
வணக்கம். இன்றைய நேயர் விருப்பம் இதுதாங்க.
இணையத்தில் அனானிகள் தொல்லை ஒரு புறம் இருக்கு(நல்ல அனானிகளும் இருக்கீங்க. உங்களுக்கு ஒரு கும்புடுங்கோ. இது உங்கள பத்தி இல்ல).
அதே சமயம், என்னைப் போல, புனைப் பெயரில் எழுதுவதும் நிறைய பதிவர்கள் செய்து வருவதுதான்.
ஒருவரே பல புனை பெயர்களில் எழுதி வருவதும் தெரிந்த ஒன்று ( ஹிஹி ).
நேயர் விருப்பம் இதுதான்:
"ஒருவர் பல புனை பெயர்களில் எழுதுவது பெரிய தவறொன்றுமில்லை என்றே எனக்குப் படுகிறது. ஆனால், இந்த பல முகங்களும் ஒரே கருுத்தை சொல்லணும்.
முகம்1 வைத்துக் கொண்டு, நான் ஷாந்த சொரூபி என்று சொல்லிக் கொண்டு;
முகம்2 உபயோகித்து அஜாடி வேலைகள் செய்வது சரி அல்ல.
மற்றவர்கள் கருத்து என்ன. கண்டுக்குனு சொல்லுங்க சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வேசா"
சரி சரி, ரொம்ப இழுக்காம சர்வே டாபிக்குக்கு வரேன். குத்துங்கோ!
*GAலீஜ்:
definition - crudely indecent, vulgar;
pronounciation - GA as-in Gun, லீ as-in Bruce Lee, ஜ் as-in கனகரா'ஜ்'
origin - ராயபுரம், காசிமேடு
எது எப்படியோ, GAலீஜா எதுவும் எழுதாதீங்க, ப்ளீஸ்.
ஒருத்தர பல தடவ ஏமாத்தலாம்; பலர ஒரு தடவ ஏமாத்தலாம்;
ஆனா, பலர பல தடவ ஏமாத்த முடியாது என்ற தத்துவத்தை சொல்லி முடிச்சுக்கறேன் :)
பி.கு: புகைப்பட போட்டி ரிமைண்டர். 24 பேர் கோதாவில் இதுவரை. இங்கே க்ளிக்கி விவரங்கள் பார்க்கவும்
போலி மேட்டர் பற்றி வந்த மற்ற பதிவுகள்:
லக்கி
டோண்டு
Bad News India
கொசுபுடுங்கி
பாலபாரதி
செல்லா
.
13 comments:
யப்பா gap கிடைச்ச அதுல ஆட்டோவை ஓட்டி ஒரு surveyஜ போட்டுறறீங்க.
கலக்கற சர்வேசா, ரிசல்ட் பாத்தா டோண்டுவுக்கு ஆதரவா போற மாதிரி இருக்கே, நீ என்ன டோண்டு - ஆளா?
oh great great கலக்கற யப்பா
டோண்டு மேட்டரை வைத்து எத்தனை பதிவு வருமோ!
ஒரு ஆள் வேறு விசயம் கிடைக்காது இந்த மேட்டரை வைத்தே ரெண்டு வாந்தி எடுத்தாச்சு.
அன்புடன்
பாஸ்கர்
//*GAலீஜ்:
definition - crudely indecent, vulgar;
pronounciation - GA as-in Gun, லீ as-in Bruce Lee, ஜ் as-in கனகரா'ஜ்'
origin - ராயபுரம், காசிமேடு//
விட்டா.. a for apple, b for babyனு சொல்லிகுடுப்பீங்க போல..
//ஒருத்தர பல தடவ ஏமாத்தலாம்; பலர ஒரு தடவ ஏமாத்தலாம்;
ஆனா, பலர பல தடவ ஏமாத்த முடியாது என்ற தத்துவத்தை சொல்லி முடிச்சுக்கறேன் :)//
முடியலீங்கோ....
சந்த்தோஷ்,
//யப்பா gap கிடைச்ச அதுல ஆட்டோவை ஓட்டி ஒரு surveyஜ போட்டுறறீங்க//
கடமைய மறக்க முடியுமா?. பி.ஸி ஸ்கெட்யூல்லயும், மக்களுக்காக நேரம் ஒதுக்கலன்னா தூக்கம் வராது ;)
அனானி,
//கலக்கற சர்வேசா, ரிசல்ட் பாத்தா டோண்டுவுக்கு ஆதரவா போற மாதிரி இருக்கே, நீ என்ன டோண்டு - ஆளா?//
முத்திரை குத்திடுவேளே. நான் தனி ஆளு சாமி.
தமிழ் பூக்கள்,
//oh great great கலக்கற யப்பா//
ஹிஹி. நன்றிங்கோ. அது நம்ம பிறவி குணமுங்கோ :)
பாஸ்கர்,
//டோண்டு மேட்டரை வைத்து எத்தனை பதிவு வருமோ!
ஒரு ஆள் வேறு விசயம் கிடைக்காது இந்த மேட்டரை வைத்தே ரெண்டு வாந்தி எடுத்தாச்சு.
அன்புடன்
பாஸ்கர் //
இன்னும் நிறைய வரும்னு தான் நெனைக்கறேன். ஒண்ணும் இல்லாத்த ஊதி பெருசாக்குவது நமக்கு பிடித்த விளையாட்டாசே.
இவ்ளோ hurdles தாண்டி அவர் இன்னும் சூப்பரா ஓடறாரே :)
krkarthik,
//விட்டா.. a for apple, b for babyனு சொல்லிகுடுப்பீங்க போல..//
:) பதிவுலகுல பல பேர் first bench கோஷ்டிங்க (இன்னொரு சர்வே மூலமா கண்டுபிடிச்சது). அவங்களுக்கெல்லாம் புரியணுமில்ல. அதான் :)
k4karthik,
அது சரி போடோ என்னாச்சு?
ஒருத்தர் தான் அனுப்பியிருக்காங்க இதுவரை.
24 பேரும் டைம்க்கு அனுப்பலன்னா, நானே பினாமி பேர்ல போடவேண்டியதாயிடும் :)
GAலீஜா எழுதரவங்க 3% இருக்காங்க்ய.
கஷ்டம்தேன் :(
andha 3% yaaru?
Post a Comment