recent posts...

Monday, February 19, 2007

Sudar கை மாறியதா?


தேன்கூடு சாகரன் கல்யாண் துவங்கி வைத்த சுடர், கடைசியாக நாமக்கல் சிபியிடம் இருந்து தருமி கைக்கு மாறியதாக ஞாபகம்.

ஆனால், இன்று தேன்கூடு முகப்பில், இரவுகழுகு, ஆவியர் உலகம், புலிகேசி வரிசை கட்டி சுடர் கொண்டு ஓடுவதை பார்த்தேன்.

சுடர் கை மாறிவிட்டதா? இல்ல, சுட்டுட்டாங்களா?

தேன்கூடு 'சுடர்' அடுக்கி வைக்கும் முறையில் ஏதாவது குளறுபடி இருக்கலாம் - அதை mis-use செய்யாமல், முறையின்றி சுடர் ஏற்றிய அனைவரும் அதை அணைத்து விட்டு, வரிசையில் உள்ளவர்கள் சுடர் எடுத்து ஓட ஆவன செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

"நாங்க சுடர் ஏத்தக் கூடாதா என்று கழுகு கேட்பது என் காதில் விழுகிறது" - night eagle சார், கிசு கிசு, கண்டிப்பா தேவைதான், ஆனா அது பத்திரிகையின் மூலை முடுக்கில் இருந்தா நல்லது. முகப்பில் யாரும் போட வேண்டாமே. என்ன நான் சொல்வது?
தேன்கூட்டின் பெயர் அல்லவா கெட்டுவிடும்.

தேன்கூடு சுடரின் விதிமுறைகளையும் ஒரு முறை படித்துவிடுங்கள்.

தவறாக ஏதாவது சொல்லியிருந்தா, மீ த எஸ்கேப். :)

நன்றி!

பி.கு: தேன்கூடு admin வேலை செய்பவர்கள் யார்? ஏதாவது உதவி தேவை என்றால் என்னை surveysan2005 at yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நமக்குள்ளேயே ஒரு குழு அமைத்து செயல்படலாம், தேவைப்பட்டால்.


---------------------------------------------------------
latest update:
நாமக்கல் சிபி இப்பொழுதுதான் என் தவறை திருத்தினார்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சுடர் ஏற்றக் கூடாது என்று ரூல்ஸில் தெளிவாக சொல்லப் படவில்லை.

so, கழுகார் ஆரம்பித்த சுடரில் ஒன்றும் பெரிய தவறில்லை என்றே நினைக்கிறேன்.
பலர் சுடர் ஏற்றினால் குழப்பம் தான் மிஞ்சும். நேர்த்தி தவறி விடும் என்பதே என் எண்ணம்.

(ஆவியார், தனது பதிவை நம் விருப்பத்திர்க்கிணங்கி தூக்கி விட்டார். அவருக்கு நன்றி. இனி சர்வேக்கு அவசியமில்லை என்பதால் சர்வே தூக்கப்பட்டது. இருட்ல நடக்க தான் பயமா இருக்கு :) ஆவி சார், ஒண்ணும் பண்ணிட மாட்டீங்களே? )

சுடரில் பங்கேற்கும் அனைவரும் கீழே உள்ள ரூலை மனதில் பதிந்து கேள்விகளை கேட்கவும்/பதில் அளிக்கவும். நன்றீஸ்.
சாரி பார் த ட்ரபிள்!

சுடர் ரூல்ஸ் பக்கத்திலிருந்து
**கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. **
---------------------------------------------------------

===========================================================
தேன்கூடு உதவிப் பக்கத்தில், சுடர் பற்றிய கருத்து:

தேன்கூடு தமிழோவியம் மெகா வெற்றிகளுக்குப் பிறகு, இதோ தேன்கூடு குழு வழங்குகிறது ‘சுடர் - ஒரு சுவாரசியமான தொடர் விளையாட்டு‘ .

தேன்கூடு நல்ல எழுத்துக்களை உற்சாகப்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போட்டிகள் ஒரு வழி என்றால் விளையாட்டும் ஒரு வழிதானே! :-)

உங்கள் கற்பனைகள்/திறமைகளை புதுவிதத்தில் வெளிப்படுத்த இந்த விளையாட்டு துணை நிற்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ரொம்ப சுலபம் - கேள்விகள் & பதில்கள். உங்களிடம் வீசப்படும் கேள்விகளை நீங்கள் எப்படி பதில் சொல்கிறீர்கள் என்பதும் நீங்கள் கேட்கும் கேள்விகள் எப்படி கையாளப்படுகிறது என்பதுமே இங்கு திறமையை நிரூபிக்கும் சவால்! கொஞ்ச நாள் நாமும் தான் ‘மதன்’களாகிப் பார்ப்போமே! கேள்விகள் ஜாலியாகவும் இருக்கலாம், சீரியஸாகவும் இருக்கலாம். எப்படி இருப்பினும் நம் அனைவருக்கும் இந்த விளையாட்டு சுவாரசியமானதாகவும் நிறைய அறிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கப்போகிறது என்பது நிச்சயம்.:-)

சுடர் உங்களிடம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் ரெடியா இருங்க! உங்கள் உற்சாகமே எங்கள் ஊக்கம்!!

துவங்கி வைத்த ‘வெட்டிப்பயல்’ அவர்களுக்கு எங்களின் நன்றிகள்.

அன்புடன்,
தேன்கூடு குழு.

=============================================================


இதப்பாத்தா ஒரு நேரத்தில் ஒரு வரிசைதான் இருக்கணும் என்று எண்ணித்தான் சுடர் ஏற்றப்பட்டதாக தெரிகிறது.
So, மக்கள்ஸ், kindly co-operate!

44 comments:

குமரன் (Kumaran) said...

சுடர் தான் சுட்டெரிக்குதுன்னு சொல்லிக்கிட்டாங்க. இப்ப சுடரையே சுட்டுட்டாங்களா? ஹும்.

VSK said...

இது குறித்து நானும் தேன்கூடுக்கு எழுதியிருக்கிறேன்.

சுடர முயற்சித்தது தவறில்லை.

ஆனால், அதை தேன்கூடில் இணைத்தது சரியெனப் படவில்லை எனக்கு.

SurveySan said...

குமரன்,

// இப்ப சுடரையே சுட்டுட்டாங்களா//

சுட்டிருக்க மாட்டாங்க.. தெரியாமல் நடந்திருக்கும்.

தேன்கூட்டில் தான் பிழை இருக்க வேண்டும்.

ஆனால், பிழையை திருத்த யாரும் இல்லாத பட்சத்தில், சுடர் ஏற்றியவர்கள் அணைப்பதுதான் ஒரே வழி.

SurveySan said...

SK,

//இது குறித்து நானும் தேன்கூடுக்கு எழுதியிருக்கிறேன்.
சுடர முயற்சித்தது தவறில்லை//

சுடர் ஏற்றியதில் தவறே இல்லை.
அதை முகப்பில் அரங்கேற்றியதுதான் தவறு.

அறியாமல் நடந்த பிழையாகத்தான் இருக்கும். அவர்களுக்கே இதை பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. பின்னூட்டங்கள் அந்த பதிவில் போட்டால் தெரிய வாய்ப்பிருக்கிறது.

நான் இப்பதான் போட்டுட்டு வந்தேன்.

கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

சுடர் கை மாற வில்லை!

தருமி ஐயாவிடம் கொடுத்தது பத்திரமாக உள்ளது! அவர் கேள்விகளுக்கு விடையளிக்க கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார் அவ்வளவே!

ஒன்றுக்கு மேற்பட்ட சுடர்களும் ஏற்றப்படலாம் என்றுதான் தேன்கூட்டில் இருக்கிறது! அதன் அடிப்படையில்தான் கழுகிடமிருந்து புதிதாய் ஒன்று ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

பார்க்க விது எண் 8 :

8) இந்தத் தொடர்விளையாட்டு, ஒரு சுவாரசியத்திற்கே. தொடர்விளையாட்டின் வெற்றி வலைப்பதிவர்,வாசகர்களின் பங்கேற்பில்தான் இருக்கிறது. வலைப்பதிவர்,வாசகர் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பான பங்களிப்பினைத் தந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்விளையாட்டுக்கான பதிவுகளை http://www.thenkoodu.com/sudar.php என்ற முகவரியிலிருந்து படிக்கலாம்.

SurveySan said...

சிபி,

//ஒன்றுக்கு மேற்பட்ட சுடர்களும் ஏற்றப்படலாம் என்றுதான் தேன்கூட்டில் இருக்கிறது//

நீங்கள் சொன்னது சரிதான். பல பேரும் கொண்டு செல்லும் விதத்தில் தான் அமைத்திருக்கிறார்கள்.
ஹ்ம். My bad then.

கழுகும், ஆவியும், புலியும் ஏற்றட்டும் ஏற்றட்டும். :) சாரி!

சுடர் ரூல்ஸ் பக்கத்திலிருந்து
--கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. ---

நாமக்கல் சிபி said...

அப்படி ஒரே ஒரு சுடர்தான் ஏற்றப்பட வேண்டுமெனில் எவ்வித அழைப்புமில்லாத சுடரை/ அல்லது அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டதால் இன்னொரு நபரை கைகாட்டாத நிலையில் சுடர் கைமாறியதை தேன்கூடு நிர்வாகம் தவறெனச் சுட்டிக்காட்டி தவிர்த்திருக்கலாம் அல்லவா!

இருப்பினும் நானும் எனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன்,
தேன் கூடு நிர்வாகத்திற்கும் இது பற்றி எழுதுகிறேன்.

நாமக்கல் சிபி said...

//சுடர் ரூல்ஸ் பக்கத்திலிருந்து
--கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.//

சரிதான் சர்வேசன்.

இதுவரை ஏற்றப்பட்ட இரண்டாவது சுடரில் விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா!

SurveySan said...

சிபி சார்,

என் பதிவில் சில மாற்றம் செய்துவிட்டேன்.
நீங்கள் சுட்டிக் காட்டியபடி, பல சுடர்கள் ஏற்றலாம் என்று தான் நானும் நினைக்கிறேன். after its WWW. ஒரு சுடருக்காக காத்திருந்தால் வயதாகிவிடும் :)

//அப்படி ஒரே ஒரு சுடர்தான் ஏற்றப்பட வேண்டுமெனில் எவ்வித அழைப்புமில்லாத சுடரை/ அல்லது அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டதால் இன்னொரு நபரை கைகாட்டாத நிலையில் சுடர் கைமாறியதை தேன்கூடு நிர்வாகம் தவறெனச் சுட்டிக்காட்டி தவிர்த்திருக்கலாம் அல்லவா!
//

தேன்கூட் நிர்வாகம் இப்பொழுது செயல்படுவது போல் தெரியவில்லை. சில நாள் ஆகலாம். அதனாலேயே நான் மடலில் அனுப்பாமல், இதை பதிவாக எழுதினேன்.

VSK said...

விதிமுறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுடர் ஒரே நேரத்தில் ஏற்றலாம் என எங்குமே இல்லை.
சிபியார் காட்டிய 8வது விதி, ஒருவரிடம் சுடர் வந்தால், உற்சாகமாகக் கலந்து கொண்டு, மறுக்காமல் பங்களிக்க வேண்டும் என்னும் பொருளில் தான் இருக்கிறதே தவிர எல்லாரும் ஒரே நேரத்தில் ஏற்றுங்கள் எனச் சொல்லவில்லை.

இருதினங்களுக்குள் அடுத்தவர் ஏற்றாவிட்டால், முந்தையவர் இன்னொருவரிடம் கொடுக்கலாம் என்றுதான் இருக்கிறது.

It's not you bad... afterall, sarvEy-son!

நாமக்கல் சிபி said...

//விதிமுறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுடர் ஒரே நேரத்தில் ஏற்றலாம் என எங்குமே இல்லை//

உண்மைதான்! ஆனால் எத்தனை பேர் வேண்டுமென்றாலும் சுடரை ஏற்றித் தொடரலாம் என்பது போல்தான் அமைத்திருக்கிறார்கள்.

வேண்டுமென்றால் அழைப்பு இல்லாமலேயே இன்னொரு புதிய பதிவரை இன்னொரு சுடர் பதிவை ஆரம்பித்து வைத்து தேன்கூட்டில் சேர்க்கச் சொல்லிப் பாருங்கள்!

நாமக்கல் சிபி said...

//It's not you bad... afterall, sarvEy-son! //

இதை நான் வழிமொழிகிறேன்.

அதே போல் இன்னொரு புதிய சுடர் ஏற்றப்படக் கூடாதென்ற கட்டுப்பாடும் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

எனினும் தேன்கூடு நிர்வாகத்தின் முடிவுகளுக்கே விட்டுவிடுவோம். அவ்வாறு புதிய சுடர் ஏற்றியது தவறென்றால் நீக்கி விடப் போகிறார்கள். அவ்வளவுதானே!

SurveySan said...

SK,

//ஒருவரிடம் சுடர் வந்தால், உற்சாகமாகக் கலந்து கொண்டு, மறுக்காமல் பங்களிக்க வேண்டும் என்னும் பொருளில் தான் இருக்கிறதே தவிர எல்லாரும் ஒரே நேரத்தில் ஏற்றுங்கள் எனச் சொல்லவில்லை.
//

ஹ்ம். இப்படியா அப்படியா என்று தெளிவாக இல்லாததனால் வந்த குழப்பம் இது.
குழப்பத்த நிவர்த்தி செய்ய வேண்டியவர், இப்பொழுது நம்முடன் இல்லை.

எனவே, இப்பொழுதைக்கு மாற்ற முடியாததை, atleast, சுடரின்/தேன்கூட்டின் கண்ணியம் குறையாதவாறு அனைவரும் புரிந்து செயல்படுதல் தான் ஒரே வழி :(

வெட்டிப்பயல் said...

சிபி,
தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

எந்த பதிவருக்கு அழைப்பு வருகிறதோ அவரைத்தான் ஆர்வமுடன் பங்கெடுக்க சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் தற்போது இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தேவையா???

SurveySan said...

சிபி,

//
எனினும் தேன்கூடு நிர்வாகத்தின் முடிவுகளுக்கே விட்டுவிடுவோம். அவ்வாறு புதிய சுடர் ஏற்றியது தவறென்றால் நீக்கி விடப் போகிறார்கள். அவ்வளவுதானே! //

நிர்வாகத்தின் தற்போதைய பிரச்சனையில் இதை தீர்த்து வைக்க நேரம் இருக்காது என்பதால் தான் நான் இதை பதிவாக எழுதி, அந்த முன்று பதிவுகளிலும் பின்னூட்டம் இட்டு தீர்த்து வைக்க முயன்றேன். :(

SurveySan said...

வெட்டிப்பயல்,

//அவர்கள் தற்போது இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தேவையா??? //

கண்டிப்பாக தேவையில்லை, அதனால் தான் நாமே சுயமாக சிந்தித்து, சரியானதை செய்யலாம் என்று ஆசைப்பட்டேன் :)

SurveySan said...

என்னால் முடிந்தது, பதிவர்கள் மனமறிய ஒரு சர்வே போட்டாச்சு.

இரவில் கழுகார் வருவதர்க்குள் அவருக்கு விடை கிடைக்கும்.

நாமக்கல் சிபி said...

//10) விதிமுறைகளை மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கும், முதல் இடுகையாளருக்கும் உண்டு.
//

இந்த விதி வெட்டிப்பயல் அவர்கள் விதிமுறைகளை வலியுறுத்த வழிவகை செய்கிறது.

ஆக வெட்டிப்பயல் அவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்!

ஆகவே இது பற்றிய தெள்ளத் தெளிவான விதி முறைகளை ஒரு வெளியிடுமாறு பாலாஜி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது பதிவிலேயே கூட உங்களை தேன்கூடு நிர்வாகம்தான் அழைத்துள்ளது. தவிர நீங்களாகத் தொடங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தால் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்றும் எண்ணுகிறேன்.

VSK said...

தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி, திரு. வெ.ப.

சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து தப்பிப்பது அரசியலோடு போகட்டுமே!

சிபியார் கோபிக்க மாட்டார் என நம்புகிறேன்.

:))

//அவர்கள் தற்போது இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தேவையா???//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

VSK said...

வரலாற்று இடைச்செருகல்கள் கூட இப்படித்தான் நிகழ்கிறதோ!

:))))))

நாமக்கல் சிபி said...

//சிபியார் கோபிக்க மாட்டார் என நம்புகிறேன்.

:))
//

இதில் எனக்கென்ன கோபம் வரப்போகிறது!

:))

விவாதங்கள்தான் ஒத்த கருத்துடைய முடிவை கிடைக்கச் செய்யும்.

குழப்பங்கள் இருந்தால்தான் தெளிவு கிடைக்கும்.

-சுவாமி பித்தானந்தா

நாமக்கல் சிபி said...

அது சரி!
சர்வேயிலும் குழப்புகிறீர்களே.

சரி அல்லது தவறு என்று மட்டும் ஆப்ஷன்கள் கொடுத்திருந்தால் சரியாக இருக்கும்

மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் சுயேட்சை எம்.எல்.ஏக்களைக் கடத்துவது போல அந்த மூன்றாவது ஆப்ஷன் எதற்கு?
:))

வெட்டிப்பயல் said...

இதோ உடனே ஒரு பதிவிடுகிறேன்!!!

SurveySan said...

சிபி,

//இந்த விதி வெட்டிப்பயல் அவர்கள் விதிமுறைகளை வலியுறுத்த வழிவகை செய்கிறது.
//


வெட்டிப்பயல் அவர் தொடங்கி வைத்த சுடருக்குத்தான் பொறுப்பாளியாக முடியுமோ? :)

SurveySan said...

சிபி,

//மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் சுயேட்சை எம்.எல்.ஏக்களைக் கடத்துவது போல அந்த மூன்றாவது ஆப்ஷன் எதற்கு?
//

none-of-the-above இல்லன்னா, அடிவிழும்னு மிரட்டல்கள் வருது இப்பெல்லாம் :)

நாமக்கல் சிபி said...

வெட்டிப்பயல் அவர் தொடங்கி வைத்த சுடருக்குத்தான் பொறுப்பாளியாக முடியுமோ? :)

அப்படியும் இருக்கலாம்!

SurveySan said...

//வெட்டிப்பயல் அவர் தொடங்கி வைத்த சுடருக்குத்தான் பொறுப்பாளியாக முடியுமோ? :)//

சும்மா இருந்தத ஊதிக் கெடுத்துட்டேனோ?

என்ன இருந்தாலும், தேன்கூடின் முகப்பில் சில பதிவுகள் தெரிவதை என்னால் ஏற்க இயலவில்லை :)

not that anything is wrong about that (Seinfeld ஞாபகம் வருது).

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

சிபி,

//இந்த விதி வெட்டிப்பயல் அவர்கள் விதிமுறைகளை வலியுறுத்த வழிவகை செய்கிறது.
//


வெட்டிப்பயல் அவர் தொடங்கி வைத்த சுடருக்குத்தான் பொறுப்பாளியாக முடியுமோ? :) //

சர்வேசன்,
நான் பொறுப்பாளி எல்லாம் இல்லை.
என் மனதில் பட்டதை சொல்கிறேன்...

பதிவு இதோ

http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_19.html

SurveySan said...

இதுக்கும் ஒரு சர்வே தேவையா என்று சிலர் கேட்டார்கள்.

எல்லாரும் என்ன நினைக்கராங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்?

'ரூல்ஸ்' திடமாக இல்லை என்று தெரிந்ததும், இது ஒரு 'தவறான' செயல் என்ற நினைப்பை விட்டு விட்டேன்.

இனி மக்கள்ஸ் தீர்ப்பே என் தீர்ப்பு :)

ஆவி அண்ணாச்சி said...

மேற்கண்ட விவாதத்தையும், கருத்துக்கள கருத்தில் கொண்டு,


எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.

அத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

பார்க்க : http://avigalulagam.blogspot.com/2007/02/22.html

SurveySan said...

"வேற வேலை இல்லையா" என்று ஒரு மடல் வந்தது.

இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு பெருசா ஒண்ணும் இல்ல 'working' from home தான்.

அதுக்கப்பரம், சர்வேசன லீஸ் தான் விடணும் :)

SurveySan said...

ஆவி,

//எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.
//

ரொம்ப நன்றி. உங்க பதிவை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நினைக்கிறேன். தேன்கூடு முகப்பில் உள்ள லிங்கை எடுத்து விட்டாலே போதுமானது. அது உங்கள் கையில் இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒன்றும் செய்வதர்க்கில்லை :)

(நைட் வந்து தொந்தரவு பண்ண மாட்டீங்களே? கொஞ்சம் பயமாதான் இருக்கு :) )

நெல்லை சிவா said...

சர்வேசா,

உங்கள் பதிவைத் தொடர்ந்த, பாலாஜியின் பதிவில் நானிட்ட பின்னூட்டம், இங்கேயும் உங்கள் பார்வைக்கு!


முதலில் 'தொடர்' என்பதற்கான அர்த்தம் என்ன? ஒன்று முடிக்கப் பட்டு, அடுத்துத் தொடர்வதுதானே? ஒரே நேரத்தில் பலர் சுடரேற்றுவது, எப்படித் தொடராகும். மேலும், அப்படிச் செய்வதனால், 'continuity' கெட்டுப் போகும்.

தேன்கூட்டின் கீழ்கண்ட விதிமுறையைப் பாருங்கள்.

//**4) ஒருவர் ஒரு முறை மட்டுமே தொடர்விளையாட்டுக்காகப் பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு பேரிடம் மட்டுமே சுடர் நகர்வதாக வைத்துக்கொள்ளவும். **//

ஒரு நாளைக்கே இரண்டுக்கு மிகாமல் இருக்கட்டும் என்று கேட்டிருக்கிறார், அப்படியிருக்கையில், பலரும் சுடரேற்றுவது, ஒரே நாளில் இரண்டுக்கு மேல் சுடர் பயணிக்க ஏதுவாகும். இந்த விதியின் படி, சுடரின் நோக்கம் அதுவல்லவே!

மேலும் விதி எண், 10-இனைப் பாருங்கள்:

//**10.விதிமுறைகளை மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கும், முதல் இடுகையாளருக்கும் உண்டு. **//

இதன்படி, பாலாஜி உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

உங்கள் பதிவின் நீங்கள் குறிப்பிட்டுள்ள வாசகங்கள், மென்மையாய் இருப்பது போல் படுகிறது, //சுடரை யார் வேண்டுமென்றாலும் ஏற்றுங்கள் பிரச்சனையில்லை. ஆனால் லிங் கொடுக்க வேண்டாமே!//, விதி எண் 4 மற்றும் விதி எண் 10ன் படி, நீங்கள் 'அழைப்பின் பேரில்தான் சுடர் அனுமதிக்கப் பட வேண்டும்' என வலியுறுத்த வேண்டும் என கோருகிறேன்.

SurveySan said...

வெட்டிப்பயலின் பதிவில் இட்ட பின்னூட்டம்
--------------------------
//வெட்டி said... எனக்கு உங்க அளவுக்கு அறிவு கிடையாது. விவாதம் செய்யவும் தெரியாது. இதுதான்னு எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன்.//

எனக்கும் விவாதம் பண்ணவெல்லாம் தெரியாதுங்க.
யோசிச்சு தீர்ப்பு மட்டும் தான் பட்டுனு சொல்ல வரும். :)

புலிகேசி, கொசுபுடுங்கி கிட்ட கொடுத்திருக்காரு, எல்லாரும் ஓடிப்போய் கொசுபுடுங்கி கைல இருக்கர சுடர உfனு ஊதி அணைக்கலாம் வாங்க.

பதினெட்டு பட்டி ஆளுங்களும் பொறப்படுங்க.

SurveySan said...

நெல்லை சிவா சார்,

உங்க கருத்துக்கு நன்றி.

ஆனா, சுடர் பதிவு போடக் கூடாதுன்னு நம்ம யார் கிட்டயும் சொல்ல முடியாது சார்.
அவங்கவங்க விருப்பம் அது.

முதல் வரிசையில் ஓடுபவர்கள் மட்டுமே, தேன்கூட்டில் சுடராக பதிய வேண்டும் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம்.

நான் மேலே சொன்ன மாதிரி, கொசுபுடுங்கி நிறுத்திட்டா, சுடர் தப்பிச்சிக்கும். பாக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//புலிகேசி, கொசுபுடுங்கி கிட்ட கொடுத்திருக்காரு, எல்லாரும் ஓடிப்போய் கொசுபுடுங்கி கைல இருக்கர சுடர உfனு ஊதி அணைக்கலாம் வாங்க.

பதினெட்டு பட்டி ஆளுங்களும் பொறப்படுங்க.//

அப்படியெல்லாம் பண்ண வேண்டாமுங்க... அவர் தேன்கூடுல சுடருக்கு லிங் கொடுக்காம இருந்தா போதும்...

அவுங்க விளையாடறதை கெடுக்க வேண்டாம்...

முத்துகுமரன் said...

சர்வேசன் வெட்டிபயல் பதிவில் இட்ட பின்னூட்டம். இங்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் பதிவிடுகிறேன்
//வெட்டி,
சுடர் ஆட்டத்தில் இடைச்செருகலாய் வந்துவிட்ட மூன்றுபதிவுகளையும் கண்டிக்கிறேன். நண்பர்களின் கருத்திற்கேற்ப ஆவிகள் உலகம் திரும்பப் பெற்றுக் கொண்டத வரவேற்கிறேன். அடிப்படையில் நாம் பண்பட்டவர்கள்தானா என்பதை அறிந்து கொள்ள, இந்த இடைச் செருகல்கள் உரைகல்லாய் அமைந்துவிட்டன என்பது வேதனையான விசயம்.

சுடர் தொடரின் முக்கியமான சிறப்பே அது பயணிக்கும் வழிதான். இந்த வழியில்தான் செல்லும் என்று கணித்திட இயலாது. இது பரந்தபட்ட சிந்தனைகளை பார்வைகளை வெளிக்கொணர, ஏதுவாய் அமைந்திருக்கிறது. இதுவரை ஏற்றப்பட்ட சுடர்களையே பாருங்களேன். எத்தனை விதமான சிந்தனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் கூச்சலின்றி நடத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் சுய ஒழுங்கு வேண்டும். அது நம் பதிவர்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். அவை சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் நண்பர்கள் முன் வைக்கிறேன். //

SurveySan said...

வெட்டி,

//அப்படியெல்லாம் பண்ண வேண்டாமுங்க... அவர் தேன்கூடுல சுடருக்கு லிங் கொடுக்காம இருந்தா போதும்...
அவுங்க விளையாடறதை கெடுக்க வேண்டாம்... //

சரி தான். அவங்க என்ன எழுதணும் எழுதக் கூடாதுன்னு சொல்ல நான் யார்.
வரிசை தவறி எழுதுவதை தேன்கூட்டுல சேக்காதீங்கப்பு.

SurveySan said...

முத்துக்குமரன்,

//எல்லா இடங்களிலும் சுய ஒழுங்கு வேண்டும். அது நம் பதிவர்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். அவை சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் நண்பர்கள் முன் வைக்கிறேன்//

சுய ஒழுங்கு எல்லாரிலும் எதிர்பார்க்க முடியாது என்பது, நம்ம பதிவுலகில் அப்பட்டமா தெரியுதே சார் :)

ஆவியார் நம் கோரிக்கையே ஏற்று சுடர் அணைத்துவிட்டார். பாள் இஸ் இன் கொசுபுடுங்கிஸ் கை'ஸ்.

SurveySan said...

ஒரு சுடரா, பல சுடரான்னு மாத்தி மாத்தி எழுதி,இப்ப எனக்கே கொழப்பமா இருக்கு எது சரின்னு.
தெளிவா சொல்லிடறேன், என் எண்ணப்படி,

"ஒரே ஒரு சுடர் வரிசைதான் இருக்க வேண்டும்". வரிசையில் வராதவர்கள் தயவு செய்து தேன்கூட்டில் சுடரை பதிய வேண்டாம். நன்றீஸ்.

Anonymous said...

புலிகேசி: யாரடா அவன்! "இந்த இம்சை அரசனைப் பார்த்து, சுடரை ஏற்றாதே" என்று அமங்கலமாகச் சொல்லும் இந்தச் சர்வேசனின் மூக்கில் என் மீசையை விட்டு...

லகுடபாண்டி: மன்னா, இவர் சொல்வது நியாயமாகத் தான் தெரிகிறது. சுடரை நம்மிடம் கொடுத்த ஆவியே திரும்பிக் கேட்டுக் கொண்டு வந்து விட்டதே!

புலிகேசி:ம்ம்ம்... பிழைத்துப் போகட்டும். ஏதோ என் மந்திரி லகுடபாண்டி சொல்வதால், உம்மை அப்படியே விட்டுவிடுகிறேன்.

இத்துடன் சுடரைத் தேன்கூட்டிலிருந்து வேண்டுமானாலும் ஊதி அணையுங்கள். அல்லது, எண்ணெயை மொத்தமாக உறிஞ்சி எடுத்து தானே அணைய வையுங்கள்! இதையெல்லா வற்றையுமே எங்கள் அரசாங்கம் தாயுணர்வோடு மன்னித்து விட்டுவிடுமென்பதை மன்னர் என்ற முறையில் இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

"புது ப்ளாக்கருக்கு மாறு, மாறாதே!" என்று இந்த லகுடபாண்டி செய்துவிட்ட குளறுபடியில், பதிவுகள் தொலைந்து போய் இப்படி அனானியாக அலைய நேர்ந்துவிட்டது. இந்தப் பின்னூட்டத்தை இம்சை அரசன் தான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக, இங்கே இம்சை அரசனையே கண்டிக்கத் துணிந்த முத்துகுமரனுக்கு ஒரு ஓணாண்டி தண்டனையைத் தீர்ப்பளித்து வடைபெற்றுக் கொள்கிறேன்..

லகுடபாண்டி: மன்னா.. மன்னா, வடையா? அது விடை அல்லவோ?

புலிகேசி: மட மந்திரியே! இந்தச் சர்வேசனின் பெயரருகே உள்ள படத்தைப் பார்த்தாயா? சிகப்பு நிற இலந்தை வடை! சீக்கிரமாக லவுட்டிக் கொண்டு வா.. அதான் வடை வாங்க அவர் ஒன்றும் மறுப்பு சொல்லவே இல்லையே!

SurveySan said...

இம்சை அரசே,

//புலிகேசி: யாரடா அவன்! "இந்த இம்சை அரசனைப் பார்த்து, சுடரை ஏற்றாதே" என்று அமங்கலமாகச் சொல்லும் இந்தச் சர்வேசனின் மூக்கில் என் மீசையை விட்டு...///

தயவு செய்து மீசையை மூக்கில் விடாமல், என் காதில் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெகு நாட்களாக காது குடைச்சலால் அவதி படும் என் காதுகள் பிழைத்துக் கொள்ளும்.

//மட மந்திரியே! இந்தச் சர்வேசனின் பெயரருகே உள்ள படத்தைப் பார்த்தாயா? சிகப்பு நிற இலந்தை வடை! சீக்கிரமாக லவுட்டிக் கொண்டு வா.. அதான் வடை வாங்க அவர் ஒன்றும் மறுப்பு சொல்லவே இல்லையே! //

சுடரை அணைக்க ஒப்புக் கொண்ட உமது தாயன்பை என்னென்பது.
தங்கள் தயாள குணம் கண்டு மெய் சிலிர்ந்தோம்.
எமது கொடியை கண்டு வடை என்று நினைத்த உங்கள் மடமை தான் வருத்தம் தருகிறது.
எமது சொந்த செலவில் ரெண்டு கீர வடை பார்சல் அனுப்புகிறேன் மன்னா.

தங்கள் திருப்பாதம் முழுவதும் படாமல், அனானியாகப் பட்டது நாங்கள் செய்த புண்ணியமே.

:)))

SurveySan said...

கொசு சொன்ன பேச்சு கேக்காம கடிச்சுடுத்து;

ராஜவனஜ் கேப்பாரோ?

பொறுத்திருந்து பார்ப்போம் :)