வாங்க சார். சவுக்கியமா சார்.
சரோஜா பாத்தாச்சா சார்? ஓ, பாத்தாச்சா?
எங்க சார் பாத்தீங்க?
ஓ, கலிபோர்னியால, அலமேடா தியேட்டர்தானா?
அட, மொத ஷோ, மொத காட்சியா?
அட அட அட, நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க?
அட நீங்கதானா சார் அது குண்டா, தங்கமணியோட கெக்கபெக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தது?
கொஞ்சம் மொகத்த காட்டுங்க சார்.
போடாங், உன் மூஞ்சீல என் பீச்சாங்கைய்ய வெக்க!!!
சார், $10 கொடுத்து படம் பாக்க வந்தா, நீங்களும் ஒங்க பொண்டாட்டியும் சீனுக்கு சீனு தொண தொணன்னு பேசரத கேக்கவா சார் வரோம்?
கொஞ்சம் கூட காமென் சென்ஸே இல்லியா சார் உங்களுக்கெல்லாம்?
"ஐயோ, எஸ்.பி.பி சரணா அது?" "ஐயோ, நளினியப் பாரேன், எவ்ளோ குண்டாய்ட்டா?"
"ஹா ஹா ஹா, ஹே இது பழைய பாரதிராஜா படம் பாட்டுல்ல? என்ன படம் அது? செம்பருத்தியா? இல்லப்பா, டிக் டிக் டிக், இல்லப்பா கிழக்கே போகும் ரயில். இல்லப்பா"
"ஹே உன் ஃப்ரெண்ட்ஸ் பின்னாடிதான் இருக்காங்க, பாக்காம போறான் பாரேன்"
"@#$@#$$#@$#@$$(*%&^%&#$%@@#$$#@#@$"
இப்படி போட்டு, படம் ஆரம்பிச்சதிலிருந்து, முடியரவரைக்கும் ஏன் சார் டார்ச்சர் பண்ணீங்க?
சார், இனி படம் பாக்கப் போனீங்கன்னா, வாய்ல, கர்ச்சீப கட்டிக்கிட்டு, பொத்திக்கிட்டு பாருங்க சார்.
இல்லன்னா, வெயிட் ஃபார் டிவிடி -- மவனே, இனி உன்ன ஏதாவது தியேட்டர்ல, வாய்ல கர்சீப் இல்லாம பாத்தேன்னா டென்ஷன் ஆயிடுவேன் சார், சொல்லிப்புட்டேன். @#$#@$#@$!
முச்சா/பாப்கார்ன் இடைவேளையின் போது, முக்கா ட்ரவுஸரு போட்டுக்கிட்டு குறுந்தாடியுடன் ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிஞ்சவராம் அவரு. ராஸ்கோல்! என்ன கொடுமை குறுந்தாடி சார் இது?
~~~~~ ~~~~~~ ~~~~~~~~
வணக்கம் நண்பர்களே! இனி நம்ம திரைப் பார்வையப் பாக்கலாம்.
சரோ'ஜா', தமிழ் பெயரா? இருந்துட்டுப் போவட்டும்.
படம் ஆரம்பிச்சதும், ஒரு வரியும் புரியாத மாதிரி, ஒரு ஆங்கில குத்துப் பாட்டு (cheeky cheeky), அது முடிஞ்சதும் கொஞ்ச நேரத்துல ஒரு ஹிந்திப் பாட்டு (ஓ ஸோனியே?).
கொஞ்சம் இழுவையான சில சேஸிங் சீன்!
இத்த விட்டா, கொறை சொல்ல முடியாத, செம செம செம ஜாலியான படம்.
புள்ளையார்க்கு தேங்கா ஒடச்சா தேங்கா எல்லா பக்கமும் செதருமே, அப்படி செதர விட்டிருக்காங்க, விருவிருப்பையும், காமெடியையும்.
நல்லா, டைமிங் ஜோக்ஸ் நிறைய இடத்துல.
SPB சரண் - SPB மாதிரி குண்டாயிட்டே போறாரு- தல, exercise please. நடிப்புல பின்னிட்டீங்க சார் :)
ப்ரேம்ஜி --உங்களப் பாத்தா கண்டிப்பா சிரிப்பு வருது சார். ஆனா, உங்கண்ணன் மாதிரி இந்டெலிஜெண்ட்டா உங்களை வச்சு காமெடி பண்ணாதான் உண்டு. சரக்கில்லாத ஆளுங்க கிட்ட மாட்னீங்கன்னா, ஊத்திக்குவீங்க சார். சாக்கிரத.
வெங்கட் பிரபு - சார், கையக் குடுங்க சார். நல்ல ஃபார்முலா கலந்து, கலக்கலா படம் எடுக்கறீங்க. ஆனா, அந்த சேஸிங், இருட்டுல, ரொம்ப நேரம் பாக்கர மாதிரி, கொஞ்சம் அமெர்ச்சூரிஷ்ஷா இருந்திச்சு சார். எப்படியும், தப்பிச்சிடுவாங்கன்னு உள் மனசுக்கு புரிஞ்சதால, சரி சரி, அடுத்து என்னான்னு தேடல் வந்துடுச்சு. நடூல அப்பப்ப ப்ரகாஷ்ராஜ காமிச்சிருந்தாலும், இன்னும் வேர எதையாச்சும் மிக்ஸ் பண்ணியிரூக்கலாம் சார்.
யுவன் ஷங்கர் ராஜா - சார், டோட்டல் டேமேஜ் சார் நீங்க. ஒரு மைக்கேல் மதன காமராஜனுக்கு பாட்டு கை கொடுத்த மாதிரி, ஒரு பாட்டும் இந்தப் படத்துக்கு கை கொடுக்கல. அந்த வில்லன் வில்லி டான்ஸ் பீட்டு ஓ.கே. பின்னணி இசை நல்லாருந்தது. ஆனா, அங்கையும், எனக்குத் தெரிஞ்சு, வெங்கட் பிரபுவின், புத்திசாலித்தனமான சாய்ஸ்தான் கைதூக்கலா இருந்துச்சு. குறிப்பா, அந்த வேன் தலை குப்புர விழும்போது, ஒரு சிம்ஃபொனி இசை ஜூப்பர். பெட்டர் வர்க் நெக்ஸ்ட் டைம். குறிப்பா அந்த மொத பாட்டுல வந்து ஓ.யே, ஓ.யேன்னு கத்துனீங்களே, உவ்வே உவ்வே!
காமெரா/எடிட்டிங் - சக்தி சரவணன் சார், ப்ரவீன் ஸ்ரீகாந்த் சார், அமக்களம் சார். ஆனா, சில தொடர் இருட்டு காட்சிகள் எரிச்சல் சார். அந்த ஹைவே பாட்டு அமக்களம் சார். வித்யாசமான கேமரா/எடிட்டிங் சார். கீப்-இட்-அப் சார்.
மத்தவங்க - சீரியல் நடிகரா வரவர் கலக்கல் சார், அந்த சீரியல் காட்சிகள் எல்லாம் குபீர் சிரிப்பு; வில்லன் சம்பத் அட்டகாசமா இருக்காரு, அவங்க வில்லி ஜூப்பர் சார் ;) ப்ரகாஷ்ராஜ் டிபிக்கல் நடிப்பு, ஜெயராமுக்கு மேக்கம் கொஞ்சம் தூக்கலோ? லேசா கெழடு தட்டுது, சுப்ரமணியபுரம் ஹீரோ ஒரு சீன்ல வந்தாலும் குபீர் சிரிப்பு, ஃபாத்திமா பாபு - நோம்மா, ப்ளீஸ், நோமோர் மா.
கதை - பெருசா ஒண்ணும் இல்ல, ஒரு கடத்தல், நாலு ஃப்ரெண்ட்ஸ் டூர் போராங்க, ரெண்டும் மிக்ஸ் ஆயிடுது, being in the wrong place at the wrong time - பல படங்களில் பார்த்த விஷயம்தான், ஆனா, அதை விருவிருன்னு சொல்லியிருக்கர விதமும், காமெடி சிதர விட்டிருப்பதும், படத்தை ஜாலியான பொழுதுபோக்குப் படமா ஆக்கிடுது.
இதன் வெற்றியைப் பார்த்து, இன்னும் ஜாலிப் படங்கள் சில வந்தால், ரொம்ப நல்லாருக்கும்.
ஒரு தடவ, கண்டிப்பா பாருங்க சார்ஸ் & மேடம்ஸ்!
பி.கு: ஒரு தொழிற்சாலை படத்துல வருது. பக்கத்து சீட்டு நொய் நொய் சார், அதை 'பின்னி மில்டீ இது'ன்னு சொல்லிட்டு இருந்தாரு. மீனம்பாக்கத்துல இருக்கர பின்னி மீல்லா அது?அவ்வளவு பெரிய தொழிற்சாலையையா, கர்ம வீரர்கள் ஸ்ட்ரைக் பண்ணி இழுத்து மூடிட்டாங்க? அடப்பாவிகளா? எவ்ளோ உழைப்பு, கனவெல்லாம் சிதறடிச்சிருக்கும் இந்த ஸ்ட்ரைக்? நல்லாருங்க!
வெளம்பரம்: திருட்டுக் குறும்படம்? கேபிள் ஷங்கர் சார், பதில் ப்ளீஸ்!
நன்றி!
18 comments:
//
//
எவ்ளோ உழைப்பு, கனவெல்லாம் சிதறடிச்சிருக்கும் இந்த ஸ்ட்ரைக்? நல்லாருங்க!
//
:((((((
சரோஜா - waiting for DVD :)
a'n'b,
why wait for DVD?
watch in theater and support such good ventures ;)
ஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...
தியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((
///ஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...
தியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((///
மெய்யாலுமா? ரஜினி படமெல்லாம் ஓடுதுன்னாங்களே?
சான் ஹோஸே அலமெடா தியேட்டரா? நீங்க இந்த சுத்து வட்டாரம்தானா. உங்க மெயில் ஐடி கொடுங்களேன் தல.
கொஞ்சம் கஞ்சத்தனமாக விமர்சித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. இந்த அளவு ப்ரெஷ்ஷாக க்ளிஷேக்கள் இல்லாத தமிழ் படம் பாத்து ரொம்ப நாளாகிறது. கடைசி க்ரெட்டிஸில் 'வெங்கட் பிரபு' பேர் போடும்போது தியேட்டரில் கைதட்டல் :-).
sridhar narayanan,
///கொஞ்சம் கஞ்சத்தனமாக விமர்சித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது///
அப்படியா? விலாவாரியா சொல்லணும்னா, அனுபவிச்ச சில ஜோக்ஸை சொல்லலாம். ஆனா, அப்பரம் படம் பாக்காதவங்க பாதிக்கப்பட்டுவாங்கன்னு விட்டுட்டேன்.
மத்தபடி, பெருசா ஒண்ணும் இல்லியே படத்துல? விரு விருவைத் சிரி சிரியைத் தவிர. :)
////நீங்க இந்த சுத்து வட்டாரம்தானா. உங்க மெயில் ஐடி கொடுங்களேன் தல.
////
ஆஹா, ம்ம்ம்மாட்டிக்கினேனா? சார், என்ன நம்பி குடும்பம் இருக்கு சார்.
சார், தப்பா ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க சார் ;)
surveysan2005 at yahoo காம்.
sridhar,
//// நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க?
////
நீங்க இல்லியே? தெரியாம சொல்லிட்டேன் சார்.
மன்னிச்சு விட்டுடுங்க சார் ;)
பதிவ வாசிக்க உடனே பாக்கணும்ணு வருது. கடசி டிஸ்கி யோசிக்கவேண்டியது.
நன்றி
hisubash, டிஸ்கின்னதும் இன்னொண்ணு ஞாபகத்துக்கு வந்தது. இப்பதான், பதிவுல சேத்தேன்,
இதான் அது ;)
-முச்சா/பாப்கார்ன் இடைவேளையின் போது, முக்கா ட்ரவுஸரு போட்டுக்கிட்டு குறுந்தாடியுடன் ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிஞ்சவராம் அவரு. ராஸ்கோல்! என்ன கொடுமை குறுந்தாடி சார் இது?
//ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான்.//
பக்கத்துல பொண்ணுங்க இருந்தா முந்தி நானும் இப்படித்தா அலப்பறலா பண்ணுவேன். அப்ப எனக்கும் இப்படித்தா திட்டிருப்பாங்களோ???
எனக்கு தெரிஞ்சு பதிவுலகத்தில கடசில போட்டாதானே டிஸ்கி?
நடுவுல போட்டா?????
hisubash,
//பக்கத்துல பொண்ணுங்க இருந்தா முந்தி நானும் இப்படித்தா அலப்பறலா பண்ணுவேன். அப்ப எனக்கும் இப்படித்தா திட்டிருப்பாங்களோ???//
பொண்ணு இருந்தா மன்னிச்சு வுட்டுடலாம். ஆனா, குறுந்தாடி முச்சா போர எடத்துல பயலுவளோட இல்ல அளந்துக்கிட்டு இருந்தான் ;)
//
SurveySan said...
///ஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...
தியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((///
மெய்யாலுமா? ரஜினி படமெல்லாம் ஓடுதுன்னாங்களே?
//
முத்து படம் இங்க நிஜமாவே famous a இருந்துருக்கு, ஆனா அதுக்கப்பறம் வேற எந்த படமும் ரிலீஸ் ஆனா மாதிரி தெரியல.
போன வருஷம் நான் இங்க இருந்தபோ சிவாஜி ரிலீஸ் ஆகா போகுது னு செம roomer, ஆனா படம் ரிலீஸ் ஆகல :(
அருண்,
//போன வருஷம் நான் இங்க இருந்தபோ சிவாஜி ரிலீஸ் ஆகா போகுது னு செம roomer, ஆனா படம் ரிலீஸ் ஆகல :(
//
அட, அப்படியா சங்கதி? ஜப்பான்ல சூ.ஸ்டாருக்கு ரசிகர் மன்றம் எல்லாம் இருக்குன்னாங்களே. புருடாவா எல்லாம்?
இதெல்லாம் அடிக்கடி எடுத்து பதிவா போட்டாதான சார் நாங்க தெரிஞ்சுக்க முடியும் ;)
படம் பார்கற ஆவலை தூண்டும் விமர்சனம்..
ஆனா நான் சொல்ல வந்தது அது இல்ல...
இந்த சின்ன பையன் உங்கள tagitten mr.surveysan..
please visit this link
http://creativetty.blogspot.com/2008/09/bloga-time-kodi-vendum.html
karthick krishna,
இம்புட்டுக் கேள்விகள் கேட்டா நான் என்னா பண்ணுவேன்?
ஓ.கே, இந்த வாரம் போட்டுடறேன்.
(பதிவெழுத மேட்டர் தந்ததுக்கு நன்னி)
@ surveysan
'Tag'ai ஏற்றுக் கொண்டதற்கு நன்றி
Post a Comment