்க! :)
அது கிருஷா பிங்கர்.
கொத்ஸ், யார சொல்றீங்க?
தப்பு பண்ணிட்டீங்க. ஆப்ஷன்(Option Box) பாக்ஸ் வச்சா எப்படி? செக் பாக்ஸ்ல(Check Box) வைக்கனும்?;-)
சர்வேஸன் ஸார்..
இது உங்களுக்கே நியாயமா..?
கூட்டத்தோட கூட்டமா நீங்களும் சேர்ந்து கோவிந்தா போடலாமா..?
அந்தக் கூட்டத்துல நீங்களும் ஒருத்தர்தான்றது எல்லாருக்குமே தெரியும்..
தெரிஞ்சும், இல்லாத மாதிரி நடிக்குறது தப்பில்லையா..?
இட்லிவடைங்கறது கிழக்குப் பதிப்பகம், பத்ரி, பா.ரா., கிருபா ஷங்கர், பா.பாலா என்கிற சர்வேசன் இந்த டீமுக்குள்ளதான் இருக்குன்றது எனது கருத்து.
தப்புங்களாண்ணா..?
பாராவால் ஆரம்பிக்கப்பட்டு, பத்ரி, பெனாத்தல், கொத்தனார், கிருபா ஆகியோரால் வளர்க்கப்பட்ட இட்லிவடையில் பாபாவும் ஒரு உறுப்பினர் தான்.
//SurveySan said...
கொத்ஸ், யார சொல்றீங்க?
//
இட்லி வடையாரைத்தான்.
அதுக்குள்ள நான் கூட இந்த டீம் மெம்பரா ஆகிட்டேன் போல இருக்கே!! சபாஷ்!
உ.தமிழன், அருண்மொழி,
நீங்க ரெண்டு பேருமே தப்பு என்று "உறுதியாக" சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :)
அதோடு, நான் வாக்களிக்கவும் விரும்பவில்லை !!!
எ.அ.பாலா
உ.தமிழன், அருண்மொழி,
நீங்க ரெண்டு பேருமே தப்பு என்று "உறுதியாக" சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :)
அதோடு, நான் வாக்களிக்கவும் விரும்பவில்லை !!!
எ.அ.பாலா
@ நீங்க ரெண்டு பேருமே தப்பு என்று "உறுதியாக" சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :)
அப்படியென்றால் உங்களுக்கு இட்லிவடை யார் என்று தெரியும். எனவே இட்லிவடை முற்றிலும் அனானி இல்லை.
//பா.பாலா என்கிற சர்வேசன் ///
what????
Y.A.BLa, vittup pocho?
;)
oru vishayam therinjirukku.
idlivadai kandippa, pe.suresh kidayaadhu. 0% dhaan vandhirukku :)
//தப்பு பண்ணிட்டீங்க. ஆப்ஷன்(Option Box) பாக்ஸ் வச்சா எப்படி? செக் பாக்ஸ்ல(Check Box) வைக்கனும்?;-)
//
adhukkudhaan, last but 1, option irukke.
:)
Adappavigala, enakku 5 vote-aa?! Vitta naanthaan idlyvadainnu mudivae panniduveenga polarukkae?!
மாயன், எனக்கு 10 விழுந்திருக்கு, அந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல ;(
இட்லிவடையில் நானும் ஒரு உறுப்பினர். என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்கப்பா. தேவையானா ஆதாரங்களை தருகிறேன் :-)
//அப்படியென்றால் உங்களுக்கு இட்லிவடை யார் என்று தெரியும். எனவே இட்லிவடை முற்றிலும் அனானி இல்லை.
//
சொல்றது எல்லாத்தையும் சீரியசா எடுத்துக்கக் கூடாது, ஸ்மைலியையும் கவனிக்கணும்.
அவசர முடிவு ஆபத்தானது ;-) அதென்ன "முற்றிலும் அனானி இல்லை" ? :)
எனக்கு "மாயி" மேல ரொம்ப நாளா சந்தேகந்தேன் ! ஏன் ஐகாரஸ் பிரகாஷ் "டாப் 5" லிஸ்ட்ல இடம் பெறவில்லை ??????
///இட்லிவடையில் நானும் ஒரு உறுப்பினர். என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்கப்பா. தேவையானா ஆதாரங்களை தருகிறேன் :-)////
ஆதாரங்கள் உடனே சர்வேசன் 2005 அட் யாஹூவுக்கு அனுப்பவும் ;)
நம்பர மாதிரி இல்லியே? ;)
///எனக்கு "மாயி" மேல ரொம்ப நாளா சந்தேகந்தேன் ! ஏன் ஐகாரஸ் பிரகாஷ் "டாப் 5" லிஸ்ட்ல இடம் பெறவில்லை ??????//
மாயி மேல எனக்கும் சந்தேகம் இருந்தது. ஐகாரஸ் விட்டுப் போச்சு.
ஐ.சுந்தர்தான் இருக்காரு.
இதுக்கு ஒரு தனி கமிட்டி அமச்சு ஷெர்லாக் ஹோம்ஸ் வேல பண்ணாதான் உண்டு போலருக்கே?
லக்கியார், தான் கூட்டணியில் இருப்பதா சொல்றாரு. நேத்து ராத்திரி அடிச்ச டாஸ்மார்க் மப்புல, தெரியாம, உண்மைய கக்கிட்டாரா இல்ல, அல்வா கொடுக்கறாரான்னு, மகர நெடுங்குழைநாதனுக்குதான் வெளிச்சம்ஸ் :)
அடக்கொடுமையே, எனக்கு 13 வோட்டா?
btw, துளசி கோபாலை சேக்க மறந்துட்டேன்;
பொன்ஸ் வேர ரொம்ப நாளா absconding, அவங்க பின்னணியில் இருந்து இயங்கராங்களோ? :)
///எனக்கு "மாயி" மேல ரொம்ப நாளா சந்தேகந்தேன் ! //
//மாயி மேல எனக்கும் சந்தேகம் இருந்தது. //
யோவ்.. இட்லி வடை நான் தான். வசந்தம் ரவி நான் தான். பாரிஸ் தியா நான் தான்.. இன்னும் யார் யார் பாக்கி?!
மாயன், லெஸ் டென்ஷன்.
உங்களையாவது வெளிப்படையா சொல்றாங்க.
எனக்கு ஸைலண்டா ஓட்டப் போட்டுத் தள்றாங்களே.
நான் ஒரு அப்ராணி ;(
லக்கிலுக்தான் இட்லிவடைன்னு சொல்லி ஆட்டைய முடிச்சிடலாம். ஆனா, துக்ளக் அட்டை முகப்புல இருக்கர இ.வடைக்கும் லக்கிக்கும் எப்படி தொடர்பு இருக்கும்னு RTI போட்டு யாராச்சும் கேள்வி கேட்டா என்னா பண்றது?
//யோவ்.. இட்லி வடை நான் தான். வசந்தம் ரவி நான் தான். பாரிஸ் தியா நான் தான்.. இன்னும் யார் யார் பாக்கி?!//
முகமூடி யார் என்ற பஞ்சாயத்து வேறு பாக்கி இருக்கே. (அது தான் இல்லை என்று எல்.ஏ.ராம் கூறிவிட்டார்)
@ சொல்றது எல்லாத்தையும் சீரியசா எடுத்துக்கக் கூடாது, ஸ்மைலியையும் கவனிக்கணும்.
சரி.
@ அவசர முடிவு ஆபத்தானது ;-)
ஆனால் அவசரமாக இல்லை என்று எழுதி பூனைக்குட்டியை வெளியே கொண்டு வந்தது நீங்க தானே அண்ணே
@ அதென்ன "முற்றிலும் அனானி இல்லை" ? :)
முற்றிலும் அனானி - அவர் யாரென்று அவரை தவிர யாருக்கும் தெரியாது. eg வசந்தம் ரவி, பாரிஸ் திவா
"முற்றிலும் அனானி இல்லை" - அவர் யாரென்று பலருக்கும் தெரியும் eg விடாது கருப்பு, முகமூடி, அருண்மொழி, இட்லிவடை.
ஒருத்தர் கூட சரியா சொல்லவில்லை..
இட்லி வடை குழ்வின் தலைவர் பெங்களூரில் இருக்கிறார்..
அவரைப்பற்றி ஒரு குறிப்பு..எழத்தாளர் சுஜாதா அவர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்..
இட்லி வடை குழுவில் ஆரம்ப காலத்தில் பெண் பதிவர் ஒருவரும் இருந்த்தார்..
முதல்ல ஆப்பரேஷன் சர்வேசன் தான் நடத்தனும்... சர்வேசன் is A + B + C னு பேசிக்கறாங்களே :)
Vetti, you too? :)
நான் ஒரு அப்பாவியப்பா.
அரவிந்தன், பெரிய பெரிய மேட்டர் வச்சிருக்கீங்க போல? மெய்யா சொல்றதெல்லாம்?
Post a Comment