recent posts...

Sunday, September 14, 2008

ORKUT - கிண்டி விட்ட பள்ளிப் பருவ நினைவுகள்!

ORKUT இணையதளம் நண்பர்களை இணைக்கும் ஒரு தளம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நான் அதில் அக்கவுண்ட் தொடங்கி சில வருடங்கள் ஆயிருந்தாலும், அவ்ளோ ஏக்டிவ்வா அங்கப் போய் எட்டிப் பாக்கரதெல்லாம் இல்லை.
நேத்து வழக்கம் போல வெட்டியா பொழுத கழிக்கும்போது, நண்பன் தன் புகைப்படங்கள் சிலதை ஆர்க்குட்டில் ஏற்றியிருப்பதாகவும், போய் பாருடா என்றும் மெசேஜியிருந்தான்.

சரின்னு போய் எட்டிப் பாத்தேன்.

ஆர்க்குட்டில் நுழைந்ததும், 'இவர் உங்களை நண்பராக சேர்த்துக் கொள்ள சம்மதமா?'ன்னு ஒரு கேள்வி, என் நண்பன் பெயரைப் போட்டு.
சரின்னு க்ளிக்கி, அவன் பக்கத்தைப் போய் பாத்தா, என் பள்ளியின் பெயரில் ஒரு குழுமத்தில் அவன் இணைந்துள்ள விவரம் தெரிந்தது. சரி, காசா பணமா, நாமளும் கோதால எறங்கலாம்னு என் பள்ளியின் ஆர்க்குட் க்ரூப்பில் இணைந்தேன்.

அப்படியே மெதுவா, நண்பனின் நண்பர்கள் பட்டியல் பாத்தா, பரிச்சயமான பல பேர்கள் கண்ணில் பட்டது. அடங்கொக்கமக்கா கூட படிச்ச பல 'நாய்களும்' ஆர்க்குட்ல வாலாட்டிக்கிட்டு திருயரானுங்கன்னு தெரிஞ்சது.
ஒவ்வொருத்தர் பக்கமும் பாக்க பாக்க ஒரு பரவசம் வந்துடுச்சு.

என் வாழ்க்கையில் பள்ளிப் பருவம்தான் சிறந்தது. ஒரு கவலையும் இல்லாமல், வாலுடன் திரிந்த பல நாய்களோடு நாயாக ஊர் சுற்றித் திருந்து, மாங்காய் அடித்து, டயர் ஓட்டி, கில்லி, கபடி, ஃபுட்பால், கிரிக்கெட், கோ, காத்தாடி, சைக்கிள்னு ஆடாத ஆட்டமெல்லாம்ம் ஆடிய காலமாச்சே.
Co-Edல் படித்திருந்தாலும், பெண்களை கலாட்ட செய்வதைத் தவிர வேறு வம்பு தும்புக்கெல்லாம் சென்றதில்லை. (ஆமாங்க, நம்புங்க, ரெம்ப நல்லவன் நானு).

என் நெருங்கிய வட்ட நண்பர்களில், இன்னும் சில பேர் ஆர்க்குட்டில் வரலை. ஆனா, மூக்காவாசி பேரு இருக்கானுங்க.

எல்லாரும், ரொம்ப நல்ல நிலையில் இருக்காங்க. பாக்கவே ரொம்ப சந்தோஷமா, பறக்கர மாதிரி இருந்துச்சு. அதிலும், ஒரு சிலர் ரொம்பவே நல்ல நிலையில் இருக்காங்க.

குறிப்பா, ஒருத்தன் ஒரு பெரிய கம்பேனியின் சி.இ.ஓ, இன்னொருவன், இந்திய டாப்5 ஐ.டி. கம்பெனியில், சி.இ.ஓ,க்கு ஒரு படி கீழ இருக்கான். சின்ன வயசுலயே பெரிய பெரிய சாதனையெல்லாம் பண்ணிட்டாங்க. படிக்கர காலத்துல, இவனுங்களும், நாயோடு நாயாகத்தான் சுத்திட்டு இருந்தானுங்க, ஆனா யாருக்கும் தெரியாம, படிக்கவும் செஞ்சிருக்காங்க. ப்ளடி டாக்ஸ் ;)

இதில் சில விஷயங்கள் ஏற்கனவே தெரியும்னாலும், புது விஷயங்கள் ஆர்க்குட்டிலிருந்து தான் தெரிஞ்சது.

> பள்ளி 'அழகன்' இப்பவும் ஸ்மார்டாதான் இருக்கான்;

> 'சோ'வில் ஆரம்பித்து, 'னா'வில் முடியும் எங்கள் வகுப்பு 'அழகி'யும் பெரிய ஆளாயிட்டா. மோஸ்ட் பாப்புலர் ஸ்கூல் கேர்ள்னு பட்டம் இருந்தா இவளுக்குத்தான் கொடுக்கணும். நாங்கெல்லாம், எங்களை அடையாளப் படுத்திக்க, நாங்க 'சோXYZனா'வின் வகுப்புன்னு சொல்லிக்கிட்டா, மத்த செக்ஷன் பயலுவ, நான் 'சோXyZனா'ன் பக்கத்து செக்ஷன்னுதான் அடையாளப் படுத்திக்குவாங்க. இவ்வளவு ஏன், எங்களின் ஜுனியரும், சீனியரும் கூட, நான் 'சோXyZனா'வின் முன் வகுப்பு, பின் வகுப்புன்னுதான் சொல்லிக்குவாங்க. மிகைப் படுத்திச் சொல்லலை, உள்ளதுதான் இது, நம்புங்க.
நான் அவளுக்கு பின் பென்சில் இருந்ததே, பெரிய சாதனையாக எண்ணிய காலங்களும் உண்டு. பின் பெஞ்சில் இருந்து கொண்டு, அவள் துப்பட்டாவில், நானும், ஸ்கூல் தாதாவும், இங்க் அடித்தது, இன்னும் பச்சக்னு ஞாபகம் இருக்கு ;)

> ஸ்கூல் தாதா, பொறுப்பா குடும்ப பிசினஸை (டைல்ஸ்) செவ்வனே நடத்தி, இன்னிக்கு அவன் துறையில் பெரிய தடம் பதித்திருக்கிறான்.

> பைலட் ஆகணும்னு சொன்னவன், ஹெலிக்காப்டர் பைலட் ஆகி, ஏர் ஃபோர்ஸில் இருக்கான்.

> லாபுக்குச் சென்றவர்கள், திரும்பி வருமுன், எல்லா சாப்பாட்டு பாக்ஸையும் அபேஸ் செய்ய உதவிய நண்பன்; என் முதல் alba வாட்ச்சை உடைத்த நண்பன்; திருட்டுக் கையெழுத்து வாக்கிய நண்பன்; பாடும் நண்பன்; ஸ்டைல் நண்பன்; பணக்கார நண்பன்; நாமம் போட்ட நண்பன்; சிக் நண்பீஸ்; ......

> இன்னும் பல பேர், எங்கெங்கயோ, வளந்து, நல்லாவே ஆயிட்டாங்க. யாரும், சோடை போகலை.

எங்க பள்ளி, சிட்டியில் உள்ள 'பெரிய' பள்ளியில் ஒண்ணெல்லாம் கிடையாது. நாங்க படிக்கும்போது சாதாரணமாதான் இருந்துச்சு. ஆனா, ஆசிரியர்கள் எல்லாம் நல்லா அமஞ்சாங்க. பள்ளியை நடத்திய மேடமும், எங்களுக்கெல்லாம் ஒரு உதாரணமா இருந்தாங்க. கணவனை இழந்த அவர், மூன்று பெண்களுடன், தைரியமாய் துவங்கிய பள்ளி இது. நாங்க வளந்தோம், எங்களுடன் சேர்ந்து பள்ளியும் வளர்ந்தது. இன்னிக்கு, ஒரு ஆலமரமா இருக்கு. அமோகமா நிக்குது.

நண்பர்கள், இந்த உலகில் இருக்கும் பல விஷயங்களில், முதன்மையான ஒன்று. நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால், வாழ்க்கையில் முக்கால்வாசி வெற்றி அடைந்த மாதிரிதான். அதே சமயம், நல்ல நண்பர்கள் அமையாவிட்டால், கால ஓட்டம், மிகுந்த சிரமம் தான். சிரமம் மட்டுமில்லாது, எதுக்காக இந்த ஓட்டம்னே புரியாம ஒரு கேள்விக்குறியான அயற்சியை தரும்.

ஆர்க்குட்டில் கண்ணில் பட்ட, டச்சில் இல்லாத பழைய நண்பர்களுடன், மீண்டும் பரிச்சயம் புதுப்பிக்கப்பட்டது. இனி, பழைய 'நாய்' பேச்சு பேசி, இந்த உறவு முறியாத வண்னம், ஆர்க்குட் காப்பாற்றும். இந்த நட்பு புதுப்பித்தல் ஒரு டானிக் மாதிரி இருக்குது.
சோம்பேரித்தனமா, சில விஷயங்கள் தள்ளிப் போட்டிருந்தேன், இன்று பள்ளிப் பருவ துள்ளலுடன், அதையெல்லாம் எடுத்து செஞ்சு முடிச்சாச்சு.

தூரத்தில் இருக்கும் நட்பை இணையத்தில் பார்க்கும்போதே இவ்வளவு உற்சாகம் வருதே, கூடவே எல்லாரும் இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? ஹ்ம். :(

ஆர்க்குட் வாழ்க!
ஆர்க்குட்டை பற்றி சில டிட்-பிட்ஸ் (உண்மையான்னு தெரியல)

* ஆர்க்குட் என்ற 20 வயசுப் பையன் தன் இரயில்-சிநேகிதியை தேட துவங்கப்பட்ட தளம், பின்னால், கூகிளால் வாங்கப்பட்டதாம்.
* ஒரு புதிய உருப்பினர் சேர்ந்தா, Mr.ஆர்க்குட்டுக்கு, $10 டாலர் கிட்ட கிடைக்குமாம்
* அதே மாதிரி, ஆர்க்குட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும், கூகிள் ஒரு சின்ன தொகையை அவருக்கு குடுக்குமாம். அப்படிதான் contract போட்டிருக்காராம், இந்த பலே கில்லாடி.
* தொலைந்த சிநேகிதியைத் தேடினா, இப்படி பில்லியன்களில் சம்பாதிக்கலாம்னா நல்ல விஷயம்தான்.
* நண்பீஸ், யாராச்சும் கொஞ்சம் தொலைஞ்சு போங்களேன் ;)


மக்களே, ஆர்க்குட்டில் இணையுங்கள், உங்க Flashback அங்க உங்களுக்குக்காக வெயிட்டிங்.

பி.கு: "S Karthikeyan" from around Pammal. நல்ல செவப்பா இருப்பான் - Tendulkar வயசிருக்கும்; யாருக்காவது தெரியுமா இவனை?
சர்வேட் ஆரம்பிச்சிடவா? ;)

16 comments:

SurveySan said...

ஆர்க்குட்டறீங்களா?

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. எல்லோரும் அன்று போல் இன்று போல் என்றும் வாழ்க:)!

SurveySan said...

ராமலக்ஷ்மி,

நன்றி. நன்றி.



(இப்பெல்லாம் கொஞ்சம் பதிவு பெருசாயிடுது. சர்வே போட மேட்டரில்லாததால், இந்த விளைவு ;) )

இதையும் நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்க, இனி உ.தமிழனுக்கு போட்டியா ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ;)

ராமலக்ஷ்மி said...

//இதையும் நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்க//

பின்னே, பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்கள் வளர்ச்சியையெல்லாம் பார்த்து பூரித்து நெகிழ்ந்து படிப்பவர்களையும்தான் நெகிழச் செய்திருக்கிறீர்கள்:)!

ஆயில்யன் said...

நானும் கூட ரொம்ப காலம் கழிச்சு என் கூட படிச்ச பையனை கண்டுபிட்டிச்சேனாக்கும்!

அப்ப லோக்கல் ஊரை சுத்தி திரிஞ்சுக்கிட்டிருந்த பயபுள்ள இப்ப யு.எஸ்ல குந்திக்கினுருக்கு :))

ஆயில்யன் said...

பட் ஆனாலும் நீங்க நொம்ப லேட்டு!

நிறைய பேரு ஆர்கெட்டி,ஆர்கெட்டி, டயர்டாகி, எஸ்கேப்பு ஆகியிருப்பாங்க :(

SurveySan said...

Ramalakshmi,

//பின்னே, பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்கள் வளர்ச்சியையெல்லாம் பார்த்து பூரித்து நெகிழ்ந்து படிப்பவர்களையும்தான் நெகிழச் செய்திருக்கிறீர்கள்:)!
//

:)))))))

alugaachi alugaachiyaa varudhu ponga.

SurveySan said...

//நிறைய பேரு ஆர்கெட்டி,ஆர்கெட்டி, டயர்டாகி, எஸ்கேப்பு ஆகியிருப்பாங்க :(
//

hm.

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

நிஜமாவே ரொம்ப நல்ல தளம்...நானும் என்னோட பல நண்பர்களை (குறிப்பா நன்பீஸ்) கண்டுபிடிச்ச இடம். அது சரி உங்க ஆர்குட் id என்ன!!!?

Sathiya said...

நானும் என் பல பள்ளி நண்பர்களை ஓர்குட்டில் தான் கண்டு பிடித்தேன். ரொம்ப நல்ல தளம்..
ஆமா, நீங்க எந்த ஊருங்க?

//"S Karthikeyan" from around Pammal//
நானும் பம்மல் தான். இந்த கார்த்திகேயன் என் கூட படிச்ச கார்த்திகேயனானு தெரியல, ஏன்ன அவனுக்கு டெண்டுல்கர் வயசை விட ஒரு நாலு வயசு கம்மி.

SurveySan said...

அருண் நிஷோர் பாஸ்கரன்,

//உங்க ஆர்குட் id என்ன!!!?//

ஹ்ம். சொன்னா, முகமூடி கிழிஞ்சு தொங்கிடுமே ;)

SurveySan said...

sathiya,

//தெரியல, ஏன்ன அவனுக்கு டெண்டுல்கர் வயசை விட ஒரு நாலு வயசு கம்மி.//

அப்ப அவனில்லை. நான் பம்மல சிலகாலம் இருந்திருக்கேன்.
S Karthikeyan, சின்ன வயசுல செம தோஸ்து எனக்கு, அஞ்சாங்கிளாஸ் வரைக்கும். அப்பரம் பயலை பாக்கவே இல்லை. :(

Unknown said...

நீங்க செம லேட் :)
நாங்கல்லாம் ௩ வருஷம் முந்தியே ஆர்குட்டி...இப்போ சும்மா எப்போதாவது தான் பாக்கறதுன்னு ஆயிடுச்சு....
இதெல்லாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே செஞ்சுருக்கணும்....எத்தன பொண்ணுங்க பிரண்ட்ஷிப் கெடைக்கும் தெரியுமா???? :))
உங்க நண்பர்கள் நல்ல நிலைமையில் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி.... உங்க வயசு ஆகும்போது நானும் இப்படி மகிழனும் :)))

SurveySan said...

kamal,

////உங்க வயசு ஆகும்போது நானும் இப்படி மகிழனும் :)))//


அடக்கொடுமையே?
விட்டா, சீனியர் சிட்டிசன் அட்டை வாங்கி கைல குடுத்துடுவீங்க போலருக்கு ;)

Unknown said...

//அடக்கொடுமையே?
விட்டா, சீனியர் சிட்டிசன் அட்டை வாங்கி கைல குடுத்துடுவீங்க போலருக்கு ;)//

சீனியர் "சர்வே" சன் நு வேணா ஒரு அட்டை வாங்கலாம் :)))

SurveySan said...

மக்களே, தமிழ் பதிவுகள படிச்சு தல டார்ச்சர் ஆவரதுக்கு, ஆர்குட்ல பழைய நண்பர்களுடன் அளவளாவினா, அலாதி இன்பம்.


;)