recent posts...

Thursday, March 06, 2008

டாப்10ல் நாலு இந்தியர்களாம்..

Forbes பத்திரிக்கை இந்த ஆண்டுக்கான டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டை அறிவித்துள்ளது.

நம்ம 'பில்'ஜி மூன்றாவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நம்ம ஊர் கில்லாடிகள், நாலு பேர் டாப்-10ல வந்திருக்காக.



1) Buffett - $62 billion
2) Carlos Slim Helu - $60 billion
3) Gates - $58 billion
4) Lakshmi Mittal - $45 billion
5) Mukesh Ambani - $43 billion
6) Anil Ambani - $42 billion

7) Ingvar Kamprad - $31 billion
8) K.P. Singh - $30 billion

நம்மாளுங்க நாலு பேர் சொத்த சேத்தா $160 பில்லியன் தேருது.
அடேங்கப்பா! நெத்தியடி அடிக்கரானுவ!

குறிப்பா, லக்ஷ்மி மிட்டலின் வளர்ச்சியும் எதிர்காலமும் ப்ரைட்டா இருக்கு. மனுஷன், லைபீரியாவிலிருந்து, ஐரோப்பாவரை மூலை முடுக்கிலெல்லாம் உள்ள ஸ்டீல் ஆலயங்களை வாங்கிக் குவிக்கிறார்.

நல்லாயிருந்தா சரி!

:)

2 comments:

மணியன் said...

இது பிப்.11 பங்குசந்தை நிலவரப்படி எடுக்கப்பட்டது. ஜனவரி கடைசி என்றால் கேபி சிங் அனில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி யிருப்பார். ரிலையன்ஸ் பவர் பங்குகள் சந்தைக்கு வந்தது அனிலின் சொத்துமதிப்பைக் கூட்டியது. அதேபோல பகைவர்கள் அவர் பங்குவிலையை கீழே கொணர்ந்திராவிட்டால் அவர் அண்ணனை மிஞ்சி இருப்பார். எல்லாமே மெய்நிகர் சொத்துக்கள் !!

SurveySan said...

//எல்லாமே மெய்நிகர் சொத்துக்கள்//

:)