சர்வே போட கிடைக்கும் சான்ஸ விட்டுடாம கபால்னு புடிச்சு, இதோ உங்களுக்காக.
எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் - தமிழ்மண முகப்புல, வலது பக்கம், புதிய பின்னூட்டங்கள் பெறும் பதிவுகளை வரிசை கட்டி காமிப்பாங்க.
நேத்து போட்ட பதிவு, சூடு ஆறிடுச்சுன்னா, தமக்குத் தாமே பின்னூட்டம் போட்டு தமிழ்மண முகப்புக்கு அனுப்ப ஒரு வசதியான அம்சம் அது.
ஆனா, பல பேர் அத ஓவரா மிஸ்-யூஸ் ( தமக்குத் தாமே, சாட்டிங், counter, உள்குத்து, வெளிகுத்து, நன்றி நவில்தல், IP publishing, etc..) பண்றதால, நல்ல பதிவுகள் கூட்ட நெரிசல்ல மாட்டிக்கிட்டு வெளியில தெரியாமயே போயிடுது.
தமிழ்மணம் இந்த பலகீனத்தை சரிகட்ட, 30க்கு மேல் உள்ள பின்னூட்டங்கள் பெற்ற பதிவுகளை முகப்பில் காட்டப் போவதில்லை என்று ஒரு பரீட்சனமாக அறிவித்துவிட்டார்கள்.
(என் பாடு திண்டாட்டம் தான் - பாட்டுக்கு பாட்டு மாதிரி தொடர் விளையாட்டு பதிவுகள் இனி ஹைலைட் பண்ண என்ன பண்றதுன்னு யோசிக்கணும் - இந்த வார அறிவிப்புன்னு ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவா போடலாம். இல்லன்னா SUNTV, CNNல ஒரு வெளம்பரம் கொடுக்கலாம். நம்ம பதிவுல என்ன நடக்குதுன்னு அப்டேட் தெரியலன்னா ஊர் என்னாவரது? :))
உங்கள் திங்கிங் என்ன?
பி.கு: பாட்டுக்கு பாட்டில் அனாமிகா 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாட்டை பாடியுள்ளார். அப்பாவி கெட் ரெடி!
ஸ்ரீஷிவ், ப்ரின்ஸ் இன் தி கோதா ஏஸ் வெல்!!
இது எழுதும்போது வந்த ஐடியா இது. இந்த மாதிரி வேற யாராவது ஸ்டார் பதிவர்கள் எழுதினதுக்கு லிங்க் போட்டா அங்க வர கூட்டத்த இங்க இட்டாந்துடலாம். எப்டி நைனா ஐடியா :)
அரட்டை அடிக்க இங்கே அணுகவும்.
39 comments:
நம்ம ஓட்டு ரெண்டாவதுக்கு..'3 பின்னூட்டம் தாண்டறதே கஷ்டம்.. 30 வெகு தூரம்' :))
மணிகண்டன், சர்வேல 3க்கு போட்டாச்சுன்னு சொல்லி என் ஒரு பின்னூட்டத்த வேஸ்ட் பண்ணணுமா? :)
இப்ப இத சொல்றதுக்கு ரெண்டாவது நான் வேற வேஸ்ட் பண்ணிட்டேன் :)
நானும் உங்க கேட்டகிரிதாங்க :) 30 ஜாஸ்தி தான். இருந்தாலும் 50 வச்சா கொஞ்சம் safe :)
//மணிகண்டன், சர்வேல 3க்கு போட்டாச்சுன்னு சொல்லி என் ஒரு பின்னூட்டத்த வேஸ்ட் பண்ணணுமா? :)
//
என்னோட ஓட்டு 3 இல்லங்க 2.
ஹி.ஹி...இன்னொரு பின்னூட்டமும் வேஸ்ட் :)))
அடடா, மணிகண்டன், 3 இல்ல 2ன்னு சொல்லி இன்னொரு பின்னூட்டம் இடுவதை வன்மையா கண்டிக்கறேன் :)
தயாரிப்பாளர் சங்கம் மாதிரி, பதிவர் சங்கம் ஒண்ணு வேணும். கம்ப்ளெய்ன் பண்ணி, நாட்டாம பண்ண :)
மணிகண்டன் தான் 2 பின்னூட்டம் வேஸ்ட் பண்ணார்னா நீங்களும் சேர்ந்து 2 வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம் :-D கொத்தனாரோட சோதனைப் பதிவுல போய் என் லேட்டஸ்ட் பின்னூட்டம் பாருங்க. அதுல ஒரு முக்கியமான பாயிண்ட் எழுதியிருக்கேன்.. "30 நபர்கள் வந்து பின்னூட்டம் போட்ட பிறகே நீங்கள் வாயைத் திறக்கலாம்"னு :-D இப்படி அவசரமா 2 தடவை வாயைத் திறந்து 2 பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணி மணிகண்டனோட ரெண்டாவது பின்னூட்டத்தையும் வேஸ்ட் பண்ணி இப்ப என்னையும் எழுத வச்சு இன்னொரு பின்னூட்டத்தையும் வேஸ்ட் பண்ணி அதுக்கொரு மறுமொழி போட்டு அதுக்கொரு பின்னூட்டத்தையும் வேஸ்ட் பண்ணினா... 1 பின்னூட்டம் இருக்கவேண்டிய இடத்துல இப்ப 6 இருக்கப்போவுது. இந்த ரேஞ்சுல போனா உங்க பதிவு ஒருமணிநேரத்துல அதல பாதாளத்துக்குப் போயிரும். கியாரண்டி.
ஆளாளுக்கு ப்ளான் பண்ணி இந்த பதிவ பாதாளத்துக்கு தள்ளனும்னு வந்திருக்கீங்க :)
30 பதிவு வர வரைக்கும் வெயிட் பண்ணா நானெல்லாம் பதில் பின்னூட்டமே போட முடியாம போயிடுமே :)
நானும் போட்டு வைக்கிறேன் :D
என்னுடைய கேள்விகள் சிலதையும் அங்கே (என் பதிவில்) கேட்டிருக்கிறேன் ;)
சிரிப்பான் இல்லாத பின்னூட்டம் எழுதவே வரவில்லையே :(
//மணிகண்டன் தான் 2 பின்னூட்டம் வேஸ்ட் பண்ணார்னா நீங்களும் சேர்ந்து 2 வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம் :-D//
என்னங்க சேதுக்கரசி, போறபோக்கை பாத்தா தங்கத்தை விட பின்னூட்டம் காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே
மறக்காம போட்டுட்டேன் :-D
அநேகமா இதோட சர்வேசன் என்னை 'block' பண்ணிடுவாருன்னு நினைக்கிறேன் :))
மணிகண்டன்,
அடங்க மாட்றீங்க :)
உங்களுக்காக டெம்ப்ளேட்டே மாத்திட்டேன் பாருங்க
http://surveysan.blogspot.com/2007/02/30-limit.html
சர்வே..
எனக்கு எப்பவாவதுதான் 30க்கு வரும்..
இனிமே நானே 30 வரைக்கும் பொடலாம்னு இருக்கேன்.
:)))
உங்க சர்வேகளில் மொத்தம் எத்தனைபேர் வாக்களித்துள்ளார்கள் என காண்பிக்க இயலுமா? % கொஞ்சம் ஏமாத்தலாம்ல.
சிறில், இப்படி உடனுக்குடன் பதில் சொல்ற கேள்வி கேட்டு பின்னூட்டம் போட்டா, நான் எப்படி சேதுக்கரசி advice follow பண்றது :)
//உங்க சர்வேகளில் மொத்தம் எத்தனைபேர் வாக்களித்துள்ளார்கள் என காண்பிக்க இயலுமா? % கொஞ்சம் ஏமாத்தலாம்ல. //
எத்தனை பேர்னு கண்டு பிடிக்க எனக்கு ஒரு undocumented feature தேர்தல் அதிகாரி கொடுத்திருக்காரு. % மட்டும் காட்டினா, 'சப்ப' சர்வேயும் பெருசா தெரியும் என்ற கெட்ட நோக்கத்தில் தான் அதை வலையேத்தல :)
உங்களுக்கு மட்டும் வேணும்னா, மடல்ல அனுப்பறேன். சீக்ரஸி மெயிண்டெயின் பண்ணனும் :)
இதுவரை 20 வாக்குகள் வந்திருக்கு.
முப்பது தாண்டிடுச்சா
சர்வேசன் said..
வேணாம்..வலிக்குது..அழுதுடுவேன்..
நம்ம பதிவுக்கு தான் 30 பின்னூட்டம் வரமாட்டேங்குது..நீங்களாவது சந்தோசமா(??) இருங்க.
மணிகண்டன்,
//நம்ம பதிவுக்கு தான் 30 பின்னூட்டம் வரமாட்டேங்குது..நீங்களாவது சந்தோசமா(??) இருங்க. //
:) 30 வரவெக்கறது ரொம்ப ஈஸிங்க. Otherனு இருக்கு பாருங்க, அதுல நீங்களே வேற வேற பேர்ல போட்டுக்கலாம். இல்லன்னா இருக்கவே இருக்கு அனானி.
ஆனா, கொஞ்சம் gap விட்டு விட்டு போடுங்க. சில பேர் மாதிரி அடுத்தடுத்த secondல போட்டா மாட்டிக்குவீங்க :)
வல்லிசிம்ஹன், 15 ஆச்சு. முப்பதுக்கு நேரம் இருக்கு.
அதுக்குள்ள நமக்கு வேண்டிய விடை கிடைச்சிடும், சர்வேல :)
சர்வேசன்,
வழக்கம் போல உங்களுக்குப் பிடிச்ச ஆப்ஷன்களை மட்டும் வச்சிருக்கீங்க..
சரி, என்னுடைய சாய்ஸ் இது:
பாதிக்கும். சத்தான முப்பதுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் உள்ள மத்தவங்களின் பதிவுகளை நான் படிக்க முடியாம போயிடுமே!
சர்வேக்களில் நடுநிலையா, others னு ஒரு ஆப்ஷன் கொடுக்க முயற்சி செய்யுங்களேன்..
பொன்ஸ், 'others' தான் இருக்கே 'no reaction pa' தான் அது :)
நீங்க சொல்ல வந்த choiceம் ஏற்கனவே இருக்கு. உங்க வாசிப்பு தான பாதிக்குதுன்னா 'பாதிக்கும். நான் வாசிப்பவன் மட்டும்' சூட்டாகுமே :)
முக்கியமாக இருந்தால் மட்டும்
பின்னூட்ட சொல்லி இருக்கீங்களே
முக்கியம் முக்கியமில்லை என்பதை
யார் முடிவு செய்வது?
நாங்களேவா ? நாங்களே என்றால் எல்லாமே முக்கியம் தான்.[இது முக்கியமில்லாத பின்னூட்டம் போடாமல் வேண்டுமானால் வைத்துக் கொள்ளவும் :-) ]
முத்துலட்சுமி,
//முக்கியம் முக்கியமில்லை என்பதை
யார் முடிவு செய்வது?
நாங்களேவா ?//
நீங்கதான் முடிவு பண்ணணும். I think, comments total 25 இருக்கர வரைக்கும் ரொம்ப யோசிக்காம போடலாம், முப்பது நெருங்கும்போது "இந்த கமெண்டு போடணுமா. போட்டா ஏதாவது ஊருக்கு பிரயோஜனம் இருக்கான்னு' யோசிச்சு போடணும் :)
//வழக்கம் போல உங்களுக்குப் பிடிச்ச ஆப்ஷன்களை மட்டும் வச்சிருக்கீங்க//
பொன்ஸ்!! :-)))))))
//முப்பது தாண்டிடுச்சா//
எல்லாருக்கும் என்ன நல்லெண்ணம்.. எவ்ளோ அக்கரை பாருங்க.. (எனக்கும் தான் ;-))
சேதுக்கரசி, உங்க நல்லெண்ணம் திக்குமுக்காட வைக்குது என்னை :)
இன்னும் 10 இருக்கு.. தள்ளி விடுங்க.
புது வார்ப்புரு நல்லா இருக்குப்பா..
[சர்வேசனுக்காக (தமிழிலிருந்து தமிழுக்கு) ஒரு மொழிபெயர்ப்பு: டெம்ப்ளேட் ஷோக்காக் கீதுபா! ;) ]
முப்பது ஆகாது போலருக்கே?
நன்றி பொன்ஸ்.
நீங்க தான் ribbon cut பண்ணது. நல்ல காலம் பொறக்கட்டும்.
தாங்க்ஸ்!!! :)
அவனுகளே பல்டி அடிச்சுட்டானுங்க
பதிவர்களின் இங்கான பின்னூட்டங்களும் சொந்தப்பதிவுகளும் தந்த கருத்துக்களின் அடிப்படையிலே பின்னூட்டங்கள் சேர்த்துக்கொள்ளுதலை மேம்படுத்தியுள்ளோம்.
முன்பக்கத்திலே 40 என உச்சமாகவும் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலே மேலெல்லையில்லாது இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து இடுகைகளும் சுட்டிக் காட்டப்படும். மேலும் பின்னூட்டங்களினை மட்டுறுத்தல் செய்யவேண்டுமென்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. பதிவர்கள் தமக்கு விரும்பிய மட்டுறுத்தல் விதியைத் தமது பதிவுகளிலே மேற்கொள்ளலாம்.
ஓரிரு பதிவுகளின் பின்னூட்டங்களினைச் சேர்ப்பதிலேயிருக்கும் நிரல் வழுக்கள் இப்போதும் சீர்செய்யப்படுகின்றன. விரைவிலே சரியாகும்.
பின்னூட்டம் குறித்த தம் கருத்துகளைத் தந்து மேம்படுத்த உதவிய அனைத்துப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் சார்பிலே நன்றி. இது குறித்த விரிவான பதிவு நாளை இடப்படும்.
நிர்வாகம்
தமிழ்மணம்
நாதாரி (யப்பா இன்னா பேரு இது?),
தகவலுக்கு நன்றி! :)
கேட்ட 50 குடுத்திருக்கலாம், 40 ஓ.கே தான்.
இது நமது சர்வேக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு அறிக்கை வெளியிட்டுடுங்கப்பா :)
//'பாதிக்கும். நான் வாசிப்பவன் மட்டும்' சூட்டாகுமே :)
//
அது எப்படி சூட்டாகும்???
நீங்களா ஒண்ணு மனசுல நினைச்சுக்குவீங்க. அதை எங்கள போட சொல்லுவீங்க...
நான் என்ன வாசிப்பவன் மட்டுமேவா???
வெ.ப,
நீங்க தான் பதிவராச்சே, இது ரெண்டுல ஏதாவது செட்டாகுமே.
// பாதிக்கும். சத்தான 30+ பின்னூட்டம் வருமே எனக்கு. ஹ்ம்!
சந்தோஷப் படுத்தியது. என் நல்ல பதிவுகளுக்கு இனி வெளிச்சம் கிட்டும்.
//
அதுவும் செட்டாகலன்னா, 'அதர்ஸ்' மாதிரி ஒண்ணு இருக்கேய்யா :)
நீங்க என்ன ஆப்ஷன் எதிர்பாக்கறீங்க?
நான் ப்ளாக் எழுதுபவன்... (இது உங்களுக்கு தெரியும்)
என்னை பொருத்த வரை இது ஜாலியாக எழுதுபவர்களது பதிவையும், நல்ல விவாதங்கள் நடைபெறும் பதிவையும், பல நாட்களுக்கு முன் வந்து படிக்க தவறிய நல்ல பதிவையும் பாதிக்கும்...
இதுக்கு என்ன ஆப்ஷன் வைப்பீங்க???
நான் 29
சென்ஷி
ஒரு சர்வேன்னா நாலு அல்லது மூனு ஆப்ஷன் இருந்தாத்தான் சரியான முடிவுகளை தெரிஞ்சுக்க முடியும். காமெடி செய்யறேன் பேர்வழின்னு ஏழெட்டு ஆப்ஷன் இருந்தால் எப்படி தலைவா? மீண்டும் ஒரு சர்வே வையுங்க, அல்லது மொக்கையான ஆப்ஷன்களை எடுத்துருங்க.
வெ.ப,
//நான் ப்ளாக் எழுதுபவன்... (இது உங்களுக்கு தெரியும்)//
கண்டிப்பா தெரியும் :)
//என்னை பொருத்த வரை இது ஜாலியாக எழுதுபவர்களது பதிவையும், நல்ல விவாதங்கள் நடைபெறும் பதிவையும், பல நாட்களுக்கு முன் வந்து படிக்க தவறிய நல்ல பதிவையும் பாதிக்கும்...//
நீங்க வாசகரா இருந்து, மேல் சொன்ன பாதிப்பு வரும்னு சொல்றதால "பாதிக்கும். நான் வாசிப்பவன் மட்டுமே" சூஸலாம்.
இல்ல, நீங்க பதிவர், உங்க பதிவுக்கும் மேல் சொன்ன பாதிப்பு வரும்னு நெனச்சா,
அதுக்குண்டான "பாதிக்கும். சத்தான 30 வருமே எனக்கு" என்பதை சூஸலாம்.
ஓட்டு போடும்போது, கொஞ்சம் வளஞ்சு நெளிஞ்சு திங்க் பண்ணணும் சாரே :)
பாதிக்கும், பாதிக்காதுன்னு மொட்டையா ரெண்டே ஆப்ஷன் வச்சாலும் சரி வராது.
வள வளன்னு 20 ஆப்ஷன் வச்சாலும் நல்லாருக்குது.
ஐ ஹாவ் டு ட்ரா எ லைன் ஸம்வேர் :)
anony,
//ஒரு சர்வேன்னா நாலு அல்லது மூனு ஆப்ஷன் இருந்தாத்தான் சரியான முடிவுகளை தெரிஞ்சுக்க முடியும்.//
ரொம்பச் சரி. மேலே உள்ள பின்னூட்டம் பாருங்க.
என்னா ஆச்சு...
33 ஆகியும் பதிவு தெரியுது
சென்ஷி
40 ஆக்கிட்டாங்க சென்ஷி :)
36 - Thalli vidunga yaaraachum. pls help.
//36 - Thalli vidunga yaaraachum. pls help.
//
இதோ நான் வந்துட்டேன் தள்ளி விட :))
நிறைய ஆப்சன் இருப்பதால் ஒன்னுமே எனக்கு புரியலை தலைவா...
வேணுமா ? ஓனாமா ? இப்படி சிம்புளா ரெண்டு ஆப்ஷனோட ஒரு சர்வே வையுங்கள்...
ஈஸியா தெரிஞ்சுரப்போகுது மக்கள் முடிவும்...
ரவி, ஹ்ம். காசா பணமா, போட்டுட்டா போச்சு.
Post a Comment