"நேயர் விருப்பம் - இங்கு விருப்பங்கள் நிறைவேற்றப்படும்" என்று ஒரு புதிய ப்ளாக் க்ரியேட்டியுள்ளேன்.
(காஸா பணமா, ஓசில பினாயில் கெடச்சாலும், குடிக்காம விடமாட்டோம்ல)
எல்லாரும், அவங்கவங்க விருப்பங்கள கேட்க, அதை மற்ற பதிவர்கள்/வாசகர்கள் செய்ய ஒரு இடமாக இது செயல்படும்.
'கண்டதையும் கேக்கப்படாது' - இதுவே tag-line. இதை கவனத்தில் கொண்டு கேட்கலாம் :)
முதல் விருப்பத்தையும், நானே தொடங்கி வைத்துவிட்டேன்.
விவரங்கள் இங்கே. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு.
எப்படிங்க ஐடியா? ஏற்கனவே யாராவது செஞ்சாச்சோ?
இதில் Adminஆக பணிபுரிய, குழுவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன :)
பி.கு: March லேருந்து , ஆபீஸ்ல, எக்கச்சக்க வேல ஆரம்பமாவுது - போற போக்குல சர்வே department'ம், லீஸ் விடப்படலாம் :)
(காஸா பணமா, ஓசில பினாயில் கெடச்சாலும், குடிக்காம விடமாட்டோம்ல)
எல்லாரும், அவங்கவங்க விருப்பங்கள கேட்க, அதை மற்ற பதிவர்கள்/வாசகர்கள் செய்ய ஒரு இடமாக இது செயல்படும்.
'கண்டதையும் கேக்கப்படாது' - இதுவே tag-line. இதை கவனத்தில் கொண்டு கேட்கலாம் :)
முதல் விருப்பத்தையும், நானே தொடங்கி வைத்துவிட்டேன்.
விவரங்கள் இங்கே. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு.
எப்படிங்க ஐடியா? ஏற்கனவே யாராவது செஞ்சாச்சோ?
இதில் Adminஆக பணிபுரிய, குழுவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன :)
பி.கு: March லேருந்து , ஆபீஸ்ல, எக்கச்சக்க வேல ஆரம்பமாவுது - போற போக்குல சர்வே department'ம், லீஸ் விடப்படலாம் :)
28 comments:
நெல்லிக்கால யாருய்யா சோத்த திம்பாங்க?
அது நெல்லு சோறு சர்வேசா.
நாம் வடை பாயசத்தோடு சாப்பிடுவதே
நமக்கு விருந்து...ஆனால் இல்லாதவர்களுக்கு நெல்லுச்சோறு(அரிசி சாதம்)என்பதே பெரிய விருந்து.நல்ல பாடல் தேர்வு.ப்டாபட்டின் நடிப்பும் கூடுதல்
சுவை சேர்க்கும்.
நானானி
தவறு சுட்டிக் காட்டியதர்க்கு நன்றி. தலைப்பில் திருத்தினால் feed சொதப்பிவிடும் என்பதால் அப்படியே விடுகிறேன். :)
வாணி ஜெயராம் குரலும் ஃபடாஃபட்டின் நடிப்பும் ரொம்ப நல்லா இருக்கும்.
நெய் மணக்கும் கத்திரிக்காய்.ம்ம்ம்ம்.
ஒரே பாட்ட இரண்டு இல்ல மூணு பேரு பாடி அனுப்பிட்டாங்கனா....எந்த version அ போடரதுன்னு குழப்பம் வராதா??
இல்ல அது சர்வேசனோட discretion??
Radha Sriram,
//ஒரே பாட்ட இரண்டு இல்ல மூணு பேரு பாடி அனுப்பிட்டாங்கனா....எந்த version அ போடரதுன்னு குழப்பம் வராதா??
இல்ல அது சர்வேசனோட discretion??
//
எனக்கெதுக்கு வம்பு. எல்லாத்தயும் லைனா போட்டுடுவேன்.
கேக்கரதுக்கும் ஒரு வெரைட்டி கெடச்ச மாதிரி இருக்கும்.
பாட ரெடியா? இன்னும் வேற யாரும் மாட்டல. :)
என்னோட விருப்பம் இந்தப்பாடல்...கிசுகிசு பாணில சொல்றேன் கண்டுபிடிக்கமுடியுதா பாருங்க!!
ஓடற படம்..
மல்லிகைப்பூ பெயர்லகொண்டநடிகைகதாநாயகி.
திருமால்சிவன் பெயர்கள் பாடகரின் பெயர்ல இருக்கும்
பாட்டு நடுவில் ஐய்யெயோ வார்த்தைவரும்!!
கண்டுபிடிச்சிட்டா பாடலை அளிக்கவும்.தாங்க்யூ!
மீரா ஜாஸ்மின்,திருமகன் படதுல வர shock adikuthu பாடலா.பாடினது அனுராதா ஸ்ரீராம்.
correct a?
ஷைலஜா,
இன்னும் பேர் தெரிஞ்ச பாட்டு பாடவே ஆள காணுமேங்க :)
மீரா ஜாஸ்மின், (அனுராதா?)ஸ்ரீராம் பாடின ஏதோ ஒரு பாட்டு கேக்கறீங்க. ஹ்ம். யாருங்க ரெடி?
ஷக்தி, சரியாத்தான் இருக்கும்னு நெனைக்கறேன். ஷைலஜா?
ஷக்தீ..அந்த விடைதப்பு..மல்லிப்பூ மட்டும் ஓகே! என்ன சர்வ்ஸ் உங்களுக்குமா அது என்ன பாட்டுனு தெரில்ல பாக்லாம் யார் கண்டுபிடிக்கறாங்கன்னு..
பாட ரெடி. கேக்க ரெடியா?:-)
வல்லிசிம்ஹன்,
//பாட ரெடி. கேக்க ரெடியா?:-) //
நான் எப்பவும் ரெடி. :)
ஷைலஜா,
//என்ன சர்வ்ஸ் உங்களுக்குமா அது என்ன பாட்டுனு தெரில்ல பாக்லாம் யார் கண்டுபிடிக்கறாங்கன்னு..//
அடடா, புதுப்பாட்டு ஞானம் கொஞ்சம் கம்மி. கண்டுபிடிச்சு சொல்றேன். :(
ஷைலஜா..இப்போ மீரா ஜாஸ்மின் நடிச்சு ஒடற படம் திருமகன் மட்டும் தான்.கொஞம் பழசா?சொல்லுங்க.
என்னோட விருப்பம் - கொடியிலே மல்லிகை பூ ( படம் கடலோரக் கவிதைகள்)...முதல் ரெண்டு நேயர் விருப்பம் பாடல் தெரியாது..தெரிஞ்சா பாடி இருப்பேன் :))...
anamika,
//என்னோட விருப்பம் - கொடியிலே மல்லிகை பூ ( படம் கடலோரக் கவிதைகள்)...முதல் ரெண்டு நேயர் விருப்பம் பாடல் தெரியாது..தெரிஞ்சா பாடி இருப்பேன் :))... //
நித்தம் நித்தம் நெல்லு சோறு தெரியாதா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? சூப்பர் பாட்டுங்க.
கொடியிலே மல்லியப்பூ நல்ல பாட்டு. ட்ரை பண்றேன், டேக் ஓ.கே ஆச்சுன்னா போட்டுடறேன் :)
அடடா நான் இல்லாம இங்க ஒரு conversation ஓடிட்டிருக்கு....
ஷைலாஜா quiz எல்லாம் வச்சு தூள் கிளப்பராங்க......யாரு பிள்ளையார் சுழி போடராங்கன்னு ஆவலா பாத்துட்டு இருகேன்....
சர்வேசன் duet பாட்டுனா ஆண் குரலும் பெண் குரலுமா இருந்தா super ஆ இருக்காது?? நீங்களும் உங்க life partnerumaa ஆரம்பிச்சு வைங்க>>>>>> டீக் ஹே??
radha sriram,
ஏற்கணவே laptopம் கையுமா இருக்கரது, வீட்டுல திட்டு விழுது, டூயட் வேறயா :)
நித்தம் நித்தம் நெல்லு சோறு நான் பாடிடட்டுமா??
அப்பரம் ஹிட்டு கம்மியாச்சுன்னு மனசுகுள்ள பல்ல கடிக்ககூடாது.....சரியா?
shakthi..ஓடற படம்னா உடனே இப்போ ஓடிட்டு இருக்கிற படம்னு சட்டுனு புரிஞ்சா அது கிசுகிசு இல்ல...திருமால் சிவன் பெய்ர்களை தன் பெயரில் கொண்ட பாடகர்னு சொன்னேனே...அப்றோம் அனுராதா ஸ்ரீ ராம் னா நான் என்ன பண்றதுங்க?:)
ராதாஜி..என்ன புரிஞ்சிதா? க்ளூ ச்சாயியே ஹை, ரைட்? ஒகே..ஸ்ரீரங்கத்துலிருந்து அந்தப்பட ஹீரோ நகரத்துக்கு வரார்..என் ஃபேவரிட் சாங் கண்டுபிடிக்க இந்த மஹா சபைல யாருமே இல்லையா வல்லிம்மா நிஜம்மா கண்டுபிடிச்சிடீங்களா என்ன?
ஷைலஜா
Radha Sriram,
தாராளமா பாடுங்க:)
வெரைட்டியா நிறைய பேர் பாட்டு கேக்க நல்லாதான் இருக்கும்.
ஹிட்ட பத்தி கவல படாதீங்க. Disclaimer எல்லாம் எப்பவோ போட்டாச்சு :)
ஷைலஜா,
//shakthi..ஓடற படம்னா உடனே இப்போ ஓடிட்டு இருக்கிற படம்னு சட்டுனு புரிஞ்சா அது கிசுகிசு இல்ல...//
அடடா எனக்கு புரிஞ்சுடுச்சு; வேற யாராவது கண்டுபிடிச்சு பாடராங்களான்னு பாப்போம்.
நிஜம்மா புரிஞ்சிடிச்சா சர்வேஸ்! பொய் சொல்லக்கூடாது சர்வேசரே!!!!!!!!!!!!!
ரொம்ப நாளா ஒரு பாட்டு எந்த படத்துல வருதுனு நிறைய தேடி பார்த்துட்டேன். ஓங்களுக்கு தெரிஞ்சா சொல்லுறீங்களா? பாட்டு இப்படி தான் தொடங்குது " நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்.. நெஞ்சில் தமிழாய்...." ஜேசுதாசும் வாணிஜெயராமும் பாடிருக்காங்க.
வல்லிசிம்ஹன் பாடிட்டாங்க. சூப்பரா இருக்கு.
Priya, நீங்க கேட்கும் பாடல் 1990ல வந்ததுன்றது மட்டும் இணையத்துல தேடின போது தெரியுது; மத்தபடி பாட்டு கெடைக்கல.
ப்ரியா.எனக்கும் அந்தப்பாட்டு தெரில்லயே..வேற பாட்டு கேளுங்களேன் ட்ரைபண்லாம்
ஷைலஜா
Post a Comment