பூட்டுவது = Bootஉவது.
அதாவது, விண்டோஸ் XP வச்சிருக்கவங்க, ஒரு ஆறு மாசம் ஆச்சுன்னா, உங்க PC/laptop சுவிட்ச் ஆன் பண்ண உடனே, புதுசுல இருந்த மாதிரி, சடால்னு 'பூட்' ஆகி, ரெடியாகாது.
நாளாக நாளாக மெதுவாகிட்டே வரும்.
அதுக்கு பல காரணங்கள் இருக்கு.
முக்கியமா, application caching என்னும் ஒரு செயல்.
நீங்க ஒரு பத்து application உபயோகிப்பவரா இருந்தா, அந்த பத்து application பற்றிய முக்கிய விஷயங்களை 'சேமிச்சு' வச்சு, பூட் ஆகும் சமயம், அந்த சேமிப்பில் இருந்து விஷயங்களை memoryக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளும்.
பிறகு, நீங்கள் அந்த applicaionஐ சொடுக்கும்போது, 'சடால்' என்று அது திறந்து வேலை சேய்ய இந்த memoryயில் ஏற்றி வைத்துக் கொள்ளும் செய்கை உபயோகப் படுத்தப்படும்.
(ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா இந்த மாதிரி மேட்டரெல்லாம் டமில்ல டைப் அடிக்க தாவு தீருதுங்க ;) )
இந்த 'சேமிப்பை' memoryக்குள் ஏற்றுவதால், பூட் ஆவது தாமதமாகும்.
c:\windows\prefetch என்ற ஃபோல்டரில் பாத்தீங்கன்னா, உங்க XP எவ்ளோ அப்ளிகேஷன் பற்றிய விவரங்களை சேமிச்சு, இந்த டகால்ஜி வேலை செய்யுதுன்னு தெரியும்.
சரி, அப்ப, வேகமா 'பூட்' ஆக என்ன செய்யணும்?
ரொம்ப சுலபம்.
1) C:\windows\prefetch என்ற ஃபோடரில் உள்ள அனைத்து ஃபைலையும் டெலீட் செய்யணும் (ஜாக்கிரதை: சரியான ஃபோல்டருக்குள் சென்றப்பரம் டெலீட் பண்ணுங்க. C:\windowsல இருக்கரத டெலீட் பண்ணிட்டீங்கன்னா, happy weekend to you, இனி கொஞ்ச நேரத்துக்கு மத்த வேலைகளச் செய்ய முடியாம போயிடும் ;) )
2) regedit உபயோகித்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters\EnablePrefetcher என்ற registryயை 2 என்று மாற்றவும்.
அம்புடுதேன்;
இந்த மேட்டரும், இதைப் போல் இன்னும் பல மேட்டரும் இங்கே ஆங்கிலத்தில் தெளிவா சொல்லிருக்காங்க. (அட கெரகம் புடிச்சவனே, அத்த மொதல்லயே சொல்ல வேண்டியதுதானன்னு, நீங்க சொல்றது எனக்கு கேக்குது;; ஆனா, நாங்கெல்லாம் டமில் வளக்கணும்ல? :) )
வர்டா? என்னாது? கேள்வி என்னவா? இதோ கேக்கரேன்.
இந்த படத்தை ப்ரொஃபைலில் வைத்திருக்கும் பதிவர் யார்? (ஹிண்ட்: பதிவை விட பின்னூட்டம் ஜாஸ்தி போடுவாங்க; ரொம்ப நல்லவங்க; வல்லவங்க; 4ம் தெரிஞ்சவங்க; )
இந்த படத்தின் ப்ரத்தியேகிதை (டமிலா இது?) என்ன?
btw, ஒரு முக்கியமான சமாச்சாரம் - FixMyIndia.blogspot.comல் பதிவேற்றிய 'Re-laying Roads - Breached Contracts' என்ற புகாருக்கு, முதல் கட்ட பதில் கிட்டியுள்ளது. . மெதுவாக நகர்ந்தாலும், விஷயம் நடக்குது. அடுத்த கட்ட புகாரிடுதல் என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம்.
ஹாப்பி வீக்-எண்ட்! :)
8 comments:
அனானி,
வணக்கம். என்ன ரொம்ப நாளா ஆளே காணும்?
'ஆப்பு'ரேஷனா? ஹெல்த் பாத்துக்கப்ப்பா.
PHOTOGRAPH IS COLOURFUL
நல்ல காலம் டமில வளக்குறேன் பேர்வழி என தேவாரம் பாடம வுட்டீங்களே
//நல்ல காலம் டமில வளக்குறேன் பேர்வழி என தேவாரம் பாடம வுட்டீங்களே//
? :)
இதுல எந்த பராமீட்டர 2-ன்னு மாத்தனும்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணா...
Key Name: HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters
Class Name: >NO CLASS<
Last Write Time: 21/03/2008 - 21:35
Value 0
Name: VideoInitTime
Type: REG_DWORD
Data: 0xab
Value 1
Name: EnablePrefetcher
Type: REG_DWORD
Data: 0x3
Value 2
Name: AppLaunchMaxNumPages
Type: REG_DWORD
Data: 0xfa0
Value 3
Name: AppLaunchMaxNumSections
Type: REG_DWORD
Data: 0xaa
Value 4
Name: AppLaunchTimerPeriod
Type: REG_BINARY
Data:
00000000 80 69 67 ff ff ff ff ff - .igÿÿÿÿÿ
Value 5
Name: BootMaxNumPages
Type: REG_DWORD
Data: 0x1f400
Value 6
Name: BootMaxNumSections
Type: REG_DWORD
Data: 0xff0
Value 7
Name: BootTimerPeriod
Type: REG_BINARY
Data:
00000000 00 f2 d8 f8 ff ff ff ff - .òØøÿÿÿÿ
Value 8
Name: MaxNumActiveTraces
Type: REG_DWORD
Data: 0x8
Value 9
Name: MaxNumSavedTraces
Type: REG_DWORD
Data: 0x8
Value 10
Name: RootDirPath
Type: REG_SZ
Data: Prefetch
Value 11
Name: HostingAppList
Type: REG_SZ
Data: DLLHOST.EXE,MMC.EXE,RUNDLL32.EXE
Saravanan, good point :)
EnablePrefetcher it is.
i just fixed it.
thanks,
கோலம் சேதுக்கரசி அவர்களுடையது.
பிரத்யேகிதை? இதைத்தவிர அவர் ப்ளாகில் எதுவுமே இல்லை! மௌனம் இன்னும் கலையவில்லை!
//கோலம் சேதுக்கரசி அவர்களுடையது.//
ரைட்டு.
//பிரத்யேகிதை? இதைத்தவிர அவர் ப்ளாகில் எதுவுமே இல்லை! மௌனம் இன்னும் கலையவில்லை//
இல்ல. அத விட பெரிய ப்ரத்யேகிதை ஒண்ணு இருக்கு. :)
Post a Comment