recent posts...
Wednesday, September 24, 2008
சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல
டாடா நேனோ என்ற ஒரு லட்ச ரூபாய் கார் வருதுன்னதும், ஒரு குழப்பமான மனநிலை இருந்தது.
ஒரு பக்கம், நமது கண்டுபிடிப்பு பிரமிப்பைத் தந்தாலும், அதனால் நிகழப்போகும் தொடர் ப்ரச்சனைகள் குழப்பத்தையே தந்தன.
எல்லா மிடில்-கிளாஸ் வீட்டிலும் ஒரு காரை கொண்டு நிறுத்தப் போகும் இந்தத் திட்டத்தை தாங்கும் infrastructure வசதிகள் இந்தியாவின் எந்த நகரத்திலும் இன்னும் வரவில்லை.
பெட்ரோல் விலை, பெட்ரோல் தீர்ந்துவிடும் அபாயம், க்ளோபல் வார்மிங், ஓஸோன் ஓட்டை, இத்யாதி இத்யாதி விஷயங்கள் நடந்து வரும் வேளையில், மற்ற நாடுகளெல்லாம், பெட்ரோல் கார்களிலிருந்து, வேறு வகயான எரிபோருள் உபயோகிக்கும் ஹைப்ரிட் கார்களை உருவாக்க எத்தனித்திருக்கும் இந்த வேளையில், நாம் இன்னும் ஆதி கட்டத்தில் துவங்குவது எந்த அளவுக்கு சரின்னு தெரியல்ல.
நானிருக்கும் தெ.கலிபோர்னியாவில், கார்களின் உபயோகத்தைக் குறைத்து, சைக்கிள், பஸ் உபயோகத்தைப் பெறுக்க, உள்ளூர் சாலைகளில், இரண்டு லேன்களை அழித்து, ஒரே லேனாக மாற்றி வருகிறார்கள்.
இவங்க இப்படி, இந்தப் பக்கம் பயணப்பட்டு, வருங்காலப் ப்ரச்சனைக்கு இப்பவே தயாராகிட்டு வரும்போது, நாம், எதிர் பக்கம் செல்வது, கொஞ்சம் முட்டாள்தனமாகவே படுகிறது.
டாடா தொழிற்சாலை அமைக்கவிருந்த சிங்கூரைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் அந்த ஊர் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும்.
ஆனா, அங்கையும், நில அபகரிப்பு, விவசாயிகள் நிலங்களை வலுக்கட்டாயமாக டாடா பெற்று வருகிறது, அப்படி இப்படீன்னு செய்திகள் வந்த வண்ணம் இருக்கு.
அதைத் தவிர, நிலங்களுக்கான பணப் பட்டுவாடாவில் பல தில்லு முள்ளுக்கள் நடந்திருப்பதாகவும், இதில் விசாரணைகள் தொடங்கப்படவேண்டும் என்றும் அரசியல் தலைகள் அலறி வருகின்றன.
விவசாயிகள் தாங்களாய் விருப்பப்பட்டு தங்கள் நிலத்தை டாடாவுக்கு விற்றதும் நடந்திருக்கிறது.
நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும், கண்டிப்பா, எவனும், பொது நல அக்கரையிலோ, விவசாயிகள் நலனுக்காகவோ அலறுவதில்லை.
எங்கையோ, பணப் பை, இன்னும் சரியா கைமாறாததால், இந்த அரை கூவலெல்லாம் நடக்குது.
எல்லா, பை மாற்றமும் சரி வர நடந்ததும், விவசாயியாவது மண்ணாவதுன்னு அவனவன், அவன் வேலையப் பாக்கப் போயிடுவான்.
இந்தக் குழப்பங்களால், சிங்கூரை விட்டு தாங்கள் வெளியேறப் போவதாக, டாடா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஒட்டு மொத்தத்தில் சாமான்யனின் தலைதான் உருளப்போவது.
எனக்குப் புரியாத பல விஷயங்களில் சில:
* விவசாய நிலத்தை தரை மட்டமாக்கிதான் ஒரு கார் தொழிற்சாலை தொடங்கணுமா? ஏன் நம்மூர்ல பொட்டல் நிலங்கள் ஒண்ணுமே எங்கையும் இல்லியா?
* கொஞ்சம் கொஞ்சமா இப்படி விவசாயத்தை அழித்தொழிக்கும் வேலையை செஞ்சுட்டு வந்தா, நாளைக்கு அரிசி பருப்பெல்லாம் எப்படிய்யா கெடைக்கும்?
* இவ்ளோ கோடிகள் புரளும் திட்டத்தை வகுப்பவர்கள், இன்னும் சில கோடிகள் சேத்து, ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு புது நகரை உருவாக்கி, தொழிற்சாலையையும், தொழிலாளர்களுக்கு மற்ற வசதிகளையும் ஒருங்கே உருவாக்க வழி செய்யலாமே?
* ஓவ்வொரு எழவெடுத்த ப்ரச்சனைக்குப் பின்னாலும் யாரோ ஒரு தலைவனது 'political agenda' நாத்தமடிக்கர அளவுக்கு தலைவிரிச்சு ஆடுதே. என்னாதான்யா உங்க பொலிட்டிக்கல் அஜெண்ட்டா? அடங்கவே அடங்கமாட்டீங்களா?
* தூக்கம் வராம நம்ம இங்க பொலம்பி ஒரு எழவும் ஆகப் போரதில்லைன்னு தெரிஞ்சும், ஏன் தேவையில்லாம ரத்தக் கொதிப்பு வருது இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது? நாமுண்டு நமது வேலையுண்டுன்னு நம்ம பொழப்ப பாத்தா மட்டும் போதாது?
டாடா நேனோ ஊருக்கு நல்லதா கெட்டதா?
தேவையா தேவையில்லியா?
யார் மேல தப்பு?
ஒரு எழவும் புரியல!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
* தூக்கம் வராம நம்ம இங்க பொலம்பி ஒரு எழவும் ஆகப் போரதில்லைன்னு தெரிஞ்சும், ஏன் தேவையில்லாம ரத்தக் கொதிப்பு வருது இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது? நாமுண்டு நமது வேலையுண்டுன்னு நம்ம பொழப்ப பாத்தா மட்டும் போதாது?
அடடா நீங்களும் நம்ம இனம்தானா????
//அடடா நீங்களும் நம்ம இனம்தானா????//
பொட்டி தட்டர கூட்டத்துல முக்கால் வாசி நம்ம இனம்தான் பாபு. :)
எரிச்சல்வரும், சுய சொறிதல் நடக்கும், அப்பாலீக்கா, அடுத்த ப்டம் பாக்க கெளம்பிடுவோம்.
வேர ஒண்ணும் செய்யமாட்டோம் ;(
super surveysan
DHANS,
நன்றி!
(மெய்யாலுமா? மொக்கையா இல்ல? :) )
//இந்தத் திட்டத்தை தாங்கும் infrastructure வசதிகள் இந்தியாவின் எந்த நகரத்திலும் இன்னும் வரவில்லை.//
இது என்னவோ ரொம்பச் சரி!
ராமலக்ஷ்மி,
நீங்க சொன்னா சரிதான் ;)
சர்வேசன்,
பொட்டல் காட்டில் எந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் இல்லாமல் தொழிர்சாலை துவக்குவது சிரமம்.தொழிலாளர் குடியிருப்புகள்,சாலை,துறைமுகம்,டெலிபோன்,இணையம் என வசதிகள் வர சாத்தியமிருக்கும் சபர்பன் பகுதிகளில் தொழிற்சாலையை துவக்குவது சற்று எளிது.
புறநகரை நினைத்த மாத்திரத்தில் உருவாக்க முடியாது. மின்சாரம்,தண்ணீர் மாதிரி அடிப்படை கட்டமைப்புக்கே செலவு செய்துகொண்டிருக்க வேண்டும். அப்புறம் லட்சம் ரூபாய்க்கு காரை கொடுக்க முடியாது:-)
மேற்குவங்கத்தில் இருந்து டாட்டாவை துரத்திவிட்டனர். இப்போது எழெட்டு மாநிலங்கள் டாட்டா நானோவுக்கு போட்டி போடுகின்றன.நஷ்டம் மேற்குவங்கத்துக்கு தான்.
செல்வன்,
//புறநகரை நினைத்த மாத்திரத்தில் உருவாக்க முடியாது. மின்சாரம்,தண்ணீர் மாதிரி அடிப்படை கட்டமைப்புக்கே செலவு செய்துகொண்டிருக்க வேண்டும். //
அதெல்லாம் அரசாங்கம் செஞ்சு கொடுக்கணுங்க. அப்பரம், பொட்டல் காடு எப்ப செழிக்கரது?
////பொட்டல் காட்டில் எந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் இல்லாமல் தொழிர்சாலை துவக்குவது சிரமம்/////
முடியாத விஷயம்னு எதுவுமே கிடையாதுங்க.
நட்ட நடூ கடல்ல, எண்ணை எடுக்க, ஒரு சின்ன சிட்டியே கட்டறாங்கல்ல.
அத கம்பேர் பண்ணும்போது, இதெல்லாம் எம்மாத்திரம்?
////நஷ்டம் மேற்குவங்கத்துக்கு தான்.//
பொறுத்திருந்துதான் பாக்கணும்.
hi,
These are the questions that were also swimming in my head. ( As usual no 'dhum' to ask first).
I want to say that I am doing my bit..
Do we really need this?
We are discussing in coffee clubs and also with friends. Family gets fed up when we elders start political discussion. So friends get the best of it. Newspapers refuse to publish our protest letters. When we support Arundhati Roy or Medha Patkar, the friends' cirlce is slowly shrinking..'"சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல"
//பொட்டல் காட்டில் எந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் இல்லாமல் தொழிர்சாலை துவக்குவது சிரமம்.தொழிலாளர் குடியிருப்புகள்,சாலை,துறைமுகம்,டெலிபோன்,இணையம் என வசதிகள் வர சாத்தியமிருக்கும் சபர்பன் பகுதிகளில் தொழிற்சாலையை துவக்குவது சற்று எளிது//
The next election time will be lost before the car rolls from underdeveloped places. So fertile lands are good!
The credit goes to the Govt. and the company for timely delivery.Imagine the prestige of project.. So why should"pottal kadu" get the development?
Therefore Nano will come out from farmers' fields. We will have to eat cake ( French queen's diet?), and drive in the car.. Circa 2015..
By the way I am getting stamped as " activist" in my circles. ( Do you really need this in your old age?.. kind of looks..)Maybe I should stop reading these thought provoking blogs.. :-)
சர்வேசன் சார்,
சுற்றுச் சூழல் பூமி வெப்பமடைதல் கோணங்களில் தாங்கள் சொல்லி இருப்பவற்றை மறுக்க இயலாது. ஆனால் பொட்டல்காட்டில் தொழிற்சாலை தொடங்குவதெல்லாம் அரசாங்கம் யோசிக்க வேண்டிய விஷயம். தனியார் கம்பெனி லாபம் பார்க்கவே தொழில் தொடங்கும். அதில் கிடைக்கும் நேரடி மறைமுக வேலை வாய்ப்புகள் தான் மக்களுக்குக் கிடைக்கும் நன்மை.
இந்தத் திட்டம் உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட திட்டம். இதனை மறுதலித்ததன் மூலம், மேற்கு வங்காளம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாரில்லை என்று காட்டிக் கொண்டு விட்டது அவ்வளவு தான்.
நடுத்தர மக்களும் கார்களை அனுபவிக்கட்டுமே சார். கட்டமைப்பு வசதிகள் தாமே உருவாகும். necessity is mother of invention இல்லையா?
நீங்கள் இருக்கும் நாட்டில் இவ்வளவு தூரம் அடுத்த தலைமுறைக்காகத் தியாகம் செய்கிறார்கள் என்று அறிய ஒரு சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.
vetrimagal,
////By the way I am getting stamped as " activist" in my circles. ( Do you really need this in your old age?.. kind of looks..)Maybe I should stop reading these thought provoking blogs.. :-)
////
dont worry about others comments. We need atleast 10% of our population to think in your lines.
otherwise, we will be long gone.
கேள்வி கேக்கணும், இல்லன்னா, கடுக்கா கொடுத்து மிடுக்கா போயிடுவாங்க ;)
ரத்னேஷ்,
////இந்தத் திட்டம் உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட திட்டம். இதனை மறுதலித்ததன் மூலம், மேற்கு வங்காளம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாரில்லை என்று காட்டிக் கொண்டு விட்டது அவ்வளவு தான்.//
உண்மையாக இருக்கலாம். ஆனால், விவசாயிகளின் நிலம் உண்மையில் அவங்க விருப்பமில்லாம பிடிச்சு ஃபேக்டரி கட்டப் பாத்திருந்தாங்கன்னா, இவங்க செஞ்சது சரின்னு தோணுதும்.
உள்ள என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும்?
Post a Comment