நம்ம MSV Asianetல ஒரு பாட்டு போட்டிக்கு நடுவரா போயிருக்காரு.
அங்க அவர் பேசினதும், பாடியதும் கீழே.
கண்ணதானை நினைவில் வைத்து, புல்லாங்குழல் பாடினாரு. புல்லரிக்குது.
ரெண்டாவது வீடியோ, துர்காங்கர பொண்ணு, MSVன் சிறை படத்தில் வரும், நான் பாடிக்கொண்டே இருப்பேன் பாட்டை பாடினது.
மூணாவது வீடியோ (கண்டிப்பா பாருங்க), துர்கா பாடியதை எல்லாரும் விமர்சிச்சு மார்க் போடரது. இதில் MSV பேசுவதும், MSVயை பத்தி மத்தவங்க பேசரதும் ஜூப்பர்.
எவ்ளோ பெரிய ஆளுங்க இவரு? ஆனா, அமைதியா ஒரு அலட்டலே இல்லாம பேசராரு பாருங்க. கலக்கல். இவருக்கு இன்னும் பெரிய விருதுகள் எதுவும் தராதது நமக்கு தான் கேவலம். 456 பேர்தான் MSVக்கு விருது கொடுக்கணும்னு நாம் ஆரம்பித்த petitionல கையெழுத்து போட்டிருக்காங்க. நீங்க இதுவரை போடலன்னா, போட்டுடுங்க. நன்றி!
ஹாப்பி வெள்ளி!
10 comments:
சர்வே,
இந்த மலையள idea star 2007 நிகழ்ச்சியைத் விரும்பித் தொடர்ந்து பார்த்து வர்றேன்.
விசுவநாதன் பற்றிய இத் தகவல்களை போன மாதமே நான் போட வேணும் என நினைச்சிருந்தேன்.
நீங்கள் முந்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
இன்னுமொரு மலையாளப் பாடல் போட்டி நிகழ்ச்சியில் வாணி ஜெயராம் நடுவராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் பற்றி வாணி ஜெயராம் பல அருமையான தகவல்களைச் சொன்னார்.
அந்த நிகழ்ச்சியையும் பாருங்கள்.
ஒரு ரெண்டு மணி முன் தான் நானும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்...நண்பர்கிட்ட பெட்டிஷன் பத்தியும் சொல்லிட்டிருந்தேன்...நீங்க இன்னைக்கு பதிவிடாம இருந்திருந்தா நாளைக்கு நான் போட்டிருப்பேன்..ஜஸ்ட்டு மிஸ்ஸு :))
நன்றி வெற்றி.
வாணி ஜெயராம் உரல் தேடினா கெடைக்கலையே?
கப்பி,
ஜஸ்டு மிஸ்ஸா? நல்ல வேளை. நானே என்னடா எழுதரதுன்னு சமீப காலமா, மண்டை காஞ்சு போயிருந்தேன்.
:) யூ ட்யூபே துணை.
நானும் இந்த நிகழ்ச்சியை பாத்தேன் சர்வேசன்.ரொம்ப நல்ல நிகழ்ச்சி.அசத்தலா பாட்ராங்க எல்லாரும்..நடுவர்களோட காமெண்ட்ஸும் ரொம்ப constructive வா அதி சுந்தரமாயிட்டு உண்டு....:)
)
/* வாணி ஜெயராம் உரல் தேடினா கெடைக்கலையே? */
சர்வேசர், இந்தாங்கோ நீங்கள் தேடின உரல்.
http://www.youtube.com/watch?v=iMacLF4RnTo&feature=related
சர்வேசர்,
ஒரு சின்னத் தவறு நடந்து போச்சு. தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
நான் போன பின்னூட்டத்திலை தந்த உரல் பாடலுக்கான உரல்.
வாணி ஜெயராம், மற்றும் நடுவர்களின் கருத்துக்கள் அடங்கிய உரல் கீழே. இந்தப் பாகத்திலைதான் வாணி ஜெயராம் மெல்லிசை மன்னர் குறிச்சுச் சொல்லுறார்.
இதோ அந்த உரல்:
http://www.youtube.com/watch?v=5YzUA5iX3o8&feature=related
வெற்றி,
மிக மிக மிக நன்றி.
அருமையான பாடல் அது.
அருமையா இருக்கு சர்வேசன்.
ஏஷியா நெட் பார்க்கிறதையே விட்டு இருந்தேன். உஷா உதூப்பையும் எமெஸ்வி சாரையும் சேர்த்துப் பார்த்த போது பார்க்காமல் விட்டு விட்டேனேனு இருக்கு.
ரொம்ப நன்றிம்மா.
varugaikku nanri Vallisimhan.
you are very welcome.
Post a Comment