recent posts...

Saturday, October 02, 2010

எந்திரன்


நானும் ரஜினி ரசிகனாக மாறியது, பாட்ஷா படத்தில் வரும் "எனக்கு இன்னோர் பேரும் இருக்கு"ன்னு கல்லூரி முதல்வரிடம் ரஜினி சொன்னதும், அப்படியே கேமரா பின்னால் நகர்ந்து, கண்ணாடி ரூமுக்குள் இருவரும் பேசிக் கொள்வதைக் காட்டும் காட்சி. பின்னணி இசையில், 'பாட்ஷா பாட்ஷா'ன்னு தேவா பின்னியிருப்பாரு.

எனக்கே புல்லரிச்சுது அந்த காட்சியின் போதுன்னா, ரஜினி தீவிர ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு புரிஞ்சுது.

என் பார்வையில், ரஜினி நல்ல நடிகரெல்லாம் கிடையாது. யதார்த்தமான நடிப்பெல்லாம் நடிச்சுப் பாத்ததா ஞாபகமே இல்லை. டைரக்டர் சொல்வதை செயற்கைத்தனமா நடிச்சுக் காண்பிப்பதைப் போல்தான் தெரியும். (சந்திரமுகியில் ரொம்பவே அப்பட்டமாய்).

ஆனா, ரஜினி என்ற பிரமாண்டத்தின் முன், எல்லா நெளிவு சுளிவுகளும் காணாமல் போய், ஒரு ஜாலியான ரசிப்புத்தன்மை தானா வந்திடும். ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அவரு பத்து பேரை அடிச்சு, 'கண்ணாஆஆ'ன்னு பன்ச் டயலாக் பேசி, வெறுப்பேற்றும் வில்லனை அடிச்சு ஒதச்சு, நாட்டுக்கு ஏதாவது பெருசா நல்லது செய்யரமாதிரி படம் வந்தாதான், அது ரஜினி படத்துக்கு உண்டான தன்மையுடன் இருக்கும். நமக்கும், நாம் எதிர்பார்க்கும் ரஜினி போதை கிட்டும்.

எந்திரனுக்கு கொடுக்கப்பட்ட பில்ட்-அப்புகள், ட்ரெயிலர், ரஹ்மானின் பாட்டு, இதையெல்லாம் பார்க்கும்போதே, இது ரஜினி படமாக இருக்காது என்று புரிந்தது.

படமும், அப்படியே அமைந்து போனது.

ஒரு விநாடி ரஜினியை மறந்துட்டு, எந்திரன் படத்தை மட்டும் பாத்தீங்கன்னா, படம் மொத்த குடும்பத்துக்கான ஒரு நல்ல sci-fi பொழுதுபோக்கு சித்திரம்.
பிரமாண்டமான கிராஃபிக்ஸ். கடைசி 20 நிமிடங்கள் அதகளம்.

ஆனா, "இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்திராத" போன்ற பில்ட் அப்பெல்லாம் ஒத்துக்க முடியாதது. ஏன்னா, படம் முடிஞ்சு பெயர் போட ஆரம்பிச்சாங்க. அதுல இந்தியப் பெயர்கள் வருவதை விரல் விட்டு எண்ணிடலாம் போலருக்கு. 165கோடி செலவு செஞ்சிருக்காங்களாம். அது எல்லாம் ஏதோ ஒரு ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கொம்பேனிக்குத்தான் மொய் எழுதியிருக்காங்க போலருக்கு.

ஷங்கர் & teamன் கற்பனைத்திறனுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ரோபோக்களை வைத்து மிரட்டி இருக்கிறார்கள். குறிப்பாக, உள்ளூர் ரவுடிகள் சுற்றி நிற்கும்போது அவர்களின் கத்தி கபடா எல்லாம் ரோபோ ரஜினியின் மேல் ஒட்டி, அவர் ஒரு மாரியம்மன் லுக்குக்கு மாறுவார். பிரமாதமான சீன். ரோபோக்கள் பாம்பாக உருவெடுத்து கபளீகரம் செய்ததும், உருண்டையாக மாறி உலுக்குவதும் கலக்கல். ரோபோ நடை பயில்வதும், டான்ஸ், சண்டை எல்லாம் பண்ணிக் காட்டும் காட்சியும், ஒரு பெருமிதத்தை தந்தது. 'சாதிச்சுட்டாங்கய்யா'ன்னு ஒரு ஃபீல் வந்தது. ஆனா, அதுவும், 'புஸ்ஸாயிடுச்சு' மேலே சொன்ன காரணத்தினால்.

ஆனால், ஷங்கரின் சில கற்பனை சலிப்பைத் தந்தது, 'காதல் ரத்து' செய்யும் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் பாத்து. ஸ்ஸ்ஸ். அல்பமா இருந்தது. அதுவும், படத்தின் ஆரம்பத்திலேயே இந்த சீன் வந்ததும், ஐயையோ குடுத்த $20 முதலாகாம போயிடுமோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆனா, அப்பாலிக்கா, இந்த மாத்ரி அல்ப்பத்தனங்கள் படத்தில் இல்லாம பாத்துக்கிட்டாரு.
நடூல ஒரு கொசு கிராஃபிக்ஸும் கொஞ்சம் இம்சை. ஆனால், அதன் மூலம் ஏதோ 'மெசேஜ்' சொல்ல ஆரம்பிச்சாரு, ஆனா, அதுவும் இம்ப்ரெஸ்ஸிவ்வா இல்லை.

இரண்டு கெட்டப்பில் ரஜினி. ரோபோட்டிக் ப்ரொஃபஸர் ஒருத்தரு. வயசு நல்லாவே தெரிய ஆரம்பிச்சிடுது இந்த கெட்டப்பில். மெச்சும்படியாக ஒன்னியும் சொல்வதற்கில்லை.

ரோபோ ரஜினி அமக்களப்படுத்தியிருக்காரு. ஆனா, இது அவருதானா? டூப்புக்கு மாஸ்க் போட்டு எடுத்திருக்காங்களான்னு, பல சீன்களில் 'கேள்வி' எழுகிறது. சண்டையில் கண்டிப்பா டூப் போட்டிருப்பாங்க. மத்த காட்சிகளிலும் கூட, ரோபோ ரஜினியின் முகத்தில் வியர்வை எப்பவும் இருக்கர மாதிரி எடுத்திருக்காங்க? ஏன் வேர்த்துக்கிட்டே இருக்குது ரோபோவுக்கு? ரோபோவுக்கு வேற்க்குமா ஷங்கர் ஜி?

வில்லனாக மாறும் ரோபோ ரஜினி மட்டுமே கண்ணில் நிற்கிறார். பழைய வில்லன் ரஜினியின் குதூகலம் இருந்தது அந்த காட்சிகளைப் பார்க்கும்போது. நல்லா பண்ணியிருக்காரு.

ஐஷ்வர்யா வயசு தெரிஞ்சாலும் அழகா இருக்காங்க. ஆனா, ரொம்ப 'gap' விட்டுத்தான் ஹீரோவோட நடிச்சிருக்காங்க. பாடல்களில் ஆட்டமெல்லாம் ரொம்பவே அழகு. ஐஸ் ஐஸ்தான்.
படத்தில் இவர்களைத் தவிர, சந்தானம், கருணாஸ், டானி டென்ஸோங்கப்பா மட்டுமே. ரஜினி படத்தில் வரும் பெரிய பட்டாளம் இதில் மிஸ்ஸிங்க். இவங்க நாலு பேரை வச்சே படத்தை முடிச்சிடராங்க. ஆனா, ரோபோக்கள் நிறைந்திருப்பதால், அது பெரிய மைனஸ்ஸா தெரியலை.

பாடல்களும், பின்னணி இசையும் நல்லாவே அமைஞ்சிருக்கு.
ரெசூல் பூக்குட்டி, (பழசிராஜா போல் இதிலும்) டங்குவாரு கிழியர அளவுக்கு வால்யூம் கூட்டிவிட்டுட்டாரு, கடைசி 20 நிமிட டிஷூம் டிஷூம் காட்சிகளில்.

செட்டும், கிராஃபிக்ஸும், உடை அலங்காரமும், ரிச்சாக இருந்தது.

கண்டிப்பாய் ஒரு தபா பார்க்க வேண்டிய படம்தான்.
premium $s குடுத்து பாக்கணுமான்னு கேட்டீங்கன்னா, பிரீமியம் கொடுத்து முதல் சில நாட்களில் பார்த்தால், ரசிகர் பட்டாளமுடன் உற்சாகமாய் காணும் ஃபீலிங்க் கிட்டும். அது அவசியம் இல்லன்னா, ரெண்டு மூணு வாரம் வெயிட்டீஸ்.

ஆனா, இது ஒரு 'மைல்'கல்னு, இன்னும் பலரும், இந்த மைல் கல்லை கடக்க நினைத்தால், நமக்கு அது பெரிய துரதிர்ஷ்டம். sci-fi படங்கள் எல்லாம் இங்கிலிபீஷ்ல வருஷத்துக்கு பத்து வருது. தமிழில், இம்மாம் பெரிய பட்ஜெட் போட்டு படங்கள் எடுக்க முடியும்னா, வேற நல்ல சப்ஜெக்ட்டா, காலத்துக்கும் மனசுல நிக்கர மாதிரி ஏதாவது யோசிச்சு எடுத்தா பெட்டர். இல்ல, இப்படித்தான் எடுக்கணும்னா, டெக்னாலிஜியை உள்ளூரில் உருவாக்கி, அதை உபயோகித்து எடுக்க முயலலாம். outsourcing வேண்டாம்.

படத்தை பார்க்கும் அனுபவம், படத்தை விட அருமையாய் இருந்தது. தியேட்டரில் 'தலைவா' குரல்களும், ஆட்டமும் , பாட்டமும், அட்டகாசம்.

எந்திரன் - very successfully implemented outsourced project.

எங்க ஊர் தியேட்டரில் நடந்த எந்திரன் திருவிழா: (டான்ஸு, கவுஜைன்னு அமக்களப்படுத்தியிருக்காங்க)

20 comments:

SurveySan said...

அப்பாடி, ஒரு பெரிய கடமை முடிஞ்ச மாதிரி ஃபீல் வருது ;)

ப.கந்தசாமி said...

@SurveySan
பின்னூட்டங்கள் எப்படி போடறதுன்னு தெரியலீங்க

ப.கந்தசாமி said...

ஒஹோ, இப்படித்தானா?
நல்ல விமரிசனமுங்க. படத்தைப் பாத்துத்தான் ஆகோணும்போல இருக்குதுங்க.

ராமலக்ஷ்மி said...

வீடியோ.. :)))!

உல‘கெங்கி’லும் எந்திரன் வெளியீட்டின் போதான கொண்டாட்டங்களை தொகுத்து வழங்குகிறதாம் இன்று இரவு 7.30-க்கு சன் டிவி. அதற்கான ப்ரிவ்யூ இப்போ பார்த்தாச்சு:)!

sweet said...

mullum malarum, jony, puvana oru kelvi kuri, aaril irundhu arubadhu padangalai nee paarttadhu illaiya?

padam paarkkadha nee vimarsanam eludhuna ippadi thaan

waste fellow-ya nee

madhumidha

Prathap Kumar S. said...

உங்களை கடமை உணர்ச்சியைக்கண்டு மெய்சிலிரிரித்துப்போகிறேன் சர்வேசா....:))

ராமலக்ஷ்மி said...

//யதார்த்தமான நடிப்பெல்லாம் நடிச்சுப் பாத்ததா ஞாபகமே இல்லை.//

http://maragadham.blogspot.com/2010/09/blog-post_29.html

:)!

SurveySan said...

sweet, நீங்க சொன்ன எந்த படத்திலும், 'ய்தார்த்தம்' பார்த்ததா ஞாபகம் இல்லை.
அவர் நடித்த characterன் வெளிப்பாடு இருந்ததில்லை. ரஜினி'யின் வெளிப்பாடுதான் இருந்தது என்பதே அடியேனின் கருத்ஸ்.

முள்ளும் மலரும் is one my favorites for sure.

//waste fellow-ya nee//

absolutely true statement ;)

SurveySan said...

நாஞ்சில் பிரதாப், நன்றீஸ் :)

SurveySan said...

ராமலக்ஷ்மி, நன்றி. i stand corrected. ஒரு சில படங்களில் நல்லாவே நடிச்சிருக்காரு :)

சரத்பாபுவும், செந்தாமரையும் கூட பிரமாதப்படுத்தியிருக்காங்க :)

SurveySan said...

சொல்ல மறந்துட்டேன்.
ரெசூல் பூக்குட்டி, (பழசிராஜா போல் இதிலும்) டங்குவாரு கிழியர அளவுக்கு வால்யூம் கூட்டிவிட்டுட்டாரு, கடைசி 20 நிமிட டிஷூம் டிஷூம் காட்சிகளில்.

SurveySan said...

Enthiran logic question#1: why was the robot sweating profusely in most scenes?

Ananya Mahadevan said...

ஏன் சர்வே? ரொம்ப நெகட்டிவ் தாட்ஸோட படம் பார்க்க போனீங்களா? நான் ரஜினி ரசிகையெல்லாம் இல்லை இருந்தாலும் ரொம்ப எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாம போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. உங்க விமர்சனம் குதூகலமா இருக்கும்ன்னு நினைச்சேன்.. ஏன் இவ்ளோ கடுப்ஸ்.. ரோபோவுக்கு வேர்வையா? எங்கே? நான் கவனிக்கலையே?ஒரு காட்சியிலே நம்ம ’வசீ’க்கு தான் நெத்தியில இருந்து வேர்த்து கொட்டித்து. இதுல ஒரு சின்ன விஷயம் சொல்லிக்க ஆசைப்படுறேன். மேக்கப் சம்பந்தப்பட்ட விஷயம். ஷிம்மர்ன்னு ஒரு ஃபேஸ் ஃபவுண்டேஷன் பவுடர் இருக்கு. அதைப்போட்டா மூஞ்சி எல்லாம் ஜிகினா தேய்ச்ச மாதிரி ஒரு பளபளப்பு வரும். நிக்கல் ஃபினிஷ் ரோபோவுக்கு அதை உபயோகிச்சு இருக்காங்க ஸோ தட், மாஸ்க்குக்கு மேல ஒரு ஷைன் இருக்கட்டும்ன்னு. நீங்க அதைப்போய் வேர்வைன்னு சொல்லி இருக்கீங்களே? எந்த நாட்டுக்காரங்க பண்ணினா என்ன? தமிழ்ல இப்படி ஒரு படம் பார்த்ததுக்கு எனக்கு சந்தோஷமா இருந்தது. பாட்டுக்கள் பத்தி சர்வே டச்ல ஒண்ணுமே சொல்லலை? Watch it one more time dude, in a good mood.. you will love it!

SurveySan said...

அநன்யா, good coincidence. கிட்டார் பதிவுபோட்டதும், உங்களுக்கு ஒரு ஈ.மடல் போடணும்னு நெனைச்சிட்டிருந்தேன். நீங்களே ஆஜர் ஆயிட்டீங்க. டாங்க்ஸு :)


எந்திரன், பிடிக்கலைன்னு சொல்லவே இல்லியே நானு. சூப்பரா இருந்தது. என்ன, ஒரு 'ரஜினி' படம் பாத்த திருப்தி இல்லை. என் தெலுங்கு நண்பனும், இந்தி நண்பனும் கூட அதையேச் சொல்றான். அவங்களுக்கே, ரஜினி பத்தலைன்னா, நமக்கு எப்படி பத்தியிருக்கும்?

வேர்வை வந்துதுங்க ரோபோக்கு. ரெண்டாவது தபா பாருங்க ;)

jokes apart, it was a very well made movie. only sad thing is , rajini was missing the last 30 mins. :(

Ananya Mahadevan said...

சர்வே,
ரஜினிக்கு வேர்வை வரலை! நான் இப்போத்தான் ரெண்டாவது வாட்டி காசியிலே பார்த்துட்டு வந்தேன்! அதுல பாருங்க, ரோபோவின் ஸ்கின் டெக்ஸ்சருக்கேத்தாப்ல ரஜினிக்கு ஒரு வித Glossy make up, நான் முன்னமே சொன்னாப்ல ஷிம்மர் ஃபினிஷ் மேக்கப். அதன் பளபளப்பில் அந்த ஜிகினாத்தனத்தினால் உங்களுக்கு முகத்தில் ஒரு ஈரப்பதம் மாதிரி தோன்றி இருக்கு.. அவ்வளவே.. கிட்டார் பதிவு சீக்கிரம் படிச்சுடறேன்.. நன்னி ஹை ச்சீயர்ஸ்..

SurveySan said...

அநன்யா ஜீ, ரஜினி வெறியர் போலருக்கு நீங்க. அதான், கண்ணை மறைக்குது.

ரோபோ ஜி, பிரசவம் பாக்க ஆஸ்பத்திரியில் ஒக்காந்துக்கினு இருப்பாரு. அப்ப பாருங்க அவர் முகத்தை. வேர்வை வழியும். ஆப்பரேஷன் இருக்கேங்கர டென்ஷனா இருந்திருக்கலாம் :)

என் தியரி என்னன்னா, ரப்பர் மாஸ்க் போட்டுக்கிட்டு ரோபோவா வரது இன்னொரு டூப் நடிகர். ரப்பர் அப்பட்டமா தெரியவேணாங்கரதுக்காக, தண்ணி கொஞ்சம் அடிச்சு விட்டிருப்பாக. அது கொஞ்சம் ஓவராயிடுச்சு. :)

Ananya Mahadevan said...

கிர்ர்.... கோபத்துடன் வெளிநடப்பு செய்கிறேன்..:))

SurveySan said...

அநன்யா, அவ்வ்வ். உங்களுக்காகவே இன்னோரு தபா பாத்துட்டு வந்து, எந்த எந்த காட்சின்னு சொல்றேன்.

இப்ப நினைவில் இருப்பது, ஆஸ்பத்திரி காட்சி. வேர்வை சொட்டச் சொட்ட நிப்பாரு ரோபோ ஜி :)

சசி ராஜா said...

அட வேர்வையை விடுங்க..எந்திரனை குப்பையில போடுறதிலே லாஜிக் இல்லையே..

http://alonealike.blogspot.com/2010/10/blog-post.html

Srinivas said...

Doop pottaangala???? chumma theriyaama apdiye solradhu!!!

Kastappattu make up potta Doop nu solla vendiyadhu!!!