recent posts...
Tuesday, February 13, 2007
காதலர் தினம் சர்வே + இலவச சுட்ட கவிதை
காலேஜ் டேஸ்ல Feb 14th தான் தீபாவளி நமக்கெல்லாம்.
ஹ்ம். சுகமான நாட்கள் அவை.
'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே' ரேஞ்சுக்கெல்லாம் யாரும் இருக்கல.
சும்மா நட்பு வலை மட்டுமே இருந்தது. அந்த வயசுக்கு அதெல்லாம் நல்லாவும் இருந்தது. சிரித்ததும், அழுததும், சுற்றியதும், சண்டை போட்டதும், திரும்ப சேர்ந்ததும் கவித்துவமான நாட்கள்.
சும்மா சொல்லக் கூடாது, அந்த நாளெல்லாம் வாழ்க்கையில் இல்லாம போயிருந்தா ஒரு இழப்புதான். (இதை எல்லாம் அனுபவிக்காதவர்கள், You don't know what you missed :) ).
Feb14th அன்று சக நட்புக்கு ஆங்கிலத்தில் கவிதை எழுதிக் கொடுப்பார்கள். சிலர் Higgin Bothams, American Library, Hallmark மாதிரி இடங்களில் உள்ள நல்ல greetings card வாங்கிக் கொடுப்பார்கள்.
நமக்கு அப்பெல்லாம் கவுஜயும் வராது (இப்ப மட்டும் வருதா?), கையில் காசும் இருக்காது.
அடுத்தவன் வாங்கர card ல் இருக்கும் கவுஜயை type செய்து italicize ல் ஒரு print-out எடுத்து கொடுத்த ஞாபகம்.
ஹ்ம். நல்ல நாட்கள் அவை :)
சரி அத்த வுடுங்க. விஷயத்துக்கு வருவோம்.
இப்பெல்லாம் காதலர் தினம்னா, Mumbai மாதிரி இடங்களில் பெரிய் எதிர்ப்பாமே? நம்ம ராமதாஸ் ஐயாவும் காதலர்களுக்கு தடா கேக்கறாறாமே?
உங்களுக்கு எப்படி? அதுவே சர்வே! (சர்வேயின் அடியில் ஒரு ஆங்கில கவுஜ. உங்க நட்புக்கு italicize பண்ணி print-out எடுத்துக் கொடுங்க :) சொக்கிடுவாங்க! )
As friends we share so much more
than other people may ever realize..
We share a closeness
that is very precious
and a friendship that is very lasting
We know we don't have to be afraid
of opening up to one another..
of trusting each other completely..
of appreciating every moment of time
we spend in one another company.
Im not afraid to let you see me cry
and you are the one person I want to be with
when I want to feel crazy
Thru it all I know you understand in the same way
that, I understand you..
There are other people whom I dearly love
and care about in this world,
but there is no one else quite like you..
Everytime I look back
our friendship has been
one of the best parts of my yesterdays
And everytime I look ahead
I see our friendship
as the one thing I can always count on
to get me thru tomorrow.
பி.கு: புகைப்பட போட்டி வாக்களிக்க இங்கே க்ளிக்கவும். நன்றி!
.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
50:50 நிக்குது சர்வே. ஹ்ம். கஷ்டம்தான்.
Happy Valentines day Surveysan..
vote pottaachchu :-)
thanks கார்த்திகேயன்.
happy valentines day to you too...
அவ்வளவு ஒண்ணும் happy இல்லியோ ?
சர்வேசா(ர்)
எத்தன பேர் ஓட்டுப்போட்டாங்கண்ற விவரத்தையும் தந்தா முழுசாயிருக்கும்ல.
வெறும் சதவீதத்த வச்சு உலகத்துல அத்தன குழப்பம் இருக்குது.
:)
சிறில்,
//சர்வேசா(ர்)
எத்தன பேர் ஓட்டுப்போட்டாங்கண்ற விவரத்தையும் தந்தா முழுசாயிருக்கும்ல.
//
த்ரலாம்தான். இப்போதைக்கு எனக்கு மட்டும் தெரியும் படி ஒரு ஏற்பாடு இருக்கு. முடிவு அறிவிக்கும்போது கணக்கு சொல்லிடறேன்.
(மொத்த ஓட்டு தெரிஞ்சா, வாக்கெடுப்போட சத்து கொறஞ்சுடும். கள்ள ஓட்டு முயற்சிகளும் ஜாஸ்தி ஆயிடும் 50%:50% is better than 1vote:1vote :) )
என்ன இது..வாக்கெடுப்பின் நிலவரம் பார்த்தால் புண்பட்ட நெஞ்சங்கள் தான் அதிகம் போல் இருக்கே
தூயா,
ஆமாங்க.. பசங்க ரொம்ப அடிபட்டிருக்காங்க போலருக்கு :)
http://tamiltalk.blogspot.com/2007/02/v.html
இந்த தளத்தில் காதலர் தினம் தேவையா இல்லையா என்று ஒரு விவாதம் (போட்டி) போயிட்டிருக்கு.
இங்கே (சர்வே) 50%க்கு மேல தேவையில்லை என்று ஓட்டு விழுந்திருக்கு. ஆனா அங்கே இது வரை ஒருத்தர் கூட தேவையில்லைன்று சொல்ல காணவில்லை. இது வரை கலந்து கொண்டவங்க எல்லோருமே தேவை என்று தான் சொல்லியிருக்காங்க...
சிந்தாநதி, tamiltalk சின்ன பசங்க புழங்குர எடமோ?
இங்க பெருசுங்க ஜாஸ்தி போலருக்கு :)
வேணாம்கரவங்க, காரணத்த சொல்லுங்கப்பு.
Post a Comment