பொறுமையாக தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கெல்லாம் வாங்கி அதை புகைப்படம் பிடித்து அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி! Some very creative pictures in the line-up.
இந்த மூணு காய்களை வச்சு வித்த காட்டியிருக்கீங்க. சபாஷ்!
போட்டியில கலந்துகிட்ட 25 பேர்ல, 16 பேர்தான் படத்த அனுப்பி இருக்காங்க.
மீதி 9 பேருக்கு வேலை பளு, தக்காளி தட்டுப்பாடு, வீட்டுக்காரம்மா படம் எடுப்பதர்க்குள் குர்மா பண்ணிட்டாங்க, இப்படி பல பிரச்சனைகள் :) பரவால்ல அடுத்த தடவ ஜமாய்ங்க!
இங்கே க்ளிக்கினா போட்டிப் புகைப் படங்களை பார்க்கலாம் @flickr.
படங்களை இங்கேயும் (yahoo) பார்க்கலாம்.
photo_A முதல் photo_P வரை 16 படங்கள் உள்ளன. எல்லா படத்தையும், மிகப் பொறுமையாகப் பார்த்து உங்களுக்கு மிகவும் பிடித்த படத்தின் பெயருக்கு, கீழே உள்ள வாக்குப் பெட்டியில் வாக்களியுங்கள்.
போட்டியை பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களின் அணிவகுப்பு இங்கே. படத்தின் மேல் க்ளிக்கினா படத்தின் பெயர் தெரியும். மேலே உள்ள லிங்க் உபயோகித்து பாத்தீங்கன்னாதான் தெளிவா படத்தின் நேர்த்திகள் நன்கு தெரியும். கண்டு களியுங்கள்:
வாக்குப் பெட்டி (Vote Box):
போட்டி முடிவுகள் காண இங்கே க்ளிக்கவும்
போட்டி முடிவுகள் வரும் திங்கள் February 19th அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு பற்றி விளம்பரம் செய்யுங்கள். நன்றி!
போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் ஒரு ஓ..ஓ!!!
போட்டியை பற்றி விளம்பரம் செய்தவர்களுக்கும் ஒரு ஓ!
போட்டிப் பரிசை sponsor செய்ய முன் வந்த கடலோடி பரணீ அவர்களுக்கும் ஓ!
இப்படியெல்லாம் நமது creativity வெளிக்கொணர வாய்ப்பளித்த தமிழ்மணம், தேன்கூடுக்கும் நன்றிகள் பல!
பாட்டுக்கு பாட்டு பாத்தீங்களா? அதிலும் பங்கு பெற்று ஆட்டம் களை கட்ட உதவலாமே? :)
வாழ்க்கை வாழ்வதற்கே!!
பொன்ஸ் அனுப்பிய படம் இப்பதான் கையில் கிடைத்தது. தவறான ஈ.மெயில் ஐடியினால் வந்த குளருபடி. போட்டியில் ஏற்ற முடியாததால், உங்கள் பார்வைக்கு இங்கே சேர்க்கிறேன்.
படத்தின் தலைப்பு: நாளைய சந்ததியின் உலகம்
Adiya என்பவர் தவறான போட்டிக்கு அனுப்பி விட்டார் என்று நினைக்கிறேன் (யாருங்க அங்க, முருக்கு, பழம், பச்சமொளகா, தவா, காலு, tshirt, bermuda shorts போட்டி நடத்தறது?) :)
.
58 comments:
போட்டியில் பங்கு பெற்றுள்ளவர்கள், போட்டி வாக்கெடுப்பு முடியும் அடுத்த திங்கள் வரை, தங்கள் படங்களுக்கு campaign செய்யக் கூடாதுங்கோ.
படத்த பாத்துட்டு போகாம, ஓரிரு வரி விமர்சனத்தை பின்னூட்டிட்டு போங்களேன் மக்கள்ஸ்?
போட்டியில் பங்கு பெற்றவர்கள், நீங்கள் எடுத்த படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று சுவாரஸ்யமான பதிவு ஒன்று போட்டு, வாக்கெடுப்பு தளத்தை லிங்கினால், எனக்கு விளம்பரமும் ஆச்சு, உங்களுக்கு ஒரு பதிவும் போட்ட மாதிரி ஆச்சு.
ஆனால், எந்த படம் என்பதை இப்ப சொல்லக் கூடாது. முடிவுகள் அறிவித்த பிறகு சொல்லணும்.
Udhayakumar,
அப்படியே, மற்ற படங்களைப் பற்றியும் ஓரிரு வரி ஆக்கபூர்வமான விமர்சனம் சொல்லுங்களேன். உதவியாய் இருக்கும் :)
நன்றி!
இந்த வாக்கெடுப்பில் வரும் கள்ள ஓட்டுகள் எல்லாம் நீக்கப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதனால், லாரியில் வந்து கள்ள வாக்களிக்க இறங்கியிருக்கும் அன்பர்கள் அமைதியாய் வேடிக்கை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
முதலில், அளப்பவனுக்குஎனது நன்றிகள். இதோஎனது கமெண்டுகள் ...பார்க்க http://tinyurl.com/2hukpa
பொதுவாகவே ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. சிலரது படைப்பின்எளிமை வியக்க வைக்கிறது. கயில் இருப்பதை வைத்து இவ்வளவு கிரியேட்டிவிட்டி யோடு எடுத்தவர்களை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு சில ஆலோசனைகள்...
1. இந்த மாதிரி படங்களுக்கு லைட்டிங் கே பிரதானம். முடிந்தவரை சூரிய ஒளியை பதனப்படுத்தி உபயோகித்தல் நலம்! Hard and SOFT lights பற்றி இணையத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன.
2. Composition Sense மிக மிக அவசியம். லென்சின் வழியே பார்க்கும்பொழுது ஒரு அழகுணர்ச்சியோடு பொருள்கள் தென்படும் வரை பொத்தானை அமுக்க வேண்டாம்!
3. முடிந்தவரை ப்ளாஸ் லைட்டை பயன்படுத்தவேண்டாம்! It will flaten the image. நிழல்கலும் படங்களின் தரத்தை தீர்மாணிக்கும்! A,G,H,I,L இந்த விசயத்தில் பரவாயில்லை! "C" யின் தக்காளி சூப்பர்!
போட்டோ - F catchy-ஆ இருக்கு, ஆனா கண் இமை உருளைகிழங்கா என்ன? பாத்தா, பச்சை மை அடிச்சா மாதிரி இருக்கு?
ஒசை செல்லா,
கருத்துக்கு நன்றி!
ஆமாம், வியக்கவைக்கும் படைப்புகள் தான்.
அடுத்த முறை இன்னொரு படி மேலே ஏறி நல்ல தலைப்பாக தரணும் :)
ஒசை செல்லா,
கருத்துக்கு நன்றி!
ஆமாம், வியக்கவைக்கும் படைப்புகள் தான்.
அடுத்த முறை இன்னொரு படி மேலே ஏறி நல்ல தலைப்பாக தரணும் :)
அனானி,
//போட்டோ - F catchy-ஆ இருக்கு, ஆனா கண் இமை உருளைகிழங்கா என்ன? பாத்தா, பச்சை மை அடிச்சா மாதிரி இருக்கு? //
உருளைதாங்க.
பச்சதண்ணி தெளிச்சுட்டாங்களோ என்னமோ ? :)
எப்படி எடுத்தோம்னு பதிவு போடலாம் சுவாரசியமாத்தான் இருக்கும்.ஆனா யாரோடது எதுன்னு தெரிஞ்சு போகுமே?!!
முத்துலெட்சுமி(லட்சுமி),
//எப்படி எடுத்தோம்னு பதிவு போடலாம் சுவாரசியமாத்தான் இருக்கும்.ஆனா யாரோடது எதுன்னு தெரிஞ்சு போகுமே?!! //
கஷ்டம்தான், ரொம்ப டீடெய்ல்ஸ் கொடுக்காம மேலோட்டமே, படம் எடுத்த process பத்தி எழுதலாமே?
ரொம்ப கஷ்டம்னா வேண்டாம். ஹ்ண்ட் கொடுக்கக் கூடாது :)
நிறைய படங்கள் நல்லா கிரியேட்டிவ்வா எடுத்திருக்காங்க!
ஒண்ணே ஒண்ணு மட்டும் செலக்ட் பண்ண ஆப்சன் கொடுத்ததால ரொம்ப பிடிச்சிருந்ததை மட்டும் செலக்ட் பண்ணி இருக்கேன்!
படைப்பாளிகள் அனைவருமே நல்லா செஞ்சிருக்காங்க!
wow... entryஸ் எல்லாம் சூப்பருங்க..
என்னை கவர்ந்தது.. C,G,I,L
ஒருத்தருக்கு ஒரு ஒட்டு தானா??? அப்படினா.. 2nd, 3rd எப்படி select பன்றது?
சிபி சார்,
//படைப்பாளிகள் அனைவருமே நல்லா செஞ்சிருக்காங்க! //
மிகச் சரி.
நன்றி.
சர்வேஸன் அவர்களே,
புகைப்படங்களை பார்க்க ஆவலோடு திறந்தால் இங்கு துபாயில் sie blocked எனக்கு amexkn@eim.ae என்ற இமெயிலில் அனுப்பமுடியுமா.
நன்றி
லியோ சுரேஷ்
k4karthik,
//ஒருத்தருக்கு ஒரு ஒட்டு தானா??? அப்படினா.. 2nd, 3rd எப்படி select பன்றது?
//
வாங்க வாங்க. ஒருத்தருக்கு ஒரு வோட்டுதாங்க :)
டாப் படம் ஒண்ணுக்கு தான் பரிசு :)
லியோ சுரேஷ்,
//புகைப்படங்களை பார்க்க ஆவலோடு திறந்தால் இங்கு துபாயில் sie blocked எனக்கு amexkn@eim.ae என்ற இமெயிலில் அனுப்பமுடியுமா.
//
அனுப்பியாச்சுங்க.
சர்வேஸன் அவர்களே,
புகைப்படங்களை பார்க்க ஆவலோடு திறந்தால் இங்கு துபாயில் site blocked எனக்கு amexkn@eim.ae என்ற இமெயிலில் அனுப்பமுடியுமா.
நன்றி
லியோ சுரேஷ்
ரெம்ப நல்ல படங்கள்.. நல்ல வேளை நான் அனுப்பல..:))
லியோ சுரேஷ் சொன்னதுதான், எனக்கும் அனுப்பி வைக்கவும்.
லியோ சுரேஷ் சொன்னதுதான், எனக்கும் அனுப்பி வைக்கவும்.
உஷா,
yahoo லிங்கும் வேலை செய்யலயா உங்க ஊர்ல?
எனக்கு பிடித்த படங்கள். D,G,H,I,L
எல்லோரும் கலக்கல எடுதிருக்காங்க, வக்களிப்பதே பெரிய சவாலா இருக்குது. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சர், யாஹூ லிங்கா அப்படினா? கணிணி கைநாட்டுக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.
usha
முத்துலட்சுமி,
ஒப்பாரி
கருத்துக்கு நன்றி..
சரிங்க நான் தூங்க போறேன்.
முழித்துக் கொண்டிருப்பவர்கள் யாரேனும் ஒரு பதிவ போட்டு இந்த பக்கமா கொஞ்சம் பேர அனுப்புங்க. ஓட்டு போட சொல்லுங்க. (உங்க படத்துக்குன்னு campaign பண்ணக் கூடாது சொல்லிபுட்டேன் :) )
//போட்டியில் பங்கு பெற்றவர்கள், நீங்கள் எடுத்த படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று சுவாரஸ்யமான பதிவு ஒன்று போட்டு, வாக்கெடுப்பு தளத்தை லிங்கினால், எனக்கு விளம்பரமும் ஆச்சு, உங்களுக்கு ஒரு பதிவும் போட்ட மாதிரி ஆச்சு.//
சொல்லி செய்யாம இருப்போமா???
வாங்க நம்ம blogக்கு.....
Udayakumar, உங்க பின்னூட்டம் வாக்கெடுப்பு முடியும் வரை, ஒளிச்சு வக்கரேன்.
influence பண்ற மாதிரி இருக்கு என்று சில அபிப்ராயங்கள் வந்தன :)
500 பேருக்கு மேல வந்து பாத்த மாதிரி தெரியுது ஆனா, 60+ வாக்குகள் தான் பதிவாயிருக்கு.
பாக்கரவங்க பிடித்ததுக்கு கண்டிப்பா ஓட்டு போடுங்க ப்ளீஸ்.
krkarthik, உங்க பதிவு சூப்பரு.
நெல்லை சிவா, என்னமா விமர்சனம் பண்ணிருக்கீங்க. எப்படிங்க இப்படி எல்லாம் நச்சுன்னு எழுத வருது. கலக்கல்.
பெருசு, தங்கமணி திட்டு வாங்கி எப்படியோ போடோ அனுப்பிட்டீங்க. பிரியாணிக்கு ரைதா நல்லா இருந்துதா? :)
முத்துலட்சுமி, உங்க பதிவும் சூப்பர். போட்டி முடிந்த பிறகு, step-by-step ஒண்ணும் போட்டுடுங்க :)
சர்வேசரே, என்னோட ரெண்டு ப்ளாக்-லேயும், உங்களுக்கு விளம்பரம் கொடுத்தாச்சு.
படத்தோட பார்க்க:
http://cameraparvai.blogspot.com/2007/02/blog-post_13.html
படம் இல்லாம:
http://vinmathi.blogspot.com/2007/02/blog-post_13.html
பங்கு பற்றிய எல்லோருக்கும் எனது பாராட்டுக்கள்.
எல்லோருக்கும் லைட்டிங்கில்தான் பிரச்சினை இருந்திருக்கிறது. அடுத்தது பிரேமிங் மிக முக்கியம்.
அடுத்தமுறை இதைவிட சிறப்பான படங்கள் வரும் என நம்புகிறேன்
எனது ஓட்டு C.
F ல் உருளைக்கிழங்கை காணவில்லை. பச்சை நிறத்தில் உள்ளது உருளைக்கிழங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது (என்னால்)
காமராவில் (டிஜிட்டல்) பலவித கோணங்களில், வித்தியாசமான வெளிச்சங்களில் நிறைய படங்கள் எடுங்கள். அதில் ஒன்றை தெரிவு செய்து போட்டிக்கு அனுப்புங்கள்.
முதலில் அந்தப்படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அனுப்புங்கள்.
உங்கள் படைப்புகளுக்கான போட்டியில் எப்பொழுதுமே முதல் நடுவர் நீங்கள்தான்.
வாழ்த்துக்கள்.
நெல்லை சிவா,
உங்கள் ஆதரவுக்கும், பங்கேற்புக்கும், கோடானு கோடி நன்றிகள் :)
ஆதிபகவன்,
//F ல் உருளைக்கிழங்கை காணவில்லை. பச்சை நிறத்தில் உள்ளது உருளைக்கிழங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது (என்னால்)//
உருளைக்கிழங்கு போல்தான் எனக்குத் தெரிந்தது. பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும்போது கொஞ்சம் வித்யாசமா தெரிந்தாலும், உருளை தான். கொஞ்சம் பிஞ்சா இருக்கு போலருக்கு.
இருந்தாலும் விசாரிக்கிறேன் :)
மற்ற கருத்துக்கு நன்றி!
அடுத்த தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்து இன்னும் சிறப்பான படங்கள் வர வழி பண்ணலாம்.
சர்வேசா
தலைப்பை மாத்து !
புகைப்பட வித்தகர் போட்டியா இல்லை வெஜிடபிள் கார்வார் போட்டியா !
கார்வ் பண்ணத் தெரியாத ஒரு போட்டியாளன்.
( சும்மா டமாஸூக்குத்தான் )
:-))
அனானி,
//கார்வ் பண்ணத் தெரியாத ஒரு போட்டியாளன்.
//
ஹாஹாஹா.. காய் முழுசா உபயோகிக்கணும்னு சொல்லாதது தப்பாயிடுச்சோ? :)
ok. ok. got it.
வோட்டு போடுங்க மக்கள்ஸ்.
//F ல் உருளைக்கிழங்கை காணவில்லை. பச்சை நிறத்தில் உள்ளது உருளைக்கிழங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது (என்னால்)//
உருளைக்கிழங்கு போல்தான் எனக்குத் தெரிந்தது. பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும்போது கொஞ்சம் வித்யாசமா தெரிந்தாலும், உருளை தான். கொஞ்சம் பிஞ்சா இருக்கு போலருக்கு.
இருந்தாலும் விசாரிக்கிறேன் :)
எந்த ஊரில பச்சை உருளைக்கிழங்கு கிடைக்குது?
அது அவரைக்காய் மாதிரி இருக்கு, எதுக்கும் விசாரிங்க..
கள்ள ஓட்டு போடமுடியும் போல இருக்கே .
கள்ள ஓட்டு போடமுடியும் போல இருக்கே .
ஆதிபகவன்,
//F ல் உருளைக்கிழங்கை காணவில்லை. பச்சை நிறத்தில் உள்ளது உருளைக்கிழங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது (என்னால்)//
F உருளைக்கிழங்குதான் என்று confirm பண்ணியாச்சு.
brown, red, colorல் பாத்துருக்கேன், பச்சை எனக்கும் புதுசு.
உலகில் சில இடங்களில் மட்டுமே இந்த மாதிரி உருளை கிடைக்குமாம் :)
முடிஞ்சா ஒரு முழு உருளை பச்ச கலர்ல வாங்கி போடோ அனுப்ப சொல்றேன் :)
அனானி, nice டைமிங்க், மேலே இருக்கும் பின்னூட்டம் பாருங்க (பச்சை உருளை பத்தி).
பரணீ,
//கள்ள ஓட்டு போடமுடியும் போல இருக்கே . //
சுலபமா போடமுடியாது - முயற்சி பண்ணா முடியும்.
அதுவும், நம்ம மக்கள்ஸுக்கு, கண்டிப்பா முடியும் :)
முடிவு அறிவிப்பதர்க்கு முன், 'தேர்தல் அதிகாரி' கிட்ட சொல்லி, கள்ள ஓட்டு அலசல் பண்ணி, எடுத்து விடச் சொல்வேன்.
நேற்று இரவு நிலவரப்படி, மொத்தம் 7 கள்ள ஓட்ஸ் கிட்ட இருக்காம்.
:)
Eureka.. பச்சை உருளை பாத்துட்டன். இங்கே க்ளிக்குங்க
testing .. ஹிஹி!
Hey...interesting...I like D,F,H,M. Good contest..keep it up.
Thanks Maha!
வாக்களிக்க கடைசி நாள் வரும் ஞாயிறு 11:59 pm IST!
லைட்டிங்கோ இல்ல கார்- வாரோ அதுலாம் பாக்கத் தெரியாதுங்கோ, எது படம் அழகா புடிச்சிருக்காங்கோன்னு பாத்தா, நம்ம வோட்டு 'F' & 'M' க்கு தானுங்கோ
F படத்தில் இருப்பது உருளைக்கிழங்கு தானா? எனக்கும் மாபெரும் சந்தேகம். ஆமான்னு சொல்றாங்க, சொல்றீங்க.. ஆனாலும்...
சேதுக்கரசி,
Fல பச்சை உருளை தாங்க. வெரிபைட் பை கமிட்டி :)
அது பாத்தா, அவரைக்காய் மாதிரி இருக்கு.
பச்சை உருளை தனியாய் படம் காட்டுங்க.
நெறைய பேர் personal favourite சொல்லி இருக்காங்க.
நானும் சொல்லிடறேன்.
I) அட்டகாசமான வெயில் லைட்டிங் டச், நல்லா இருக்கு.
D) very good one.
H) சிம்பிளா அழகா இருக்கு.
F, M எல்லாம் பிடிச்சிருக்கு - ஆனா, அது க்ரியேடிவ் லெவல்ல நல்லா இருக்கு, photography/lighting technic இல்லாததனால், என் லிஸ்டில் இல்லை :)
G,C,P,A வும் நல்லா இருக்கு.
இன்னொரு போட்டி கண்டிப்பா வைக்கணும். ஐடியாஸ் அனுப்புங்க. நிறைய திறமை இருக்கு நம்மாளுகளுக்கு.
மத்த படங்கள பத்தின என் விமர்சனம்.
F) அந்த வெங்காயக் கண் ரொம்ப அழகு.
M) எம்மாம் பெரிய வெங்காயம்.
B) மத்தவங்கெல்லாம் சீரியஸா அனுப்புன்வாங்கன்னு நெனைக்கலயோ?
E) no colors; no life :)
J) கீழ green color dominates the picture; அதனால எபெக்ட் கம்மியாயிடுச்சு
K) காய்கறி freshஆ இல்லாததனால லுக் கம்மி. freshஆ இருந்து Crop பண்ணிருந்தா நல்லா இருந்திருக்கும்.
L) நல்லாதான் இருக்கு, ஆனா போடோல தக்காளி தெரியாம பன்ச் கம்மியா இருக்கு.
N) out-of-focus - camera phoneஆ?
O) :)
Post a Comment