சின்ன வயதில் செய்ய முடியாத பல விஷயங்களில் ஒன்று இசை சம்பந்தப்பட்ட எதையும் கத்துக்காதது. இசை ஆர்வம் இருந்திருந்தாலும் அதற்கான நேரமும், வசதியும் இல்லாதிருந்தது.
நேரம்/வசதி இல்லைன்னு சொல்றத விட, இந்த விஷயங்களெல்லாம் extra-curricular ஆக கற்றுக் கொள்ள முடியும் என்ற விவரமே இல்லாமதான் இருந்தது.
நமக்குத் தெரிஞ்ச extra-curricular எல்லாம், பள்ளி முடிந்ததும் கும்பலாய் விளையாடும் கால்பந்தாட்டமும், கிரிக்கட்டும் தான்.
இப்ப நேரம் இருக்கு, வசதி இருக்கு, கத்துக்க தான் சிரமமா இருக்கு. கை கால்கள் நெனச்ச மாதிரி வளைய மாட்றது.
சமீபத்தில், கிட்டார் கத்துக்க முயற்சி எடுத்துள்ளேன். பாக்கரதுக்கு எவ்ளோ சுலபமா இருக்கு, வாசிக்க சிரமம்தேன். ஒரு chord இடது கை விரல்களில் சேர்த்துப் புடிச்சு வலது கையில் மீட்டுவதுற்குள் தாவு தீருது.
ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது என்று சூளுரைக்கிறேன் ;)
இது நம்ம கிட்டாரு.
ஹாப்பி வெள்ளி!
13 comments:
கிடார் படம்... வாவ்!!
தாங்க்யூ! :)
someone in flickr marked this pic as their favourite. 1st recogniion for my pic - எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல. ஏதோ இருக்கு போல :)
---எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல--
சும்மா அளக்காதீங்க ;)
பிரதிபலிப்பு, பிற்தயாரிப்புன்னு எம்புட்டு நேரம் எடுத்ததுன்னு சொல்லுங்க...
அப்படி இல்லேன்னா, குறைந்தது எத்தனை படங்கள் எடுத்து, அதில் இது தேர்தெடுக்கப்பட்டதுன்னாச்சும் சொல்லுங்க
அடடா, மெய்யாலுமேங்க. ரொம்ப மெனக்கெடாம எடுத்ததுதான். 'வட்டம்' போட்டிக்காக எடுத்தது. http://surveysan.blogspot.com/2008/02/blog-post.html
ஒரு மணி நேரம் க்ளிக்கவும் மேலும் ஒரு மணி நேரம் படங்களை அலசவும் செலவாயிருக்கும் :)
அப்போ, ஏதோ மேட்டர் இருக்குங்கறீங்க. இருந்தா சந்தோஷம்தான். என்னன்னு தெரிஞ்சா, அடுத்த தடவ, இதே மாதிரி அழகா எடுக்க உதவியா இருக்குமேன்னு கேட்டேன் ;)
ஓ... அப்பவே ரிலீஸ் ஆயிருச்சா!
நான்தான் வீடியோவுக்கு வரும்வரை காத்திருந்து படம் பார்ப்பது போல் ஆற அமர ரசிக்கிறேனா...
படத்தைப் பார்த்தாலே இசை மாதிரி என்னவோ மனசுல ஓடுது :P
//படத்தைப் பார்த்தாலே இசை மாதிரி என்னவோ மனசுல ஓடுது :P//
தன்யனானேன் :)
ithuku peyar than thane kelvi thane pathila:P
///////ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது /////////
சர்வேவேவேசாஆஆஆஆஆஆஆஆஆ
என்னங்க இது? அவரு போடுறது நம்ம ராசா பாட்டு ட்யூன் மாதிரியே இருக்கு... !!!
//எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல. ஏதோ இருக்கு போல :)//
ஒண்ணுமில்ல ஸர்வே, உபயோகமாகாம அப்படியே புத்தம் புதுசா இருக்கில்ல. அதான்!
;-)
yes !you can, yes! you can, yes !you can,!!!
இதே மாறி yes i can, yes i can ன்னு கிட்டார் ப்ராக்டீஸுக்கு (தினப்படி சுமார் 3 மணி நேரம்)முன்னாடி 11 முறை சொல்லி ஆட்டொ சஜெஷன் பண்ணிக்கொள்ளவும்....அப்படி செஞ்சீங்கன்னா என்னஒரு 10 அல்லது 15 வருஷத்துல கிட்டதட்ட அந்த மாதிரி வாசிக்கலாம்..:):)
அட அவரு நொடேஷன் பாக்காம வாசிக்கராரே??!!
thangoo! :)
அட, ரெண்டு பேரு நம்ம கிட்டார் படத்தை favouritஇருக்காங்க.
http://flickr.com/photos/surveysan/2242935453/favorites/
Post a Comment