recent posts...

Tuesday, February 27, 2007

30+ limit தேவையா? உம்மை பாதிக்குமா?

சர்வே போட கிடைக்கும் சான்ஸ விட்டுடாம கபால்னு புடிச்சு, இதோ உங்களுக்காக.

எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் - தமிழ்மண முகப்புல, வலது பக்கம், புதிய பின்னூட்டங்கள் பெறும் பதிவுகளை வரிசை கட்டி காமிப்பாங்க.
நேத்து போட்ட பதிவு, சூடு ஆறிடுச்சுன்னா, தமக்குத் தாமே பின்னூட்டம் போட்டு தமிழ்மண முகப்புக்கு அனுப்ப ஒரு வசதியான அம்சம் அது.
ஆனா, பல பேர் அத ஓவரா மிஸ்-யூஸ் ( தமக்குத் தாமே, சாட்டிங், counter, உள்குத்து, வெளிகுத்து, நன்றி நவில்தல், IP publishing, etc..) பண்றதால, நல்ல பதிவுகள் கூட்ட நெரிசல்ல மாட்டிக்கிட்டு வெளியில தெரியாமயே போயிடுது.

தமிழ்மணம் இந்த பலகீனத்தை சரிகட்ட, 30க்கு மேல் உள்ள பின்னூட்டங்கள் பெற்ற பதிவுகளை முகப்பில் காட்டப் போவதில்லை என்று ஒரு பரீட்சனமாக அறிவித்துவிட்டார்கள்.

(என் பாடு திண்டாட்டம் தான் - பாட்டுக்கு பாட்டு மாதிரி தொடர் விளையாட்டு பதிவுகள் இனி ஹைலைட் பண்ண என்ன பண்றதுன்னு யோசிக்கணும் - இந்த வார அறிவிப்புன்னு ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவா போடலாம். இல்லன்னா SUNTV, CNNல ஒரு வெளம்பரம் கொடுக்கலாம். நம்ம பதிவுல என்ன நடக்குதுன்னு அப்டேட் தெரியலன்னா ஊர் என்னாவரது? :))

உங்கள் திங்கிங் என்ன?


பி.கு: பாட்டுக்கு பாட்டில் அனாமிகா 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாட்டை பாடியுள்ளார். அப்பாவி கெட் ரெடி!
ஸ்ரீஷிவ், ப்ரின்ஸ் இன் தி கோதா ஏஸ் வெல்!!

இது எழுதும்போது வந்த ஐடியா இது. இந்த மாதிரி வேற யாராவது ஸ்டார் பதிவர்கள் எழுதினதுக்கு லிங்க் போட்டா அங்க வர கூட்டத்த இங்க இட்டாந்துடலாம். எப்டி நைனா ஐடியா :)

அரட்டை அடிக்க இங்கே அணுகவும்.

Monday, February 26, 2007

தூக்கத்தை கெடுக்கும் கேள்வி

சாப்டா சாப்பாடு எறங்காம நிக்குது,
நாக்குக்கு சுவையே தெரியல,
வானத்தையே பாத்துக்கிட்டு தனக்குத் தானே ஏதேதோ பேச்சு,
நடு ராத்திரியில திடீர்னு முழிப்பு வந்து ஜன்னலயே பாக்கத் தோணுது,
டி.வி.ல படம் ஓடுது ஆனா மனசு வேற எதயோ தேடுது,

வெங்காயமும், தக்காளியும், உருளையும் ரெக்க கெட்டி பறக்கர மாதிரி கனவு வருது.
பல்சுவை குறைந்து கொண்டிருக்கும் நம் தமிழ்மண, தேன்கூடு முகப்பு வருத்தத்தை தருது.

ஹி ஹி, ஐ வில் ஸ்டாப் த பில்ட் அப்.

ஒண்ணுமில்லீங்க, அடுத்த போட்டி என்னா வைக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு பித்து பிடிச்சிடும் போல இருக்கு.

ப்ளீஸ் ஹெல்ப்.

வாக்கு போடுங்க. :)



பி.கு: sponsors வெல்கம்!
  • பாட்டுக்கு பாட்டுல ஷைலஜா பாட்டும், க்ருபா ஷங்கர் பாடினதும் கேட்டாச்சா?
  • நேயர் விருப்பத்துல நான், SK, ஷக்தி, வல்லிசிம்ஹன் பாடினதும் கேளுங்க.
  • தமிழ்ப்பிரியன் எங்கிருந்தாலும், பாட்டுக்கு பாட்டு மேடைக்கு வரவும். 'ம','அ'ல ஒரு பாட்டு ஒண்ணு சீக்கிரம் எடுத்து வுடுங்க. என்ன பாட்டு, எதுல முடிப்பீங்கன்னு சீக்கிரம் சொன்னா, அனாமிகா ரெடி ஆக ஈஸியா இருக்கும்.

  • ப்ரீயா இருக்கும்போது அரட்டை அரங்கம் பக்கம் வாங்க. இன்னிக்கு கிருபா ஷங்கர அங்க புடிச்சுதான் பா.பாட்டுக்கு பாட்டு வாங்கினேன் :).


பாடல் பதிவுகள்ள பாட்டு கேட்டுட்டு மறக்காம நல்ல வாக்கு சொல்லிட்டு மறக்காம நல்ல ஆசிய மனசுக்குள்ளயே வழங்கிட்டுப் போங்க (பின்னூட்டத்துக்கு லிமிட் வச்சுட்டாங்க. தல போற காரியம்னா மட்டும் பின்னூட்டுங்க. சரியா மக்கள்ஸ் :).

Sunday, February 25, 2007

சமீபத்தில் நான் கண்ட (ரசித்த?) திரைப்படங்கள்

சினிமா பார்ப்பது தான் என் பொழுதைப் போக்கும் வழி.

இதைத் தான் பார்ப்பேன் என்றில்லாமல், கையில் கிடைக்கும், சகல விதமான படங்களையும் சலிக்காமல் பார்த்து முடிப்பேன்.

சமீப காலமாக சொல்லிக் கொள்ளும் படி நல்ல படங்கள் கண்ணில் படவில்லை என்றாலும், ஒரு சில படங்கள் நன்றாகவே இருந்தன.

நான் சமீபத்தில் பார்த்த படங்கள் (1 ஹிந்தி, 2 தமிழ், 1 மலயாளம்) பற்றி இங்கு விலாவாரியா சொல்லியிருக்கேன். பார்த்துவிட்டு, மேலும் நல்ல படங்களை பரிந்துரை செய்யுங்களேன்.

நன்றி!

சமீபத்தில் கண்ட திரைப்படங்கள்

பி.கு:
பாட்டுக்கு பாட்டில் பங்கு பெற இங்கு க்ளிக்கலாம்.

நேயர் விருப்பம், பதிவில் பாடவும், விருப்பங்கள் கேட்கவும் இங்கு க்ளிக்கலாம்.

அரட்டை அரங்கத்தில் (chat corner) அரட்டை அடிக்க இங்கு க்ளிக்கலாம்.

புகைப்படப் போட்டியில் கலந்து கொண்டு, தக்காளி,வெங்காயம்,உருளை வைத்து படம் எடுத்த சொந்தக் கதையை எழுதிய பதிவர்களுக்கு நன்றி. இதுவரை எழுதாத பதிவர்கள், எழுதிப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

Friday, February 23, 2007

அரட்டை அரங்கம் - Chat Corner ( beta )

சர்வே எடுக்க உபகரணங்கள் வழங்கும், எமது தேர்தல் அதிகாரி(கள்)யின் விண்ணப்பத்திர்க்கு இணங்கி, அவர்களின் புதிய 'அரட்டை அரங்கத்தை' (Chat Corner) யாம் வலை ஏற்றுகிறோம். (நீங்களும் ஏற்றலாம்).

இன்னும் beta நிலையில் தான் இருக்கிறதாம். (Internet Explorer6+ ல் மட்டும்தான் வேலை செய்யுமாம், இப்போதைக்கு).

இங்கே க்ளிக்கலாம் (logoல இருக்கர படம் நெட்ல சுட்டது. no offense please:) ):

அரட்டை அரங்கம் (beta)


Your name? - உங்கள் பெயர்/புனைப் பெயர் (இன்னாவேணா குடுக்கலாம்)
"Enter chat text and press enter key" - இந்த எடத்துல இத்த அழிச்சுட்டு, இன்னாவேணா டைப் பண்ணி தட்டினா, சாட்டலாம்.
முக்கியமான விஷயம், unicode வசதி இருக்கு - சோ, என்ன பாஷைல வேணா சாட்டலாம்.

for your information, நீங்க க்ளிக்கர சமயம், வேற யாராவது chat-roomல இருந்தாதான் பதில் வரும். குட் லக்கு.

நான் ட்ரை பண்ண வரைக்கும், வேல செஞ்சது, கொஞ்சம் அப்பப்ப slowவா இருக்கு. ஏதாவது பிரச்சனன்னா, எங்கிட்ட வராதீங்க, அவங்க contactus pageல போய் திட்டுங்க :)

நன்றி!

Wednesday, February 21, 2007

நேயர் விருப்பம் (ஷைலஜா) - பொய் சொல்லக் கூடாது காதலி

நேயர் விருப்பம் பதிவு இன்னும் அவ்வளவா சூடு பிடிக்கல.

பாட்டுக்கு பாட்டு, பிச்சுக்கிட்டு போகுது. கடைசியா SK 'நான் ஒரு குழந்தை' பாடியிருக்காரு. அடுத்ததா செந்தழல் ரவி, 'ட'கர வரிசையிலோ, 'இ'கர வரிசையிலோ பாடி நம்மள சொக்க வைக்கப் போறாரு. பாட வேண்டிய சமயத்தில் பாடி அனுப்பாத க்ருபா ஷங்கருக்கு பிடி-வாரண்ட் கொடுத்திருக்கோம். ஆள் அப்ஸ்காண்டட் :)

முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லு சோறு, இன்னும் யாரும் பாடி அனுப்புல.

ரெண்டாவது விருப்பமான 'கொடியிலே மல்லியப்பூ' நான் மட்டும்தான் பாடியிருக்கேன் (அத கேட்ட பாதிப்போ? ஹிட் கம்மி ஆயிடுச்சு :) )

மூணாவதா இப்போ, ஷைலஜா, கிசு-கிசு ஸ்டைல்ல கேட்ட பாடலை Priya கண்டுபிடிச்சு சொல்லிட்டாங்க.

மேல் விவரங்கள் இங்கே.

கலக்குவோம்!

Tuesday, February 20, 2007

நேயர் விருப்பம் (அனாமிகா) - கொடியிலே மல்லியப்பூ

இன்றைய நேயர் விருப்பம் அனாமிகா கிட்டேயிருந்து வந்திருக்கு.

விருப்பத்த நான் பூர்த்தி பண்ணியாச்சு (ஹி ஹி,சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல), அத்தோட, அந்த பாடலோட ஒளியும் ஒலியும் கூட போட்டாச்சு.

மேல் விவரங்கள் இங்கே.

பி.கு1: முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, இன்னும் பூர்த்தி செய்யப் படவில்லை.யாராவது கோதால் ஏறங்குங்க.

பி.கு2: யாராவது, கிருபா ஷங்கர பாத்தா, அவர் பாட்டுக்கு பாட்டு வண்டிய, block பண்ணி நிக்கறத எடுத்து சொல்லி, ஸ்பாட்லயே ஒரு பாட்டு வாங்கி அனுப்புங்க :)

பி.கு3: ஷைலஜா கேட்ட நேயர் விருப்பம். யாராவது எந்த பாட்டுன்னு தெரிஞ்சா சொல்லுங்க:
கிசுகிசு பாணில சொல்றேன் கண்டுபிடிக்கமுடியுதா பாருங்க!!
ஓடற படம்..
மல்லிகைப்பூ பெயர்லகொண்டநடிகைகதாநாயகி.
திருமால்சிவன் பெயர்கள் பாடகரின் பெயர்ல இருக்கும்
பாட்டு நடுவில் ஐய்யெயோ வார்த்தைவரும்!!
கண்டுபிடிச்சிட்டா பாடலை அளிக்கவும்.தாங்க்யூ!

Monday, February 19, 2007

நேயர் விருப்பம் - நித்தம் நித்தம் நெல்லிச் சோறு



"நேயர் விருப்பம் - இங்கு விருப்பங்கள் நிறைவேற்றப்படும்" என்று ஒரு புதிய ப்ளாக் க்ரியேட்டியுள்ளேன்.

(காஸா பணமா, ஓசில பினாயில் கெடச்சாலும், குடிக்காம விடமாட்டோம்ல)

எல்லாரும், அவங்கவங்க விருப்பங்கள கேட்க, அதை மற்ற பதிவர்கள்/வாசகர்கள் செய்ய ஒரு இடமாக இது செயல்படும்.
'கண்டதையும் கேக்கப்படாது' - இதுவே tag-line. இதை கவனத்தில் கொண்டு கேட்கலாம் :)

முதல் விருப்பத்தையும், நானே தொடங்கி வைத்துவிட்டேன்.

விவரங்கள் இங்கே. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு.

எப்படிங்க ஐடியா? ஏற்கனவே யாராவது செஞ்சாச்சோ?

இதில் Adminஆக பணிபுரிய, குழுவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன :)

பி.கு: March லேருந்து , ஆபீஸ்ல, எக்கச்சக்க வேல ஆரம்பமாவுது - போற போக்குல சர்வே department'ம், லீஸ் விடப்படலாம் :)

Sudar கை மாறியதா?


தேன்கூடு சாகரன் கல்யாண் துவங்கி வைத்த சுடர், கடைசியாக நாமக்கல் சிபியிடம் இருந்து தருமி கைக்கு மாறியதாக ஞாபகம்.

ஆனால், இன்று தேன்கூடு முகப்பில், இரவுகழுகு, ஆவியர் உலகம், புலிகேசி வரிசை கட்டி சுடர் கொண்டு ஓடுவதை பார்த்தேன்.

சுடர் கை மாறிவிட்டதா? இல்ல, சுட்டுட்டாங்களா?

தேன்கூடு 'சுடர்' அடுக்கி வைக்கும் முறையில் ஏதாவது குளறுபடி இருக்கலாம் - அதை mis-use செய்யாமல், முறையின்றி சுடர் ஏற்றிய அனைவரும் அதை அணைத்து விட்டு, வரிசையில் உள்ளவர்கள் சுடர் எடுத்து ஓட ஆவன செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

"நாங்க சுடர் ஏத்தக் கூடாதா என்று கழுகு கேட்பது என் காதில் விழுகிறது" - night eagle சார், கிசு கிசு, கண்டிப்பா தேவைதான், ஆனா அது பத்திரிகையின் மூலை முடுக்கில் இருந்தா நல்லது. முகப்பில் யாரும் போட வேண்டாமே. என்ன நான் சொல்வது?
தேன்கூட்டின் பெயர் அல்லவா கெட்டுவிடும்.

தேன்கூடு சுடரின் விதிமுறைகளையும் ஒரு முறை படித்துவிடுங்கள்.

தவறாக ஏதாவது சொல்லியிருந்தா, மீ த எஸ்கேப். :)

நன்றி!

பி.கு: தேன்கூடு admin வேலை செய்பவர்கள் யார்? ஏதாவது உதவி தேவை என்றால் என்னை surveysan2005 at yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நமக்குள்ளேயே ஒரு குழு அமைத்து செயல்படலாம், தேவைப்பட்டால்.


---------------------------------------------------------
latest update:
நாமக்கல் சிபி இப்பொழுதுதான் என் தவறை திருத்தினார்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சுடர் ஏற்றக் கூடாது என்று ரூல்ஸில் தெளிவாக சொல்லப் படவில்லை.

so, கழுகார் ஆரம்பித்த சுடரில் ஒன்றும் பெரிய தவறில்லை என்றே நினைக்கிறேன்.
பலர் சுடர் ஏற்றினால் குழப்பம் தான் மிஞ்சும். நேர்த்தி தவறி விடும் என்பதே என் எண்ணம்.

(ஆவியார், தனது பதிவை நம் விருப்பத்திர்க்கிணங்கி தூக்கி விட்டார். அவருக்கு நன்றி. இனி சர்வேக்கு அவசியமில்லை என்பதால் சர்வே தூக்கப்பட்டது. இருட்ல நடக்க தான் பயமா இருக்கு :) ஆவி சார், ஒண்ணும் பண்ணிட மாட்டீங்களே? )

சுடரில் பங்கேற்கும் அனைவரும் கீழே உள்ள ரூலை மனதில் பதிந்து கேள்விகளை கேட்கவும்/பதில் அளிக்கவும். நன்றீஸ்.
சாரி பார் த ட்ரபிள்!

சுடர் ரூல்ஸ் பக்கத்திலிருந்து
**கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. **
---------------------------------------------------------

===========================================================
தேன்கூடு உதவிப் பக்கத்தில், சுடர் பற்றிய கருத்து:

தேன்கூடு தமிழோவியம் மெகா வெற்றிகளுக்குப் பிறகு, இதோ தேன்கூடு குழு வழங்குகிறது ‘சுடர் - ஒரு சுவாரசியமான தொடர் விளையாட்டு‘ .

தேன்கூடு நல்ல எழுத்துக்களை உற்சாகப்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போட்டிகள் ஒரு வழி என்றால் விளையாட்டும் ஒரு வழிதானே! :-)

உங்கள் கற்பனைகள்/திறமைகளை புதுவிதத்தில் வெளிப்படுத்த இந்த விளையாட்டு துணை நிற்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ரொம்ப சுலபம் - கேள்விகள் & பதில்கள். உங்களிடம் வீசப்படும் கேள்விகளை நீங்கள் எப்படி பதில் சொல்கிறீர்கள் என்பதும் நீங்கள் கேட்கும் கேள்விகள் எப்படி கையாளப்படுகிறது என்பதுமே இங்கு திறமையை நிரூபிக்கும் சவால்! கொஞ்ச நாள் நாமும் தான் ‘மதன்’களாகிப் பார்ப்போமே! கேள்விகள் ஜாலியாகவும் இருக்கலாம், சீரியஸாகவும் இருக்கலாம். எப்படி இருப்பினும் நம் அனைவருக்கும் இந்த விளையாட்டு சுவாரசியமானதாகவும் நிறைய அறிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கப்போகிறது என்பது நிச்சயம்.:-)

சுடர் உங்களிடம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் ரெடியா இருங்க! உங்கள் உற்சாகமே எங்கள் ஊக்கம்!!

துவங்கி வைத்த ‘வெட்டிப்பயல்’ அவர்களுக்கு எங்களின் நன்றிகள்.

அன்புடன்,
தேன்கூடு குழு.

=============================================================


இதப்பாத்தா ஒரு நேரத்தில் ஒரு வரிசைதான் இருக்கணும் என்று எண்ணித்தான் சுடர் ஏற்றப்பட்டதாக தெரிகிறது.
So, மக்கள்ஸ், kindly co-operate!

Sunday, February 18, 2007

த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்

 
போட்டி அமர்க்களமாக நடந்து முடிந்தது.

போட்டியில் கலந்து கொண்ட எல்லா புகைப்படங்களும் சிறந்த தரத்துடன் இருந்தது உண்மை (ஒரு சில புகைப்படங்களில் மட்டும் ஒரு நையாண்டித் திறமை கையாளப் பட்டிருந்தது :)).

சும்மா டைம் பாஸுக்கு போடோ எடுப்பவர் மத்தியில், இவ்வளவு திறமை இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

199 வாக்குகள் பதிவாயிருந்தன;
வெற்றி பெற்றவர் விவரங்கள் கீழே:


முழு விவரங்கள் இங்கே.

photo_M, _F, _L அனுப்பியது யாரென்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.

'(த.வெ.உ) சிறந்த புகைப்பட வித்தகர்' டைட்டிலும், பரிசும் வெல்பவர், photo_M ஐ க்ளிக்கிய நெல்லை சிவா.
வாழ்த்துக்கள் நெல்லை சிவா. கலக்கிட்டீங்க. வெங்காயம் தாமரை ஆனதும், தக்காளி அல்லி ஆனதும் யார் ஐடியாங்க? விளக்கமா பதிவொண்ணு போடுங்க. நன்றி!


photo_F அனுப்பி இரண்டாம் இடத்தை பிடித்தவர் பெருசு. சூப்பருங்க, அந்த வெங்காயக் கண்ணும், அந்த ரைத்தா கட்டிங்ல face வச்சதும், சூப்பரோ சூப்பர். தங்கமணி கிட்ட திட்டு வாங்கி, அவசர அவசரமா நீங்க இதை எடுத்தத பத்தி போட்ட பதிவு படித்தேன். முழு விவரங்களோடு இன்னொரு பதிவு போடுங்க. french-frys கட்டிங்க்ல இருந்த பச்சை உருளைதான் சில சர்ச்சையில் மாட்டிக் கொண்டது :)


photo_L அனுப்பி மூன்றாம் இடத்தை பிடித்தவர் Aparnaa. வாழ்த்துக்கள் அபர்ணா. ஒளிந்து கொண்டு இருக்கும் தக்காளி அழகு. க்ளோஸ்-அப் வெங்காயமும் அழகு. போண்டா போட உதவிய, போட்டிய பத்தின உங்க பதிவும் அழகு. :)

போட்டியின் co-sponsor கடலோடி பரணீயும் நானும் இணைந்து,

$25 முதல் பரிசுக்கும், $75 உதவும் கரங்கள் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாகவும் வழங்க முடிவு செய்திருந்தோம்.

இது பற்றி நெல்லை சிவாவுக்கு தெரிவித்த போது, தனது $25 ம் நன்கொடையில் சேர்த்து $100 ஆக அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

மொத்தம் $100 உதவும் கரங்கள் நிறுவனத்துக்கு, நமது தேன்கூடு 'சாகரன்' கல்யாண் நினைவாக, இணையப் பதிவர்கள் சார்பில் அனுப்பப் படும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, வாக்களித்த, விளம்பரப் படுத்திய அனைவருக்கும் நன்றி.

தேன்கூடு, தமிழ்மணம் நிர்வாகத்திர்க்கும் நன்றி.

இம்முறை, புகைப்பட நேர்த்தியை (lighting, framing) விட, புகைப்படத்தில் இருந்த subject வைத்திருந்த (கட்டிங், கார்விங், க்ரியேடிவ் டச்) விதம்தான் பலரையும் ஈர்த்திருக்கிறது.

அடுத்த போட்டி என்ன வைக்கலாம்? ஐடியாஸ் வரவேற்க்கப் படுகின்றன :)

பி.கு: படங்களும் பதிவர்களும் (எல்லோரும் 'படம் எடுத்த கதை'யை சுவாரஸ்யமாக எழுதவும் :) ):
Anamika - photo_A.jpg, Boston Bala - photo_B.jpg, Radha Sriram - photo_C.jpg, Oppaari - photo_D.jpg, Appavi - photo_E.jpg, Perusu - photo_F.jpg, k4kkarthik - photo_G.jpg, Anand - photo_H.jpg, MuthuLakshmi - photo_I.jpg, Jeeves - photo_J.jpg, Usha - Photo_K.jpg, Aparna - photo_L.jpg, Nellai Siva - photo_M.jpg, KrubaShankar - photo_N.jpg, Brindan - photo_O.jpg, Shakthi - photo_P.jpg

சர்வேசனின் ஒரு வரி தீர்ப்பு சொல்லலன்னா நல்லா இருக்காது அதனால, என் வமர்சனம் :)

photo_A - day-lightல் சிம்பிள் ஷாட். வெங்காயம் கட் பண்ணியிருந்தா தூள் கெளப்பியிருக்கும்.
photo_B - ஹிஹி, Valentineன் தாக்கம். வாய் தான் கொஞ்சம் கோணலாயிடுச்சு :)
photo_C - பள பள தக்காளியும், வெங்காயமும் அழகு. பக்கா டாப் angle ஷாட்.
photo_D - வாவ் சொல்ல வைத்த படம்.
photo_E - color இல்லாததனால், பன்ச் மிஸ்ஸிங்.
photo_F - யப்பா, சிம்பிளா நெத்தியடி .
photo_G - சூப்பர். food magazineல போடலாம்.
photo_H - இது professional. நேர்த்தியான framing.
photo_I - 16ல் எனக்குப் பிடித்தது. வெயிலின் அழகு ஒரு +.
photo_J - கீழே இருக்கும் பச்சை கொஞ்சம் தூக்கல். முக்கிய காய்களை திசை திருப்பும் பச்சை.
photo_K - Cக்கு opposite. காய்கறிகள் freshness கம்மி.
photo_L - பளிச் வெங்காயம் அழகு. ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.
photo_M - தடாகம் அழகு. முழுத் தக்காளி ஒளித்திருக்கலாம். உருளையையும் லில்லி ஆக்கியிருக்கலாம்.
photo_N - ஹி ஹி ஹி! camera phoneஆ? out-of-focus.
photo_O - கொடுவா மீசைக்கு ஏற்ற கண்கள் மிஸ்ஸிங். :)
photo_P - குட்டி தக்காளி சீப்பா? தண்ணி தெளிச்சிருந்தா இன்னும் தக தக கூடியிருக்கும். குட் framing.

நன்றீஸ்! நன்றீஸ்! நன்றீஸ்!

வாக்கெடுப்புப் பதிவு
அறிவிப்பு வந்த பதிவு

 

Friday, February 16, 2007

புகைப்படப் போட்டியும் அழுகின த.வெ.உ வும்...

 
இதுவரை வாக்களிக்காதவர்கள், தயவு செய்து போட்டியில் உள்ள புகைப்படங்களை கண்டு களித்து, சிறந்த புகைப்படத்திர்க்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

வாக்களிக்க இங்கே க்ளிக்குங்க. வாக்களிக்க கடைசி நாள் வரும் ஞாயிறு இரவு 11:59 இந்திய நேரம்.

(வாக்களிக்காதவர்கள் வீட்டுக்கு, போட்டியில் பங்கு பெற்ற த.வெ.உ பார்சல் அனுப்பப்படும் -- இப்ப கொஞ்சம் அழுகிப் போயிருக்கும் சாக்குரத :) ).

நன்றீஸ்! தேங்க்ஸ்! ஷுக்ரியா! க்ராஸியஸ்!

உலகெங்கிலுமிருந்து வந்து இந்த புகைப்பட போட்டியை கண்டுகளிக்கும் நேயர்கள், மேலே தமிழில் நான் சொல்லும் நன்றி புரியாவிட்டால், : இங்கே சொடுக்கவும்.

AFRIKAANS dankie
ALBANIAN faleminderit
ALSATIAN merci
ARABIC chokrane
TUNISIAN ARABIC Barak Allahu fiik
ARMENIAN chnorakaloutioun
AZERI çox sag olun / tesekkur edirem
BAMBARA a ni kié
BASQUE eskerrik asko (southern basque) / milesker (northern basque)
BELARUSIAN Дзякую (dziakuju)
BENGALI dhanyabaad
BOBO a ni kié
BOSNIAN hvala
BRETON trugéré / trugaré / trugarez
BULGARIAN merci / blagodaria
BURMESE (thint ko) kyay tzu tin pa te
CATALAN gràcies
CEBUANO salamat
CHINESE xièxie
CORSICAN grazie
CROATIAN hvala
CZECH děkuji / díky
DANISH tak
DUTCH dank u wel / dank je wel
ESPERANTO dankon
ESTONIAN tänan / tänan väga (thank you very much)
EWÉ akpé
FAROESE takk fyri
FIDJIAN vinaka
FINNISH kiitos
FRENCH merci
FRISIAN dankewol
FRIULAN gracie
GALICIAN gracias / graciñas
GERMAN danke
GREEK ευχαριστώ (efharisto)
GUARANÍ aguyjé
GUJARATI aabhar
HAITIAN CREOLE mèsi
HAWAIIAN mahalo
HEBREW toda
HINDI dhanyavad
HUNGARIAN köszönöm
ICELANDIC takk
INDONESIAN terima kasih
IRISH GAELIC go raibh maith agat
ITALIAN grazie
JAPANESE arigatô
KABYLIAN tanemirt
KANNADA dhanyavadagalu
KHMER akun
KIRUNDI murakoze
KOREAN kam sah hamnida
KOTOKOLI sobodi
KRIO tenki
KURDISH spas
LAO khob chai (deu)
LATIN gratias ago (from 1 pers.)
gratias agimus (from X pers.)
LATVIAN paldies
LEBANESE choukrane
LITHUANIAN aciu
LOW SAXON bedankt / dank ju wel
LUXEMBOURGEOIS merci
MACEDONIAN blagodaram
MALAGASY misaotra
MALAY terima kasih
MALAYALAM nanni
MALTESE niżżik ħajr / grazzi / nirringrazzjak
MARATHI aabhari aahe / aabhar / dhanyavaad
MONGOLIAN bayarlalaa (Баярлалаа)
NORWEGIAN takk
OCCITAN mercé / grandmercé
PAPIAMENTO danki
PERSIAN motashakkeram, mamnun (formal) / mochchakkeram, mamnun, mersi (informal)
POLISH dziękuję
PORTUGUESE obrigado (M speaking) / obrigada (F speaking)
ROMANI najis tuke
ROMANIAN mulţumesc
RUSSIAN спасибо (spacibo)
SAMOAN faafetai lava
SARDINIAN gratzias
SCOTTISH GAELIC tapadh leat (singular, familiar)
tapadh leibh (plural, respectful)
SERBIAN hvala
SHONA waita (plural: maita)
SINDHI meharbani
SINHALA stuutiyi
SLOVAK dakujem
SLOVENIAN hvala
SOBOTA hvala
SPANISH gracias / muchas gracias
SWAHILI asante / asante sana
SWEDISH tack
TAGALOG salamat po
TAHITIAN mauruuru
TAMIL nanedri
TATAR rahmat
THAI ขอบคุณคะ (kop khun kha) - woman speaking
ขอบคุณครับ (kop khun krap) - man speaking
TIGRINYA yekeniele
TURKISH tesekkur ederim, sagolun
UDMURT tau
UKRAINIAN diakuiu
URDU shukriya
WALOON ("betchfessîs" spelling) gråces / merci
thank you very much : gråces (merci) traze côps, gråces (merci) beacôp
WELSH diolch
WEST INDIAN CREOLE mèsi
WOLOF djiere dieuf
XHOSA enkosi
YIDDISH a dank
YORUBA o sheun
ZULU ngiyabonga (literally means : I give thanks)
siyabonga (= we give thanks)
ngiyabonga kakhulu (thanks very much)

Wednesday, February 14, 2007

நெல்லை சிவா எங்கிருந்தாலும்...

 
மேடைக்கு வரவும்..

உங்கள் இசையை கேட்க்க ஓடோடி வந்திருக்கும் ரசிக சிகாமணிகள் வெயிட்டிங்க்!
நீங்கள் பாடிய பிறகுதான் பாடுவேன் என்று Queueல் நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கார்கள்.
(Valentines day busyஆ? :) )

விவரங்கள் இங்கே :)

பி.கு: புகைப்படப் போட்டிக்கு வாக்கு போட்டாச்சா?. வாக்காதவர்கள், படங்களை பார்த்து வாக்குங்கள், ப்ளீஸ். நன்றி!

:)

Tuesday, February 13, 2007

காதலர் தினம் சர்வே + இலவச சுட்ட கவிதை

 
காலேஜ் டேஸ்ல Feb 14th தான் தீபாவளி நமக்கெல்லாம்.

ஹ்ம். சுகமான நாட்கள் அவை.

'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே' ரேஞ்சுக்கெல்லாம் யாரும் இருக்கல.

சும்மா நட்பு வலை மட்டுமே இருந்தது. அந்த வயசுக்கு அதெல்லாம் நல்லாவும் இருந்தது. சிரித்ததும், அழுததும், சுற்றியதும், சண்டை போட்டதும், திரும்ப சேர்ந்ததும் கவித்துவமான நாட்கள்.

சும்மா சொல்லக் கூடாது, அந்த நாளெல்லாம் வாழ்க்கையில் இல்லாம போயிருந்தா ஒரு இழப்புதான். (இதை எல்லாம் அனுபவிக்காதவர்கள், You don't know what you missed :) ).

Feb14th அன்று சக நட்புக்கு ஆங்கிலத்தில் கவிதை எழுதிக் கொடுப்பார்கள். சிலர் Higgin Bothams, American Library, Hallmark மாதிரி இடங்களில் உள்ள நல்ல greetings card வாங்கிக் கொடுப்பார்கள்.
நமக்கு அப்பெல்லாம் கவுஜயும் வராது (இப்ப மட்டும் வருதா?), கையில் காசும் இருக்காது.
அடுத்தவன் வாங்கர card ல் இருக்கும் கவுஜயை type செய்து italicize ல் ஒரு print-out எடுத்து கொடுத்த ஞாபகம்.

ஹ்ம். நல்ல நாட்கள் அவை :)

சரி அத்த வுடுங்க. விஷயத்துக்கு வருவோம்.
இப்பெல்லாம் காதலர் தினம்னா, Mumbai மாதிரி இடங்களில் பெரிய் எதிர்ப்பாமே? நம்ம ராமதாஸ் ஐயாவும் காதலர்களுக்கு தடா கேக்கறாறாமே?

உங்களுக்கு எப்படி? அதுவே சர்வே! (சர்வேயின் அடியில் ஒரு ஆங்கில கவுஜ. உங்க நட்புக்கு italicize பண்ணி print-out எடுத்துக் கொடுங்க :) சொக்கிடுவாங்க! )



As friends we share so much more
than other people may ever realize..
We share a closeness
that is very precious
and a friendship that is very lasting
We know we don't have to be afraid
of opening up to one another..
of trusting each other completely..
of appreciating every moment of time
we spend in one another company.
Im not afraid to let you see me cry
and you are the one person I want to be with
when I want to feel crazy
Thru it all I know you understand in the same way
that, I understand you..
There are other people whom I dearly love
and care about in this world,
but there is no one else quite like you..
Everytime I look back
our friendship has been
one of the best parts of my yesterdays
And everytime I look ahead
I see our friendship
as the one thing I can always count on
to get me thru tomorrow.





பி.கு: புகைப்பட போட்டி வாக்களிக்க இங்கே க்ளிக்கவும். நன்றி!

.

சர்வேசன் - பாட்டுக்கு பாட்டு - சங்கிலித் தொடர்.



பாட்டுக்கு பாட்டு பற்றிய விவரங்கள் இங்கே க்ளிக்கினா தெரியும். நீங்களும் கோதாவில் கலந்து கொல்லலாம், I mean, கொள்ளலாம் :)

1சர்வேசன் (feb'07)யாரந்த நிலவு
2சிறில் அலெக்ஸ் (feb'07)உறவுகள் தொடர்கதை
3ஷைலஜா (feb'07)முதல் முதலாக ஜன்னல் ஓரத்தில்
4நெல்லை சிவாயார் சொல்வதோ
5Kittuயமுனை ஆற்றிலே
6அருள் குமார்என்னுள்ளே என்னுள்ளேக்ளிக் இங்கே
7Anamikaதூங்காத விழிகள் ரெண்டு(bonus)
& அந்த நிலாவத்தான்
க்ளிக் இங்கே
க்ளிக் இங்கே2
8Appaaviஅறியாத மனசுக்ளிக் இங்கே
9Radha Sriramமுத்தக்களோ கண்கள்க்ளிக் இங்கே
10Shakthiதூங்காத கண்ணென்று ஒன்றுக்ளிக் இங்கே
11ஷைலஜாஉன்னை ஒன்று கேட்ப்பேன்க்ளிக் இங்கே
12வல்லிசிம்ஹன்ஆலய மணியின் ஓசையைக்ளிக் இங்கே
13SKநான் ஒரு குழந்தைக்ளிக் இங்கே
14ஷைலஜாஇஞ்சி இடுப்பளகாக்ளிக் இங்கே
15கிருபா ஷங்கர்எனக்கொரு girl friend வேணுமடாக்ளிக் இங்கே
16தமிழ்ப் பிரியன்அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்க்ளிக் இங்கே
17Anamikaதமிழுக்கும் அமுதென்று பேர்க்ளிக இங்கே
18Appaaviராஜ ராஜ சோழன் நான்க்ளிக் இங்கே
19சர்வே‍சன்வனிதாமணி வனமோகினிக்ளிக் இங்கே
20Sowmyaஉன் பார்வையில் ஓராயிரம்க்ளிக் இங்கே
21Musical Wattsஎன் வானிலே ஒரே வெண்ணிலாக்ளிக் இங்கே
22Shakthiஅழகிய கண்ணே உறவுகள் நீயேக்ளிக் இங்கே
23ஷைலஜாஎண்ணப் பறவைக்ளிக் இங்கே
24Jeevesஆகாயம் ஆகாயம்க்ளிக் இங்கே
25ப்ரசன்னா (குறைகுடம்)மன்றம் வந்த தென்றலுக்குக்ளிக் இங்கே
26மலைநாடான்என்னவளே அடி என்னவளேக்ளிக் இங்கே
27smssநானாக நானில்லை தாயேக்ளிக் இங்கே
28??எ,ஏ,ய,யா?


தொடரில் கலந்து கொண்டு பாட பின்னூடுங்கள்.

நன்றி!

பி.கு: போட்டி கி.பி 2007 Februaryல் ஆரம்பித்த விதம் (History behind பா.பாட்டு :) ) இங்கே.

Please join and build the chain. Shying away is not an option! :)

ப்ளாக் இல்லாதவரும் கலந்து கொள்ளலாம்.

பாடல்களை mp3 யாக எனக்கு surveysan2005 at yahoo.com ஈ.மெயில் முகவரிக்கு அனுப்பலாம், அல்லது உங்கள் ப்ளாகிலேயே ஒரு பதிவு போட்டு எனக்கு URL அனுப்பினாலும் போதும்.

ஈமெயிலில் அனுப்பினாலும், மறவாமல் ஒரு பின்னூட்டம் போடுங்க. பின்னூட்டம் தான் முதலில் பார்ப்பேன். நன்றி!

வரிசையில் அடுத்த பாடல் உங்களதாய் இருப்பின், எந்த பாடலை பாடி என்ன எழுத்தில் முடிக்கப் போகிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்க்கள், that will help the next participant also to decide on the song and tell the continuation for the next song and help the next contestant to prepare and that contestant should tell the next song so that the next can prepare... blah blah blah.. gotcha?

Monday, February 12, 2007

சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி - வாக்கெடுப்பு!

பொறுமையாக தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கெல்லாம் வாங்கி அதை புகைப்படம் பிடித்து அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி! Some very creative pictures in the line-up.

இந்த மூணு காய்களை வச்சு வித்த காட்டியிருக்கீங்க. சபாஷ்!

போட்டியில கலந்துகிட்ட 25 பேர்ல, 16 பேர்தான் படத்த அனுப்பி இருக்காங்க.
மீதி 9 பேருக்கு வேலை பளு, தக்காளி தட்டுப்பாடு, வீட்டுக்காரம்மா படம் எடுப்பதர்க்குள் குர்மா பண்ணிட்டாங்க, இப்படி பல பிரச்சனைகள் :) பரவால்ல அடுத்த தடவ ஜமாய்ங்க!

இங்கே க்ளிக்கினா போட்டிப் புகைப் படங்களை பார்க்கலாம் @flickr.

படங்களை இங்கேயும் (yahoo) பார்க்கலாம்.

photo_A முதல் photo_P வரை 16 படங்கள் உள்ளன. எல்லா படத்தையும், மிகப் பொறுமையாகப் பார்த்து உங்களுக்கு மிகவும் பிடித்த படத்தின் பெயருக்கு, கீழே உள்ள வாக்குப் பெட்டியில் வாக்களியுங்கள்.

போட்டியை பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களின் அணிவகுப்பு இங்கே. படத்தின் மேல் க்ளிக்கினா படத்தின் பெயர் தெரியும். மேலே உள்ள லிங்க் உபயோகித்து பாத்தீங்கன்னாதான் தெளிவா படத்தின் நேர்த்திகள் நன்கு தெரியும். கண்டு களியுங்கள்:


வாக்குப் பெட்டி (Vote Box):


போட்டி முடிவுகள் காண இங்கே க்ளிக்கவும்

போட்டி முடிவுகள் வரும் திங்கள் February 19th அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு பற்றி விளம்பரம் செய்யுங்கள். நன்றி!

போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் ஒரு ஓ..ஓ!!!
போட்டியை பற்றி விளம்பரம் செய்தவர்களுக்கும் ஒரு ஓ!
போட்டிப் பரிசை sponsor செய்ய முன் வந்த கடலோடி பரணீ அவர்களுக்கும் ஓ!

இப்படியெல்லாம் நமது creativity வெளிக்கொணர வாய்ப்பளித்த தமிழ்மணம், தேன்கூடுக்கும் நன்றிகள் பல!

பாட்டுக்கு பாட்டு பாத்தீங்களா? அதிலும் பங்கு பெற்று ஆட்டம் களை கட்ட உதவலாமே? :)

வாழ்க்கை வாழ்வதற்கே!!

பொன்ஸ் அனுப்பிய படம் இப்பதான் கையில் கிடைத்தது. தவறான ஈ.மெயில் ஐடியினால் வந்த குளருபடி. போட்டியில் ஏற்ற முடியாததால், உங்கள் பார்வைக்கு இங்கே சேர்க்கிறேன்.

படத்தின் தலைப்பு: நாளைய சந்ததியின் உலகம்


Adiya என்பவர் தவறான போட்டிக்கு அனுப்பி விட்டார் என்று நினைக்கிறேன் (யாருங்க அங்க, முருக்கு, பழம், பச்சமொளகா, தவா, காலு, tshirt, bermuda shorts போட்டி நடத்தறது?) :)


.

Sunday, February 11, 2007

தேன்கூடு 'சாகரன்' கல்யாண்


'சாகரன்' கல்யாண் 1975~07


யாரென்றே தெரியாது, ஆனால் மனம் வேதனைப் படுகிறது.

அப்படியென்றால் அவர் நல்லவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சின்ன வயதில் பல சாதனைகள் படைத்திருக்கிறார்.

வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல் ஒருவித அயற்ச்சியை உணரும் பலருக்கு ஒரு உந்துகோலாக இருந்திருக்கிறார்.

சுயநலம் கருதாமல் பல நல்ல காரியங்களை துவங்கி நாம் தேன் பருக உதவி இருக்கிறார்.

நண்பர் 'சாகரன்' கல்யாண் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

நடந்தவை, நடப்பவை, நடையேறப் போபவை யாவும் நன்மைக்கே என்று ஒவ்வொரு துயரச் சம்பவத்தின் போதும் நினைத்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

கல்யாணின் உடன் இருக்கும் நண்பர்கள், அவர் குடும்பத்துக்கு இந்த நேரத்தில் தேவையானதை கண்டிப்பாக செய்வார்கள் என்று தெரியும்.

வருங்காலத்திர்க்கு தேவையானதையும் யோசித்து என்ன செய்ய வேண்டுமோ அதை இணைய நண்பர்கள் பலம் கொண்டு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

வேற்றுமைகள் மறந்து, அவரின் தேன்கூட்டை, நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.

தக்காளி, வெங்காயம், உருளை தட்டுப்பாடா?

25 பேர் பங்கு கொண்ட புகைப்பட வித்தகர் போட்டியில், 12 படங்கள் வந்தாச்சு.
கீழ இருக்கர 13 பதிவர்கள்கிட்ட இருந்து இன்னும் படம் வரல.

செந்தழல் ரவி, நெல்லை சிவா, வெற்றி, சிறில் அலெக்ஸ், பிருந்தன், சோத்துக்கட்சி, மாதங்கி, சு.கிருபா ஷங்கர், காஞ்சி பிலிம்ஸ், Aparnaa, Kohilavani Karthikeyan, பொன்ஸ், Prince Ennares Periyar

பொன்ஸும், Princeம் நேரம் இன்மையால் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கறேன்னு சொல்லி இருக்காங்க. மத்தவங்க என்னங்க பண்றீங்க? தக்காளி தட்டுப்பாடா?

கைவசம் உள்ள 12 படங்களும் நல்லா இருக்கு.

படம் அனுப்பாதவர்களுக்கு இன்னும் ஒரு நாள் டைம் கொடுத்தால் ஒண்ணும் குடிமுழுகிடாது என்பதால், சர்வே கமிட்டியின் அவசர கூட்டத்தில், திங்கள் கிழமை 12th Feb 2007 11:59PM IST படங்கள் அனுப்ப கடைசி நாளாக அறிவித்து விட்டார்கள் :).

என்னங்க சரிதானே?

செவ்வாய்க் கிழமை காலை, வாக்கெடுப்பு ஆரம்பமாகும் :)

நன்றி!

புகைப்பட வித்தகர் போட்டி பற்றிய விவரங்கள் இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

.

அட எருமைகளா...



அட எருமைகளா



Friday, February 09, 2007

உலகிலேயே முதன் முறையாக... உங்கள் சர்வேசனின்... இணையத்தில் பாட்டுக்கு பாட்டு...

ஹி ஹி. Stop the mujik.

ஒண்ணுமில்ல மக்கள்ஸ், சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி, நம்ம சிறில் அலெக்ஸு ஒரு voice பதிவ போட்டுட்டு என்ன மாதிரி குரல் வளம் மிக்கவர்களை உசுப்பேத்தி விட்டுட்டாரு.

நல்லதா வீண செஞ்சு அத்த யூஸ் கெட்டுப்போவ புழுதீல போடலாமா?
போடக் கூடாது.

அதனால, நானும் கோதால குதிச்சுட்டேன்.

நம்ம MS.Viswanathan ஐயா, உடல் நலம் சரி இல்லாம ஆஸ்பத்திரீல அட்மிட் பண்ணிருக்காங்களாம். திரை உலக ஜாம்பவான்ஸ் யாரும் போய் எட்டிக் கூட பாக்கலன்னு எங்கியோ படிச்சேன். கஷ்டமா இருந்தது கேக்கவே.

எவ்வளவோ முத்து முத்தான பாடல்கள் கொடுத்து நம் மனதில் ஈரம் படரச் செய்தவர் MSV.
அவருக்கு நன்றிகள் பல கூறி அவர் பாதம் தொட்டு, என் Voice~பாடல் பதிவை தொடங்குகிறேன். (தலைவா, மன்னிச்சுருங்க for the killing of your beautiful beautiful song).

இதோ உங்களுக்காக: யாரந்த நிலவு ஏன் இந்த கனவு from ஷாந்தி.
கேட்டு, என்ஸாய் மாடி. பாடலை அமர்ந்து கொண்டு கேட்கவும். நிந்துனு கேட்டு அதிர்சீல கீழ விழுந்தா நான் பொறுப்பில்லை :) உங்கள் நலனைக் கருதி, வெறும் பல்லவியோட நிறுத்திட்டேன்.

இத ஒரு பாட்டோட நிறுத்திடாம, ஒரு பாட்டுக்கு-பாட்டு மாதிரி மத்த பதிவர்களோடு சேர்ந்து கொண்டு செல்ல ஆசை.
இந்த பாட்டு 'வு' ல முடிச்சிருக்கேன். அடுத்து யாராவது, 'வ'கரத்துல அடுத்த பாட்டு பாடி பதிவு பண்ணி எனக்கு லிங்க் அனுப்புங்களேன்? ஆட்டத்த அப்படியே continue பண்ணி எவ்வளவு தூரம் போவுதுன்னு பாப்போம். வீட்டில் இருக்கும் குடும்பத்தினர், பிள்ளைகள் இவங்களையும் கோதால எறக்குங்க. ஆட்டம் களை கட்டட்டும்.




வ், வா, வி, வீ, வே, வெ, வு, வூ, வை, இதுல எதுல வேணா பாடலாம்.

யார், அடுத்தது பாடப் போறது? பின்னூட்டத்துல சொல்லுங்க.

பி.கு: காது கெட்டுப் போச்சுன்னா அதர்க்கு சர்வேசன் பொறுப்பாக முடியாது :0

பி.கு: பாட்டு பதிந்து upload செய்வது எப்படி?
1) இங்க போனா voice recorder கிடைக்கும்
2) இங்க போனா பாட்ட upload பண்ண நிறைய இடம் தராங்க

வேறு கேள்விகள் இருந்தா கேளுங்க.

வாக்கும் போடுங்க, பின்னூட்டத்த மறந்துடாதீங்க :)


பி.கு: புகைப்படப் போட்டிக்கு இதுவரை 6 பேர் அனுப்பிட்டாங்க. மிச்சம் ஆளுங்க இன்னா பண்றீங்க? தக்காளி கெடைக்கிலியா? ஞாயிறு இரவு 11:59 pm IST க்குள்ள அனுப்பிடுங்கோ. நன்றி!

labels: tamil movie song, free upload, mp3 song recorder

Thursday, February 08, 2007

சர்வே - கலப்புத் திருமணம் - ஊருக்கு உபதேசமா இல்ல உண்மைச் சம்பவமா?

சர்வே போட சரக்கு தீந்து போயிடுமேன்னு ஒரு பக்கம் யோசன வரும்போதெல்லாம், நம் பதிவுலகக் கண்மணிகள், இந்தா புடின்னு தலைப்புக்கான ஐடியாஸ எடுத்து வீசராங்க.

(வானொலி அண்ணா ஸ்டைல்ல படிங்க. யாருன்னு தெரியுமுல்ல?)
போன சர்வேல ஊர்ல இருக்கும் ஜாதிப் பிரச்சனைய பாத்தோம்.
ஜாதி பிரச்சனை முழுசா போகணும்னா நம்ம பேருக்கு பின்னாடி ஜாதி பேர் போட்டுக்கரத நிறுத்தணும்னும் பாத்தோம்.
பேர்ல இருக்கர ஜாதிய தூக்கலாம், ஆனா அவங்கவங்க culture, நல்ல பழக்கவழக்கங்கள் இதெல்லாம் மாத்திக்க வேண்டிய அவசியம் இல்லன்னும் பாத்தோம்.

என்ன, நான் சொல்றது சரிதானே?

ஒரு சிலர் பழக்கவழக்கங்களும் வேணாம்கறாங்க. எல்லா மனுஷனும் ஒரே மாதிரி வாழணுமாம். அதெப்படி சாத்தியமாவும்னு தெரியல.
நம்ப ரோபோ இல்லியே? ரெண்டு கை, காலு, கண்ணு, உணர்ச்சி, மனதில் விருப்பு வெருப்பு, வாயில் சுவைன்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமா இல்ல ஆண்டவன் படச்சிருக்கான் (என்னது? ஆண்டவன் இல்லியா? இருக்கான்னு இந்த சர்வேல தீர்ப்பு சொல்லியாச்சுங்க).

சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம்.

கலப்புத் திருமணம் (ஜாதி/மதம் மறுப்புத் திருமணம்) செய்து கொள்வது ஜாதிய முழுசா ஒழிக்க ஒரு நல்ல உபாயம். இப்ப ஆரம்பிச்சம்னா இன்னும் ரெண்டு தலைமுறையில சுத்தமா ஜாதிய ஒழிச்சிடலாம்.
ஆனால், இதை ஒரு 'சட்டமா' போட்டுட்டு செய்ய முடியுமா?
காதல் திருமணங்களில் இது மிக சாத்தியம். மனதளவில் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போன பின்பு, கலாச்சாரமும், பழக்கவழக்கமும் compromise பண்ணிக் கொள்ளும் பக்குவம் வந்துடும்.

ஆனால், arranged marriageனு வரும்போது, இரு குடும்பங்கள் சேருது - ஐம்பது அறுபது வருடங்கள் ஒண்ணா இருக்க வேண்டிய குடும்பங்கள், திருமணம் மூலமா ஒப்பந்தம் போடும்போது,
ஹேய் நாங்க இந்த சாமி கும்புடுவோம். நீங்க?
நாங்க இத சாப்பிடுவோம், இத சாப்பிடமாட்டோம். நீங்க?
நாங்க வெள்ளிக்கிழமை விரதம் இருப்போம். நீங்க?
நாங்க சேலைய இப்படி கட்டுவோம். நீங்க?
நாங்க பொட்டு வச்சுப்போம், மெட்டி போட்டுப்போம். நீங்க?
நாங்க மாசத்துக்கு ஒரு தபா தான் குளிப்போம். நீங்க?
இன்னும் இப்படி எத்தனையோ விஷயங்கள் ஓரளவுக்காவது ஒத்து போகுதான்னு பாக்க வேண்டி இருக்கு.

செய்யும் தொழிலை வைத்து ஜாதிகளாய் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை, ஜாதி என்பது ஒரு குழுவாக கருதப்பட்டு, திருமணம் மாதிரி சமயங்களில் ஒரு identityயாக உபயோகப் படுகிறது.
பின் வந்த கால கட்டத்தில், அரசியல் நோக்காலும், ஆளுமையாலும் நீ பெருசு நான் சிருசு என்று பாகப் படுத்தப்பட்டு இன்னிக்கு இந்த அடிதடி நெலமைல நிக்குது. இன்னும் எங்கெங்க போகுமோ தெரியல.

ஜாதீய ஒழிப்பு வேணும் என்பவர்கள், தன் சுய வாழ்க்கைன்னு வரும்போது, பெரும்பாலும், வெளியில் பேசுவதை வீட்டில் செய்வதில்லை.
குறிப்பா அவங்க வீட்டு கல்யாணம்னு வரும்போது, ஒரு ஐயரோ, ஐயங்காரோ, நாடாரோ, நாயரோ, நாயக்கரோ, குயவரொ, தலித்தோ, தேவரோ அவர் ஜாதியை விட்டு இன்னொரு ஜாதியில் எடுப்பதை யோசிப்பது கூட இல்லை. ஒரே ஜாதி மட்டுமல்ல அதுக்குள்ள இருக்கர உட்பிரிவு கூட அலசி ஆராய்ந்து 100% பொறுந்தினா தான் அடுத்த கட்டமே.(அம்மா திட்டுவாங்க என்ற சப்பைக்கட்டு கட்டுவார்கள்).

நானும் விதி விலக்கல்ல. ( மனதளவில் எந்த வேற்றுமை உணர்வும் இல்லைன்னாலும், Matrimony இனையதளத்தில் தேடும்போது ஜாதி, இனம், குலம், கோத்திரம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி இதெல்லாம் தெரிவு செய்த பிறகுதான் பொத்தானை க்ளிக்கினேன் :) )

நீங்க எப்படி? (நீங்க ஏற்கனவே திருமணமானவரா இருந்தீங்கன்னா, உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு வரன் தேடும்போது என்ன செய்வீர்கள் என்று சிந்தித்து வாக்களிக்கவும்)



பி.கு: புகைப்படப் போட்டிக்கு இதுவரை 6 பேர் அனுப்பிட்டாங்க. மிச்சம் ஆளுங்க இன்னா பண்றீங்க? தக்காளி கெடைக்கிலியா? ஞாயிறு இரவு 11:59 pm IST க்குள்ள அனுப்பிடுங்கோ. நன்றி!

பி.கு:
(இணையத்தில் கலப்புத் திருமணம்னு தேட்னதுல கிடைத்தது)

One
Two
Three
Four
Five
Six

என்ஸாய்!

Tuesday, February 06, 2007

சர்வேக்களும், மக்கள் தீர்ப்பும், ஒரு சின்ன உள் குத்தும்...

என்னடா எழுதலாம்னு மண்டய கொடஞ்சு யோசிச்சு பாத்தேன். ஒண்ணும் தோணல.

திடீர்னு ஒரு ஐடியா வந்துச்சு.

டகால்னு லாகின் பண்ணி மேட்டர டைப் அடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

சமீப காலத்துல போட்ட சில சர்வேஸோட தற்போதைய நிலவரத்தை சொல்லி, சின்னதா ஒரு வரி தீர்ப்பு சொல்லிடலாம்னு முடிவு பண்ணேன். அதான் இது :)

1) பல புனைப்பெயர்களில் எழுதுவது பற்றி உங்கள் நிலை
தீர்ப்பு: எத்தன பேரு வேணா வச்சுக்கோ. ஆனா GAலீஜா* எழுதாத.
பி.கு1: 2% ஆளுங்க இந்த ரகமாம். "ஹி ஹி. நான் பல புனைப்பேர்ல GAலீஜா* எழுதரவன் தான். சும்மா இதெல்லாம் ஒரு டமாசுக்காக மக்கள்ஸ்.". கொடுமதான்.
பி.கு2: நான் புனைப்பெயரில் எழுதுவதால், லக்கிலுக் என்னை 'ஜோக்கர்' லிஸ்ட்ல சேத்துருக்கரத பாத்தேன். ஆனா பரவால்ல கொஞ்சம் நல்லவங்க பேரும் லிஸ்ட்ல இருக்கு. அவருக்கு ஒரு ஸ்பெஷல் thangees :) இது நாள் வரைக்கும் லக்கிலுக் அவர் சொந்தப் பெயர் இல்லன்னு நெனச்சேன். வித்யாசமான பேரா இருக்கு. நல்லது.

2) சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்
தீர்ப்பு: பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடக்கூடாது, மற்ற கலாச்சார பழக்கம்ஸ் ஒ.கே!
பி.கு: பேர் போடலன்னாலும் போடலன்னாலும் தொடர்ந்து அடிப்போம்னு 10% சொல்லிருக்காங்க :)

3) சாய்பாபா கருணாநிதி சந்திப்புக்கு பிறகு உங்களின் மனநிலை?
தீர்ப்பு: ரெண்டு பேரையும் ஏற்கனவே பிடிக்காது. சந்திப்பு சூப்பர் காமெடி
பி.கு: வேலயப்பாருய்யா, இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. இதுதான் டாப் சாய்ஸ். மேல இருக்கரது ரெண்டாவது டாப்பு :)

4) கடவுள் இருக்காருன்னு நம்பறீங்ளா?
தீர்ப்பு: கடவுள் கண்டிப்பா இருக்காருங்க. நான் தீவிரம் கிடையாது. ஆனால், மனதளவில் நம்பிக்கை உண்டு
பி.கு: சாமியே சரணம்!


:)

பி.கு: சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி - புகைப்படம் அனுப்ப கடைசி நாள் நெருங்குது. மறவாதீர். விவரங்கள் இங்கே

.

Monday, February 05, 2007

நேயர் விருப்பம்4 - போலிக்கு வேலி vs போலி ஜாலி...


வணக்கம். இன்றைய நேயர் விருப்பம் இதுதாங்க.

இணையத்தில் அனானிகள் தொல்லை ஒரு புறம் இருக்கு(நல்ல அனானிகளும் இருக்கீங்க. உங்களுக்கு ஒரு கும்புடுங்கோ. இது உங்கள பத்தி இல்ல).

அதே சமயம், என்னைப் போல, புனைப் பெயரில் எழுதுவதும் நிறைய பதிவர்கள் செய்து வருவதுதான்.
ஒருவரே பல புனை பெயர்களில் எழுதி வருவதும் தெரிந்த ஒன்று ( ஹிஹி ).

நேயர் விருப்பம் இதுதான்:
"ஒருவர் பல புனை பெயர்களில் எழுதுவது பெரிய தவறொன்றுமில்லை என்றே எனக்குப் படுகிறது. ஆனால், இந்த பல முகங்களும் ஒரே கருுத்தை சொல்லணும்.
முகம்1 வைத்துக் கொண்டு, நான் ஷாந்த சொரூபி என்று சொல்லிக் கொண்டு;
முகம்2 உபயோகித்து அஜாடி வேலைகள் செய்வது சரி அல்ல.
மற்றவர்கள் கருத்து என்ன. கண்டுக்குனு சொல்லுங்க சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வேசா"


சரி சரி, ரொம்ப இழுக்காம சர்வே டாபிக்குக்கு வரேன். குத்துங்கோ!

*GAலீஜ்:
definition - crudely indecent, vulgar;
pronounciation - GA as-in Gun, லீ as-in Bruce Lee, ஜ் as-in கனகரா'ஜ்'
origin - ராயபுரம், காசிமேடு

எது எப்படியோ, GAலீஜா எதுவும் எழுதாதீங்க, ப்ளீஸ்.

ஒருத்தர பல தடவ ஏமாத்தலாம்; பலர ஒரு தடவ ஏமாத்தலாம்;
ஆனா, பலர பல தடவ ஏமாத்த முடியாது என்ற தத்துவத்தை சொல்லி முடிச்சுக்கறேன் :)

பி.கு: புகைப்பட போட்டி ரிமைண்டர். 24 பேர் கோதாவில் இதுவரை. இங்கே க்ளிக்கி விவரங்கள் பார்க்கவும்


போலி மேட்டர் பற்றி வந்த மற்ற பதிவுகள்:
லக்கி
டோண்டு
Bad News India
கொசுபுடுங்கி
பாலபாரதி
செல்லா

.

Sunday, February 04, 2007

வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு வார்ர்ர்ர்ர்ர்ர்ரம்!!!

புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கான ரிமைண்டர்.

போட்டிக்கான புகைப்படத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் Feb 11 11:59 pm IST.

விதிமுறைகளை படிச்சுட்டு படம் புடிங்க. மேலே உள்ள படத்தை போல், படம் இருக்கக் கூடாது. தக்காளி பாத்தா தக்காளி மாதிரி தெரியணும். Photo Editing tool ரொம்ப ஓவரா உபயோகித்து படத்தின் ஒரிஜினாலிட்டியை மாற்றி விடக் கூடாது. விதிமுறைகள் இங்கே.

பி.கு: படத்தை ரெண்டு மூன்று நாள் advanceஆ அனுப்பினீங்கன்னா, சர்வே கமிட்டியின் (நானே தான்) feedback கேட்டு, ஏதாவது திருத்தம் (தேவைப்பட்டா) பண்ணி, திரும்ப எடுக்க டைம் இருக்கும்.

கேள்விகள் இருந்தால் கேளுங்கள். டிப்ஸ் ஏதாவது வேணும்னாலும் கேளுங்க. கூகிள் சாமிகிட்ட கேட்டு பதில் சொல்லுவேன் :)

(என்னது? காய்கறி வாங்கர காச திருப்பித் தர்வேனாவா? அது சரி, போடோ எடுத்தப்பரம் மசாலா பண்ணி சாப்டுங்க. முடிஞ்சா பக்கத்துல இருக்கர மற்ற பதிவர்களுக்கும் ஸப்ளை பண்ணுங்க :) )

Thursday, February 01, 2007

இப்படி இருந்தது, இப்படி ஆகி, இப்படியும் ஆகப்போவுது

 
'நமக்கு நாமே' என்ற அடிப்படையில் பின்னூட்ட கயம்ஸ் முதலாக சுய-விளம்பரமும் பல செஞ்சாச்சு.
இதோ, அதன் தொடர்ச்சியாக இன்னொரு சுய-விளம்பரம் - சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் Feb 3 11.59 PM IST.

போட்டி நம்மில் இருக்கும் amateur நண்பர்களுக்கு மட்டுமே.
Professionals, please எட்டி நின்னு வேடிக்கை பார்த்து, டிப்ஸ் கொடுத்து, முயற்ச்சியை ஊக்குவிங்கோ.

இதுவரை 22 பேர் கோதாவில் குதித்துள்ளார்கள். 3 இடங்களே பாக்கி உள்ளது. Get Creative, and try your skills.

விளம்பரம் கொடுத்த செல்லா, Appaavi, Boston Bala, நெல்லை சிவா நன்றீஸ்.

சேம்பிள்'s:
இப்படி இருந்தது: (canon s410, table lamp, adobe)


இப்படி ஆகி: (canon s410, table lamp, adobe, வூட்ல திட்டு)


இப்படியும் ஆகப்போவுது: (இத நான் எடுக்கல, பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டாங்களோ)


போட்டியில் பெயர் கொடுத்தவர்கள் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு இந்த வாரம் மளிகை லிஸ்ட்ல போட மறக்காதீங்க;
போட்டியில் பெயர் கொடுக்காதவங்க கண்ணுல வெளக்கெண்ண விட்டு ஒரு வாரம் கண்ண க்ளீனா வெச்சுக்குங்க. படங்கள பாத்து அலசி ஆராஞ்சு ஓட்டு போடோணும். :)

விண்ணப்பிக்க, விவரங்கள் பார்க்க: இங்கே சொடுக்கவும். நன்றி!

வர்டா,
சர்வே-சன்


.