என்றாவது ஓர் நாள் பீத்தோவனின் Fur Elliseவை கிட்டாரில் வாசித்து மூவலகையும் இன்பக் கடலில் ஆழ்த்த வேண்டும்னு உதார் விட்டு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏக்சுவலி, கிட்டார் கத்துக்கவேண்டும் என்ற அவா ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னமே வந்த ஒன்று. தங்க்ஸ் ஊருக்குச் சென்று, ஒரு மாதம் விடுதலை கிட்டியிருந்த பொற்காலம் அது. இதே போல் விடுதலை வாழ்க்கை வாழ்ந்த இன்னொரு சகா எங்க வீட்டுக்கு வந்து டேரா போட்ட மகிழ்ச்சியான தருணங்கள். டைமை யூஸ் பண்ணிக்கணும் மச்சி, என்ற பேரவாவில், அங்க இங்க பொரட்டிப் பாத்து, வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு community collegeல் Beginners Guitar வகுப்பு இருப்பதை பார்த்து அதில் சேரலாம் என்று முடிவு செய்தோம்.
Guitar வாங்கலாம்னு கடைக்கு போனால், குறைந்தது $50 ஆகும்னு தெரிஞ்சது. கடையில் காட்சிக்கு வைத்திருந்த கிட்டாரை எடுத்து வாசிச்சுப் பாத்தா கஷ்டமா இருப்பது போலவும் தெரிந்தது. கிட்டார் நமக்கு ஒத்துவருமான்னு தெரியாத ஒரு குழப்பத்தில், சீப்பா ஒரு கிட்டாரை முதலில் வாங்கிப்போம், அப்பாலிக்கா, சுருதி சேந்து பட்டையக் கிளப்ப ஆரம்பிச்சா, காஸ்ட்லியா இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு முடிவு செஞ்சோம்.
பயங்கரமா தேடி, eBayல் $5க்கு கிட்டார் இருந்ததைக் கண்டு பேருவகை அடைந்தோம். Shippingக்கு ஆனா $10. ரெண்டு கிட்டார், நல்ல அழகான கறுப்பு நிறத்தில் வாங்கினோம்.
சுபயோக சுபதினத்தில், கிட்டாரையும் தூக்கிக்கிட்டு, வகுப்புக்கு போனா, வகுப்பில் 30 பேர் இருந்தாங்க. எல்லார் கிட்டேயும், பள பளான்னு நல்ல கிட்டாரு. அவங்க கிட்டாரெல்லாம் மீட்டினா, டங்கு டிங்குன்னு அருமையான சத்தம். நம்ம கறுப்பு கிட்டாரிலும் சத்தம் வந்தது, ஆனா, ரம்யம் கம்மியா இருந்துச்சு. அதை ஊர்ஜீதம் செய்வது போல், வகுப்பு ஆசிரியர் வந்ததும் ஒரு நிகழ்வு நடந்தது.
வந்தவர், ஒவ்வொருத்தர் கிட்டையும் போயிட்டு, கிட்டாரை வாங்கி, அதை ட்யூன் செய்ய ஆரம்பிச்சாரு (ட்யூன்னா என்னாங்கர விவரமெல்லாம் தெரியாதவங்க சொல்லுங்க, சொல்லித்தாரேன்). மத்தவங்க கிட்டாரெல்லாம் நாலைந்து விநாடியில் ட்யூனியவரு, என் கிட்டாருக்கு வந்ததும், அதன் கம்பியை முறுக்கி முறுக்கி ட்யூன் பண்ணி மாஞ்சு போயிட்டாரு. "எங்கய்யா வாங்கின இதை"ன்னு கேட்டதும், "eBay"ன்னேன். "ஹ்ம் அதான் இப்படி"ன்னு சொல்லாம சொல்லி, இந்தாப் புடின்னு திருப்பிக் கொடுத்துட்டாரு.
வகுப்பு நடந்த ஒரு மாதமும், செம டார்ச்சர். கம்பியை அமுக்கி அமுக்கி கையெல்லாம் ரணகளம். வகுப்பின் சக மாணவர்களும், நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணிட்டு, அடுத்த கிளாஸுக்கு வந்து நல்லா வாசிப்பாங்க. நானும்,சகாவும், டொங்க் டொங்க் டொங்க்னு ஒரு கோர்வையும் இல்லாம எத்தையோ தட்டி, மொத்த வகுப்பின் சுருதியையும் சொட்டையாக்குவோம்.
எப்படா இவனுங்க ஒழிவாங்கன்னு எதிர்பார்த்திருந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் விடுதலை கொடுத்து, கிட்டாரை தலை முழுகினோம்.
சில பல வருஷங்களுக்குப் பின், மீண்டும் கிட்டார் மோகம் தலை தூக்கியது. இம்முறை நான் மட்டும் (bad influence சகா கூட இல்லை பாருங்க :) ). நல்ல கிட்டார் இருந்தா, என்னிக்கோ Jimmy Hendrix ஆக வேண்டிய ஆளு நான்னு, நானே முடிவு பண்ணி, $100 கொடுத்து ஒரு Ibanez வாங்கி வைத்தேன். வேறொரு community collegeல் அதே beginers guitar சேர்ந்து வைத்தேன்.
துளியூண்டு முன்னேற்றம் இருந்தது, கடந்த வகுப்பைக் காட்டிலும். ஆனா, கொடுமை என்னன்னா, சக மாணவர்கள் இங்க, பதினாலு, பதினைஞ்சு வயசு பொடிசுகள். சின்னப் பசங்களெல்லாம், சொன்னதை சட்டுனு புரிஞ்சுக்கிட்டு, ரொம்ப ஈஸியா வாசிச்சுட்டுப் போயிடறாங்க. அவங்களுக்கு ஈடு கொடுத்து, நான் பிராக்ட்டிஸ் பண்ணி வாசிக்கரதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிடுச்சு.
ஒரு வழியா அந்த வகுப்பும் முடிஞ்சுது. ஆனா, பெரிய முன்னேற்றம் இல்லை. Jingle bells, twinkle twinkle little star மட்டுமே லாவகமாக வந்த பாடல்கள். மத்ததெல்லாம் சுத்தம்.
அதுவும், நண்பர் ஒருவரின் எட்டு வயது பொடிசுக்கு twinkle twinkle வாசிச்சுக் காமிச்சா, "Uncle, you are missing a few notes"னு காறித் துப்பாத குறையா சொன்னதுல, திரும்ப சோக மாகிட்டேன்.
இன்னும் ஒரு படி மேலப் போகணும்னா, $200 கிட்டார் இருந்தாத்தான் முடியும்னு முடிவு பண்ணி, Ibanezஐ விற்று ஒரு Yamahaவை வாங்கி வைத்தேன். அருமையான சத்தம் இதில். இனி, பொடிசுகளெல்லாம் போகும் community college நம்ம வயசுக்கு மருவாதையா இருக்காதுன்னு, அருகாமையில் இருக்கும் ஒரு கிட்டாரிஸ்ட்டிடம் private lessons எடுத்துக் கொள்ளச் சேர்ந்தேன். ஒரு 30நிமிட வகுப்புக்கு $25 அழணும். நான் படிக்கர ஸ்பீடுக்கு ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் பெரிய முன்னேற்றம் இல்லாமல், abcdefg டெய்லி போயி, அந்த ஆளுக்கு வாசிச்சுக் காமிக்க $25 கொடுப்பது, பெருத்த மன உளைச்சலைத் தந்தது. ஆனா, வாங்கர காசுக்கு அந்தாளும், "ஆஹா, சூப்பர். என்னமா வாசிக்கர நீயீ. ரம்யமா வாசிக்கர. எங்கையோ போயிடுவ நீ"ன்னு உசுப்பு ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு.
நம்ம வேகத்துக்கு, நாமளே சுய முயற்சியில் கத்துக்கிட்டாத்தான் உண்டு, இல்லன்னா, பாங்க்கு பேலன்ஸு, பொத்தலாயிடும்னு தெரிஞ்சிருச்சு. "John, work is so tight lately. i will take a short break and come back"னு அந்தாளுக்கு அல்வா கொடுத்துட்டு, கொஞ்சம் கொஞ்சமா நானே சொந்த முயற்சியில், இணையம் தந்த அளவில்லா வகுப்புகளை மேய்ந்து பயில ஆரம்பித்திருந்தேன்.
அதிலும் கூட, நேர்வழியில், guitar chords, strumming, chords change மாதிரி வகையராக்கள் செய்வது, +2வில் Chemistry வகுப்பில் இருப்பதைப் போன்ற கசப்பான ட்ரைய்யான அனுபவமாய் இருந்தது. Instant gratification கிட்ட என்ன செய்யலாம்னு மேய்ந்ததில், YouTubeல் தமிழ் சினிமாப் பாடல்கள் பலதையும் அழகாய் சொல்லித் தரும் இளைஞர் படை கண்ணில் பட்டது. சிறுகச் சிறுக இதைக் கற்று, ஓரளவுக்கு விரல்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்தது.
அதை வைத்து, ஒப்பேத்திய பாடல், உங்கள் செவிகளுக்கு விருந்தாக்குகிறேன்.
|
உங்க காது டங்குவாரு கிழிஞ்சிருக்கலாம். அதற்கு கொம்பேனியார் பொறுப்பில்லை. இன்னா பாட்டு இதுன்னு யாராவது கேட்டீங்கன்னா, அழுதுடுவேன்.
இந்தப் பாடல், கிட்டாரில் இசைத்தால், எப்படி ரம்யமாய் இருக்கும் என்று தெரிய, கீழே ஏதோ ஒரு புண்ணியவான் வாசித்ததை கேட்டுப் பரவசமடையுங்கள். நான் இந்த லெவலுக்கு வரணும்னா, $500 கிட்டாரும், இன்னும் அஞ்சு வருஷமும் செலவாகும். ஹ்ம்!
கிட்டார் கற்றுக் கொள்ள விரும்வும் அன்பர்கள், கண்ணே கலைமானே பாடலை எப்படி வாசிப்பது என்று, ஆர்வம் பீரிட்டு கேட்டால், தனிப் பதிவில், அதை கற்றுத்தருவேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!
என் வாசிப்பை கேட்டு உங்களுக்கு என்ன ஆகியிருந்தாலும், பேசித் தீத்துக்கலாம், கொமெண்ட்டிட்டு போங்க. டாங்க்ஸு.
18 comments:
ஆமாம் தலைவரே எனக்கு வேணும் சொல்லிக்கொடுங்க... :-)
தனிப்பதிவா இருந்தாலும் சரி இல்லை மெயில் பண்ணினாலும் சரி
murli03@gmail.com
முரளிகுமார், உங்க அதீத இசை வெறிக்கு, தனிப்பதிவுதான் சரியான மரியாதையா இருக்கும். வெயிட்டீஸ், கூடிய விரைவில் வரும் ;)
//முரளிகுமார், உங்க அதீத இசை வெறிக்கு, தனிப்பதிவுதான் சரியான மரியாதையா இருக்கும். வெயிட்டீஸ், கூடிய விரைவில் வரும் ;)//
:-) இப்படி போடணுமா?
:-( இப்படி போடணுமா?
முரளி, இன்னும் ரெண்டு மூணு பேரு வந்தா, இந்த வாரமே வகுப்பை ஆரம்பிச்சிடலாம். இல்லன்னா, உங்களுக்கு வாரக் கடைசியில் ஈ.மடலறேன் ;)
//இன்னும் ஒரு படி மேலப் போகணும்னா, $200 கிட்டார் இருந்தாத்தான் முடியும்னு முடிவு பண்ணி//
ha ha ha. This is similar to photography, we think better camera, better pictures :D but the camera need a better photographer ;)
நாதஸ்,
good instrument brings in positive vibrations. கண்டிப்பா, காஸ்ட்லி கருவி தேவைதான் ;)
-Zen guitar.
ஹஹஹ சூப்பரா பண்ணிருக்கீங்க. கலக்கல்
எனக்கும் கிட்டார் மேல ரொம்ப வருசமா ஒரு இது. ரெண்டு மாசம் முன்னாடி க்ளாசிஃபைட்ல பார்த்து ஒரு செகன்ட்கேண்ட் யமஹா கிட்டார் 200 திர்ஹாம்க்கு வாங்குனேன்...நல்ல கன்டிஷன்லதான் இருக்கு...(எவனக்கு தெரியும்) என்தலைல கட்டின லேடி அப்படித்தான் ஜொல்லிச்சு.
யுடியுப் பார்த்து க்கார்ட்ஸ் கத்துக்கறேன்... ஒண்ணும் வேலைக்காகாது போலருக்கு...கைவிரல் வலிக்கிறதுதான் மிச்சம்...ரூம்மேட்ஸ் திட்டறானுங்க... நல்ல வாத்தியாரா பார்க்கவேண்டியதுதான்.
கூடிய சீக்கிரம் நானும் அரங்கேத்தறேன்...பதிவுலக மக்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு:)))
ஹாஹா.. சர்வே, ஜாலியா இருந்தது படிக்க.. நீங்க நல்லாவே வாசிக்க ஆரம்பிச்சாச்சு.. இதே மாதிரி தான் ரங்குவும் வீணை டீச்சருக்கு கல்தா கொடுத்தார்.. போனவருஷம்(அதெல்லாம் எதுக்கு இப்போ?) என் கிட்டே கிட்டார் லேது.. ஆனா வாயாலேயே நல்லா வீணை வாசிப்பேன்.. கிட்டார் எல்லாம் எனக்கு சாதாரணம் ’சர்வே’சாதாரணம்.. ஹீஹீ..அதுனால நானும் வகுப்புக்களுக்கு ரெடி.. ஸ்டாட் மீஸிக்கி! :)
நாஞ்சில் பிரதாப், நன்றீஸ் :)
சேந்து கலக்குவோம் வாங்க.
அநன்யா, டாங்க்ஸு.
வீணையெல்லாம் ரொம்பவே ஓவரு. படிப்படியா வளத்துவுடுங்க ரங்க்ஸை. கிட்டாருக்கு வரச் சொல்லுங்க. ;)
எழுதி இருந்ததைப் படிக்கும் போது சூப்பரா இருந்தது.. கிட்டார் கேட்டப் பிறகு தான் தெரிந்தது.. ;-)
எதா இருந்தாலும் எழுத்து எழுத்தாவே இருக்கட்டும்னு சொல்லனுமோ?.. ;-))
அட அசத்துங்க..
நான் கூட ஒரு வயலினை வச்சிட்டு இதே சோககீதம்
பாடிக்கிட்டிருக்கேன்.. :)
தமிழ் பிரியன், உள்குத்தா, வெளிக்குத்தா இது? ;)
முத்துலெட்சுமி, அரங்கேற்றம் பண்ணலியா? :)
சூப்பர் அனுபவம். அட, நல்லாதான் வாசிச்சிருக்கீங்க.
அம்மா, தம்பி நல்லா வயலின் வாசிப்பாங்க. சின்ன தங்கை வீணையும் கீபோர்டும். மகனும் கீபோர்ட். அதோட நிறுத்திக்கறேன்:)!
:-)
not bad, survey man! keep it going...
that boy no chance... cool
Post a Comment