recent posts...

Sunday, October 03, 2010

சந்திரபோஸ்

எண்பதுகளில் ராஜாதி ராஜன் இசை அரசன் இளையராஜா கோலோச்சி ஆட்சி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்பெல்லாம் எந்த நல்ல பாட்டு ரேடியோவில் கேட்டாலும் அது கண்டிப்பா ராசா பாட்டுத்தான்னு எல்லாரும் மனசுல ஏத்திக்கிட்ட காலம்.
ராஜாவைத் தவிர வேறு எந்த இசைஅமைப்பாளர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தாங்கங்கரது கூட மங்கலாத்தான் நினைவில் இருக்கு.
அந்த மங்கலான நினைவில், பளிச்னு முதல் வரிசையில் இருப்பவர்கள், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், போன்றவர்கள்.

SPBயும் யேசுதாஸும் பாடிய "என் காதலி யார் சொல்ல்வா?" பாட்டு சங்கர் கணேஷ் போட்டது, ராசாவோடது இல்லைங்கரது சில வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.

ஒரு காலத்தில், ரேடியோ ஆன் பண்ணினாலே, 24 மணி நேரமும் இடம்பெற்ற பாடல், 'மாம்பூவே சிறு மைனாவே" பாடல். பலப் பலவருஷமா இதுவும் ராசா பாட்டுத்தான்னு நெனைச்சிருந்தேன். ஆனா, இது சந்திரபோஸின் இசையில் வந்த பாடல்னு சமீபத்தில்தான் தெரிஞ்சது.

சந்திரபோஸ் எவ்வளவோ ஹிட்டு பாட்டு கொடுத்திருக்காருன்னு, உ.தமிழனின் பதிவிலும், கானா பிரபாவின் ரேடியோஸ்பதியிலும் தான் தெரியக் கிட்டியது.

சந்திரபோஸ், நல்ல திறமையான கலைஞன். ராஜாவின் பிரகாசத்துக்கு இடையே, தனக்குன்னு ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கிட்டதிலிருந்தே அது புரியுது.

அவரின் பாடல்களில் சில கீழே:
மாம்பூவே சிறு மைனாவே - பல வருஷமா ராசாப் பாட்டுன்னு எண்ணியிருந்தது இது. இன்னிக்கும் இந்தப் பாட்டை கேட்டா, பழைய murphy radioவும், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும், ரேடியோவை சுற்றி அமர்ந்திருக்கும் சுற்றமும் நட்பும் நினைவில் வருது.


பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் - இந்த நிமிஷம் அரைக்கும் இது சந்திரபோஸின் இசைன்னு தெரியாது. அருமையான பக்திப் பாடல். உருகவைக்கும்.


Raj TV நிகழ்ச்சியில், சந்திரபோஸ், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது கர்ணன் பாடலை, ரொம்பவே அனுபவிச்சு அற்புதமா பாடும் காட்சி.


சந்திரபோஸ் மறைந்துவிட்டார் என்பதில் வருத்தம்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

// பழைய murphy radioவும், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும், ரேடியோவை சுற்றி அமர்ந்திருக்கும் சுற்றமும் நட்பும் நினைவில் வருது.//

உண்மை.

நல்ல பாடகர் சந்திரபோஸ்.

SurveySan said...

Google சர்ச்சாமல் சொல்லுங்க, கர்ணன் படத்துக்கு யாரு மீஜீக்னு?

ராமலக்ஷ்மி said...

//Google சர்ச்சாமல்//

கையைக் கட்டிப்போட்டு விட்டாலும், கண்ணை மூடிக்கிட்டு சொல்லலாமோ சந்திரபோஸ் என்று? ஏனென்றால் பல வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்தவர் என்பது தெரியும்.

SurveySan said...

ராமலக்ஷ்மி, சரியாப் போச்சு போங்க :)

அவருக்கு அவளோ வயசாகலை. நான் தான் தப்பான பதிவுல, தப்பான கேள்வி கேட்டுட்டேன். இப்போதைக்கு சாய்ஸ்ல விடுங்க. நீங்க மட்டும் கூகிளில் தேடிக்கலாம் :)

ராமலக்ஷ்மி said...

:))!

எஸ்.கே said...

அவர் இசையமைத்த படங்கள் கொஞ்சமென்றாலும் இசையில் தனித்துவம் இருக்கும்.
நடிக்க வேறு ஆரம்பித்திருந்தார்!

நாஞ்சில் பிரதாப் said...

அவர் ஒரு முறை சென்னை தொலைக்காட்சியில் பாடிய பூஞ்சிட்டு குருவிகளா...பாட்டு இன்னும் மனதில் இருக்கிறது.... வருத்தங்கள்

குறும்பன் said...

//முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.//

எனக்கே இது அதிகமா தெரியுது கவனிக்கவும்.

SurveySan said...

thanks for the visit SK, Nanjil, Kurumban.

Kurumban, good point, 'garvam' not intended ;)

கானா பிரபா said...

நன்றி, நீங்களும் நினைவு கூர்ந்ததற்கு

gkrishna said...

கர்ணன் திரைப்படதிற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று நினைக்கிறன்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

SurveySan said...

Prabha, thanks.

gkrishna, i think you are right.
i saw the following in bollysite.com and was surprised. must be a typo.

Karnan
Language: Tamil
Length: 2 hours 57 minutes
Genre: War
Director: B. Ramakrishnaiah Panthulu
Producer: B. Ramakrishnaiah Panthulu
Music: Pendyala Nageshwara Rao