recent posts...

Monday, March 31, 2008

ஜாதகப் பலன் - நான் உயிர் பிழைத்த கதை

மனுஷன் எவ்வளவோ முன்னேறிட்டான். உலகத்துல இருக்கர ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதுக்கு, எப்படின்னு ஆராஞ்சு ஆராஞ்சு எல்லா விவரத்தையும் கரச்சு குடிச்சுட்டான்.

சூரியனுக்குள்ள என்ன இருக்கு, சூரியன் இன்னும் எவ்வளவு நாளுக்கு எரியும், நட்சத்திரம் எவ்வளவு தூரத்துல இருக்கு, சனிக் கிரகத்துல உயிர் இருக்கா, இப்படி எல்லா விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேஞ்சிட்டான்.

எல்லா விஷயத்துலயும் இவ்ளோ தெளிவாயிருந்தாலும், இன்னும் முக்கால் வாசி ஆளுங்க, பழைய பஞ்சாங்கத்தையும், பழக்க வழக்கத்தையும், மத சம்பந்தப்பட்ட பல அபத்தமான நம்பிக்கைகளையும் விடாம கெட்டியா பிடிச்சிட்டுதான் இருக்கோம்.

அடுத்தவனுக்கு தொல்லை தராத நம்பிக்கையோ தும்பிக்கையோ, எது இருந்தாலும் ப்ரச்சனையில்ல, ஆனா, அடுத்தவன துன்புறுத்தர நம்பிக்கைகள் இன்னும் தேவையா?

எங்க எதிர் வீட்டு ஆளு, ஒரு விசித்திரப் பழக்கம் வச்சிருந்தாரு. அவரு வெளீல போகணும்னா, அவரு வூட்டுக்காரம்மா மொதல்ல வந்து தெருவுல எட்டிப் பாப்பாங்க. தெருவுக்கு ரெண்டு பக்கமும் பாத்துட்டு உள்ள போய் அவர் கிட்ட ஏதோ சொல்லுவாங்க. அவரும் மண்டைய ஆட்டிட்டு வெயிட் பண்ணுவாரு.
வூட்டுக்காரம்மா திரும்ப கேட்டுக்கு வருவாங்க, ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பாப்பாங்க. அப்பரம், அவரு கிட்ட போய் எதயோ சொல்லுவாங்க.
இப்ப அவரு சிரிச்சிக்கிட்டே கட கடன்னு கெளம்பி டாடா காமிச்சிக்கிட்டே வெளீல போயிடுவாரு.
ஆரம்பத்துல எங்க வீட்லயிருந்து இந்த கூத்த பாத்துக்கிட்டு சிரிப்போம். விசாரிச்சுப் பாத்ததுல தெரிஞ்சது, தெருவுல, ஒத்தையா யாராவது இருந்தா, இவரு வீட்டை விட்டு வெளீல போக மாட்டாராம். ஒண்ணு, யாரும் இருக்கக் கூடாது, இல்லன்னா கும்பலா யாராச்சும் இருக்கணுமாம்.

அடக் கஷ்ட காலமேன்னு நெனச்சுக்கிட்டேன். பல வருஷமா இதப் பண்றாரு, இன்னி வரைக்கும் நடக்குது இந்தக் கூத்து. இந்தப் பழக்கம், அடுத்தவன வருத்தாத 'மூட நம்பிக்கை' அதனால மன்னிச்சு விட்டுடலாம்.

ஆனா, எல்லா நம்பிக்கைகளும் இப்படியே இருக்கரதில்லையே?

குறிப்பா, இந்துக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கும், ஜாதகம் பாக்கரதும், அதன் பின்னணியில் இருக்கும் பூதாகாரப் ப்ரச்சனைகளும், திகிலானவை.

ஜாதகத்துல இப்படி சொல்லிருக்கு அப்படி சொல்லிருக்குன்னு தங்கள் வாழ்க்கையை தாங்களே சீரழித்துக் கொள்ளும் கொடுமை நம்ம ஊர்ல மட்டும்தான் இருக்கு.

'ஜாதகம்'னு ஒரு பழைய மலையாளப் படம் பாத்தேன். அவார்டு படம் போல, மெதுவா ஆடி அசஞ்சுக்கிட்டுதான் எல்லாரும் நடிச்சிருந்தாங்க. ஜெயராம்தான் ஹீரோ, திலகன், ஜெயராமின் அப்பா.

ஜெயராமுக்கு மனைவியா வரப் போறவ ஜாதகத்துல ஏதோ ஒரு இக்கண்ணா இருந்தா, அது ஜெயராம் உயிருக்கு ஆபத்தா முடியும்னு திலகனுக்கு நம்பிக்கை.
ஜெயராம் ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறாரு. கல்யாணத்துக்கப்பரம், இந்த பொண்ணோட ஜாதகம் சரியில்லன்னு தெரிய வருது திலகனுக்கு, அதனால, யாருக்கும் தெரியாம, அந்த பொண்ண கெணத்துல தள்ளி சாகடிச்சிடறாரு.
இது படம்னாலும், நெஜ வாழ்க்கையிலயும் இந்த கொடுமையெல்லாம் நடக்காமலா இருக்கும்?

தனக்கு வரப் போற மருமகள், தன் மகன வசியம் பண்ணி குடும்பத்தைப் பிரிச்சிடுவாள்னு மாமியார் காரி நம்பரா (நன்றி: சன் டி.வி). மருமக நல்ல பொண்ணா இருந்தாலும், இந்த ஜாதக நம்பிக்கை, மாமியார வில்லியாக்கிடுது.

ஜாதகம், உடான்ஸுங்கர எண்ணம், படிச்சவங்க பலருக்கும் அதிகப்படியாவே இருக்கு. ஆனா, அப்படியிருந்தாலும், மனசுக்குள்ள எங்கயோ ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யுது. ஒண்ணு, வீட்ல இருக்கர பெருசுங்க மேல பழியப் போட்டுட்டு, அவங்க வற்புறுத்தலால தான் ஜாதகம் பாக்கறேன்னு சொல்லிடறது.
இல்லன்னா, ஜாதகம் பாக்காம பொண்ணு வீட்டுல பொண்ண கொடுக்க மாட்டாங்கடான்னு ஒரு சால்ஜாப்பு சொல்றது.
(வரதட்சணை மேட்டருக்கும் இதே கூத்துதான் நடக்குதுங்கரது வேற கதை. சாதி பாத்து கல்யாணம் பண்ணிக்கரதும், இதே ஸ்டைல் கூத்துதான். அது இப்ப அலச வேணாம்)

எனக்கு பர்ஸனலா, ஜாதகமும், அதைச் சுற்றியிருக்கும் ஜோசியம் மேலும் நம்பிக்கை கிடையாது. ஆனா, புது கார் வாங்கினா பூஜை போடரதும், முக்கிய மேட்டரு ஏதாவது செய்யறுதுக்கு முன்னாடி நல்ல நேரம் பாக்கரதும், சுற்றியிருக்கும் வற்புறுத்தல்களால் நடந்துகிட்டுதான் இருக்கு.

அடிக்க அடிக்க அம்மியும் நகருங்கரமாதிரி, சுற்றியிருக்கும் வற்புறுத்தல்கள், என்னையும் மாத்திடுமோன்னு பயம் இருக்கு.

இப்படித்தான் பாருங்க, சமீபத்தில் ஒரு நண்பனின் திருமணத்துக்கு தஞ்சாவூர் சென்றிருந்தேன்.
நண்பரோட மாம்ஸ் ஒரு பெரிய நியூமராலஜிஸ்ட்.
கல்யாணத்துக்கு முன்னாடி நாள், அரட்டைக் கச்சேரியில், மாம்ஸுக்கு பெரிய டிமாண்ட். எல்லாரும், ஆளாளுக்கு அவங்க பேரு விவரங்கள சொல்லிட்டு, அவங்க எதிர்காலத்த பத்தி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.

என் சுற்று வந்ததும், என் பேரு, பிறந்த தேதி எல்லாம் கேட்டுக்கிட்டாரு. கொஞ்ச நேரம் பேப்பர்ல கிறுக்கிட்டு, "தம்பி, வெளி நாடெல்லாம் உனக்கு வேணாம், நீ நம்ப ஊர்ல ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பி, ஓஹோன்னு போகும்"னாரு.

அடக் கொடுமைக்கு வந்த கொடுமையே, ஒண்ணுக்கும் ஒதவாம போகயிருந்த என்ன, "மச்சி கம்ப்யூட்டர் படி, அதுதான் ஃப்யூச்சர்னு" கைய காட்டி, இன்னிக்கு ஓரளவுக்கு சுகபோகமா இருக்க வழி பண்ணியிருந்த ஃப்ரெண்டோட மாம்ஸ் இப்படி சொல்லிட்டாரேன்னு ஒரே ரோசனையாப் போச்சு.

அத்தோட விட்டாரா? "தம்பி, நீங்க ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமி, ஆனா, மாசத்துல பாதி நாள் சுறுசுறுன்னு சுழலுவீங்க, மீதிப் பாதி சோம்பேறியா, டல்லாயிருப்பீங்க" ன்னாரு. எனக்கு ஒண்ணும் புரீல. "அதாவது தம்பி, வளர்பிறை நாட்கள்ள, சுறுசுறுன்னும், தேய்பிறை காலங்கள்ள சோம்பேரியாவும் இருப்பீங்க"ன்னாரு.

அத அப்படியே மறந்துட்டு என் பொழப்பை பாக்க ஆரம்பிச்சிருந்தேன்.
ஆனா, என்னிக்காவது, ஆபீஸ்ல டல்லா இருந்தா, இன்னிக்கு தேய்பிறை நாளோன்னு, மனசுல லேசா ஒரு கேள்வி வந்துட்டுப் போகும்.

இதே மாதிரி, ஜாதகத்துல எனக்கு தண்ணீல கண்டம் இருக்குன்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணிட்டாங்களாம். அதனால, என்ன எங்கையும், குளம், குட்டை, கடல், ஸ்விம்மிங்னு விட்டதில்ல.

சண்டை போட்டு, நீச்சல் கத்துக்கிட்டே ஆகணும்னு ஒரு 10 வயசுல கத்துக்க ஆரம்பிச்சேன்.
அப்பெல்லாம் கிராமத்துல நீச்சல் கத்துக்க, காஞ்ச தென்னங்காய் ரெண்டை சேத்துக் கட்டி, அதை கொளத்துல போட்டு, அதுக்கு நடுவுல படுத்துக்கிட்டு தத்தக்கா பித்தக்கான்னு அடிச்சு தான் நீச்சல் கத்துக்கணும்.

ஒரு நாள், சொந்தக் காரப் பயலுகளுடன், இந்த மாதிரி ஒரு செஷனுக்கு குளத்துக்கு போயிட்டோம்.
நானும், தண்ணீல எறங்கி, தேங்காய்களை வயிற்றில் கட்டி, சலக் பிலக்னு குளத்துல போயிட்டேயிருந்தேன்.

நடுக்குளத்துல ஒரு கல்லு போட்டிருப்பாங்க. எப்பவும், அந்தக் கல்லுல போயி நின்னு மத்தவங்கள வேடிக்கை பாக்கரது வழக்கம். அன்னிக்கும், அப்படி அந்த எடத்துக்கு போயி, கல்லு மேல நீக்க முயற்சி பண்ணேன்.
சடால்னு கால் வழுக்கிடுச்சு. கல்லை சுத்தி சேரு இருக்கும். காலு சேத்துல மாட்டிக்கிச்சு. இந்தக் காலால ஒதறினா, ரெண்டு காலும் உள்ள போயிடுச்சு.

என் உயரத்தை விட அந்த இடம் ஆழமானது.
'ஓ'ன்னு கத்த, அந்த வயசுலயும், ப்ரெஸ்டிஜ் இடம் கொடுக்காததால், நான் சடக் சடக்னு கை கால் உதறிப் பாத்தேன். அப்ப அப்ப லபக் லபக்னு அந்த 'பச்சை கலர்' தண்ணி ஸ்வாஹா வேற பண்ணினேன். ரெண்டு லபக்குக்கு மேல முடியல, "டேய்ய்ய்ய்ய்"னு ஒரு கூச்சல் போட, குளிச்சிட்டுக்கிட்டிருந்த பெண்டுகளெல்லாம் திகிலடைய, என் பெரியம்மா மகன், தொபுக்கடீர்னு உள்நீச்சல்ல வந்து என்ன இஸ்துக்கினு போய் கரையில் சேர்த்து, பிரட்டிப் போட்டு வயிற்றை அமுக்கு, உவ்வேன்னு ஒரே கலீஜ்.

யாரும், இந்த சம்பவத்தை வீட்ல சொல்ல வேணாம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு போனா, எங்களுக்கு முன்னாடியே, ரெஸ்க்யூ மேட்டர் எல்லாருக்கும் தண்டோரா போடப் பட்டிருந்தது.

ரெஸ்க்யூ பண்ணினவனுக்கு ஹீரோ மெடல் கொடுக்காம, முதுகுல டின்னு கட்டினாங்க, பாவம்.

ஹ்ம். இப்ப நெனச்சாலும் திகிலாதான் இருக்கு.

ஆமா, இது, ஜாதகப் பலனா? இல்ல, என் அதிகப் பிரசங்கித்தனமா?

ஜாதகத்துக்காக பயந்து, நான் ஒதுங்கிடல. இன்னிக்கும், கடப்பாரை நீச்சல் அடிச்சாவது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு போயிடுவேன் :)

Damn the ஜாதகம்!

உங்களுக்கு நம்பிக்கையுண்டா, இந்த விஷயத்திலெல்லாம்? குத்துங்க!



பி.கு: எந்த 'தண்ணீல' கண்டங்கரத தெளிவா சொல்லாதது யார் தப்புன்னு தெரியல :)

Sunday, March 30, 2008

அமெரிக்கத் தென்றலில்... வற்றாயிருப்பு சுந்தர்..

அமெரிக்காவில் 'தென்றல்' என்று ஒரு தமிழ் மாதாந்திரப் பத்திரிகை கிடைக்கிறது.



இந்த மாதப் ப்ரதியைப் புரட்டிப் பார்க்கையில் நம்ம வற்றாயிருப்பு சுந்தரின் 'சுஜாத்..ஆ' பதிவிலிருந்து சில பத்திகள் போடப் பட்டிருந்தது.

இவரைத் தவிர, DomesticatedOnion வெங்கட், சுரேஷ் கண்ணன், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன் ஆகியவர்களின் பதிவுகளும் அரங்கேறியிருந்தன.

F.Y.I.

Thursday, March 20, 2008

டோண்டுவின் கேள்வி பதில்கள் - சர்வே

டோண்டு சமீபத்தில் இரண்டு வாரமாக 'கேள்வி பதில்' என்று பதிவுகள் இட்டு வருகிறார். லக்கியின் கேள்வி பதில் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லையென்றாலும், ஒரு தரம் படிக்கலாம். படிச்சுப்பாருங்க.

அவற்றுக்கான சுட்டிகள்.
முதல் பதிவு
இரண்டாம் பதிவு

எதையும் முழுசா படிக்கலன்னாலும், சிலது interestingஆவே இருக்கு; சில கேள்விகள் தவிர்த்திருக்கலாம்;

எனிவே, இந்தப் பதிவு - வீக்-எண்ட் டைம் பாசுக்காக.
அவர் பதிவில் கேட்டது, சர்வேயாய், உங்கள் முன்



ஹாப்பி வீக்-எண்ட் :)

பி.கு: பின்னூட்டம் மட்டுறுத்தல் இருக்கு; ஸோ, கடைசி ஆப்ஷன் சூஸ் பண்றவங்க, அதை இங்கே முயற்சிக்க வேண்டாம். நேர விரையம் உங்களுக்குத்தான் ;)

Windows XP - வேகமாக 'பூட்'டுவது எப்படி + ஒரு கேள்வி

பூட்டுவது = Bootஉவது.

அதாவது, விண்டோஸ் XP வச்சிருக்கவங்க, ஒரு ஆறு மாசம் ஆச்சுன்னா, உங்க PC/laptop சுவிட்ச் ஆன் பண்ண உடனே, புதுசுல இருந்த மாதிரி, சடால்னு 'பூட்' ஆகி, ரெடியாகாது.

நாளாக நாளாக மெதுவாகிட்டே வரும்.

அதுக்கு பல காரணங்கள் இருக்கு.

முக்கியமா, application caching என்னும் ஒரு செயல்.
நீங்க ஒரு பத்து application உபயோகிப்பவரா இருந்தா, அந்த பத்து application பற்றிய முக்கிய விஷயங்களை 'சேமிச்சு' வச்சு, பூட் ஆகும் சமயம், அந்த சேமிப்பில் இருந்து விஷயங்களை memoryக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளும்.
பிறகு, நீங்கள் அந்த applicaionஐ சொடுக்கும்போது, 'சடால்' என்று அது திறந்து வேலை சேய்ய இந்த memoryயில் ஏற்றி வைத்துக் கொள்ளும் செய்கை உபயோகப் படுத்தப்படும்.
(ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா இந்த மாதிரி மேட்டரெல்லாம் டமில்ல டைப் அடிக்க தாவு தீருதுங்க ;) )

இந்த 'சேமிப்பை' memoryக்குள் ஏற்றுவதால், பூட் ஆவது தாமதமாகும்.

c:\windows\prefetch என்ற ஃபோல்டரில் பாத்தீங்கன்னா, உங்க XP எவ்ளோ அப்ளிகேஷன் பற்றிய விவரங்களை சேமிச்சு, இந்த டகால்ஜி வேலை செய்யுதுன்னு தெரியும்.

சரி, அப்ப, வேகமா 'பூட்' ஆக என்ன செய்யணும்?

ரொம்ப சுலபம்.
1) C:\windows\prefetch என்ற ஃபோடரில் உள்ள அனைத்து ஃபைலையும் டெலீட் செய்யணும் (ஜாக்கிரதை: சரியான ஃபோல்டருக்குள் சென்றப்பரம் டெலீட் பண்ணுங்க. C:\windowsல இருக்கரத டெலீட் பண்ணிட்டீங்கன்னா, happy weekend to you, இனி கொஞ்ச நேரத்துக்கு மத்த வேலைகளச் செய்ய முடியாம போயிடும் ;) )
2) regedit உபயோகித்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters\EnablePrefetcher என்ற registryயை 2 என்று மாற்றவும்.

அம்புடுதேன்;

இந்த மேட்டரும், இதைப் போல் இன்னும் பல மேட்டரும் இங்கே ஆங்கிலத்தில் தெளிவா சொல்லிருக்காங்க. (அட கெரகம் புடிச்சவனே, அத்த மொதல்லயே சொல்ல வேண்டியதுதானன்னு, நீங்க சொல்றது எனக்கு கேக்குது;; ஆனா, நாங்கெல்லாம் டமில் வளக்கணும்ல? :) )

வர்டா? என்னாது? கேள்வி என்னவா? இதோ கேக்கரேன்.

இந்த படத்தை ப்ரொஃபைலில் வைத்திருக்கும் பதிவர் யார்? (ஹிண்ட்: பதிவை விட பின்னூட்டம் ஜாஸ்தி போடுவாங்க; ரொம்ப நல்லவங்க; வல்லவங்க; 4ம் தெரிஞ்சவங்க; )
இந்த படத்தின் ப்ரத்தியேகிதை (டமிலா இது?) என்ன?



btw, ஒரு முக்கியமான சமாச்சாரம் - FixMyIndia.blogspot.comல் பதிவேற்றிய 'Re-laying Roads - Breached Contracts' என்ற புகாருக்கு, முதல் கட்ட பதில் கிட்டியுள்ளது. . மெதுவாக நகர்ந்தாலும், விஷயம் நடக்குது. அடுத்த கட்ட புகாரிடுதல் என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம்.


ஹாப்பி வீக்-எண்ட்! :)

Sunday, March 16, 2008

பிரதிபலிப்புக்கு லேட்டா வந்துட்டேன்...

PITன் பிரதிபலிப்பு போட்டிக்கு லேட்டா வந்துட்டேன்.

கைவசம் படங்கள் இருந்தாலும், ஏதாவது வித்யாசமா வெளியில போயி எடுக்கலாம்னு நெனச்சுட்டே இருந்தேன், கடைசி தேதி வந்தாச்சு.

இனி ஒன்னியும் பண்ண முடியாதுங்கரதால, எனக்கு நானே கொடுத்துக்கர மார்க்கு கீழே.


பிரதிபலிக்குதா?

:)

Sunday, March 09, 2008

அஞ்சாதே - திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களின் வரிசையில் 'அட' போட வைத்த இன்னொரு படம்.
ஒரு படம் நல்ல படமா கெட்ட படமாங்கரது, படத்தின் முதல் 15 நிமிஷத்துல தெரிஞ்சுடும்.

படத்தை, தொடர்ந்து கவனிச்சு பாக்கணுமா, இல்ல, லேப்-டாப்ல மத்த வேலைகள பாத்துக்கிட்டே மேலோட்டமா படம் பாக்கணுமா, இல்ல, ஓட்டி ஓட்டி 2 1/2 மணி நேர படத்தை 30 நிமிஷத்துல பாத்து முடிக்கணுமா - இந்த மாதிரி ஒண்ண தீர்மானிக்க முதல் 15 நிமிஷம் போதும்.

படம் ஆரம்பிச்சதும், ஹீரோ ஃப்ரெண்டு உடற்பயிற்சி செய்யும் காட்சி ஒரு வித்யாச கோணத்துல காட்ட ஆரம்பிச்சதும் (கீழிருந்து மேல், பின்னாடி ஆகாயம் தெரியர மாதிரி), 'அட ஏதோ மேட்டர் இருக்கு' படத்துலன்னு புரிஞ்சுது.
ரௌடி கும்பல வித்யாச கேமரா ஆங்கிள்ள காட்டிட்டு, அப்படியே ட்ராலி நகுந்து, ஹீரொ ஃப்ரெண்ட காட்டும். இந்த ட்ராலி ஆமை வேகத்துல நகுந்து ஹீரோ ஃப்ரெண்ட காட்டும். "அடடா, படம் ரொம்ப நீளம்னு" அந்த மெது ஷார்ட் புரிய வச்சுடுச்சு :).
இருந்தாலும், அடுத்தடுத்த சுவாரஸ்ய காட்சிகளின் அணிவகுப்பு, ஒரு சோர்வில்லாமல் படத்தை சட சடன்னு நகத்துது.

கதை ரொம்ப சின்னதுதான். உயிர் நண்பர்கள், ஒருத்தனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு குறிக்கோள்; இன்னொருத்தன் ஒதவாக்கரையா சுத்தரவன். ஒதவாக்கர சப்-இன்ஸ்பெக்டர் ஆயிடுவான்; சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு நெனச்சவன் ரௌடி ஆயிடுவான்; இவங்களுக்குள்ள நடக்கர நிகழ்வுகள்னு படம் நகருது.
நடுவுல, பணக்கார இளம் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் ஒரு கும்பல், படத்தின் வேகத்துக்கு மிகவும் உதவராங்க.
ப்ரசன்னாக்கு வில்லன் பாத்திரம், ஆரம்பத்தில் பொருந்தாத மாதிரி தெரிஞ்சாலும், அப்பரம் அந்த சைக்கோத்தனம் நல்லாவே செட் ஆயிடுது அவருக்கு.
பாண்டியராஜனுக்கும் ஒரு டீஸண்டான வில்லன் அடியாள் வேஷம். ஓ.கே. நல்லாவே பண்ணியிருக்காரு.
ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. திறமைசாலி.
ஹீரொ ஃப்ரெண்டு - புதுமுகம். கலக்கியிருக்காரு. நல்ல எதிர்காலம்.

நிறைய விஷயங்கள அலசலாம்னுதான் நெனச்சேன். ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்டு ஊரவச்சு அலசி தொயச்சு காயப் போட்டுட்டாரு. மொத்த டீட்டெயில்ஸ அங்க போய் படிச்சுக்கோங்க. (statutory warning: உ.தமிழனின் விமர்சனம் படிச்சு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்).

என்னப் பொறுத்த வரைக்கும், அஞ்சாதே, நல்ல படம்.
விருவிருப்பு, கொஞ்சம் காமெடி, சோகம், ஆட்டம், பாட்டம், பாசம் எல்லாமே இருக்கு.
பெண்கள் கடத்தல், கற்பழிப்பு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம், மூஞ்சி சுளிக்காமல் பாக்கர மாதிரி டீஸண்டா எடுத்திருக்காரு.

மிஷ்கின் ஒரு கலக்கல் இயக்குனரா உருவாகிக்கிட்டு இருக்காரு.

குறைன்னு பாத்தா, படத்தின் நீளம். கத்திரி போட்டிருக்கலாம்.

அந்த கரும்பு தோட்டத்துல எடுத்த க்ளைமாக்ஸ் கொஞ்சம் தலைவலியாப் போச்சு. ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடராங்க.
டாப்-ஆங்கிள்ள, யார் யாரு எந்த மூலைல ஓடிட்டு இருக்காங்கன்னு காட்டாம விட்டுட்டாரு கேமராமேன்.
அப்படி காட்டியிருந்தா, இன்னும் உயிர் வந்திருக்கும் காட்சிக்கு.
அது இல்லாம, யார் எங்க ஓடரா, வில்லன் ஓடரவங்கள புடிச்சுடுவானா மாட்டானான்னு புரியாம மண்ட காஞ்சு போச்சு.

மத்த விஷயங்களெல்லாம் உ.த அலசிட்டாரு, ஒரு நாள் லீவு போட்டு அவர் விமர்சனத்தை முழுசா படிக்கவும். படிச்சிட்டீங்கன்னா, படத்தை பாக்கணும்னு கூட அவசியம் இல்ல. மொத்த படத்தையும் பாத்த பீலிங் வந்திடும் :)

Thursday, March 06, 2008

டாப்10ல் நாலு இந்தியர்களாம்..

Forbes பத்திரிக்கை இந்த ஆண்டுக்கான டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டை அறிவித்துள்ளது.

நம்ம 'பில்'ஜி மூன்றாவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நம்ம ஊர் கில்லாடிகள், நாலு பேர் டாப்-10ல வந்திருக்காக.



1) Buffett - $62 billion
2) Carlos Slim Helu - $60 billion
3) Gates - $58 billion
4) Lakshmi Mittal - $45 billion
5) Mukesh Ambani - $43 billion
6) Anil Ambani - $42 billion

7) Ingvar Kamprad - $31 billion
8) K.P. Singh - $30 billion

நம்மாளுங்க நாலு பேர் சொத்த சேத்தா $160 பில்லியன் தேருது.
அடேங்கப்பா! நெத்தியடி அடிக்கரானுவ!

குறிப்பா, லக்ஷ்மி மிட்டலின் வளர்ச்சியும் எதிர்காலமும் ப்ரைட்டா இருக்கு. மனுஷன், லைபீரியாவிலிருந்து, ஐரோப்பாவரை மூலை முடுக்கிலெல்லாம் உள்ள ஸ்டீல் ஆலயங்களை வாங்கிக் குவிக்கிறார்.

நல்லாயிருந்தா சரி!

:)

Cho Chweet - Star Wars விமர்சனம்

கண்டு களியுங்கள்.



இதுவும் காமெடிதான். பாருங்க.


ஹாப்பி வெள்ளி!

:)

Wednesday, March 05, 2008

IE8 பீட்டா வெளிவந்துள்ளது...

மேல் விவரங்கள் இங்கே.

தரவிறக்கம் செய்ய (மன தைரியம் உள்ளவர்கள்) இங்கே சொடுக்கவும்.

...and for a change IE8 is 'super' standards compliant :)

///The Web gets better when developers spend less time on interoperability [problems] and more time on innovating," said Hachamovitch. "Long term, this is the right thing to do for the Web." ////

அடேங்கப்பா, இப்பவாவது புரிஞ்சுதே அவிகளுக்கு!