எங்கையோ போயி எத்தையோ க்ளிக்கி (வால்பையனின் புலம்பல் -> Dr. Rudhranன் பதிவு -> Dr. Shaliniயின் பதிவு) கண்டதையெல்லாம் படிச்சிட்டே இருந்தனா, திடீர்னு வில்லங்கமா ஒரு தலைப்பு கண்ணுல பட்டுது.
ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?"ன்னு டாக்டர்.ஷாலினின்னு ஒருத்தர் பதிவு போட்டிருக்காங்க. விஜய் டி.வில வந்து ஓ.சி அட்வைஸ் நெறைய கொடுக்கரவங்க அவங்க.
மேலாக்க மேஞ்சா, இன்னொரு பதிவு, 'சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்'.
இதுல என்னா சொல்றாங்கன்னா, எல்லா குழந்தைகளும், முதல் 8 வாரம் கருவில் இருக்கும்போது, பெண்ணாகத்தான் இருக்காங்களாம், அதுக்கப்பால, டெஸ்டோஸ்ட்ரோன், வந்து, பெண்ணாக இருக்கும் கருவை, ஆணாக மாத்திடுமாம்.
முதல் 8 வாரத்தில், எல்லாரும் பெண்ணாக இருந்ததால் தான், ஆண்களுக்கும் மார்பெல்லாம் இருக்குதாம்.
ஓ.கே. நம்பும்படியாதான் இருக்கு.
இப்படி, ஊருக்கு தேவையான விஷயங்களை மட்டும், சொல்லிட்டு, ஸைலண்ட்டா போயிருந்தா பரவால்ல.
அப்பரம்தான் வில்லங்கமே ஆரம்பிக்குது. டாக்டர் ஷாலினிக்கு, ஆண்களை சரியாக கையாண்டு, அவர்களை நாய்குட்டிகள் போல் வசியம் செய்ய, நம் ஆயாக்கள் காலத்திலிருந்து, தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும், சில டெக்னீக்ஸ் எல்லாம் தெரியுமாம்.
அத்த ஒவ்வொண்ணா நம்ம பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போறாங்களாம். எல்லாம் இலவச அட்வைஸாம்.
என்ன கொடுமைங்க இது?
இப்படி ரூம் போட்டு சதி பண்றாங்களே இதுக்கு நாம இப்ப் இருந்தே தயாரானாதான், இந்த பாடத்தை கமுக்கமா படித்துவிட்டுவரும் பெண்களின் ஆதிக்கத்திலிருந்து நாம் பிழைப்போம்.
ஆண் டாக்டர்ஸ்(Dr. Rudhran Dr. Bruno Dr.VSK), பெண்களை கையாள்வது எப்படீன்னு யாராச்சும் பதிவு எழுதுங்கய்யா.
சீக்கிரம், காலம் தாமதிக்காம, உடனே நம்ம வர்கத்தை காப்பாற்றவும்.
ஸ்ஸ்ஸ்ஸ் .
;)
பி.கு: ஆண்களை கையாள்வது எப்படி என்ற ஷாலினியின் பதிவுக்கு, ஸைலண்டா போயி படிங்க மக்களே. பின்னூட்டம் போட்டீங்கன்னா, உஷாராயிடுவாங்க, அப்பரம், அவங்க பேசிக்கர ரகசியம் தெரியாம போயிடும், சாக்குரத!
5 comments:
ஆண்களை கையாள் ஆக்குவது எப்படி என்பது தானே பதிவின் தலைப்பு ?
உங்களுக்கு என் ப்ளாக்ல ஒரு வேலை கொடுத்திருக்கேனே.. பார்க்கலையா???
கோவி,
கையாளா மீசை முறுக்கிக்கிட்டு இருக்கரவங்கள, கூனிக் குறுகி நிக்க வச்சு, அவங்களுக்கு பார்டி கார்டா மாத்திடுவாங்க.
உஷார் ;)
ஷாலினியின் ப்ளாகை, ஸைலண்ட்டா, ஃபில்டர் பண்ணிடுங்க. தப்பிச்சுக்கலாம்.
//பெண்களை கையாள்வது எப்படீன்னு யாராச்சும் பதிவு எழுதுங்கய்யா.
சீக்கிரம், காலம் தாமதிக்காம, உடனே நம்ம வர்கத்தை காப்பாற்றவும்.//
ஆளை அசத்தை அறுபது வழிகள் (அல்லது அது போல் ஏதோ தலைப்பில்) அவர் ஏற்கனவே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
///ஆளை அசத்தை அறுபது வழிகள் (அல்லது அது போல் ஏதோ தலைப்பில்) அவர் ஏற்கனவே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.////
அறுபது வழிகளா? நாம ஒரு ஆறாவது கண்டுபிடிச்சு எழுதியாகணும்;)
Post a Comment