1) 2007ல் அதிக லாபமீட்டிய ஸ்தாபனம் எண்ணெய் வர்த்தகம் செய்யும் Exxon Oil கம்பெனியாம்.
லாபம் எம்புட்டு தெரியுமா? $40.61 billion.
சும்மாவா, ஒரு gallon $4.00 க்கு விக்கரானுங்க?
அதிக லாபமீட்டிய மற்ற ஸ்தாபனங்கள் இங்க போய் பாருங்க.
2) 2007ல் அதிக அளவில் நஷ்டமடைந்த நிறுவனம் General Motors. அடைந்த நட்டம் $38.73 billion.
அடேங்கப்பா, ஐயோ பாவம். இவங்களும் மாத்தி மாத்தி என்னென்னமோ பண்ணிப் பாக்கராங்க, ஒண்ணும் வேலைக்காக மாட்ரது.
இவங்க ஃபாக்டரி இருக்கர டெட்ராய்ட் மாகாணத்தில், வேலை இழந்த மக்கள், அவங்க வீட்ட அப்படியே அம்போன்னு விட்டு ஊர விட்டு போயிடறாங்களாம்.
அதிக நட்டமடைந்த மற்ற நிறுவனங்கள் இங்க போய் பாருங்க.
3) பங்குவர்த்தம் செய்யறவங்களா நீங்க? Stocks எல்லாம் வாங்கி விக்கரதுண்டா? ஒக்காந்த எடத்துலேருந்தே லட்சங்கள் ஈட்டவும், சம்பாதித்த லட்சங்களை ஒரே நாளில் இழக்கவும், இந்த பங்குவர்த்தகத்தின் மூலம் செய்ய முடியும்.
2007ல் அமெரிக்க பங்குச்சந்தையில் பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்த stock எது தெரியுமா?
Mosaic என்ற நிறுவனம் தான் அது.
341.7% லாபம் கொடுத்ததாம்.
(இந்த வருஷமும் இப்படியே கொடுக்குமான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லிட்டுப் போங்க ;) )
இந்த மாதிரி பல மடங்கு அள்ளி வழங்கிய மற்ற stocks என்னதுன்னு தெரிஞ்சுக்க இங்க போங்க.
உங்களுக்கு தெரிஞ்ச 2007 பெரிய மேட்டர் ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.
15 comments:
அய்யோ அய்யோ.....ஈ ஈ ஈ ஈ
(நான் ஏன் சிரிக்கிறேன் என்று கண்டுப்பிடிங்க பார்ப்போம்..)
tbcd,
மூளைய கசக்கி புழிஞ்சு அறிவுபூர்வமா பதிவு போட்டா, ஈ.ஈ.ஈன்னு மொய்ச்சா என்னய்யா அர்த்தம்?
:)
100, 200-ன்னுகூட சேர்த்து வைக்க முடியாம கிடக்கு. இதுல பில்லியன் கணக்குல நஷ்டம்.. லாபம்னு சொல்லி காலங்கார்த்தால வயித்தெரிச்சல கொட்டுறீங்களே சர்வேசன்..
எண்ணெய்.
ஸ்தாபனம் - நிறுவனம்.
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
உண்மைத் தமிழன்,
மனமிருந்தால் மார்கமுண்டு ;)
இந்த ஆண்டு, உங்கள் பண வரவையும், மன அமைதியையும் பன்மடங்காக உயர்த்த அந்த மகரநெடுங்குழைநாதன் அருளட்டும் :)
தருதலை சார்,
//எண்ணெய்.
ஸ்தாபனம் - நிறுவனம்.//
எண்ணெய் - fixed.
ஸ்தாபனம் - ஏன் தவறு?
அய் நோ ஒன்லி டமிள் யூ நோ. அய் நோ அண்டர்ஸ்டான்டு மணிப்ரளவா லாங்வேஜ்.
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
//அய் நோ ஒன்லி டமிள் யூ நோ. அய் நோ அண்டர்ஸ்டான்டு மணிப்ரளவா லாங்வேஜ். //
ஓஹோ. அப்படியா சங்கதி.
'கூட்டு ஸ்தாபனம்'னு அடிக்கடி ரேடியோல கேட்டிருக்கேன்.
லாங்குவேஜ் டு லாங்குவேஜ் சில வேர்ட்ஸ் கடன் கொடுத்து வாங்கிக்கரதல தப்பே லேது.
ஸ்தாபனத்தை விட, நிறுவனம் நல்லாதான் இருக்கு.
ஆனா, ஐஸ்-கிரீமுக்கு ஈஃவல் வேர்ட் கீதா? :)
(குளிர்பதன மிட்டாய்? கிரீம்=மொழு மொழு தண்ணி? ) ;)
அட இன்னும்மா புரியல்ல...
சரி, சரி...வெந்த புண்ணில் வேலைப் பாச்ச விரும்பவில்லை.
/// SurveySan said...
tbcd,
மூளைய கசக்கி புழிஞ்சு அறிவுபூர்வமா பதிவு போட்டா, ஈ.ஈ.ஈன்னு மொய்ச்சா என்னய்யா அர்த்தம்?
:)
///
நிறுத்தனும். எல்லாரும் நிறுத்தனும்.
பூனை வெள்ளையா கீதுன்னா
நாய் ஏன் கருப்பா இல்லேன்னு கேள்வி கேட்குறத நிறுத்தனும்.
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
///அட இன்னும்மா புரியல்ல...
சரி, சரி...வெந்த புண்ணில் வேலைப் பாச்ச விரும்பவில்லை.
///
:) எல்லாம் யாம் அறிவோம்.
உங்க கேள்வியதான் யாரும் கண்டுக்கல போலயிருக்கே? ஈ.ஈ.ஈ :)
//நிறுத்தனும். எல்லாரும் நிறுத்தனும்//
நிறுத்திடலாம் asap. :)
அந்த கேள்வி உனக்கு தான் வாத்யாரே..
அடுத்தவனுக்கு புரிஞ்சாலும் ஒன்னு தான் புரியாட்டியும் ஒன்னு தான்..
எல்லாம் எமனுக்குத் தெரியும் ..ம்ம்..க்கும்,..என்று கனைக்கிறீர்..
ஓய் பிளட்..சேம் பிளட் சொல்லவே சொன்னேன்.. :P
//
SurveySan said...
:) எல்லாம் யாம் அறிவோம்.
உங்க கேள்வியதான் யாரும் கண்டுக்கல போலயிருக்கே? ஈ.ஈ.ஈ :)
//
//ஓய் பிளட்..சேம் பிளட் சொல்லவே சொன்னேன்.. :P//
;)
//ஓய் பிளட்..சேம் பிளட் சொல்லவே சொன்னேன்.. :P//
;)
Post a Comment