ஒண்ணுமில்ல மக்கள்ஸ், சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி, நம்ம சிறில் அலெக்ஸு ஒரு voice பதிவ போட்டுட்டு என்ன மாதிரி குரல் வளம் மிக்கவர்களை உசுப்பேத்தி விட்டுட்டாரு.
நல்லதா வீண செஞ்சு அத்த யூஸ் கெட்டுப்போவ புழுதீல போடலாமா?
போடக் கூடாது.
அதனால, நானும் கோதால குதிச்சுட்டேன்.
நம்ம MS.Viswanathan ஐயா, உடல் நலம் சரி இல்லாம ஆஸ்பத்திரீல அட்மிட் பண்ணிருக்காங்களாம். திரை உலக ஜாம்பவான்ஸ் யாரும் போய் எட்டிக் கூட பாக்கலன்னு எங்கியோ படிச்சேன். கஷ்டமா இருந்தது கேக்கவே.
எவ்வளவோ முத்து முத்தான பாடல்கள் கொடுத்து நம் மனதில் ஈரம் படரச் செய்தவர் MSV.
அவருக்கு நன்றிகள் பல கூறி அவர் பாதம் தொட்டு, என் Voice~பாடல் பதிவை தொடங்குகிறேன். (தலைவா, மன்னிச்சுருங்க for the killing of your beautiful beautiful song).
இதோ உங்களுக்காக: யாரந்த நிலவு ஏன் இந்த கனவு from ஷாந்தி.
கேட்டு, என்ஸாய் மாடி. பாடலை அமர்ந்து கொண்டு கேட்கவும். நிந்துனு கேட்டு அதிர்சீல கீழ விழுந்தா நான் பொறுப்பில்லை :) உங்கள் நலனைக் கருதி, வெறும் பல்லவியோட நிறுத்திட்டேன்.
இத ஒரு பாட்டோட நிறுத்திடாம, ஒரு பாட்டுக்கு-பாட்டு மாதிரி மத்த பதிவர்களோடு சேர்ந்து கொண்டு செல்ல ஆசை.
இந்த பாட்டு 'வு' ல முடிச்சிருக்கேன். அடுத்து யாராவது, 'வ'கரத்துல அடுத்த பாட்டு பாடி பதிவு பண்ணி எனக்கு லிங்க் அனுப்புங்களேன்? ஆட்டத்த அப்படியே continue பண்ணி எவ்வளவு தூரம் போவுதுன்னு பாப்போம். வீட்டில் இருக்கும் குடும்பத்தினர், பிள்ளைகள் இவங்களையும் கோதால எறக்குங்க. ஆட்டம் களை கட்டட்டும்.
வ், வா, வி, வீ, வே, வெ, வு, வூ, வை, இதுல எதுல வேணா பாடலாம்.
யார், அடுத்தது பாடப் போறது? பின்னூட்டத்துல சொல்லுங்க.
பி.கு: காது கெட்டுப் போச்சுன்னா அதர்க்கு சர்வேசன் பொறுப்பாக முடியாது :0
பி.கு: பாட்டு பதிந்து upload செய்வது எப்படி?
1) இங்க போனா voice recorder கிடைக்கும்
2) இங்க போனா பாட்ட upload பண்ண நிறைய இடம் தராங்க
வேறு கேள்விகள் இருந்தா கேளுங்க.
வாக்கும் போடுங்க, பின்னூட்டத்த மறந்துடாதீங்க :)
பி.கு: புகைப்படப் போட்டிக்கு இதுவரை 6 பேர் அனுப்பிட்டாங்க. மிச்சம் ஆளுங்க இன்னா பண்றீங்க? தக்காளி கெடைக்கிலியா? ஞாயிறு இரவு 11:59 pm IST க்குள்ள அனுப்பிடுங்கோ. நன்றி!
labels: tamil movie song, free upload, mp3 song recorder
48 comments:
தொடர் பாட்டு பாட விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன.
பெயரை பதிவு செய்யுங்கோ, வரிசையா பாடி ஒரு வழி பண்ணிடுவோம்.
ரெண்டு நாள்ள அடுத்த ஆளு வரலன்னா, உங்க நேரம் சரியில்லன்னு அர்த்தம். நானே அடுத்ததயும் பாட வேண்டியதாயிடும் :)
சூப்பருங்க ஐடியா.
இதோ அடுத்தது வந்துட்டா போச்சு..
நாளைக்குத்தான்.
உங்க குரல் இனிமையா இருக்குதுங்க..
என்னப்போல பாத்ரூம் சிங்கர்தானா?
//சூப்பருங்க ஐடியா.
இதோ அடுத்தது வந்துட்டா போச்சு..
நாளைக்குத்தான்.
உங்க குரல் இனிமையா இருக்குதுங்க..
என்னப்போல பாத்ரூம் சிங்கர்தானா? //
நன்றி நன்றி! பாத்ரூம் மட்டுமில்ல,கூட ஆளில்லாம இருக்கர எல்லா எடத்துலயும் சிங்கரதுதான் ஹாபி. :)
பாடுங்க பாடுங்க. பாட்டுக்கு பாட்டு பிக் அப் ஆயிடும்.
surveshaa idhellam konjam overaa therila
ஓவர்தானோ? சும்மா அட்ஜஸ்ட் பண்ணுங்க.
நான் பாடினத கேட்டுட்டு google வேல செய்ய மாட்ரது. டப்பா காலியா தெரியுது ?
அலெக்ஸ்-ஸோட பதிவு படிச்சு, அவர பாராட்டறதுக்குள்ள, அதே புடிச்சு அடுத்தது ஒரு பாட்டு வந்துருச்சு..
கொஞ்சம் வேலை பண்ணிதான், இதுக்கு பதில் போட முடியும், நல்ல விளையாட்டுதான், கொஞ்சம் இருங்க..நானும் வாரேன்..
//கொஞ்சம் வேலை பண்ணிதான், இதுக்கு பதில் போட முடியும், நல்ல விளையாட்டுதான், கொஞ்சம் இருங்க..நானும் வாரேன்.. //
வாங்க வாங்க, சிறிலுக்கு அடுத்து பாட்ட பாடிடுங்க :)
கொஞ்சம் வேலை இருக்கத்தான் செய்யுது.
ஒரு 20 takesக்கு அப்பறம் தான் சுமாரா பதிவுல ஏத்தர அளவுக்கு வந்தது எனக்கு :)
mp3 editing panna endha software use pannanum?
voice superu ங்கோ !
சர்வேச !
அனானி, mp3 edit பண்ண நிறைய டூல்ஸ் இருக்குங்க.
நான் லிங்க் கொடுத்தத யூஸ் பண்ணுங்க, directஆ mp3யாவே குடுத்துடும்.
கோவி கண்ணன்,
//voice superu ங்கோ !//
வஞ்சகப் புகழ்ச்சி அணி இல்லியே :)
ஹ்ம். SPB க்கு போட்டியா வந்திருக்க வேண்டியது, இப்படி முகமூடி போட்டு பாட வேண்டியதா இருக்கு நெலம :)
பதிவில்லாதவங்க எப்படி பாடி அனுப்புவதுது ?
ஹிஹிஹி
என்ன மெல்லிசை மன்னருக்கு ஒடம்புக்கு முடியலையா! ஆண்டவா. அவரை அமைதியாப் பாத்துக்கோ. எங்களை அமைதிப்படுத்துற பல பாடல்கள் அவர் கிட்ட இருந்துதான் வந்தது.
திரையுலக ஜாம்பவான்கள் அவரைப் பார்க்காதது வருத்தத்தை அளிக்கிறது. இன்றைக்கிருக்கின்ற பெரிய இசையமைப்பாளர்கள், பாடகிகள், பாடகர்கள் எல்லாரும் அவரால் முன்னுக்கு வந்தவர்கள்தான். இளையராஜா, சங்கர்-கணேஷ், ஏ.ஆர்.ரகுமான் என்று எல்லாரும் அவருடைய உதவியாளராக இருந்தவர்கள்தான். பாலசுப்ரமணியன், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், சுவர்ணலதா, இன்னும் பல பெரிய பாடகர்களைப் பட்டை தீட்டி வளர்த்தவர் அவர். இவ்வளவு ஏன்...சித்ரா இளையராஜாவிடம் வாய்ப்புக் கேட்டுப் போன பொழுது பாடியது மெல்லிசை மன்னரின் சரவணப் பொய்கையில் நீராடி பாடலைத்தான். நன்றியுள்ளவர்களே அவருக்காக கொஞ்சம் பிராத்தியுங்கள்.
G.ராகவன்,
//அவரை அமைதியாப் பாத்துக்கோ. எங்களை அமைதிப்படுத்துற பல பாடல்கள் அவர் கிட்ட இருந்துதான் வந்தது.
//
சத்திய்மான் வார்த்தை. முத்து முத்தான அவர் பாடல்கள் மனதுக்கு இதத்தை தருவது உண்மை.
எவ்ளோ சுவையான பாடல் எல்லாம் போட்டிருக்காரு.
கண்ணதாசனும் இவரு சேர்ந்து அள்ளி வீசியிருக்காங்க முத்துக்களை.
அவர் சீக்கிரம் குண்மடைய பிரார்த்திக்கிறேன்.
பாட்டுக்குப் பாட்டு பிடிச்ச விளயாட்டேச்சே அந்தாக்ஷரி போல...அலெக்ஸ் பாடினதும் நான் பாடவா?
ஷைலஜா
ஷைலஜா,
பா.பாட்டு நல்ல வெளயாட்டோ இல்லியோ, என்ன மாதிரி வேற எங்கயும் பாட முடியாதவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு :)
கண்டிப்பா வாங்க. நெல்லை சிவா வரிசையில இருக்காரு. 'ம'கர வரிசைல பாடுங்க, நீங்க முடிக்கர வார்த்தைல இருந்து நெல்லை சிவா தொடரட்டும்.
ஒரு பதிவ போட்டுட்டு சொல்லிடுங்க, நான் எல்லா பாட்டையும் சேத்து காமிக்கர மாதிரி ஒரு ப்திவை போடப் போறேன்.
நன்றி!
ம கர வரிசைல பாடிட்றேன்..கொஞ்சம் வெயிட்டீஸ்..
ஷைலஜா
நானும் பாடறேன்..எந்த வரிசையில் பாடணும்?
Anamika,
//நானும் பாடறேன்..எந்த வரிசையில் பாடணும்? //
பா.பாட்டில் கலந்து கொள்வதர்க்கு நன்றி,
ஷைலஜா பாடி முடித்ததும், நெல்லை சிவா லைன்ல இருக்காரு. அவர் என்ன பாடறாரோ, அதை வைத்து நீங்க பாடணும்.
அநேகமா, நாளை தெரியும். practice பண்ணுங்க அதுவரை :)
இறை வணக்கம் ஒண்ணு பாடி, உங்க பதிவில் தனியா ஒண்ண போடுங்களேன் இன்று?
How about? "குறை ஒன்றும் இல்லை" or வந்தே மாதரம் or some கண்ணன் பாட்டு or ?
நான் பாட்டு பாடி...அத பதிவு பண்ணி... நீங்க எல்லாம் கேட்டு...ம்ம்ம்ம் try பண்றேன்! :))))
Surveysan ji, :)
This paatukku paatu is a nice idea !
Just one question, MSV songs ddhaan paadanuma ?
And yen appadiye chain nikkudhu, ippa endha letterla paadanumne theriyaama ?
badhil aliyungal pls
surveysan , unga voice supera irukku.
photo contest enakku theriyama pochu :(
illati edhanu boto eduthu supera anuppi iruppene !
inimel anupalama ?
Kittu,
பாராட்டுக்கு நன்றீஸ் :)
இங்க வந்து பாருங்க, மத்தவங்களும் பாடியிருக்காங்க - http://surveysan.blogspot.com/2007/02/blog-post_10.html
கொஞ்சம் மெதுவாதான் நகரும், நெல்லை சிவா கிட்ட பந்து இருக்கு, அவர் முடிச்சதும், அனாமிகா அப்பறம் உங்கள லைன்ல add பண்ணிடரேன். MSV மட்டும் இல்ல, என்ன தமிழ் பாட்டு வேணா பாடலாம்.
நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ?
"ஜன கன மன அதி நாயக ..... "
:-)
என்னுடைய கீர்த்தனையை எவண்டா நாறடிக்கறது ? அவாளை மத்தளத்தாளே அடிப்பேன். அபிஷ்டுகளா.
தலை,
வெங்காயம் கிடைக்காததால் நான் போட்டோ ஆட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை..
மன்னிக்கவும்.'
அன்புடன்
செந்தழல் ரவி
( மிகவும் பிஸி, அப்லோட் செய்ய முடியாமல் போச்சு, ஏரோ இண்டியா 2007 ஷொவுல் போயி காரை இன்னொரு காரோட முட்டி, அதெல்லாம் கேக்காதீங்க)
//பாடலை அமர்ந்து கொண்டு கேட்கவும். நிந்துனு கேட்டு அதிர்சீல கீழ விழுந்தா நான் பொறுப்பில்லை :) உங்கள் நலனைக் கருதி, வெறும் பல்லவியோட நிறுத்திட்டேன்.//
இவ்வளவு அவையடக்கம் இருந்தா குரல் நல்லாத்தான் இருக்கும்னு நினைச்சேன். நினைச்சது சரியாப்போச்சு!
நிஜமாவே உங்க குரல் நல்லா இருக்குங்க!
ரவி,
//மிகவும் பிஸி, அப்லோட் செய்ய முடியாமல் போச்சு, ஏரோ இண்டியா 2007 ஷொவுல் போயி காரை இன்னொரு காரோட முட்டி, அதெல்லாம் கேக்காதீங்க//
ஒண்ணும் பிரச்சனை இல்லியே? வெங்காயம் மிஸ் பண்ணிட்டீங்க பரவால்ல.. பாட்டு பாடி அட்ஜஸ்ட் பண்ணிடுங்க :)
அருள் குமார்,
//நிஜமாவே உங்க குரல் நல்லா இருக்குங்க! //
நன்றி.. நீங்க கோதால எறங்கலியா?
அனானி,
//நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ?
"ஜன கன மன அதி நாயக ..... "
//
ம். பாடுங்கோ. ஆனா, மனசுலயே பாடிக்கோங்க. என்னால எழுந்தெல்லாம் நிக்க முடியாது :)
ரெக்கார்ட் பண்ணி அனுப்பனுமா?
அப்படியே ராத்திரிக் காத்துல பாடினா போதாதா?
"நானே வருவேன்..."
சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர்கள்!!
தொடரட்டும்.. வாழ்த்துக்கள்!!
நேயர் விருப்பம்:
நாங்கள் விரும்பிக் கெட்ட பாடல்:
பிள்ளை நிலா என்ற திரைப் படத்திலிருந்து
"ராஜா மகள், ரோஜா மகள்" என்ற பாடல்!
"த" கரத்துல பாடி உங்க மெயிலுக்கு அனுப்பிட்டேனே...:(
சிவபாலன்
//சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர்கள்!!//
ரொம்ப நன்றி :)
ஏதொ என்னால் முடிந்தது.
ஆமா, நீங்க பாடலியா? டோக்கன் குடுக்கவா?
இதோ என் பேரையும் பதியறேன்.
என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட?
சிறிலும், கிட்டுவும்,ஷைலஜாவும் நீங்களும் கலக்கீட்டீங்க.
இணையத்தில இத்தனை நல்ல குரல்களா. மிகவும் பெருமையாக இருக்கு.
எம்.எஸ்வீ சார் சீக்கிரம் குணம் அடையணும்.
இந்த மாதிரி இசைவளம் யாருக்குக் கிடைக்கும்!!
உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
யாராவது .தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'பாட்டு பாடிட்டாங்களா சர்வ்ஸ் தூங்கிப்போயிட்டாரா?:0
ஷைலஜா
வல்லிசிம்ஹன்,
இந்தாங்க டோக்கன் :)
ஷைலஜா, இப்பதாங்க எழுந்து வரேன் :)
இது full-time வேலை இல்லியே. இருந்தா நல்லாதான் இருக்கும் :)
just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்ரது மகிழ்ச்சி...
ஷைலஜா
just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்ரது மகிழ்ச்சி...
ஷைலஜா
//just kidding//
me too! :)
//வல்லிம்மா நல்ல பாடகி//
me too! (பாடகர்) ஹிஹி!
//அவங்க வர்ரது மகிழ்ச்சி...//
ரிப்பீtoo!
surveysan,
நாலு வரி நாலு தடவை பாடி ரிகார்டிங்உம்:-)
முடிச்சாச்சு.
அனுப்ப முயற்சி செய்யறேன்.
என்ன இருந்தாலும்,கைநாட்டு தானே.
வெயிட் பண்ணுங்க.
ஷைலஜாவுக்கும் உங்களுக்கு,
என்னைப் பாரட்டு மழையில் நனைய வச்சு, குளிரை அதிகமாக்கியதுக்கு நன்றி.:-)
உங்க ஈமயிலைக் கொஞ்சம் கொடுங்க .அனுப்பிடறேன்.
உங்க பதிவிலே காணோமே.
எனக்கும் இதில் கலந்து கொள்ள வேணும் போல இருக்கு. ஆனால் றெக்கோடிங் செய்து விட்டு எப்படி இணைப்பது என்று தெரியவில்லையே.
அதை எப்படி இணைப்பது என்று விபரமாக சொல்லித் தருவீங்களா?
வாங்க சத்யா,
இங்க போனா ஒரு ரெகார்டர் கிடைக்கும். free versionல ரெண்டு நிமிஷம் வரைக்கும் ரெகார்ட் பண்ணலாம்.
http://www.ejoysoft.com/index.htm
ரெகார்ட் பண்ணி, export பட்டன் அமுக்கினா mp3 file ஆக்கிடலாம். surveysan2005 at yahoo.comக்கு பாட்ட அனுப்பலாம்.
ப்ரெக்டிஸ் பண்ணிட்டு சொல்லுங்க, ஓ.கேன்னா லிஸ்ட்ல உங்க பேர ஏத்திடறேன்.
தல
நம்மையும் கொஞ்சம் சேர்த்துக்கோங்கோ, ஷைலஜாக்கா ரெக்கமண்டேஷன் ;)
Post a Comment