'சாகரன்' கல்யாண் 1975~07
யாரென்றே தெரியாது, ஆனால் மனம் வேதனைப் படுகிறது.
அப்படியென்றால் அவர் நல்லவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.
சின்ன வயதில் பல சாதனைகள் படைத்திருக்கிறார்.
வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல் ஒருவித அயற்ச்சியை உணரும் பலருக்கு ஒரு உந்துகோலாக இருந்திருக்கிறார்.
சுயநலம் கருதாமல் பல நல்ல காரியங்களை துவங்கி நாம் தேன் பருக உதவி இருக்கிறார்.
நண்பர் 'சாகரன்' கல்யாண் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நடந்தவை, நடப்பவை, நடையேறப் போபவை யாவும் நன்மைக்கே என்று ஒவ்வொரு துயரச் சம்பவத்தின் போதும் நினைத்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
கல்யாணின் உடன் இருக்கும் நண்பர்கள், அவர் குடும்பத்துக்கு இந்த நேரத்தில் தேவையானதை கண்டிப்பாக செய்வார்கள் என்று தெரியும்.
வருங்காலத்திர்க்கு தேவையானதையும் யோசித்து என்ன செய்ய வேண்டுமோ அதை இணைய நண்பர்கள் பலம் கொண்டு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
வேற்றுமைகள் மறந்து, அவரின் தேன்கூட்டை, நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.
13 comments:
யாருன்னே தெரியாத ஒருத்தருக்காக மனம் உருகுதுபாருங்க...
நீங்க சொல்ற இரண்டையும் நிச்சயம் செய்யணும்.
சிறில்,
//நீங்க சொல்ற இரண்டையும் நிச்சயம் செய்யணும். //
கண்டிப்பா செய்யணுங்க.
இந்த மாதிரி நேரத்துல தான், வாழ்க்கையில் ஒரு சின்ன ப்ரேக் போட்டு, நிதானச்சு, பல விஷயங்களை யோசித்து, சில விஷயங்களை மாற்றி அமைக்கும் சிந்தனைகள் வருது.
இந்த ஓட்டம் எதுக்காகன்னு பெரிய பெரிய கேள்வியெல்லாம் வருது.
நேற்றிருப்பார் இன்றில்லையெனும் பெருமை
படைத்திவ்வுலகு.
சுய விமரிசனம் இது போன்ற நேரங்களில் மட்டுமல்லாமல் எப்போதும் இருப்பின் இவ்வையகம் உய்யும்!
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிராத்திக்கிறேன்.
இதுவும் கழிந்து போம்.... மறந்து போம்..... மறைந்து போம்.
முருகனருள் முன்னிற்கும்!
SK,
//சுய விமரிசனம் இது போன்ற நேரங்களில் மட்டுமல்லாமல் எப்போதும் இருப்பின் இவ்வையகம் உய்யும்!//
மிகச்சரியாக சொன்னீர்கள்.
ஆனால், கிறுக்குமனம் 'சாதாரண' நிலையில் இருக்கும்போது, பாதைமாறிய பயணத்தை தொடரத்தான் செய்கிறது.
கிடைக்க இருந்த ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன்...
நண்பரே!
தெரியாத ஒருவருக்கே இத்தனை மன வருத்தம் என்றால், என்னை போன்றோருக்கு எப்படி இருக்கும்.
கடந்த 4 ஆண்டுகளாக உறவாக, குடும்ப நண்பராக, கஷ்டம் வரும் போது உதவும் கரமாக, ஆசாபாசங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனாக, கற்று கொடுப்பதில் ஆசானாக இன்னும் எத்தனையோ அவதாரங்களை என்னுடன் பகிர்ந்தவர்.
சகோதரிக்கும், மருமகளுக்கும் எவ்வாறு ஆறுதல் கூறுவேன் என்று புரியவில்லை.
வாழ்க்கையில் பெரிய பெரிய சாதனைகள் படைக்க நினைத்தவர், இளம் வயதில் அவர் சாதித்ததாக நாம் நினைப்பதை அவர் சாதாரண செயலாகவே கருதினார், தன் முகத்தை முன்னால் காட்ட நினைத்ததே இல்லை. புகழ்ச்சிக்கு அடிமை ஆனவரே இல்லை, இப்போ அவரை எப்படி புகழ்வது என்றும் எனக்கு புரியவில்லை.
சாகரன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சாகரன் குறித்து தொடர்ந்து வரும் பதிவுகள், அவரின் மரணம் பதிவுலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.முகம் தெரியாத சிலரும் வருந்தியிருப்பது அவரின் மீதான மரியாதையை கூட்டுகிறது. சாகரன் அவர்களின் இழப்பு குறித்த பதிவுகளை முழுவதும் அவர்களின் குடும்பத்தாற்க்கு பிறகு ஒரு வேளையில் தெரியப்படுத்தினால் அவர்களின் இழப்பை பகிர்ந்து கொண்டதாய் இருக்கும்.
எல்லோருக்கும் இனியவரான சாகரன் எனக்கு மரணம் மூலம் அறிமுகமாகியிருக்கக்கூடாது.
techtamil, பரஞ்சோதி, Hariharan, ஒப்பாரி,
சாகற வயசா இது? என்று பலரை போல் நானும் துன்பத்தில்
:(
வரும் புதனன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவர் இல்லத்தில் ஈமக்கிரியை நடைபெற இருப்பதாக முத்தமிழ்மன்றத்தில் படித்தேன்.
முடிந்த அன்பர்கள் போய் அஞ்சலி செலுத்தினால் எங்களைப் போன்ற இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்.
முருகனருள் முன்னிற்கும்.
SK, தகவலுக்கு நன்றி.
கண்டிப்பாக நம் சென்னை நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
Ahmed Imthias இன்னொரு பதிவில் இட்ட பின்னூட்டம்:
"நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும், நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" [திருக்குரான் 4:78]
"உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்" [திருக்குரான் 34:30]
நம் அனைவருக்கும் மரணம் என்பது சத்தியம் என்றும் அது இன்றில்லையேல் நாளை நம்மை வந்தடையப் போகிறது என்பது நிச்சியமாகத் தெரிந்திருந்தும் நம்முடன் வாழ்பவர்களுக்கு மரணம் நேரும் பொழுது நாம் கலங்கித்தான் போகிறோம்...
சற்றுமுன் சந்தித்தேன் நன்றாகத்தான் போனார் ஆனால் அடுத்த கனம் அவர் நம்முடன் இல்லை என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நண்பர் சொல்லி சொல்லி ஆற்றிப்போனார்...
மற்றொருவரோ அவருடன்தான் லிப்டில் இறங்கி வந்தேன், சற்று நேரத்திற்கெல்லாம் அவர் உடலை மார்ச்சுவரியில் வைத்துவிட்டு நான் மட்டும் திரும்பி வந்தேன், என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை..
நண்பர் கல்யாண் தஞ்சை மாவட்த்தைச் சேர்ந்த குரடாச்சேரியை சொந்த ஊராக கொண்டவர், தற்பொழுது சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறார், அவருக்கு 31 வயது மணைவிக்கு 24 வயது, ஒரு மூன்று வயது குழந்தை இருவருக்கும் உள்ளது. எனக்கும் அவருக்குமுண்டான நட்பு மாதமிருமுறை நடக்கும் எழுத்துக்கூடத்தின் மூலம்தான் தொடங்கியது, அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதை கண்டு அதிசயிப்பேன்.. ஒவ்வொருவரும் தன் தனித்தன்மையை உலகிற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத் துடிக்கும் இவ்வுலகில் திறைமறைவில் நிறைய தமிழுக்கும், தமிழருக்கும் சேவைகள் பல செய்து வெளியில் காட்டிக்கொள்ளாத ஒரு வித்தியாசமானவர். ஒரு தடவை www.thenkoodu.com என்ற இணையதளத்தைப் பற்றி பேச்சு வந்தபொழுது எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் அவர் நண்பர் மூலம் அவர்தான் அத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கேட்டவுடன் எனக்கு பெரும் ஆச்சிரியம்தான்...
அடிக்கடி சொல்வார் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று... அப்படி என்னை ஊக்குவிக்கும் பொழுதுதான் நாங்கள் கடைசியாக சந்தித்தோம்.. சமீபத்தில் எங்கள் அமைப்பு நடத்திய பட்டிமன்றம்தான் அவர் இறுதியாக கலந்து கொண்ட தமிழ் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன், கடந்தவாரம் அவரை எங்கள் சங்ககூட்டத்தில் சந்தித்த பொழுது தனியாக என்னை சந்தித்து என் இருகைகளையும் பிடித்துக்கொண்டு நாங்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதையும் நிகழ்ச்சியை தொடக்கம் முதல் இறுதிவரை மனம்விட்டு ரசித்து சிரித்தேன் என்றும் நிகழ்ச்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் வாயார பலமுறை மனம்திறந்து பாராட்டினார்.. அந்நிகழ்ச்சியின் குறுந்தகடை வாங்கிக்கொண்டு 50 ரியால் தந்தார் என்னிடம் பாக்கி சில்லரையில்லை பின்னர் தாருங்கள் என்று எவ்வளவோ கூறியும் ஒருவேளை நான் மறந்துவிடுவேன் பாக்கியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் நாம் எழுத்துக்கூடத்தில் சந்திக்கும் பொழுது வாங்கிகொள்கிறேன் என்றார், எழுத்துக்கூடம் நடக்கலாம் ஆனால் அவரை சந்திக்கவே முடியாதே என்றெண்ணும் பொழுது மனது கனக்கிறது...
நேற்று செய்தியறிந்து ரியாத்தில்உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் அவரைத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் துக்கம் விசாரிக்க வந்தார்கள்.. குடும்பத்துடன் உள்ளவர்கள் தங்கள் துனைவியாரை அழைத்துக்கொண்டு வந்திருந்து ஆறுதல் சொன்னார்கள், நண்பர்கள் வெற்றிவேல், ஜெயசீலன் போன்றோர் அவரின் உடலை உடன் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுயிருந்தார்கள், வீட்டில் உள்ள சாமான்களை விற்கவோ அல்லது அனுப்பவோ வேறுசிலர் பேசிக்கொண்டிருந்தார்கள் ஒரு நாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதே என்று மற்ற நண்பர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு வீட்டு வாசலிலேயே நின்றிருந்தார்கள்.. அதுவரை என் கண்ணீரை அடக்க முடிந்த எனக்கு அவரின் துனைவியார் கீழே வந்து அவர்கள் உபயோகித்த காரைப் பார்த்து அழுதபொழுது நான் முதல் அங்கிருந்த அனைவரும் அதற்குமேலும் கண்ணீருக்கு திரைபோட முடியவில்லை...
சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....
http://ajeevan.blogspot.com/
or
http://radio.ajeevan.com/
Post a Comment